கூட்டாளிகள்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு ராசா. அந்த ராசாவுக்கு ஒரு மந்திரி. ராசா மகனும் மந்திரி மகனும் கூட்டாளிகளா இருந்தாங்க. ரெண்டு பேரும் கூட்டாளிகளா இருக்கிறதால, எதச் செஞ்சாலும் ரெண்டு பேரும் சேந்து செய்வாங்க. எங்க போனாலும் ரெண்டு பேருஞ் சேந்து போவாங்க. இப்டி இருக்கயில, ரெண்டுபேரும் வாலிபப் பருவத்துக்கு வந்துட்டாங்க. அப்ப மந்திரி என்னா செஞ்சாரு, மகனுக்குக் கலியாணம் முடிக்கத் திட்டம் போட்டாரு. ராசா மகனுக்கும் – மந்திரி மகனுக்கும் ஒரே நாளைல் கலியாணம் முடிஞ்சுச்சு.
ராசா மருமகளுக்கு, ஊர்ல ஒரு வங்கணகாரன் இருந்தர். அதனால் ராசா மருமக, பத்துநா புருசங்கிட்டேயும், பத்துநா தகப்பன் வீட்லயுமா வாந்து வந்தா. இதக் கண்ட மந்திரி மகனும் தன்னோட பொண்டாட்டியயும் பத்து நா தன்னோடயும், பத்து நா, அவ அப்பா வீட்லயும் விட்டுக்கிட்டிருந்தர்.
ஆனா, ராசா மருமக, அப்பன் வீட்ல இருக்கும்போது வங்கணகாரனோட இருக்கா. மந்திரி மருமக, அப்பன் வீட்ல இருக்கும்போது, புருசன நெனச்சுக்கிட்டு சுத்தமா இருக்கா.
ஒருநாத் தேதில, அப்பன் வீட்டுக்குப் போன ராசா மருமக, ஒரேயடியா மூணுமாசம் இருந்துகிட்டா. ராசாவும் ராசா பொஞ்சாதியும் மருமகளக் கூட்டிக்கிட்டு வரும்படி மகங்கிட்டச் சொன்னாங்க. அப்ப, ராசா மகனும் மந்திரி மகனும் போறாங்க. போகயில – மாமனாரு வீட்ல ஏக வரவேற்பு, பொழுது விழுந்திருச்சு. அப்ப, மந்திரி மகன், தனியிடத்ல படுத்துக்கிட்டர்.ராசா மகனும், அவ் பொண்டாட்டியும் தனியாப் படுத்துக்கிட்டாங்க.
நல்லா நடுச்சாமத்ல, இளவரசி எந்திருச்சா. சுரங்கத்து வழியா ஊருக்கு வெளிய போறா. ராசா மகன் நல்லா ஒரங்குறர். இதப் பாத்த மந்திரி மகன் எந்திருச்சு, இளவரசியப் பின் தொயந்து போறா.
ஊருக்கு வெளிய ஒரு காட்டுக்குள்ள போயி, சுரங்கப் பாத வெளியேறுது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு பாழடஞ்ச மண்டபம். அந்த மண்டபத்ல, ஒரு முடவன். அந்த முடவங்கிட்ட இளவரசி போயி, அவனோட கொஞ்சிக் குலாவுறா.
இளவரசி மேல எரிஞ்சு விழறா மொடவன். ஏன் இவ்வளவு நேரந் தாமதமா வார. என்னாச்சு. வெள்ளனா வந்தா என்னாண்டு கோபமாகக் கேக்குறா.
அதுக்கு இளவரசி, எம்புருச வந்திட்டாரு. அவர ஒரங்க வச்சிட்டு வர்ரதுக்குள்ள நேரமாச்சுண்டு சொல்றா.
ஒனக்குக் கலியாண மாச்சா? அப்ப, நிய்யி எனக்குத் தேவையில்ல, போண்டு மொடவன் சொல்றா.
அதுக்கு இளவரசி, இல்ல, சும்மா ஒரு பேருக்குத்தான் கலியாணம் முடுச்சிருக்கேன். மத்தபடி. ஏ… நெனவெல்லாம் ஒங்ககிட்டத்தான் இருக்குண்டு சொல்றா.
இதக் கேட்ட மொடவன், ஒரு ஐடியாப் பண்றா. அதுசரி ஒரு கத்தி தாரே. ஒம் புருசனக் குத்திக் கொண்டுபிட்டு வாண்டு சொல்லி அனுப்புறா.
கத்தியக் கொண்டுகிட்டு, இளவரசி வேகமா வீட்டுக்கு மந்திரி மகனும் பின் தொயந்து வாரா. வந்ததே சரிண்டு, புருசன குத்திக் கொண்டுபிடுறா. கொண்டுபிட்டு, பழிய, மந்திரி மகன் மேல போட்டுட்டா. அரமணக் காவக்காரங்க, மந்திரி மகனப் புடுச்சுச் சிறையில போட்டு, தூக்குத் தண்டன போட்டுர்றாங்க.
சிறையில இருக்கிற மந்திரி மகன், ராசாகிட்ட எட்டு நா தவண குடுங்க, அதுக்குள்ள, உம்மயான கொலகாரன புடுச்சுத் தரேண்டு சொல்றா. சரிண்டு, மந்திரி மகன, வெளியவிட்டு, எட்டுநா தவண குடுத்தாங்க.
வெளில வந்த மந்திரி மகன், இளவரசியக் கவனிக்க ஒரு ஒற்றன நியமிக்கிறா. இதுக்கெடயில, இளவரசி, மூணுநா அரமணய விட்டு வெளியேறல, தவண நாள்ல, ஏழு நாள் முடுஞ்சு போச்சு. அண்ணக்கி ராத்ரி இளவரசி சுரங்கத்து வழியா, காட்ட நோக்கிப் போறா.
இளவரசியப் பின் தொயந்து, மந்திரி மகனும், அந்த நாட்டு சேனாபதியும் போறாங்க. மொடவங்கிட்டப் போன இளவரசி, இந்த ஏழு நாளும் வர முடியாததயும், புருசனக் கொண்டதயும் வருசயாச் சொல்றா. இதக் கேட்டுக்கிட்டிருந்த சேனாபதி, சேனைகள வரச் சொல்லி, உம்மையான குத்தவாளியக் கைதி செய்றாரு.
இளவரசி மேல கொலக்குத்தந் சாட்டி, இளவரசிய, சுண்ணாம்புக் காளவாசல்ல வச்சு நீத்துப்பிட்டாங்க. குத்தஞ் செஞ்சவளுக்கு என்னா கெடைக்கும்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.