சதிஷ் தவான்




பைக் பயணத்தில் என் மனைவியிடம் ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோ பற்றி கேள்விபட்டதுன்டா என்று கேட்டேன், அதற்கு இல்லை என்று பதில் சொன்னாள், எனக்கு அவற்றில் ஆர்வம அதிகம, அது சார்ந்த படிப்பு படிக்க ஆர்வப்பட்டிருந்தேன். முடியாமல் போனது என்று சொல்லிக் கொண்டே போனேன்.
அப்போது என் மனைவி ஆறு மாத கருவைக் கொண்டிருந்தாள்,எல்லா அப்பாக்களும் போலவே நானும் என் குழந்தையைப் பெயர் வைத்து அழைத்த ஆரம்ப நாட்களில் ஏன் இந்தப் பெயர் என காரணம் கேட்டாள், நான் காரணம் சொன்ன போது மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்.
அவளும் அழைத்தாள்,நாட்கள் கடந்தது,வளைகாப்பும் முடிந்தது.
பெயர் வைத்தே அழைத்தோம் எங்கள் அன்பை,
மாதங்கள் சென்றன,
வலிக்கும்,
உயிர் வர!
இவ்வலி வேண்டும்மென்றெ தவம் கிடக்கும் உயிர்கள். பிரசவவலி என் மனைவிக்கு வந்தது.
அழைத்துச் சென்றனர், உடனிருக்க என்னை அழைக்க நானோ ஒரு மணி நேரம் தாமதம்.
என்ன ஆகும் என்ற சிந்தனையில் எனக்கு வந்த அழைப்பை கவனிக்க மறந்துவிட்டேன்.
பரபரப்பு தொற்றிக் கொணடது,
புறப்பட்டேன் வேகமாய், வழியில் வேறேதும் தெரியகண்ணில் சிந்தனை இல்லை.
பேசியது மனதில் தோன்ற அருகில் ஆள் இல்லையே என்ற ஆழ்வருத்தம் வேறு.
அருகில் இருப்பிங்களா? எப்படி வருவிங்க? என்ன செய்விங்க? எப்படி குழந்தையை கொஞ்சுவிங்க? என்று அவள் சொன்னது நினைவு வர ஆஸ்பத்திரியும் வந்தது.
கண்கள் கண்ணிரைக் கொண்டிருக்க
உள்ளே சத்தம்ம்ம்ம்ம்ம்ம்ம்…..,
பிறக்க காத்துக் கொண்டிருந்த குழந்தையை காணதவிப்பு!
இன்னும் அரை மணி நேரத்தில் என்று சொன்னார்கள்
நிஜமான தவிப்பு
பயத்தின் உச்சம்
சொந்தங்களின் கேள்விகள் என பதற்றம் பதற்றம் பதற்றம்
அரை மணிநேரம் ஒருமணி நேரம் ஆனது
உலகின் கடவுள்களை
எனக்குத் தெரிந்தவரை.
கும்பிட்டுக் கொண்டிருந்தேன்
மொபைல் போனில் பிறக்கும் நேரத்தை குறிக்க மணி ஓடிக்கொண்டிருந்தது,
ஒரு முன்னேற்றமும் இல்லை எல்லோரும் பயந்தோம்.
ஆஸ்பத்திரியின் நர்ஸ், டாக்டர். ஆயா எல்லா பேரும் என் மனைவியை தேற்றிக் கொண்டிருந்தனர்.
சோர்ந்தே போனோம் என் மனைவியைப் போலவே.
கொஞ்சநேரம் போக
அம்மாஆஆஆஆ …அம்மாஆஆஆஆ……. என்று உயிர் போக கத்த திடிரென அந்த எதிர்பார்த்த அழுகுரல்.
எங்கள முகமெல்லாம் சிரிப்பு.
ரெண்டு பேரும் நலம்னு வெளியே வந்து நர்ஸ்,டாக்டர் சொல்ல, மனைவியோடு குழந்தையையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன்.
பத்து நிமிடம் கழித்து தான் மகன் பிறந்திருக்கான்னு சொன்னாங்க.
இன்பம் மகிழ்ச்சின்னு இதைப் போன்ற எல்லா வார்த்தைகளின ;உணர்வையும் பெற்றேன்.
நான் என் மனைவியிடம் சொன்ன மாதிரி மகன் பிறந்தான்.
இரணடு நாட்களுக்கு பிறகு பெயர் பற்றிய சிந்தனைவரத் தொடங்கியது.
பிறந்த நாள் நேரம் வைத்து பெயர் தேட ஆரம்பித்தேன்.
புது அனுபவமாய் இருந்தது.
என் தந்தையும் இப்படித் தானே இருந்திருப்பார்.
பெரிய ஆளாட்டம் நெனப்புலாம வர ஆரம்பித்தது.
பேருதான் என்ன வைக்கலாம்னு குழப்பம்.
ஆறு மாதகருவாக இருந்த போது அழைத்த பெயர் நினைவுக்குவர அவரின் பெயர் அவரைப் பற்றிய தகவல்களை தேடினேன்.
நல்லவிதமாய் இருந்தது, பெரிய நிலைகளை எட்டிய மனிதன் என்று தெரிந்தது, அப்பொழுது தான் மிக எதேச்சையாக அவரின் பிறந்த தேதியை பார்த்து அதிர்ந்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.
இருவரின் பிறந்த தேதியும மாதமும் ஒன்றேதான்.
வருடம் மட்டும் 99 வருடம் வித்தியாசம் உள்ளது.
அவர் பெயர் சதிஷ் தவான், ஏரோ ஸ்பேஸ் விஞ்ஞானி. பிறந்தவருடம் 25-09-1920.
ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் விண்வெளி ஏவுதளத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
என் மகன் பிறந்த நாள் 25-09-2019.
கருவில் உள்ள போது நான் அழைத்தப் பெயர் சதிஷ் தவான். இது எப்படின்னு ஆச்சரியமா இருக்கிறது…!
இப்படிக்கு
தவானின் அப்பா பெ.அ. சதிஷ்குமார்
(மெய் நிகழ்வு)