அரசியல்
கதையாசிரியர்: செம்பியன் செல்வன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 5,131
(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. அதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலாயிற்று.

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.
மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் வினாவியது.
“சிறுத்தையை நீயா கொன்றாய்?’
குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?……. பார்த்தாலே தெரியவில்லையா?…. கொன்றேன்…. தின்றேன்… உனக்கும் பங்கு வேண்டுமா?” எனக்கேட்டது.
மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது.
குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது. அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது.
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.
![]() |
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வேர்கள்
புஷ்பராஜ் கந்தசாமி
September 27, 2026
தடுமாறும் உறவுகள்
இரா.கலைச்செல்வி
September 27, 2026
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
