தன் பெயரைச் சொல்லாதவன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,401
ஒரு ஊரில் சிலர் காசு வைத்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் போலீசுக்குப் பயந்து, வீட்டுக் கதவைத் தாழ் போட்டு வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தில், கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் “யார் அது?” என்று கேட்டான்.
பதில் இல்லை. எனவே, போலீசாரோ என்று பயந்தனர் “கோவிந்தனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தபடியே.
‘ஹூஉம்’ என தலையை அசைத்தான், வெளியில் நின்றவன்.
“குமரனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன். ‘ஹூஉம்’ என்று தலையை அசைத்தான் “கேசவனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன்.
அதற்கும் ‘ஹூஉம்’ என்றான்.
அடுத்து, “கிருஷ்ணனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன்
“ஆம், அவனேதான்” என்று பதில் அளித்தான் வெளியில் நின்றவன்.
வேகமாகவும், கோபமாகவும் கதவைத் திறந்து, “முட்டாளே! முதலிலேயே பெயரைச் சொல்லியிருக்கலாமே. ஒவ்வொரு பெயராகக் கேட்கும் வரை, மரம் போல் நிற்கிறாயே?” என்று கடிந்து கொண்டனர் சீட்டு விளையாடியவர்கள்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.