தவறு யாருடையது?




அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது, பாலைக் கொண்டு வந்து அவர் மேஜைமீது வைத்து விட்டுச் சென்றார் அவருடைய மனைவி.
அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகத்தை எடுப்பதற்குச் சென்றாள்.
மேஜைமீது இருந்த பால் குவளையில் அவள் கைப்பட்டு, பால் கொட்டிப் போயிற்று.
உடனே அந்தப் பெண், “அப்பா! என்னை மன்னித்து விடுங்கள், தவறுதலாக என் கைபட்டு, பால் கொட்டிவிட்டது” என்றாள்.
“அம்மா! உன் தவறு அல்ல, உன் தாய் பாலைக் கொண்டு பந்து வைத்ததுமே, அதை எடுத்து நான் குடித்திருக்க வேண்டும் புப்போதே குடிக்காதது என் தவறு” என்றார் அதிகாரி.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரியின் மனைவி பந்து, “உங்கள் இருவர் மீதும் தவறு இல்லை , நீங்கள் எழுதிக் காண்டிருக்கும் போது நான் கொண்டு வந்து பாலை வைத்தது ன் தவறு” என்றாள்.
ஒவ்வொருவரும் தங்கள் தவறை உணர்ந்தது உள்ளத்தை நெகிழச் செய்தது.
தவறை உணர்வது எவ்வளவு நேர்மை!
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்