கோபிக்கென்றொரு குணமுண்டு…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 5,724 
 
 

‘ஹலோ… என். கோபீங்களா?’

‘இல்லீங்க முன்கோபீங்க!’

‘புரியலை..!’

‘புரிய என்ன இருக்கு?! போகப் போகப் புரியும்!’

உங்க நம்பர் 99988877….தானுங்களே?!’

‘நான் என்ன கைதியா? எனக்கு நம்பர்லாம் இல்லை!’

இல்லை, உங்க டெலிபோன் நம்பர்தானே?

‘ஆமாம் அதுக்கென்ன இப்போ?

‘உங்களுக்கொரு கொரியர் வந்திருக்கு!’

‘வந்தா என்ன கொண்டு வந்து தரவேண்டியதுதானே?

‘நீங்க இண்டியன் சிட்டிசனா?

‘சீனியர் சிட்டிசன்!

உங்க பார்சல் மேல சந்தேகம்?

என்ன சந்தேகம்?

உள்ள என்ன இருக்கு?

பார்சலையே உடைக்காம உள்ள என்னன்னு என்னைக்கேட்டா எப்படிச் சொல்றது?!

‘மருந்துன்னு அனுப்பினவங்க எழுதிருக்காங்க!

‘அப்ப அவங்களைக் கேளுங்க!

பார்சலை எப்ப வாங்கிக்கிறீங்க?

ஏன் நான் வாங்கணும்?

மருந்துன்னு எழுதிருக்கே?

அவங்க கொரியர் டெலிவரி லேட்டானதாலெ டெலிவரிக்காக லேபர் வார்டுல அட்மிடாயிருக்காங்க!

‘நீங்களே கொண்டாந்து கொடுங்க!

இங்க டெலிவரிக்கு ஆள் இல்லை!

ஏன்?

அவங்களும் டெலிவரிக்குப் போயிருக்காங்க!

என்னால வரமுடியாதே!

ஏன்?

அதான் சொன்னேனே நான் சீனியர் சிட்டிசன்ன்னு!

பென்சனரா?

இல்லை டென்சனர்!

வீடு மடிப்பாக்கம் பக்கமா?

இல்லை கீழ்ப்பாக்கம் கிட்ட!

பேர் என் கோபிதானே?

நான் தான் முன்கோபின்னு சொன்னேனே?!

சாரி…! ஆள் மாறிப்போச்சு!

பார்சல் மாறாம பார்த்துக்குங்க!

தகவலுக்கு நன்றி!

தடங்கலுக்கு வருந்துகிறோம்!

இப்படித்தான் இருக்கும் கொரியர் டெலிவரி வேலை.. செய்வியா? வேலைக்கு வரய்யா? ‘ரெக்கார்டட் போன்காலை’ ஓடவிட்டு கொரியர் புதிதாய் வேலை கேட்டு வந்தவனிடம் ஆபீஸ் மானேஜர் கேட்டார்.

இல்லைசார்! நான் இப்ப பார்க்கிற ‘போர்ட்டர்’ வேலையே பெட்டர்.

ஏன் அப்படிச் சொல்றே!?

‘பார்சலை அவங்களே கொடுப்பாங்க… எறக்கி வைக்கிற வரை கூடவே வருவாங்க! கொண்டு கொடுத்த பார்சலுக்கு காசும் கொடுப்பாங்க! இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு ஏமாற இருந்தேன். செய்யும் தொழிலே தெய்வம்னு புரிய வச்சுட்டீங்க தெய்வம்சார் நீங்க!’

சொல்லிவிட்டு, கோபிக்காமல் கிளம்பினான் கோபி!.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *