சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,445 
 
 

‘என்ன மாப்பிள்ளை இப்படிப்பண்ணீட்டீங்க?’ என்று கேட்டார் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டவனிடம் வேலப்பன்.

‘என்ன பண்ணீட்டேன்னு நீங்க இப்படிப் பொலம்பறீங்க?’ என்றார் இருதயராஜ். 

‘கட்டுன சேலையோடு வா! காலம்பூராம் வச்சுக் காப்பாத்துறேன்! சொல்லீட்டு, இப்ப நீங்க பண்ணீயிருக்கிறது நியாயமா?’ என்றார். 

‘சொன்னேன்…! இல்லைன்னு சொல்லலை!. நீங்களும் அதுக்காக கட்டுன பட்டுச் சேலையோடு மட்டும்தான் அவளை அனுப்பி வச்சீங்க! இப்ப வருஷம் முப்பதாகுது.  

இந்த முப்பது வருஷத்துக்கும் உங்க ஒத்த பட்டுச் சேலையோடு மட்டுமா நாங்க வாழ முடியும்.?! உங்க பொண்ணு எங்கிட்ட கேட்டது என்ன தெரியுமா?’ 

‘என்ன மாப்பிள்ளை? இருக்கற சேலையையும் புடுங்க்கீட்டு விட்டுடச் சொன்னாளா?’ 

‘ஒழுகாத வீடு…! பசிக்காத வயிறு! கிழியாத ஆடை..! மனுஷனுக்கான அடிப்படைத் தேவைகள்லகூட அடிமட்டத்துல இருக்கறதைத்தான் கேட்டாள். அவள் ஆசைக்கு ஏத்த மாதிரி பசிக்காம வேளா வேளைக்குச் சோறும், கிழியாத ஆடையும்  வாங்கித்தான் குடுத்திட்டிருக்கேன். இதெல்லாம் அப்பப்போ பண்ண வேண்டியது! ஆயுசுக்கும் ஒருக்கா பண்ணவேண்டியது ‘ஒழுகாத வீடு!’ன் ஒண்ணு கட்டுவது..! அதுக்குத்தான் மெனக்கெட்டேன். முப்பது வருஷத்துக்கு முந்திய அவ கட்டிட்டு வந்த உங்க பட்டுச்சேலை கிழிஞ்சு நார் நாரா போயிடுச்சு..! அதை பழைய விலைக்கு எடுக்கறவன் ரோட்டுல வந்தானேன்னு போட்டேன். அதைக் குத்தமா எடுத்துட்டு வீடு வரைக்கும் வந்துட்டீங்க!  அதுவும் இப்பல்லாம் ‘ஸ்கொயர் ஃபீட்டுக்கு ரெண்டாயிரம்’ கேக்கறாங்க…! மாத்துத்துணிய வித்தாத்தான் ஒழுகாத வீடு உறுதியாகும்னா அதையும் பண்ணீட வேண்டியதுதானே…?! விட்டா, தங்கம் ஏறுனா மாதிரி ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஐயாயிரம் பத்தாயிரம் கன்ஸ்டிரக்ஷன் காஸ்டும் ஏறிடும், அப்புறம் காலம் பூரா வாடகை வீடுதான் வாசசஸ்தலமாகும்…!

அடுத்தவன் கிட்ட கை நீட்டாம கடனுடன் வாங்காம காலங்ககழிக்கறேன்னு சந்தோஷப்படுங்க!’ என்றார். 

‘சே! திட்டமிட்டு வாழும் ஒருத்தரை தெரிஞ்ச்சுக்காம கேட்டுட்டோமே’ன்னு வேதனையோடு திரும்பிப் போனார் மாமனார் வேலப்பன். 

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *