கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 5,953 
 
 

இலைகள் வீசும் வாசம் சிந்தனையை கலைத்து மனதை மயக்கி அமைதி படுத்துகிறது.

அதனால் தான் என்னவோ பண்டிகைகள் பூக்கள் இல்லாமல் கொண்டாட படுவதில்லை.

பூக்கள் பரப்பும் மணம் தான் மருந்து போல் துயரம் நீக்கி மகிழ்ச்சி தருகிறது. நிறங்கள் பார்க்கும் கண்கள் குளிர்ச்சி கொண்டு இமைத்து கொள்கிறது.

சரவணன் உணவே மருந்து என்ற சிந்தனையில் இருந்த காலம். அவன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சிறிது காலம் கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருந்த நேரம்.

அவன் ஊரில் அப்போது தான் இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கையில் விளைந்த பொருட்கள் என்று ஊரின் எல்லையில் ஒவ்வொரு திசையிலும் ஒன்று இரண்டு கடைகள் முளைக்க ஆரம்பித்தன.

பெரும்பாலும் நிரந்தர வருமானம் உள்ளவர்கள் அல்லது இதில் ஈடுபாடு உள்ளவர்கள் நடுத்தர வர்க்கம் அல்லது ஒருவரை பார்த்து ஒருவர் நெட்ஒர்க் போல் ஒரு கடையில் மட்டும் அல்லது ஒவ்வொரு கடையிலும் வாங்குவார்கள்.

சரவணனுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதுவும் பெரிய கல்வி நிறுவனத்தில். தேர்வு நடத்தும் பிரிவில் வேலை.

நல்ல சம்பளம். சிறிது காலத்தில் உறுதியாக வேலை நிரந்தரமாக நல்ல வாய்ப்பும் இருந்தது.

அவனுக்கு இயல்பாக இயற்கை வோளாண்மை மீது மிகவும் ஈடுபாடு உண்டு. மற்ற புத்தகங்கள் படிப்பது போல் இயற்கை உணவு மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பான புத்தகங்கள் கொண்ட கட்டுரைகள் ஆவர்மாக படிப்பான். மாத இதழ்கள் தவறாமல் வாங்கி படிப்பதுவும் உண்டு.

அப்போது தான் சுரேஷ் அவனுக்கு பழக்கம். அதுவும் அந்த ஊரில் முதன் முதலாக ஒரு சிறு கல்யாண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி அமைத்து இருந்தார்கள்.

சந்தியா புக்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு நகரங்களிலும் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்வார்கள். எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கும்.

அங்கு சென்ற போது தான் அவனுடைய கல்லூரி தோழர் நல்ல தம்பி அவனை சுரேஷ்க்கு அறிமுக படுத்தினார்.

சுரேஷ் நல்ல உயரம். நீண்ட நெற்றியின் குறுக்கே ரேகைகள் ஓடியது. புத்தகம் அதிகம் படிப்பவர்கள் போல கண்ணாடி அணிந்து இருந்தார். ஆனால் மெலிந்து காணப்பட்டார். பெரிய நாமம் இட்டு இருந்தார். நிரந்தரமாக எப்போதும் இருப்பது போல் இருந்தது.

நல்ல தம்பியும் சுரேஷ்சும் சரவணனை விட பத்து இருபது ஆண்டுகளாக முன்பே புத்தகம் படிப்பவர்கள். சரவணன் ஒரு வருடமாக தான் படித்துக் கொண்டு இருக்கிறான். ஏற்கனவே தெரிந்தவர்களாக இருந்தாலும் புத்தகம் தான் இவர்களை இணைத்துக் கொண்டு இருக்கிறது.

சுரேஷ் டிப்ளோமா படித்து விட்டு ஐந்து ஆண்டுகள் வெளிநாடுகளில் வேலை பார்த்து விட்டு வந்தவர். தொழிலில் நல்ல அனுபவம் பெற்றவர். திருமணத்திற்கு பின் சொந்த ஊரில் சொந்தமாக ஏலக்டிரீக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சரவணன் மற்றும் சுரேஷ் புத்தகங்கள் வாங்குவது மற்றும் கொடுப்பது தொடர்பாக அவ்வபோது சந்திப்பது என்று இருந்தனர். நாட்கள் செல்ல தினமும் நல்ல தம்பி வீட்டில் அல்லது சுரேஷ் யின் பழைய வீட்டில் சந்திப்பது வழக்கமானது.

பெரும்பாலும் படித்த புத்தகங்கள் தொடர்பாக தான் பேச்சு ஓடும்.

சுரேஷ் தேர்ந்த வாசகரும் கூட. நிறைய படிக்க கூடியவர். அவர்கள் ஊரில் இலக்கிய கூடல் என்ற அமைப்பு இருந்தது. மாதம் தோறும் புத்தகம் தொடர்பாக கூட்டம் நடக்கும். சுரேஷ் பல முறை அவனை அழைத்திருக்கிறார். ஆனால் அவன் சிரித்துக் கொண்டே தவிர்த்து விட்டான்.

சுரேஷ் மூலமாக தான் பெரியசாமியின் இயற்கை அங்காடி அறிமுகம். அவ்வபோது தனியாக இல்லையென்றால் சுரேஷ் யுடன் கடைக்கு செல்வது உண்டு. அரிசி பருப்பு வகைகள் பழங்கள் காய்கறிகள் சர்கரை பனகற்கண்டு போன்ற பொருட்கள் இருக்கும். சுரேஷ் வாங்குவதில் ஒரு சில பொருட்கள் இவன் வாங்குவான். ஆனால் விலை அதிகம். ஏன் என்று கேட்டால் இயற்கை இயற்கை என்ற பதில் வரும். அவன் மனதில் நினைத்து கொள்வான் பகல் கொள்ளை என்று.

ஒரு முறை சுரேஷ்யின் வர்புறத்தலுக்காக இலக்கிய கூடல் கூட்டத்திற்கு சென்றான். அது ஊரின் நடுவில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

காந்தி அரங்கு என்பார்கள். ஏன்னென்றால் அந்த ஊருக்கு அந்த அரங்குக்கு மகாத்மா காந்தி இரண்டு முறை வந்து மக்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அவன் அன்று தான் முதல் முறையாக அந்த அரங்குக்கு சென்றான். அங்கு மூன்று அரங்குகள் உள்ளது விலை அதிகம். மாடியில் ஒரு அரங்கு மட்டும் உள்ளது விலை குறைவு.

அங்கு தான் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அவன் கூட்டத்திற்கு சென்றான். நல்ல கூட்டம். சுரேஷ் பார்த்தது விட்டு சிரித்தார். அவன் நினைத்து கொண்டான் வராமல் இருந்து இருக்கலாம் என்று. முதல் காரணம் அந்த புத்தகத்தை படிக்க வில்லை.

அனைவரும் புத்தகத்தை பற்றி பேசினார்கள். அவனுக்கு ஹந்தி படம் பார்ப்பது போல் இருந்தது ஒன்றும் புரியவில்லை.

எழுத்தாளர் ஒருவர் பேச தொடங்கினார். சிறப்பான புத்தகம். இந்த புத்தகம் நூறு பக்கங்கள் இல்லாமல் ஐநூறு பக்கங்கள் எழுதி இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். அனைத்தும் அனுபவமாக இருக்கிறது கதையாக மாற வில்லை. திருப்பங்கள் இல்லாமல் தட்டையாக இருக்கிறது. ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறது. சொல்ல வந்த செய்தியை ஆழமாக அலுத்தமாக செல்லவில்லை என்றார். கைகளை ஐந்து முறை தட்டினார்கள். பேச்சாளர் உறையை முடிப்பதற்கு.

அதன் பிறகு அவன் எந்த இலக்கிய கூட்டத்திற்கும் சென்றதில்லை. படிப்பதோடு சரி.

அவன் வாரத்திற்கு ஒரு முறையாவது பெரியசாமி கடைக்கு செல்வது வழக்கம். ஒரு காரணம் இயற்கை மற்றொன்று அபிராமி.

முதல் முறையாக பார்த்த போது அவளின் இயல்பான பேச்சும் சிரிப்பும் மிகவும் பிடித்து விட்டது. லெட்சணமான மஞ்சள் பூசிய முகம். உறுதியான முத்து பற்கள். தாமரை பூவிதழ்கள். எடுப்பான மூக்கு நம்மை அருகில் வா என்று அழைப்பது போல் இருக்கும். நிளமாக மீன் கண்கள் இங்கும் அங்கும் ஓடும். கிராமத்தின் சாயல். சரியான உடற்கட்டு. இடையில் ஒரு ஒளி சுற்றிக் கொண்டு இருக்கும். அவள் ஒற்றை சடை இடையை கடந்து அடர்த்தியாக இருக்கும். கண்களை உருத்தாத உடை. ஒலித்து கொண்டே இருக்கும் கொலுசு. கடலலைகள் ஓடுவது போன்று இளமை ததும்பி விளையாகிறது அவளிடம்.

சுரேஷ்யுடன் சென்றதால் அவனுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. யாரிடமும் அதிகமாக பேசாத சரவணன் இவளிடம் மட்டும் பேசுவான்.

அந்த வழியாக செல்லும் போது எல்லாம் அவளை பார்க்காமல் அவன் கடந்தது இல்லை.

ஒரு நாள் சென்றான். மஞ்சளும் சிகப்பும் தவழும் ஆடையில் பூத்திருந்தாள்.

பார்த்தவுடன் புன்னகைத்தாள்.

சார் வாங்க. போன வாரம் வந்தது.

கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அதான் வர முடியவில்லை.

முடிந்தது விட்டதா.

இப்பதான் முடிந்தது அபி.

என்ன விசேஷ்சம் புது புடவை

சும்மா தான்

இப்படி புது டிரஸ்ல வந்தா சம்பளம் கிடைக்குமா.

இந்த சம்பளம் எப்படி பத்தும். ஏதோ ஒரு வேலை பொழுது போகணும் அவ்வளவு தான். வீட்டில் இருந்தால் பொழுது போகாது.

அது சரி

இயற்கையினு சொல்லி உங்க கடைல எல்லாத்தையும் விலை அதிகமாக வச்சி வித்துருவீங்க.

என்ன சரியா

ஆமா நீங்க சொல்ரது சரி

எல்லாம் நம் சந்தையில கிடைக்கும். அங்க கிடைக்காத பொருள மட்டும் இங்க வாங்கிகங்க.

என்ன இவ்வளவு ஓப்பனா பேசுறீங்க.

என்ன பண்ணுரது. தெரிஞ்சவங்க கிட்ட மட்டும் பேசறேன். எல்லார்ட்டையும் சொல்ல முடியாது.

உங்களுக்காக தான் வாங்குறேன்

அது சரி என்று வெட்க்கப்பட்டு சிரித்தாள்.

சரி பார்ப்போம். நீங்க ஏதோ கம்ப்யூட்டர் படிக்கணும் என்று கேட்டீங்கணு சுரேஷ் சொன்னார்.

எப்பவேனும் நாளும் வரலாம் உங்க சென்டர் தான்.

வரேன் சார்.

நாளை மருத்துவ வகுப்பு இருக்கு வாங்க. சுரேஷ் உங்கள்ட் சொல்ல சொன்னார் வர சொல்லி. அப்படிய.

ஞாயிற்றுகிழமையா. நீங்க வர மாட்டிங்க என்னைய மட்டும் வர சொல்றீங்க.

சார் கிண்டல் பண்ணாதீங்க

நான் வருவேன் எனக்கு வேற வேலையிருக்கு. நீங்க வாங்க சார்.

வரேன் அபி

சரவணன் செய்திதாளை பிரட்டும் போது “போலி டாக்டர்கள் கைது ” என்று செய்திதாளில் போட்டு இருந்தது. எல்லொரும் பிடிப்படுகிறார்கள். இந்த பெரியசாமி மட்டும் இயற்கை வோளான்மையை வைத்து தப்பித்து கொள்கிறான் பரதேசி பய என்று தீட்டினான்.

சரவணன் மருத்துவ வகுப்பு சென்றான். சுரேஷ் மற்றும் பதினைந்து பேர்கள் சம்மனம்யிட்டு அமர்திருந்தார்கள்.

பெரியசாமி ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இருந்தான். வெள்ளை சட்டை அணியிருந்திருத்தான். பாத்தா பெரிய டாக்டரின் பாவணையில் தான் அமர்ந்திருந்தான். வந்த வியாதிக்கும் வராத வியாதிக்கும் வார்த்தையாலேயே தேநீர் ஆத்துவது போல் உறை ஆற்றிக கொண்டு இருந்தான் திருட்டு பய.

ஒரு பெண் ஓரமாக கொஞ்சம் பருமனாக இருந்தாள். அவளை பற்றி பெரியசாமி சொன்னான். பசித்தால் மட்டும் தான் சாப்பிடுவாள் இல்லை எனறாள் சாப்பிட மாட்டாள்.

இவள் என்னுடைய வழிமுறைகளை சரியாக பின்பற்றி வருகிறாள் என்றான். எல்லா அடிமைகளும் கைதட்டினார்கள்.

கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.

அபிராமி சரவணனை அழைத்தாள்.

சார் வந்துட்டீங்களா

முன்னமே வந்துட்டேன்

உங்கள பாக்கத்தான் வந்தேன்.

நீங்க காணோம்

சும்மா இருங்க சார்.

டாக்டர் சார் இருக்காரு

அது சரி. இவரு டாக்டர் அப்ப ஓரிஜனல் டாக்டர்.

உங்கள்ட் ஜேய்க்க முடியாது.

சுரேஷ் அவனை பெரியசாமியிடம் அறிமுக படுத்தினான்.

சார் இவர் என் நெருங்கிய நண்பர்.

ஆமா கடைக்கு வருவார் பாத்துருக்கேன்.

நீங்க பெரிய நகரத்தில் நல்ல வேலைக்கு செல்லாமே . ஏன் இந்த ஊர்ல இருந்து அலையறீங்க.

ஐயா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துகாதிங்க.

சொல்லுங்க

ஒரு கான்ஸப்ட் இருக்கு

இந்த காலத்து பசங்க படிப்பு படிப்பு என்று ஓடுராங்க. அப்பறம் வேலை வேலை என்று சாப்பாடு தூக்கம் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறார்கள். அப்பறம் காசு காசு என்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு பணம் சேர்க்கிறார்கள். பொருள் சொத்து சேர்ந்தவுடன் ஏதோ ஒரு வியாதி வந்து விடுகிறது. இது ஒரு சுழல்.

அப்பறம் உங்கள மாதிரி ஆட்கள்ட்ட மாட்டிட்டு முழிக்கிறாங்க.

தன்னுடைய வாழ்க்கைய வாழ முடியாம இருக்காங்க.

நான் இந்த சூழல்ல சிக்காம கொஞ்சம் தள்ளியிருக்கேன்.

பெரியசாமியின் முகம் கொஞ்சம் சிவந்தது.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு அரசியல்வாதி பெரிய சாமியிடம் மருந்து சாப்பிடுபவன் போல. அவன் இன்னொருவனை அழைத்து வந்தான்.

அவனுக்கு கிட்னி பிரச்சனை போல பெரியசாமியிடம் மருத்து வாங்க வந்தான். பெரியசாமி அவனிடம் எல்லாவற்றையும் கேட்டு விட்டு நீங்கள் ஏற்கனவே வேறு மருத்துவம் பார்க்காமல் வந்து இருந்தால் நான் மருத்துவம் பார்ப்பேன். அதனால் என்னால் பார்க்க முடியாது என்றான்.

அவன் மிகவும் சோர்ந்து போய்விட்டான். அங்கிருந்து கிளப்பும் போது சரவணன் அவனிடம் ஆறுதல் மொழி கூறினான். எதையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். நல்லது நடக்கும் என்றாள்.

சுரேஷ்யுடன் பேசிக்கொண்டே வீட்டுக்கு சென்றாள்.

அதிகாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி இடித்தது. பறவைகளின் ஒலி எங்கும் இல்லை. மழை பெய்ய தொடங்கியது.

கலையிலேயே அபிராமி சரவணனை அழைத்தாள்.

அபி என்ன சர்பிரைஸ் . காலையிலே.

சார் ஒரு பிரச்சனை

என்ன பிரச்சனை

எங்க டாக்டர் சொன்ன வழிமுறைய பின்பற்றினாங்க ஒரு அம்மா. அதனால அவங்க உடம்பு சரியில்லம இருந்தாங்க. இப்போ மருத்துவமனையில சேர்த்திருக்காங்க

என்னா ஆயிடுச்சு

ஐசியுல ரொம்ப சீரியஸ்சா இருக்காங்க

வங்கில வேலை பாக்குறாங்க. இரண்டு குழந்தைங்க இருக்காங்க.

நீங்க எங்க இருக்கீங்க.

நாள் மருத்துவமனைக்கு போயிட்டு இருக்கேன்.

சரி

கடை பக்கம் போகாதீங்க

ஓகே.

சரவணன் ஒரு வேலையா வெளியூருக்கு போனதால சுரேஷ்ஸை மறந்து விட்டான்.

ஊருக்கு வந்தவுடன் சரவணன் சுரேஷ்ஸை வழக்கமல் போல் அழைத்து அவனுடைய பழைய வீட்டில் சந்தித்தான்.

சுரேஷ் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

என்ன பிரச்சனை

பல பிரச்சனை. அபிராமி உங்கள்ட் சொன்னாங்களா.

ஆமாம். அந்த அம்மா நல்ல இருக்காங்களா.

பொழச்சிட்டாங்க.

நல்ல நேரத்திற்கு சென்றோம். நல்ல டாக்டர்ஸ் இருந்தாங்க காப்பாத்திட்டாங்க.

பெரியசாமி தப்பித்து விட்டான். திருட்டு பய.

நல்லா இருக்காங்க முருகா! முருகா!

உங்களுக்கு என்னாச்சு.

எனக்கும் அதே பிரச்சனை தான். ஆனா சீரியஸ் இல்ல. ஹாஸ்பிட்டாலுக்கு இரண்டு நாள அலைஞ்சேன். இப்ப பரவால ஆனாலும் டாக்டர்ட்ட காட்டனும்.

பெரியசாமி பயல ஏதாவது பண்ணனும் சுரேஷ்.

இல்ல வீடுங்க சனியன. நம்ம தப்புதான். அவன நம்புனதுக்கு கலுத்த அறத்துட்டான் பாவி பய .

சரவணன் சிவந்த முகத்துடன் வீடு நோக்கி சென்றான்

சுரேஷ் சரவணனின் மைத்துனர் மூலமாக நல்ல படித்து பட்டம் பெற்று மிகுந்த அனுப்பவம் வாய்ந்த ஆயுர்வே மருந்துவர் இராமநாதன் குமார் என்பவரிடம் மருத்துவம் பெற்றார். தன் வயிற்று பிரச்சனையை சரி செய்து கொண்டு வலியிலிருந்து பரிபூரணமாக மீண்டார்.

பெரியசாமி அரசியல் கட்சியில் இருப்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *