கொரோனா ஒரு கூட்டாளி!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 5,686 
 
 

14 ஏப்ரல் 2020…. புத்தாண்டு தினம்!

“ஏண்டி, காலையிலே எழும்பியதில இருந்து மொபைல நொண்டிண்ணு இருந்தா என்ன அர்த்தமாம்? நானும் உன் அப்பாவும் என்னமா நீ காலெஜை முடிச்சுண்டு வேலயில சேர்ந்த நாள் மெதலா வரன் வரனா பேசி கொணந்துணு இருக்கோம். எல்லாரிலும் ஒரு கொறய கண்டுபிடிக்கிறதில மட்டும் கண்ணாயிரு. எனக்கும் பேரப்புள்ளய கொஞ்சணுமுணு ஆச இருக்குதோ இல்லையோ?”.

அம்மாவின் இந்தப் புராணம் வித்யாவிற்கு பழகிப்போனதொன்று.

“நானா அம்மா குறைய பூதக்கண்ணாடி போட்டு தேடறன்? அதுவா இல்ல என் கண் முன்னால ‘ஜீபும்பாவா’ வந்து குந்திக்கிது?”.

அம்மாவும் விட்டபாடில்லை.

“ஆமா, கலிபோர்ணியாவில இருந்து வந்து உன்ன பார்த்த அந்த பையனில என்ன குறடி?”

“அம்மா, பார்க்க வாட்டசாட்டமாத்தான் இருந்தாரு. ஆனா அவரோட பேசினப்புறம்தான் தெரிஞ்சது சென்னையில் வந்து நின்ற ஒரு மாதத்திற்கு ஒரு மனுஷாள் வீட்டுக்கோ, இல்ல ஸ்கூல் பிரெண்ஸ் கூடவோ விசிட் பண்ணவோ மீட் பண்ணவோ இல்லயாம். ஏன்னு கேட்டதக்கு “ஐ டோண்ட் வாண்ட் டு கெட் இன்ஃபெக்டட் ” அப்படிணு கொறோணாவ குத்தம் சொன்னாரு. ஏம்மா, இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிய எந்தலையில எப்படிமா கட்டி வப்ப? சொந்தம், பிரெண்ஸ் எல்லாம் வேணாணு , சீ… ஒரு கிருமிக்காக, உறவுகள ஒதுக்கி வைக்கிற மனுஷாளோட எப்பிடிமா நா வாழ்க நடத்த முடியும்? டெல் மி….”

அம்மாவிற்கு அந்த வாதம் வாஸ்தவமாகவேபட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *