சாலை போராட்டம்




என்னங்க உங்களுக்கு இன்னுமா வேலை முடியலை? அப்படி என்ன தான் பண்ணிட்டிருக்கீங்க?

ஏய் அம்மு இன்னும் கொஞ்சநேரம் தான் கூட்டம் முடியப் போகுது முடிஞ்சதும் கேளம்பிடுவேன்மா?.
இந்த பொது சேவை டாக்டருக்கு அவர் தொழிலைவிட பொது சேவை தான் முக்கியமா போச்சில! உங்களுக்கு எப்போதான் எங்க ஞாபகம் வரப் போகுதோ போங்க? என்னடா வீட்ல மனைவினு ஒருத்தி இருக்காளே அவளை பார்க்கனும் அவளுக்கு துணையா ஒரு மகள் இருக்காளே அவக்கூட விளையாடனும் என்ற எண்ணம் கொஞ்சக்கூட இல்லாம இப்படி ஊர் பிரச்சனைக்கு ஒடுறீங்களே? எப்போதான் நம்ம வீட்டு பிரச்சனயை சரிப்பண்ண போறீங்க?
டாக்டர்க்கு படிச்சிட்டு போராட்டாம் சமூக சீர்திருத்தம்னு ஒடுறதுலேயே இருக்கீங்க. என்னைக்காவது ஒரு நாள் நாங்க உங்கக்கூட இல்லாம போகும் போது தான் தெரியப் பாருங்க அந்த வலி அப்போ வருத்தப்படப் போறீங்க..!
அம்மு இப்படிலாம் பேசாதடி ப்ளீஸ்.
சரிங்க உங்கக் கூட பேசிட்டே இருந்தா நேரம் போய்விடும். நான் போய் நம்ம பொண்ணை பள்ளியிலிருந்து கூட்டி வந்துடுறேன்
ம்ம்ம்… ம்ம்ம்ம்..! சரி அம்மு பார்த்து போய் வா.. அம்மு நீ போற வழியில் ஒயின் ஷாப் (மதுகடை) இருக்கே. அந்த சாலை வளைவில் மட்டும் கொஞ்சம் பார்த்து போமா சரியா?
சரிங்க! நீங்க சிக்கிரம் வந்துடுங்க..
சரிமா.
என்னங்க என்கிட்ட சரினு சொல்லிட்டு எங்கையாவது போய் நைட் லெட்டா வந்தீங்க அப்பறம் அவ்வளவு தான் சொல்லிட்டேன், பார்த்துக்கோங்க என்ன..!
சரி சரி உன் கோவம் புரியுது அம்மு… நேரா நான் வீட்டு வந்துடுறேன் போதுமா?
ம்ம்ம்ம்!!! அந்த பயம் இருக்கட்டும்.
ம்ம்ம் ஒ.கே டா அம்மு நான் நிச்சயம் வந்திடுறேன்.
அம்முவும் தனது வண்டியை எடுத்துக் கொண்டு மகள் வாணியை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றாள்..
வனித்தா அம்மாவின் வருகைக்காக பள்ளியின் பெரிய நுழைவாயில் அருகே காத்திருந்தாள்..
வண்டிச் சத்தம் கேட்டதும் அந்த கதவுகளை திறந்துக் கொண்டு வெளியே ஒடி வந்து அம்மா அம்மா இன்னைக்கு நான் தான் வண்டியை ஒட்டுவேன் நீ பின்னாடி உட்காருமா.
அம்முவும் சரி நீயே வண்டியை ஒட்டு என சொன்னாள்.
வனித்தாவும் வண்டியை அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள். இருவரும் தாய் மகள் போன்றில்லாமல் நல்ல தோழிகளை போன்று பேசிக்கொண்டே வருவார்கள். அம்மா இன்னைக்காவது அப்பா சீக்கிரம் வருவாரா? இல்லை வழக்கம் போல் தானே?
அதான் தெரியல வனித்தா. என்ன பண்ண போறாரோ தெரியல டி. அவர் மட்டும் இன்னைக்கு லேட்டா வரட்டும் அந்த மனுசனுக்கு இருக்கு.
ரொம்ப கோவப்படாத வாணி, அப்பா சீக்ரமாவே வந்திடுவாரு.
அடியெய் அம்மானுக்கூட பார்க்காம வாணினு பேர் சொல்லியா கூப்பிடுற டி.
சரி வாமா கொஞ்சிக்காத வீட்டுக் போனதும் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லலாம்.
