சாந்தி இருப்பின் சாஸ்வத தேவதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 291 
 
 

வினை கொண்டு வந்த வாழ்க்கையிலே வெறும் வெற்று நிழலாகவே மாறிப் போயிருந்தாள் நந்தா . முன்பெல்லாம் சிறுமியாக இருந்தபோது அவளின் களிப்பு உலகமே வேறு. அசுரமனிதர்களின் காலடி மண்ணே படாத சொர்க்க பூமி அது. சாமத்தியப்பட்டு சில நொடிபொழுதிலேயே எல்லாம் தலை கீழாக மாறிப் போனது. அன்பை விதைப்தற்குப் பதில் நஞ்சை விதைப்பவர்களே அவளை எதிர் கொண்டு கொன்றார்கள். இதை சாட்சி பூர்வமாக நிரூபிக்கவே வேதம் கூறும் ஒரு சாட்சி தேவதையாக, இன்று அவள் உள் மனம், அதீத ஆற்றலுடன் களை கொண்டு நிற்கிறது.

சரி உள் மனத்த்திற்கு இங்கு என்ன வேலை. வெளிமனம் தான் எல்லா வேலையும் செய்கிறது. அதன் காரிய சித்திகளே அனைத்து செயற்பாடுகளூம் இதற்கு உந்து கருவியாக இருப்பது மாயையின் விளையாட்டே தவிர வேறல்ல. அப்படி வருகிற சங்கதிகளே, நந்தாவை வேரறுக்கும் வெளியுலக நடப்புகளாக வந்து, அவளை பங்கமுற செய்தன.

இதிலிருந்து அவள் மீண்டு வருவதென்பது, எட்டாக்கனியாகவே போய் விடும் . அவள் எங்கு இருக்கிறால்? இந்த மண்ணைத் தவி வேறு புகலிடமில்லை. இங்கு கடவுள் வந்தால், தான் அவள் சாட்சி தேவதையாக, தலை நிமிர்ந்து வாழ முடியும் அப்படி இல்லாமல் போனால் சகதி குளித்த, கதையாகவே எல்லாம் சந்தி சிரிக்க வந்து நிற்கும். இருட்டிலே ஒளிராத எத்தனையோ முகங்கள், கரி பூசிக் கொண்டு அலைவதாய் உணாரும் போதெல்லாம் அவளுக்கு மனம் வலிக்கவே செய்கிறது. பூமிக்க தலை வணங்க முடியாமல், காட்சி பொம்மைகளாகவே மாற வேண்டிய நிலைமை அவளுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் உண்டு. இதிலே பாசங்குத் தனம் காட்டி வதைக்கிற உறவு மனிதர்கள் வேறு யாரோடும் அவளுக்கு ஒட்டவில்லை.

உறவு விலங்கை அறுத்தாலொழிய அவளுக்கு நிம்மதி ஏது?அது அவ்வளவு லேசல்ல. மனிதனாகப் பிறப்பதேபாவ் வினை தீர்க்கத் தான் என்ற ஞானம் வந்த, பிறகு, சும்மா இருப்பதொன்றே சுகமான அனுபவமாகப் பட்டது. சகதிக்குள் சிக்கிய பிறகு அது வெறும் கனவாகவே போய் விடும் போல் தோன்றியது.

அவளின் ஆச்சி, அதாவது அம்மாவை ஈன்றெடுத்த, புண்ணியவதி அவர்கள் வீட்டில் வந்து தான் செத்தொழிந்தாள்.

அப்போது அவள் பதினாறு வயதுப் பருவப்பாவை. எனினும் எதிர்காலம் குறித்த, கனவுகலின்றி, அவள் சகஜமாகவே இருந்தாள் அப்படி இருந்தால், தான் அவள் கைக்கு வானம் வருமென்று நம்புகிற இந்த மூடச் சமூகத்தில் அவள் ஒரு ஒற்றைப் புள்ளி நிழலாகவே தெரிந்தாள். அப்படித் தெரிந்ததால் தான் வந்தது வினை. வாழ்க்கையும் தடம் புரண்டது. அவள் அமைதி சாம்ராச்சயத்தையே, தரை மட்டமாக்கி மூழ்க்க வைத்த பெரும் சோகம் அவளுக்கு.

அவள் பெரியவளாவதற்கு முன்பே நடந்த ஒரு உணர்வுக்குக் கொலை, மாலை வந்து விட்டால் அவளுக்கு வீட்டிலே இருப்புக் கொள்ளாது. ஆனந்தவிகடன் படிக்க அம்பலவாணர் வீட்டிற்குப் போனால், தான் அதில் லஷ்மியின் தொடர்கதையை மெய்மறந்து படித்து விட்டு வரலாம், அங்கு போவதற்கு பனைவடலியூடாக செல்ல வேண்டும் மாமியின் கண்களை அரிக்க மட்டுமல்ல காறி உமிழவும் இது போதும். அவளுடைய நடைப் பயணத்திற்கே முற்றுப் புள்ளி வைக்கிற மாதிரி இது அவள் எதிர் கொள்ள நேர்ந்த பெரும் சவால்.

இந்த மாமி யார்? அப்பா வழி நெருங்கிய சொந்தம். எனினும் அவளின் உயிர் அறியாத வெறிச்சோடிய இருலில் இந்த மாமி மட்டுமல்ல, இன்னும் பலர் இருப்பதாகப் பட்டது. இன்னும் சாமத்தியப்படக் கூட இல்லை. அதற்குள் அவளைக் கொன்று தீர்த்து விட நினைக்கும் என்னவொரு வக்கிர புத்தி அவர்களுக்கு.

ஒருநாள், மாலை ஐந்து மனியாகும், போது புத்தகம் படிக்க, அம்பலவாணர் வீட்டிற்குப் போவதற்காக, அவள் பனைவடலியூடாகப் போய்க் கொண்டிருக்கும் போது, மாமியின் குரல் காட்டுக் கத்தலாய் காற்று வெளியில் கேட்டது. அவள் சுயாதீனமாக நிமிர்ந்து பார்த்தாள். நினைத்தால், மாமியை தன் தர்ம நெருப்பால் சுட்டெரிக்கவும் தெரியும். தூய அன்பு நெறி பழகிய அவளுக்கு அது சரியென்று படவில்லை. பொறுமை காப்பதே, உத்தமமென்று பட்டது. அதனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மாமியின் குரல் அது நெருப்பாக வந்தது.

ஏய் வீட்டிலை இருந்து வேலை பழகாமல், எங்கை போறாய்? கொம்மா உன்னை சரியாய் பழக்கி, இருந்தால், நாங்கள் தலையிலை, தூக்கி வைச்சு உன்னைக் கொண்டாடுவமல்லே.

இப்ப நான் அதைக் கேட்டனா ? நான் அங்கை போரது புத்தகம் படிக்க. புத்தி திருந்த, அது இதை விட பெரிசல்லே உங்கடை கண்ணுக்கு நான் பூஜ்யமாயே இருந்திட்டுப் போறன் என்னை விட்டிடுங்கோ. அதன் பிறகு அவள் அங்கு நிற்கவில்லை. நடையைக் கட்டினாள் அதோடு கண்ணையும் கட்டிற்று கண் முன் இப்போது மாமியல்ல, இன்னுமொரு பிசாசு.

ஆச்சி இறந்து ஐந்து நாளாகிறது இன்றுதான் சாம்பல் அள்ளும். எட்டுச் சடங்கும் அன்றுபக நெருங்கிய உறவுகளையெல்லாம் கூட்டி வத்து விருந்து கொடுக்க வேன்டும்.அதுவும் இரு தலை முறைக்கு முன்னால், காஸ் இல்லாமல் வெறும் மண் அடுப்பு சமையல்.

அதுவும் அண்டா வைத்து மிகப் பெரிய சமையல் நந்தாவும் அக்காமருமாகச் சேர்ந்து அதற்காக அடுப்பு ஊதியே களைத்துப் போனார்கள் கண் வேறு சிவந்து நீர் வடிகிரது எல்லாம் முடிந்து, அதைத் துடைபதற்காக கைத் துணி தேடி, கொட்டிலுக்கு அவள் வந்து சேர்ந்த போது, பல்லை இளித்துக் கொண்டு ராணி நின்றிருந்தாள். அவள் பக்கத்து வீட்டுக்காரி மட்டுமல்ல நெருங்கி சொந்தம் எனினும் வெவ்வேறு துருவங்கள் மாதிரி இருவரும் . நந்தா அந்த சிறு வயதிலேயே சுற்றம் பேணி வாழ்பவல் அன்பு வளர்க்கும் ஓர் ஆதர்ஸ தேவதை அவள் மாறாக ராணியோ மந்தப் போக்கு ஊர் மேயும் குணம் விழுந்து கிடப்பவர்களைக் கண்டால்சிரிப்பு நகையாடிக் களிக்கிற விகார புத்தி அவளுக்கு.

அப்போதைய வேளையில் அவளைக் கண்டதும் நெஞ்சு பதைத்தது நந்தாவுக்கு காரணம் அவளுக்குப் பக்கத்திலே யோகம் சின்னம்மா வேறு நிற்கிறாளே. அப்பாவின் தம்பி பெஞ்சாதி. கொழும்பு வாழ் நாகரீக மங்கை மானிடம் செழிக்க வராத வரட்டுப் போக்கு அவளுக்கு. திடீரென்று பின்னால் ஒரு குரல்கேட்டது பெரிய அக்கா தான் அவளை அழைத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

நந்து! உனக்குப் பாயாசம் வைக்கத் தெரியுந் தானே. அம்மா உன்னை வரட்டாம்
போ! நான் வரேலை எனக்குத் தெரியாது. இதை அவள் சொல்லி முடிக்கவில்லை சின்னம்மாவின் குரல் கேட்டது எகத்தாலமாக, உவளைக் கேள் சொல்லித் தருவாள்.

இதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மாமிக்கு அடுத்த இன்னுமொரு சகதி குளிப்பு போயும் போயும் ராணியிடம் போய் அவள் சரணடைய வேண்டுமாம் இல்லை வேதமே கற்க வேண்டடுமாம் வேதமென்ன பெரிய வேதம் பூதம் தான் கிலம்பும். ராணி யார்? ஊர் மேயும் பச்சோந்தி பெண், அவளிடம் போனால். வேதம் வராது. பூதம் தான் வரும் விழுந்து கிடக்கிறவர்களைப் பார்த்தே, இரங்குவதற்குப் பதிலாக, கை கொட்டிச் சிரிக்கிற அற்ப புழு இவள்.. இவளை பார்த்து பழகினால், சகதி குளித்தே சாக வேண்டும் நான் இதையறியாமல் பேசியே கொன்று விடுகிற, அற்ப மனிதர்கள் குறித்து, எனக்கென்ன கவலை? எனது இருப்பு பங்கமுறால் சத்தியத்தை தடம் புரளாமல், காக்க வந்த ஒரு தர்ம தேவதை போல நானிருந்தாலே போதுமென்று, அறிவு தீர்க்கமான நினைத்து குழம்பாமல், இருக்கிற, அவள் நிழல், கூட சின்னம்மாவிடம் எடுபடவில்லை அவள் மீது மேலும் கோபமே வந்தது. மக்கு1 எப்படியாவது உருப்படாமல், போ! எனக்கென்ன வந்தது? அவளைப் பொறுத்தவரை, உருப்படுதலென்பது ஒற்றை மொழியில் தான் அது வெறும் உடலே என்று நினைக்கையில் பட்ட அவமானக் காயத்தயும் மீறி, வாய் விட்டு சிரிக்கவே செய்தாள் அந்த சிரிப்பு அலைகள் அடங்கவே வெகு நேரம் பிடித்தது. அது கூட சின்னமாவின் புத்திக்கு எட்டியவரை, அர்த்தமிழந்த வாழ்க்கை சங்கதிகளில் ஒன்றாகவே மாயையில் மூழ்கி, தடம் புரண்டு போகவே இன்னும் அவளின் காத்திருப்புக் கணங்களல்ல இருள் கனத்த யுகம் அவளையறிமலே, நீண்ட பொழுதாய் விடிந்தது அந்த விடியலின் தோயலில் வேதனை தான் மிஞ்சும் வேதம் வராது என்பதை அவள் அறியாமல், போனது, தான் அவள் கொண்டு வந்த பாவக் கண்க்கின் இறுதிச் சுற்றாய் அதுவே அவளின் கழுத்தை நெரித்துக் கொன்று விடும் போல அங்கு மயான அமைதியே நிலவிற்று. அந்த மயான பூமியில் கால் தரிக்க நிற்க விரும்பாமல், நந்தா அங்கிருந்து கிளம்பிப் போய் வெகு நேரமாகிறது.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *