சுயம்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் இரண்டும் பிரிந்த போது மாதுளை ஒன்று பிளந்தது. அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை, எட்டு வயதிருக்குமா? அந்தச் சிறுமிக்கு… அதற்கு மேல் இருக்க முடியாது. மாதுளை பிளந்து முழுதும் சிவப்பாகி விடாத வெள்ளைப் பரல்களின் புன்னகை. ஏனோ அவரை பயமுறுத்தியது. மூன்றாண்டுகட்கு முன் இவனைப் போலவே ஒரு பெண்ணை மருத்துவக் கல்லூரி வாசலில் எதிர்கொண்ட போது பயந்த பயம் நெஞ்சில் இன்றும் குளிரடிக்கிறது. அவளை மறக்க நெடுநாளாயிற்று. இது ஒரு அபத்தமான வாழ்க்கை. பத்தொன்பது வயதில் இளமை கடந்து கொண்டிருக்கும் ஒருத்தியைப் பார்க்கும் போது மனிதனுக்கு மரியாதையான எண்ணங்கள்தான். தோன்ற வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதா? ஆனால் எட்டு வயது நிரம்பிய கான்வென்ட் சிறுமியான இவளைப் பார்க்கும் போதும் நெஞ்சுக்குள் ஒலிக்கும் ‘ஐயோ’ எனும் குரல் யாருக்கு கேட்கப்போகிறது. ரோட்டோரத்தில் பிளாட்பாரத்தின் கல் இடுக்குகளில் முளைத்த குறுஞ்செடிகளில் கண்ணுக்கெட்டாத குறும் பூக்கள் யாரை நினைத்துப் பூக்கின்றன? என்று சிற்பி வித்யாசாகருக்கு புரியவில்லை. வீடுகளில் வாசல்களில் தெளிக்கப்பட்ட சாணத்தில் மறுநாளே உயிர்த்து உடனேயே பூத்து அடுத்தநாளே உலர்ந்து விடும் இந்த குறும் பூச்செடிகளுக்கு வைசம் ‘பார்வைகளை’ வழங்குவதேயில்லை. யாருமிந்த பூக்களை சூடுவதுமில்லை. இந்த எட்டு வயது பூக்களை நுகர்வதும் முடியாது. அத்தனை சிறிய பூக்கள் அந்தப் பெண் சிறுமியல்ல. எட்டு வருடங்களுக்கு முன்பு குழந்தையுமல்ல. முழு உயிர் அதற்கு வயது வரம்பு நமது பார்வையுந்தான். ஒரு புழுவுக்கும் அதன் உடல் அளவுக்கு அதன் உயிர் அளவால் விரிந்து வியாபகம் கொள்ள முடியுமா? இவள் எட்டு வயது. எண்பதினாயிரம் வயது. எண்பது கோடி வயது என்பது இவள் கண்களில் தெரிகிறது. ஒரு கவிதையைப் புரிந்து விட்டதாகச் சொல்லும் அபத்தம் இந்தப் பெண்களைப் பற்றி தெரிந்து கொண்டதாக நினைப்பதும் எட்டா அடினர் எட்ட முயலும் கவிதையின் அழகு அதன் சாதனையில் இருக்கிறது. இந்தப் பெண்ணை யாரும் எட்டி விட முடியாது. ஒரு கணத்தே பிறந்து அடுத்த வயதில் இதழ் கிழிந்து இரத்தம் சுக்கப் போகும் செண்பகப் பூ இது. இதை நுகர்வது உமையம்மையின் முலையில் பாலருந்தும் மானுட தர்மம் தெய்வீக அழகின் மனிதப்புனர்ச்சி இந்தப் பெண்ணின் சாதாரண தவம் வித்யாசாகர் மனதுக்குள் அலை வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார். காதோரங்களில் நரைத்து நுரைதள்ளிய சுருண்ட தலைமுடி பிடரியில் விழுந்து கிடந்தது. சற்றே. பெரிய உருவம் அவருடையது. கொஞ்சம் பருத்த தோள்களும், சுருண்ட முடியடர்ந்த மார்பும், சந்தனக்கலர் ஜிப்பா உள்ளிருந்து எட்டிப் பார்க்கும் ஜரிகைத் துண்டும் மூகத்தில் வளர்ந்து கிடந்த காற்றின் அலையாக்கும் சாம்பல் நிற தாடியும் அவரது முரண்பட்ட ஆசைச் சிந்தனைகள் போல வினோதம் தந்தாலும் இன்னும் அந்தச் சீறும், அவருக்கெனவே அவ்வப்போது கண்களைச் சுழற்றி புது உலகம் தந்து கொண்டிருந்தார். இது ஏன் நேர்கிறது? என்று சொல்ல முடிவதேயில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு. இதை யாராவது சொல்லியருந்தால் அதை அவரும் சேர்ந்து சிதைத்திருப்பார். இன்று அது அவருக்கு அனுபவம். அனுபவம் காட்சி ரூபத்திலேயே விந்து படர்ந்து நுரைக்கிறது. காட்சி ரூபத்திலேயே கரு. வினையை மூட்டி உடைக்கப் பார்க்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே அவர் எந்தப் படைப்பிலும் மனம் செலுத்துவதே இல்லை. இயற்கையின் ரகசியங்கள் குரூரமானவை ஆச்சர்யமான பயங்கர அழகு கொண்டவை. இதைத் தொடர்ந்து துரத்தி அவர் சென்று உண்மையை உறிஞ்சிக் குடித்து காலையில் மறுவடிவு தர அவருக்கு எப்போதும் அச்சமாக இருக்கிறது! சில கணங்கள் மட்டுமே தன் மூகத்தைக் காட்டி மலரும் இந்த மலர் நிரந்தரமாக ஒரு பீங்கான் சிற்பமாக வெள்ளைக் கனிமண்ணில் விரல்களால் நெய்தெடுக்கும் பட்டாகச் சாதித்துக்காட்ட வேண்டும். இந்த இளமையின் பயங்கர ரகஸ்யத்தின் முதுமை கனிச்சாற்றை இன்னொருவனுக்கும் சிற்ப சாதுர்யத்தால் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற வேகமும், துடிப்பும் யாருக்கும் புரியவே இல்லை. நாற்பத்தைந்து வருடங்களுக்கும் முன்பாக இளமையின் காட்டாற்றில் எதிர் நீச்சலிட்டபோது இந்த அடியாழத்தின் நிஜங்கள் கண்ணில் பட்டதேயில்லை. இப்போது உண்மைகள் தெரிந்தாலும் உரக்கக் கூவ முடிவதில்லை. ஏனென்றால் உண்மைகளும் உதவுவதில்லை. லக்ஷ்மியை மணக் கோலத்தில் அமர்த்திக் கொள்ள முடிந்ததே தவிர, அவளது நிர்வாணமும், இரவுகளும் காலை அகட்டி வைத்து, ஒரு குழந்தையை மலர்விக்க இருவருமாய் வைத்த சூளை நின்றெரியாமல் குடம் குடமாய் உதிரத்தைக் கொட்டி ரத்தக் களறியால் தூக்கி எடுத்த அந்த சின்னஞ்சிறு உயிரும். தாயும் மறைந்தும் இருட்டின் பாய்களுக்கடியில் சுருண்டு போனபோது அதன் காரண மூலங்களை ஆராய்ந்து பார்க்கும் கலைஞனின் தேடல் இன்று வரை தன்னையே துரத்திக் கொண்டிருக்கிறது. ஏனோ? வித்யாசாகருக்கு மட்டும் புரிந்து கொண்டே இருக்கிறது. வானத்தை நோக்கி மலரும் மலருக்கு காரணம் வேண்டுமா? உயிரின் ரகஸ்யம் இந்தச் சிறு பெண்ணின் ஒவ்வொரு அணுக்களிலும் சாவுப் பூக்களாய், இருட்டுச் சிறைகளாய் ஊன்றிச் சிரிப்பதை. எதிர்த்து அழைப்பதை வித்யாசாகருக்கு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியாது! ஒவ்வொரு பெண்ணிடமும் இந்த மலர்ச்சியை அவரால் பார்க்க முடியும். இதற்கு வயது தேவையில்லை. ஒவ்வொரு பெண்ணிடமும் கண்களைத் சந்தித்ததுமே இந்தச் செய்தி கண்களின் வழியே அவளைப் போய் உலுக்குவதை கண்களால் மட்டுமே திறந்து வைத்த அந்தப் பாதை உடனே திறந்து கொள்வதை அவளுக்கு மட்டுமே அவர் உணர்த்துகிறார். ஆனால் பாதை திறந்தால் மட்டும் போதாது பாதையின் முடிவில் நின்று பயமுறுத்தும் கண்ணைப் பறிக்கும் ஒளி அவளைப் பயமுறுத்தி விடுகிறது. ஒவ்வொரு முறையும், அந்தப் பாதை பல நூற்றாண்டுகளாய் திறந்தே கிடக்கிறது. அதை ஒருவனால்தான் திறக்க முடியுமென்று வித்யாசாகருக்குத் தெரியும். அது அவர் தானா? அல்லது வேறு யாருமா? என்பதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது அது. தேவையுமில்லை என்று தோன்றியது. அவருக்குச் சிலரைப் பார்த்ததும் பிடித்துப் போய்விடுகிறது. சிவரைப் பார்க்காமலே பிடித்து விடுகிறது. லலிதாவைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. இதை அவளிடம் சொன்னபோது பைத்தியம் பிடித்தவள் மாதிரித்தாள் பத்து வருடங்களுக்கு முன் அவரைப் பார்த்தாள் அவள். அவளுடைய குரூரமான அழகைத்தான் ‘சாயை மாறா’ வண்ணம் உலக முழுதுடையாள் கோவிலாய் காரைக்குடியில் செட்டிமார் நாட்டு வளப்பத்தின்படி வெள்ளைப் பாறைகளில் சமைத்து வைத்தார் வித்யாசாகர், அநேகமாக இந்த வாழ்வின் குருரங்களை அவருக்குத் தெய்வாம்சம் பொருந்தியவைகளாய் காட்சியளிக்க ஆரம்பித்துவிடும். மணம் புரிந்து கொண்டு வாழ்வதில் உள்ள வழக்கமான குரூரங்களிலிருந்தும், அபத்தங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக தெய்வ உருவங்களைச் செதுக்கலானார். தெய்வ உருவங்களிலிருந்து மனித உருவங்களைத்தான் அவர் செதுக்கி எடுத்தார் என்பது யாருக்கும் புரியாததை போலவே அவரது வாழ்க்கை அவர் எண்ணங்களும் புரிந்து கொள்ள முடியாத இருளாகவே எல்லோருக்கும் தோன்றியது இப்போது இந்த எட்டு வயதுச் சிறுமி அவரது சிந்தனைகளைச் செதுக்க ஆரம்பித்துவிட்டாள். பாறாங்கல்லாய் அல்வப்போது இறுகிக் கொள்வது தர்மக் குப்பைகளை, அவர் படிக்கலானார். திருக்குறள். பகவத் கீதை, பைபிள் போன்ற வறண்ட முட்காடுகளிடையே புரண்டு ரத்தம் வடிந்ததுதான் மீதியாயிற்று. புத்திபூர்வமாய் யோசித்துப் பார்ததால்… கார்த்தியாயினியிடம் என்ன இருந்தது? மெழுகின் சாயலில் கைகளும், கால்களும் விதை பூவின் மதுவில் நெய்தெடுத்த சிற்பியின் ரத்த ஓட்டத்தில் கட்டியினால் வகுத்த ஒரு உடம்பு எந்தச் சிற்பத்திலாவது, கலையிலாவது, சாதிக்கவே முடியாது? என்ற சவால் இவள் இனியும் இவளைத் தொடரும் தைர்யமில்லை. நேற்றிலிருந்து அவரது இருண்ட மூலைறையில் எண்ணற்ற தோல்விச் சிற்பங்கள் எழுந்து நின்று அவரைக் கேவி செய்து கோர நர்த்தளமிட்டன. எண்ணற்ற கறுப்பர்களின் ரத்தம் அந்த வெள்ளைக் களிமண்ணில் ஊறி, ஊறி பிசைவது. அவருக்கு மட்டுந்தான் தெரியும். ஆப்ரிக்காவில் மூலை இருட்டு இலங்கைத் தமிழர்களின் சதைப் பிண்டங்களும், கைகளும், கால்களும், நிணமும், ரத்தமும் அந்தக் களிமண் உருக்கொள்வது எத்தனை பேரால் புரிந்து கொள்ள முடியும்? அவருக்கு வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கு அது களிமண் அவருக்குள்ளேயிருந்து மிளிரும் நெஞ்சு இத்தனை வடிவங்கள் எடுத்தும் எப்போதும் அவர் அடையும் தோல்விகள்தான் மீண்டும் மீண்டும் அவளை அவருக்குள்ளிருந்தும் பிறப்பெடுக்க வைக்க அவரின் உயிரின் வாதை இன்னொருவருக்குப் புரிய வேண்டிய அவசியம் இப்போது அதற்கில்லை. எப்போதாவது அவளை வெற்றி கொள்ளும் நேரம் வரும்வரை இந்த மனித உடலின் மீது இத்தனை காமம் அவருக்கு இருந்து கொண்டேதான் இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் கார்த்தியாயினியின் கான்வென்ட் சுவுன் பெரியதாய் விரிந்து உயர்ந்துவிடும். இந்த அழகு சுயநலமாகும். தனக்கென்று முட்டிக் கனியும் கூர்மையும், ஆழமும் உடலை வடிக்கும் யாரோ ஒருவனின் செதுக்கலில் நுணுங்கிச் சிதறும் விரகத்தில் பசலை படரும். உடலும் உள்ளமும் கன்னத்தில் விண்டு போகும். வித்யாசகருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. தெருவிலிருந்த ரிக்ஷாவிலிருந்து அவரை நோக்கி அல்ல… இந்த உலகையே விரிந்த ஆச்சர்யத்துடன் பெருகிய கண்களுடன், அகன்ற நெஞ்சத்தின் ஆச்சர்யக் கனவுகளுடன், எல்லாவற்றையும் பார்த்து, வியந்து கொண்டே இருந்த கார்த்தியாவினியை இன்னும் காமக் கண்களுடனும், கோணல் மாணவாக தனது குதர்க்க புத்தியுடனும். அந்த எட்டு வயதுச் சிறுமியை அள்ளி விழுங்கி விடுகிற காமத்துடனும், கரை கடந்த அன்புடனும் பார்த்த அவரை அந்தச் சிறுமி புரிந்து கொண்டாளா? என்பது மற்றவர்களுக்குச் சந்தேகமாயிருக்கலாம். ஆனால் அறிவறியாப் பருவத்தில்தான் வித்தைகள் நேர்கின்றன. அவள் அவரை அனுகிரகித்தாள். தீச்சுடர் போன்ற அந்த உதடுகள் கேலியாகச் சுழித்து சிரித்தன. அவள் கண்களிலிருந்து பெருகி வரும் பசியை அவர் மட்டுமே அனுபவித்தார். நிரம்பிய புன்னகை தனித்தனியாய் திவலைகளாய் மாறி படர்ந்து வந்து அவரை அடைந்தன. அந்த மோகனச் சிரிப்பின் மாயம் புரியவிலலை. புரிந்திருந்தால்தான் அவர் உலகை வீழ்த்தியிருப்பாரே…! அவள் சிரிப்பில், அவள் கண்களில் களிந்த திருட்டுப் பழம் சொரிந்தது. வித்யாசாகரின் நரம்புகள் முறுக்கேறின. மூளை செத்தது. உடலும் மனமும் ஒன்றையொன்று பாம்பாய் பின்ன ஒன்றையொன்று கொத்திக் கொண்டு விஷம் சுக்கின. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் பக்தன் போல் எழுந்து அவளை நோக்கி விழப்போனார். எதிரே அகன்ற ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாய் கார்கள் – வாரிகள் – பஸ்கள் -வேன்கள் வண்டிகள் – டூ வீலர்கள் -சப்த சாகரசங்கமம் . ஒலிகளின் பெருங்கடலில் மிதந்து ஏறி கார்த்தியாயினி என்ற அந்த எட்டு வயதுப் பெண்ணின் மாயச்சுனையில் கால் வைக்க முயன்றார். வித்யாசாகர் ‘திடும்’ என்று எதுவோ ஒன்று அவர் மேல் ஏறி. நசுக்கி தரையுடன் தரையாய் அரைத்து போன அவரது உடலின் ரத்தச் சேற்றை வீதியிலிருந்த அனைவரும் வியப்பும் வருத்தமும் விந்தையும் தொனிக்க சுற்றிய கூட்டம் பரிதாபமும், அவலமும், துக்கமும் குடி விளங்க ஓசைக் கடலில் மௌனம் ஓர் கணம். அலை வீச்சின் முகிழ்ப்பில் குமிழ்கள் மொக்கிட்டன. ரத்தச் சேற்றிலும் குமிழ்கள் மொக்குப் பிரிந்தன.
ரிக்ஷாவிலிருந்து கார்த்தியாயினி லேசாக சிரித்துக் கொண்டாள். ஏனென்றே புரியாமல்…!
(வெளி வராதது)
– தஞ்சை பிரகாஷ் கதைகள், முதல் பதிப்பு: ஜூலை 2004, காவ்யா வெளியீடு, சென்னை.