ம்ம்ம்..! சரி சரிம்மா.. என்று சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
அவர்களின் எதிரே ஒரு பைக் மின்னல் வேகத்தில் இவர்களின் வண்டிமீது மோதியது.
ஒரு நிமிடம் அங்கே பெரும் அமைதியானது சிலர் பதற்றமாக ஒடிவந்தாவர்கள்.
வண்டியை ஒட்டி வந்த வனித்தா தனியே விழுந்துக் கிடந்தாள். அவளின் அம்மா வாணி பின்னாடி அமர்ந்தக் காரணத்தால் மூன்றடி தூரம் தூக்கி வீசப்பட்டாள்.
எதிர் பைக்கில் வந்த இரு இளைஞர்களுக்கும் ஒரு சிறு கீறல்கூடயில்லை. விபத்தை எற்படுத்திவிட்டு தம்பித்து ஒடவும் முயன்றார்கள். இதில் நல்ல மது போதையில் வேறு.
நம்மாள் அடிப்பட்டவர்களை மீட்க முயற்சியும் என்ன நடந்தது என்றுக்கூட பார்க்கவில்லை. ஏனென்றால் அந்தளவிற்கு குடி போதை.
இந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட, பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்?
இந்த தகவல் டாக்டர் ராஜேஷ்க்கு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு ஓடோடி வருகிறார்
வந்து பார்த்தால் மனைவி இறந்துக் கிடக்க மறுபக்கம் மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, தன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மனைவியை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டு அழுதார். அவரின் வாழ்நாளில் மறக்கவே முடியாத வலி வேதனையை அப்போது தான் உணர்ந்தார்.
அவரின் குடும்பம் ஒரே ஒரு நொடியில் இல்லாமல் போனது. எல்லாவிதமான கனவுகளும் ஆசையும் நிராசையாகியதே?
இப்படி உன்னை பார்க்கதான் வாணி என்னை சீக்கிரம் வானு கூப்டியா என்று கண்ணீர் விட்டு அழுதார். அக்கம் பக்கத்தினர்களின் கண்கள் கண்ணீர் குளமானது
விபத்துக்குக் காரணமான அந்த இரு இளஞ்சர்களை பார்த்தார். அங்கே என்ன நடந்ததென்று தெரியாமல் உலறிக்கொண்டிருந்தார்கள். இதற்கெல்லம் யார் தான் காரணம்? இளைய தலைமுறைக இவ்வாறு குடி போதைக்கு அடிமாக்கி அவர்கள் கேடுவதுமில்லாமல் மற்றவர்களின் குடும்பத்தையும் சேர்த்து அழிக்கும் இந்த மது கடைகளை இனி திறக்கவே விடக்கூடாதென்று முடிவெடுத்து மனைவியின் சடலத்தோடு சாலையிலேயே மதுக்கடையை மூடச்சொல்லி போராடத் தொடங்கினார் ராஜேஷ்.
இந்த உயிரிழைப்புக்கு காரணமான அந்த மது கடையை மூடும் வரை நான் இந்த சாலையை விட்டு எழமாட்டேன். என் மனைவியின் சடலத்தையும் தரமாட்டேன் என்று விடாப்பிடியாக போராடினார், அதன் பயனாக காவல் துறையினர் ராஜேஷிடம் சமாதானம் பேசினார்கள். ஆனாலும் அவரின் முடிவில் மாற்றம் இல்லை.
அதிலொரு காவலர் இந்த மது வியாபாரத்தால் தான் அரசு இயந்திரமே ஒடுகிறது. பிறகு எப்படி இது சாத்தியம்? என்றார். ஐந்து மணி நேரம் கழித்து அந்த சாலையிலுள்ள மதுக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ராஜேஷின் போராட்டாமும் வெற்றிப் பெற்றது.
அப்போது சொன்னார், பல நாள் இந்த மதுக்கடையை மூட பலவித போராட்டாங்களை முன்னேடுத்தேன். அப்போதெல்லாம் தோல்வியுற்றேன். என்னருகில் நீ இருந்தாய். தற்போது இந்த போராட்டம் உன்னால் வெற்றி கிட்டியது, இதை கேட்ட நீயுமில்லை. சொல்லும் நிலையில் நானுமில்லை.
என் போராட்டா வாழ்க்கைகக்கு உயிர் கொடுத்தவளே, இனியும் என் போராட்டம் மதுவை ஒழிக்கவே பயணிக்கும்.
மதுவை ஒழித்தாலே சமூகத்தில் முக்கால்வாசி தவறுகளே நடக்காது என்றார்.
போராட்டாக்கத்தையும் தீர்மானித்தார்