சேராமல் போனால்
பல வருடங்கள் கழித்து அவளை மீண்டும் சந்தித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது அவளின் நடனத்தை மேடையில் கண்டு திகைத்து நின்றது இன்றும் என் நினைவில் உள்ளது. இன்றும் அவளை அவ்வாறே சந்திக்கிறேன். அவளின் கண் என்னை கண்டுகொண்டது, நிகழ்ச்சி முடிந்ததும் அவள் என்னை சந்திக்க வந்தாள். இருவரும் முதன்முதலில் சந்தித்து கொண்டதை என் மனம் நினைக்க தொடங்கியது.

கல்லூரி முடிந்து நான் பஸ்க்காக காத்துக்கொண்டு இருந்தேன். அவள் வண்டியை உதைத்து கொண்டிருந்தாள் எவ்வளவு உதைத்தும் அது அவளை மதிக்க வில்லை. நான் சென்று அவளிடம் பெட்ரோல் போட்டிங்களா என கேட்க நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தால் சிரித்தேன். அதெல்லாம் இருக்கு என்னமோ வண்டி ஸ்டார்ட் ஆகல என்றாள். நீங்கள் அருகில் இருக்கும் கடையில் வேலை பார்க்க கொடுத்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்றேன். அவளும் அவ்வாறே வண்டியை விட்டுவிட்டு வேலை பார்த்து வையுங்கள் நாளை எடுத்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு பஸ்க்காக காத்துக் கொண்டிருந்தாள்.
பஸ் பயணம் பழக்கமில்லை என்பததை அவளின் செய்கையில் உணர்ந்து கொண்டேன். அவள் அருகில் சென்று நின்றேன் எந்த ஊரு என்றேன். கூறினாள். அந்த பஸ் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் இப்பொழுதே மணி ஆறு ஆகி விட்டது முதலில் அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லுங்கள் என்றேன்.
பஸ் வந்தது ஏறி கொண்டாள், பஸ் புறப்பட்டது ஏனோ என் மனம் அவளை தனியாக அனுப்ப விரும்பவில்லை. கால்கள் பஸ்ஸை நோக்கி சென்றது. நிக்கும்போது ஏறமாட்டிய என கண்டக்டர் திட்ட அவள் திரும்பி பார்த்தாள். உதட்டோரம் சிறு புன்னகை.
அவள் இறங்கியதும் உன் பேரு என்ன என்று கேட்டாள் ரவிக்குமார் என்றேன். என் பேரு ஷாலினி என்றாள்.
பாத்து போங்க நான் வரேன் என்று கூறிவிட்டு மறைந்தாள்.
சிலவாரம் சென்றது, கல்லூரியில் ஆண்டு விழா அதில் அவளின் நடனம் அரங்கேற நான் அவளை ரசித்தேன். முடிந்ததும் என்னை சந்தித்தாள். இருவரும் பேசி ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம். பின்னாளில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
அழகாக நாட்கள் நகர்ந்தது. வெளியே சென்ற போது ஷாலினியின் அம்மா எங்களை பார்த்துவிட்டார். ஷாலினியை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார், அவளை அடிப்பார்களோ வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்து விடுவார்களோ, கல்லூரி படிப்பை நிறுத்தி விடுவார்களோ என பல சிந்தனை என்னுள் தூங்கவே இல்லை.
மறுநாள் காலை கல்லூரி திறக்கும் முன்பே சென்று அவளை கண்ட பின்பே உயிர் வந்தது. என்ன ஆனது என விசாரித்தேன். உன்னை இன்று மாலை என் அம்மா வீட்டிற்கு அழைத்து வர சொன்னார்கள் என்றாள். ஏன் என கேட்டேன். தெரியவில்லை. மாலை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள்.
மாலை சென்றேன் வீட்டிற்கு சோபாவில் அமர சொன்னார். முதலில் அவர் சொன்ன வார்த்தை உங்க நிலை வேறு எங்க நிலை வேறு. அவள் கல்லூரி செல்ல ஸ்கூட்டி வெளியே செல்ல கார் என உள்ளது. அவளை வெளியே அழைத்து செல்ல உன்னிடம் ஒரு சைக்கிள் கூட இல்லை. அவளை உனக்கு கட்டி கொடுத்தால் எவ்வாறு பார்த்துக்கொள்வாய். காதல் மட்டும் போதுமா காசு வேணாமா. உனக்கு என்ன தகுதி இருக்கிறது சொந்த வீடு, நிலம், கார், பைக் என எதாவது இருக்கிறதா. எந்த தைரியத்தில் நீ அவளை காதல் செய்தாய். காதல் மூலம் அவளுக்கு வேண்டியதை உன்னால் வாங்கி கொடுத்துவிட முடியாது. உன்னை தாழ்த்தி பேசுவதாக எடுத்து கொள்ளாதே நடைமுறையை பேசுகிறேன். அவளை பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்கவே எல்லா அம்மாவும் நினைப்பார்கள். நான் மட்டும் விதிவிலக்கு அல்ல.
சரிதான் எனக்கு எந்த தகுதியும் இல்லை. உங்கள் விரும்பம்போல் நீங்கள் அவளுக்கு வாழ்கையை அமைத்து கொடுக்கலாம். நான் இடையூராக இருக்க மாட்டேன் என கூறிவிட்டு சென்றுவிட்டேன்.
மறுநாள் கல்லூரியில் என்னை சந்தித்தாள். எங்க அம்மா பேசுனத தப்பா எடுத்துக்காத என்றாள். அவங்க சொன்னது கூட எனக்கு வலிக்கல. நீ அமைதியா இருந்த பாரு அப்பயே செத்துட்டேன். நீ உன் அம்மா சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கோ. நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றேன்.
அன்று தான் அவளிடம் கடைசியாக பேசினேன். அதன் பிறகு இன்று தான் பார்க்கிறேன்.
எப்படி இருக்க ரவி. நன்றாக இருக்கிறேன் நீ. நன்றாக இருக்கிறேன். இங்கு என்ன. நடன போட்டி அதில் கலந்து கொள்ள வந்தேன், நீ இங்கு என்ன செய்கிறாய். எனது அலுவலகம் அருகில் உள்ளது டீ சாப்பிட கேன்டீன் சென்றபோது நீ இங்கு செல்வதை பார்த்தேன் வந்தேன்.
ரவி என்ற குரல் இருவரும் திரும்ப ஒரு பெண் ஹே திவ்யா நீ எங்க இங்க?. நா ஷாப்பிங் பண்ண வந்தேன். முடிந்ததா? ம் என்கிறாள். ஷாலினி இது திவ்யா என் மனைவி. இது ஷாலினி என காலேஜ் பிரண்ட் என அறிமுகம் செய்துவிட்டு, சரி வீட்டுக்கு கூட்டிட்டு போ நான் வேலை முடிந்ததும் வருகிறேன் என்கிறான். இருவரும் செல்கின்றனர். ரவி வீடு திரும்ப திவ்யா அவனின் பேக்கை வாங்கி கொண்டு குளிச்சுட்டு வா காபி போட்டு தருகிறேன் என்கிறாள். ரவி என்னை டால்பின் ஹோட்டலில் விட முடியுமா? என கேட்கிறாள் ஷாலினி. போய் விட்டுட்டு வா ரவி என்கிறாள் திவ்யா, சரி என செல்கிறான். வெளியே வந்தாள் ஷாலினி.
பைக் இருக்கு, ஸ்கூட்டி இருக்கு, கார் இருக்கு. நீ எதில் செல்ல விரும்புகிறாய் என கேட்கிறான்…