கையுறை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 3,303
(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார்.
”சுசி…நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டுமே…எதனைத் தந்துவிடப் போகிறாய்?…”
“சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?…. அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது…..”
“அவலா…அவனுக்கு நிறையைப் பிடிக்குமே…அதுவே போதும்…”
“சுவாமி…பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே…கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே…. அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?”
“அடி பேதாய்… கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல…ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்…”
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.