ஒரு நாடகத்திலோ அல்லது நாவலிலோ வரும் பாத்திரத் தின் தன்மை என்ன, அதன் பங்கு அதில் எத்தகையது என் னும் கேள்விகள் எமக்குள் எழும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இவற்றிலும் முக்கியமாக நாம் விடை காணவேண்டிய கேள்வி சமுதாயத்தில் ஒரு எழுத்தாளன் வகிக்கும் பாத்திரம் என்ன என்பது பற்றியதாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இக்கேள்விக்கு விடை தர பிளேட்டோ முயன்றதை நாம் அறிவோம். பிபோட் டோவுக்கு முன்னரே இக்கேள்வி தோன்றியிருக்கக்கூடும் – தோன்றியிருத்தல் வேண்டும். என்றாலும் இக் கேள்விக்குரிய நிச்சயமான விடை எது என்பது தீர்க்கப்படாமலே இருந்து வந்துள்ளது, சமூகத்தில், எழுத்தாளனின் பாத்திரம் என்ன என்பதுபற்றிய சிந்தனைகள் வெவ்வேறு காலப் பகுதிகளில் வெவ்வேறு விதமாகக் கொள்ளப்பட்டு வந்தமை இதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஒரு காலப் பகுதியிலேயே இவ் விடயம் பற்றி மாறு பா டான கொள்கைகள் நிலவியதற்கு பிளேட்டோவின் கொள்கையும், அவருடைய மாணவரான அரிஸ்டோட்டலின் கொள்கையும் வித்தியாசப்பட்டிருந்தமை சிறந்த உதாரணமாகும். இதற்குக் காரணம் இரண்டு மனித ருடைய கொள்கைகளிலே வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பதல்ல. ஏனெனில் அபிப்பிராய பேதங்கள் இருக்கக் கூடும் என்பதுதான் உண்மையே தவிர, வெவ்வேறு மனிதர் களிடையே அபிப்பிராய பேதங்கள் இருக்கவேண்டும் என்பது உண்மையல்ல. ஆகவே, சமூகத்தில் எழுத்தாளனின் பங்கு பற்றிய எண்ணங்களும், கொள்கைகளும் வேறுபட்டதற்கு காரணம் ‘ உலகில் எதுவும், எப்பொருளும் மாறுபாடு அடைந்து கொண்டேயிருக்கிறது’ என்பது தான். எதுவுமே உலகில் நிலையாக இருப்பதில்லை. ஆகவே சமூகமும் மாறு தலுக்கூடாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த மாறு பாட்டுடன் எழுத்தாளனுடைய கடமையும் அதற்கேற்ப மாறு பட்டுச் செல்கின்றது.
சமூகத்தில் எழுத்தாளனுடைய கடமை என்ன என்பதை அறிவதற்கு முன்பதாக உலகில் நிகழும் சகல மாற்றங் களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்பதனைப் பரிசீலனை செய்யவேண்டும்: உலகம் மாறிக்கொண்டே செல்கின்றது என்பதனை உணர்ந்தால் மட்டும் போதாது; அதன் காரணத்தை அறிதல் வேண்டும்.
இம்மாற்றத்திற்குக் காரணம் முரண்பாடு (Contradiction) ஆகும். எவ் வம்சத்திலும் (Phenomena) முரண்பாடு இயற் கையானது ; தவிர்க்க முடியாதது என்பதனை அறிஞர்கள் அறிந்து வந்துள்ளனர். உடம்புக்கும், ஆத்மாவிற்கும் உள்ள முரண்பாட்டினைக் கூறும் இந்து சமயமும், தெய்வீக மனித னுக்கும், பாவிக்கும் உள்ள முரண்பாட்டைக் கூறும் கிறிஸ் தவ சமயமும் மாற்றத்திற்குக் காரணமான முரண்பாட்டையே கூறுகின்றன. பிளேட்டோவும் தனது தத்துவத்தையும், கவிதை பற்றிய தமது சிந்தனை களையும் உலகில் எவராலும் தவிர்க்க முடியாது என நாம் கண்ட மாறுபாடடை உணர்ந்து அதன் அடிப்படையிலேயே அமைத்தார்.
இன்றைய மனிதன் பிளேட்டோவிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தவன். இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த மனித அறிவை உபயோகிக்க வேண்டிய அவன், உலக மாற்றத்திற்கு காரணம் என பிளேட்டோ அறிந்திருந்த முரண்பாட்டை, அதன் உண்மையான தன் மையை அறிந்து செயல்பட வேண்டியவனாகின்றான்.
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இம் முரண்பாடு பற்றிய அறிவு முக்கியமானதா? இதை அவன் அனுபவத்தின் மூலம் உணர்ந்தால் மட்டும் போதாதா என்று கேள்விகள் இவ்வேளை யில் எழலாம். உதாரணமாக ஷேக்ஸ்பியர் இம் முரண்பாட்டை உணர்ந்து எழுதினாரா அல்லது ஆராய்ந்து பெற்ற தீர்க்கமான முடிவுடன் எழுதினாரா என்ற கேள்விகள் தோன்றலாம். ஷேக்ஸ்பியர் இம் முரண்பாட்டை அறிந்து எழுதியதாகக் கொள்ள முடியாது. இம் முரண்பாட்டின் தன்மையையும், அதன் தவிர்க்க முடியாமையையும் அவர் நன்கு உணர்ந்து எழுதியுள்ளமை தெளிவாகும். அவருடைய சோக நாடகங் களில் வரும் நாயகர்கள் தமது சூழ்நிலையுடன் மாறுபட்ட காரணத்தால் வீழ்ச்சியுற்றதை அவர் சித்தரித்துள்ளார்.
இலக்கிய ஆக்கத்திற்கு முரண்பாடு பற்றிய அறிவு தேவை என்பதை அறிய இரண்டாயிரம் ஆண்டுகள் மூத்த பிளேட்டோவிடமோ. ஏழாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்த ஷேக்ஸ்பியரிடமோ நாம் போகவேண்டியதில்லை. தமிழிலக் கியத்திலும், வடமொழிக் காவியங்களிலும் ‘கொழுவல்கார நாரதர் உண்டாக்கும் குழப்பங்களும், ஆதனால் ஏற்படும் முரண்பாடுகளும் இலக்கியங்கள் உருவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இன்று உலகில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்குக் கார ணம் நாரதர் அல்ல என்பதனை நாம் அறிவோம். இம் முரண் பாடுகள் என்றும் உள்ளவை; எங்கும் உள்ளவை ; எவற்றையும் பாதிப்பவை; பலமும், மூர்க்கமும் பொருந்தியவை. என் றும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால் – பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவன என்பதனால் எந்த எழுத் தாளனும் இம் முரண்பாடுகள் நிலவுவது தனக்குத் தெரியாது என்று கூறமுடியாது; அல்லது இம் முரண்பாடுகள் முக்கிய மற்றவை எனக் கூறித் தப்பித்துவிடவோ, எல்லாவற்றிற்கும் மேலாகத்தானே உள்ள தால் இவை தன்னைப் பாதிக்க முடி யாது என்றோ சொல்லமுடியாது. சமூகத்தில் ஓர் அங்கம் என்னும் காரணத்தால் அவன் இம் முரண்பாடுகளால் நிச்சயம் பாதிக்கப்படுகின்றான். அவனை அறியாமலே அவன் சிருஷ்டி களில் இம் முரண்பாடுகள் இடம் பெறுகின்றன. ஆகவே இம் முரண்பாடுகளின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும் பொழுது அவனால் சிறந்த இலக் கியங்களை உருவாக்க முடிகின்றது. இதனால் இம் முரண்பாடு களை ஓரளவே உணர்ந்து எழுதுபவனுடைய சிருஷ்டிகளை விட, அவற்றை அறிந்து எழுதுபவனுடைய சிருஷ்டிகள் வலிவும், கம்பீர்யமும், சத்தியமும் நிறைந்து விளங்கும் என்பது தெளிவாகும். ஆகவே, ஒரு சிறந்த எழுத்தாளன் இம் முரண் பாடுகளை இலக்கிய வடிவமாக்குவதற்கு கருப்பொருளாக அமைப்பதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அவனுடைய எழுத்து இம் முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகின்றது. ஆனால் எழுத்தாளன் இம் முரண்பாடுகளை ஒரு தத்துவ ஞானியைப் போலவோ, சமூகவியல் வல்லுனன் மாதி ரியோ, அல்லது அரசியல்வாதியைப் போலவோ, விஞ்ஞானி யைப் போலவோ சித்தரிக்கமாட்டான். அவ்விதம் அவன் செய்வானாயின் அவனுடைய சிருஷ்டி எதுவாகவும் அமையும்; இலக்கிய அந்தஸ்தை மட்டும் பெறமுடியாது. ஒரு சிருஷ்டி கர்த்தா புகைப்படம் பிடிப்பதில்லை; ஓவியம் தீட்டுகின்றான் என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
தான் கண்ட முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு எழுத் தாளனுக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று உருவாகின்றது. அம் முரண்பாட்டை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பது தான் அப் பிரச்சினை. உதாரணமாக உலகில் இன்று பழமைக்கும், புது மைக்குமிடையில் நிகழ்ந்து வரும் போராட்டத்தில் எதை அவன் ஆதரிப்பது? அழிந்து கொண்டிருப்பதையா, வளர்ந்து வருவதையா அவன் ஆதரிக்க வேண்டும்? நேற்றுப் பலமாக நிலைபெற்று நின்றதையா நாளை பலம் பெற்று விளங்கப் போவதையா அவன் ஆதரிக்க வேண்டும்?
உலகில் மாற்றம் தவிர்க்க முடியாத நியதி என்னும் உண் மையை உணர்ந்தால் அல்லது சிவ நடனத்தின் தத்துவமும் உலக மாற்றத்தைக் குறிப்பது என்று கூறப்படுவதையாவது அவன் ஏற்றுக்கொண்டால் அவன் உலகத்துடன் சேர்ந்து செல்வதற்குப் புதுமையை ஆதரித்தே ஆகவேண்டும். ‘பழை யன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே’ என்பது கூட சமூகத்தின் தேவைக் குரலாகவே தமிழ்நாட்டில் ஒலித்தது என்பதனை நாங்கள் மறந்துவிட முடியாது.
சிலர் தாம் பிரச்சினைகளின் பக்கம் சார்வதில்லை என்றும் நடுவு நிலைமை வகிப்பதே தமது கொள்கை என்றும் கூறிக் கொள்வர். நடுவு நிலைமை என்ற சொல்லுக்கு எழுத்து அர்த் தம் (Literal Meaning) கொடுக்கப்போய் ஏற்பட்ட மயக்கம் இது. ஒரு வழக்கிற்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி, அநீதி இழைத் தவனுக்கு எதிராகவும், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு சார்பா கவும் தீர்ப்பு அளிக்கும் பொழுது தான் நடுவு நிலைமையைக் காக்கிறான். இதை மாறிச் செய்யும்போது நீதியையும் அதன் தன்மையான நடுவு நிலைமையையும் அழிக்கின்றான். ஆனால் அவன் எதைச் செய்தாலும் ஒரு பக்கம் சார்ந்தே ஆகவேண் டும். ஆகவே நடுவு நிலைமை என்பது பக்கம் சாராது நிற்ப தல்ல; நீதியின் பக்கம் நிற்பதுதான் என்பதை நாம் உணர வேண்டும்.
சிலர், தாம் இருபக்கங்களையும் சார்ந்துள்ளதாகக் கூறிக் கொள்வர். ஆனால் பழமையை ஆதரிக்கும் அதே அளவிற்கு அவர்கள் புதுமைக்குத் தடை போடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை என்னும் ஆறானது மாறமறுக்கும் மனிதர்களை குப்புறத்தள்ளி விடுகிறது. புதுமையை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் பழமை யைப் பற்றிய அறிவற்றவர்கள்; அதை முற்றாகவே நிராகரிப் பவர்கள் என பழமைவாதிகள் பிரசாரம் செய்கிறார்கள். இது முற்றிலும் தவறானது மட்டுமல்ல ஓங்கி எதிர்க்கத்தக்க கருத்து மாகும். புதுமையென்பது திடீரென முளைத்ததல்ல. பழமை யின் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல அம்சங் களைத் தன்னோடு கொண்டு, காலத்தின் தேவைக்கான கருத் தையும் இணைத்துத்தான் புதுமை தோன்றுகிறது. புதுமை என் பது ஒரு சங்கிலிப்பின்னல் தொடர்ச்சியே தவிர திடீரென்று முளைத்தது அல்ல. பிற்போக்கான – உளுத்துப்போன அம் சங்களை மட்டுமே பழமை எனப் போற்றுபவர்கள் புதுமைக்கு மட்டுமல்ல பழமையின் நல்ல அம்சங்களுக்குமே விரோதிகள் ஆகிறார்கள். எனவேதான் தங்கள் உண்மையான ரூபத்தை மறைக்கவும், பிற்போக்கு அம்சங்களைக் காக்கவும் இத்தகைய பிரசாரத்தை அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே வாழ்க்கையைப் பிரதிபலிக்க விரும்பும் எழுத்தா ளன் தானும் வாழ்க்கையுடன் வளர்ந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. எழுத்தாளன் வாழ்க்கையைப் பிரதி பலிக்க வேண்டும் என்னும்போது அவன் புகைப்படம் பிடிப்பது போன்று வாழ்க்கையைக் காட்ட வேண்டும் என்பது கருத்து. ஆகவே. ஒரு போதாது. அவன அறிகரமாக வா வம்க்கால் மட்இரு இலக்கியதன்று. வாழ்க்கையை அப்படியே நேரடியாகப் பிரதிபலிக்கும் எழுத்துக் கலை உருவம் பெற்று விளங்காது என்பது மட்டு மல்ல, அப்படி எழுதும் எழுத்தாளன் வாழ்வில் ஏற்படும் – ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்குத் தனது பங்கைச் செலுத் தத் தவறுகிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஆகவே ஒரு இலக்கியாசிரியன் வாழ்க்கையைப் பிரதி பலித்தால் மட்டும் போதாது. அவன் அதை விமர்சனம் செய்ய வும் வேண்டும். அவன் எவ்வளவு வெற்றிகரமாக வாழ்க் கையை விமர்ச்சிக்கிறானோ அவ்வளவு தூரம் வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்கு அவன் துணைபுரிகிறான். ஆகவே அவன் வாழ்வில் உள்ள முரண்பாடுகளைக் கூராக்கிக் காண் பிப்பதன் மூலம் ; இம் முரண்பாடுகளில் எப்பக்கத்தின் வெற்றி மக்களுக்கு நன்மை தருமோ அப்பக்கத்தைச் சார்வதன் மூலம், வாழ்க்கையின் ஓட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் திசை திருப்ப மக்களுக்கு உதவி செய்கிறான். ஆகவே வாழ்வில் ஏற்படும் எப்பிரச்சினையிலும், வாழ்வில் காணும் எந்த முரண் பாட்டிலும் அவன் ஒரு பக்கம் சேர்ந்தே ஆகவேண்டும். ஆகவே ஒரு பக்கம் சாராது இருக்கும் வரை அவனால் முன் னேற முடியாது. தனது சொந்த இயற்கைத் தன்மையைச் (Personality) செயல்படுத்த முடியாது. அவனுடைய இலக் கியப் படைப்புக் காலத்தின் கண்ணாடியாகவோ, காலமாற்றத் திற்கு ஒரு சாதனமாகவோ இருக்கத் தவறுவது மட்டுமல்ல, அவனுடைய தனித் தன்மையையும் (Originality) காட்ட மாட்டாது. உள்ளவற்றைக் காட்டவேண்டிய, காட்ட முயலும் அவனுடைய படைப்பு உண்மைக்கு மாறானதாகத் தானே பொய்யான தாகி இறந்து விடுகிறது. உண்மையில், உயிரற்ற படைப்பாகவே அது பிறக்கிறது. இது ஒரு இலக்கியாசிரிய னின் பாத்திரங்களுக்கு மட்டுமன்றி அவனுக்கே ஒரு சோக முடிவை ஏற்படுத்தி விடுகிறது.
ஓர் இலக்கியாசிரியன் வாழ்க்கை முரண்பாடுகளில் சரியான பக்கம் சேர்ந்தால் மட்டும் போதாது. சரியான பக் கம் வெல்வது தவிர்க்க முடியாதது என்பதையும் காட்ட வேண்டும். உதாரணமாகப் பழமைக்கும் புதுமைக்கும் நடக் கும் போராட்டத்தில் (பழைமையில் இருக்கும் தீங்குகளை அழிக் கப் புதுமை முயலும் போது புதுமை வென்றே தீரும் என்பதை அவன் காட்ட வேண்டும். இம் முயற்சியின் பயனாக மக்களை அவன் சிந்திக்க வைக்கிறான். தனது காலத்தின் முரண்பாடு களுக்கமைய வாழ்க்கையை மக்கள் தங்களுக்குச் சாதகமான புத்துலகத்தை அமைப்பதற்கும் உதவி செய்கிறான். உலகத் தைப் பிரதிபலிப்பது, விமர்சிப்பது, மாற்றியமைப்பது – இவை தான் ஒரு எழுத்தாளனின் கடமைகளாகின்றன.