சுரேசை தேடி வந்த தேவகி…




ஏய் நித்யா எப்படி இருக்க?
தேவகி நீ எப்படி இருக்க?
பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ எப்படி இருக்க என இருவரும் பாச மழை பொழிந்தார்கள்..
சரி எங்க வீட்டுக்கு வா என்று இருவரும் மாறி மாறி விலாசத்தை கொடுத்து விட்டு விடை பெற்றனர் விடை பெறும் போது ஏய் தேவகி சுரேஷ் இங்க தான் இருக்கிறான் நான் அடிக்கடி பார்ப்பேன்.
என்னடி சொல்ற சுரேஷ் சென்னையிலா இருக்கிறான்!
ஆமாம் அவள் மனைவி என் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள்
அப்படியா ! ஏய் எனக்கு அவன் நெம்பர் வேணும்?
சரிடி நான் நம்பர் வாங்கி உனக்கு சொல்றேன்.
வீட்டுக்கு வந்ததும் தேவகிக்கு எனோ மனது சரியில்லை எத்தனைவருடம் அவன் கூட சிரித்து பேசி இருப்போம், திருவிழா என்றால் அவன் கூட சுத்தாத இடம் இல்லை என சுரேசின் நினைவுகளை சுற்றியே இரண்டு நாட்கள் போயிற்று.
சுரேசிடம் பேசவேண்டும் அனைப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு அதிகமாகியது. மாலை நித்யாவிற்கு போன் செய்து நெம்பர் கேக்கும் போது ஏய் சுரேஷ் மனைவியிடம் நெம்பர் கேட்டேன் இது வரை தரலடி.. ஆனான் நான் ஆலுவலகத்தில் அவள் பைல் பார்த்து வீட்டு விலாசம் குறித்து வைத்திருக்கிறேன் குறித்துக்கொள் என்றதும் வேளச்சேரியில் வீடு என்று விலசாத்தை வாங்கிக்கொண்டு எப்படி அவன் வீட்டுக்கு செல்வது என்று யோசித்தாள்..
கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற மிகுந்த மனப்போராட்டத்திற்குப்பின் சரி வரும் சனிக்கிழமை அவனுக்கு விடுமுறையாகத்தான் இருக்கும் நித்யா வீட்டுக்கு செல்கின்றேன் என்று கணவனிடம் கூறியது அவனும் சரி என்றான். பக்கத்து வீட்டு அத்தையிடம் எப்படி செல்ல வேண்டும் என்று விசாரித்து விட்டு சனிக்கிழமை காலை பரபரப்போடு சென்றாள்.
வேளச்சேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து அவன் வீட்டு வாசல் முன் நின்றதும் கை, கால் உதறியது அவனைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற எண்ணமும் பார்த்ததும் வெளியே போ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தைரியத்தை வரவழித்துக்கொண்டு வீட்டு மணியை அமுத்தினாள் உள் இருந்து சுரேசின் மனைவி வாங்க யார் நீங்க யாரைப்பார்க்க வேண்டும் என்று கூற நான் சுரேசைப் பார்க்க வேண்டும் நான் தேவகி என்று சொல்லுங்கள் என்றதும் சுரேசின் மனைவிக்கு இவள் அந்த தேவகியாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்துடன் உட்காருங்க அவர் துணி காயப்போட்டுட்டு இருக்கார் கூப்பிடுகிறேன் என்ற சுரேசை அழைத்தாள் சுரேஷ் உள்ளே வந்து தேவகியைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்..
பின் எப்படி இருக்க ஏனக்கா இப்படி செய்த எங்கிட்ட சொல்லியிருந்தா நான் உனக்கு திருமணத் செய்து வைத்திருப்பேனே இப்படி வீட்டை விட்டு வந்து தான் திருமணம் செய்ய வேண்டுமா கதறிய சுரேஷ் எங்கக்கா மாமா வரலியா என்று பாசத்துடன் தன் தம்பி கண்கலங்கியதைப் பார்த்து கண் கலங்கி நின்றாள் தேவகி..
– பிப்ரவரி 2011