அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12
”நீங்க சொன்னதற்கு மேலே ஜனங்க வந்து சாப்பிட்டதை நீங்க கவனிக்கலயா.கல்யாணம் நடந்த அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அன்னைக்கு காலையில் வந்த அத்தனைப் பேரும் மதியம் சாப்பிட்டு விட்டு,சாயங்காலம் டிபனும் சாப்பிட்டு விட்டு,இரவு ‘டின்னரும்’ சாப்பிட்டு விட்டுப் போனாங்க சார்.மளிகை சாமான்கள் போதாமல் நான் மூனு தடவை ஆளை அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கி வந்து சமைக்க வேண்டியதாய் ஆச்சுங்க.அப்பவே உங்க கிட்டு வந்து சொல்லலாம் ன்னு தான் நான் ரெண்டு தடவை உங்களைப் பார்க்க வந்தேங்க.ஆனா ஒரு தடவை நீங்க உங்க சம்மந்தி கூடப் பேசிக் கிட்டு இருந்தீங்க.அடுத்த தடவை வந்த போது நீங்க போட்டோ, விடியோ எடுக்கறதிலே பிஸியா இருந்தூங்க.எனக்கும் சமையல் கட்டில் வேலை அதிகமா இருந்திச்சு.அதனால் மறுபடியும் வந்து உங்க கிட்டே சொல்ல முடிய லே சார்.அப்புறமா சொல்லிக் கொள்ளலாம்ன்னு தான்னு நான் இருந்து விட்டேன்” என்று சொல்லி விட்டு,காலை டிபனுக்கு வந்த எண்ணிக்கை, மதியம் சாப்பிட்டவர்கள் எண்ணிக்கை,சாயங்காலம் டிபன் சாப்பிட்டவர்கள் எண்ணிக்கை,இரவு ‘டின்னர்’ சாப்பி ட்டவர்கள் எண்ணிக்கையை எல்லாம் எடுத்து காட்டினார் சமையல் காரர்.சிவலிங்கம் பதில் ஒன்னும் சொல்ல முடியவில்லை ‘இந்த சமையல் காரருக்கு நாம் எப்படி முப்பதாயிரம் ரூபாய் தரப் போகிறேன் நம்மிடம் பணமே இல்லையே’ என்று கவலை வந்து விட்டது சிவலிங்கதிற்கு. யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் அவர்.சற்று நேரம் கழித்து “எனக்கு கொஞ்சம் டயம் குடுங்க.நான் பணத்திற்கு ஏற்பாடு பண்ணி உங்களுக்குத் தரேன்.இப்ப உடனே தர என்னிடம் பணம் இல்லை,நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்க” என்று சொல்லி ஒரு வழியாக சமையல் காரரை அனுப்பி வைத்தார் சிவலிங்கம்.
சரோஜாவையும் கூட வைத்துக் கொண்டு சிவலிங்கம் அவர் கமலாவை தனியாக அழைத்து சமையல் காரர் சொன்னதை எல்லாம் விவரமாகச் சொல்லி “அம்மா கமலா நான் எதிர் பார்த்ததற்கு மேலே செலவு ஓடி போச்சு.உன் கிட்டே இருக்கிற பணத்தில் எனக்கு கடனாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கொஞ்சம் குடும்மா. நான் இன்னும் ரெண்டு நாள்ள அந்த சமையல்காரருக்கு முப்பதாயிரம் ரூபாய் தரனும்மா.எனக்கு பணம் வந்ததும் நான் உனக்கு திருப்பித் தந்து விடறேன்” என்று சொல்லும் போதே அவர் கண்களில் நீர் முட்டியது.கமலா மிகவும் வருத்தப் பட்டாள்.”உங்களுக்கு இல்லாதா பணமா அப்பா.இதோ நான் தருகிறேன்” என்று சொல்லி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தாள் கமலா.பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவலிங்கம் சமையல்காரரை வரச் சொல்லி அவர் கணக்கை செட்டில் பண்ணினார் சிவலிங்கம்.
முதல் மூனு நாளைக்கு எல்லோருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு டிபன் எல்லாம் ஏற்பாடு பண்ணினான் நடராஜன்.இதற்கிடையில் ‘காஸ் கனெக்ஷன்’,சிலெண்டர்,மளிகை சாமான்கள் இவை எல்லாம் வாங்கி வந்து கமலாவுக்கு எல்லா சௌகா¢யமும் பண்ணி முடித்தான் நடராஜன்.‘ப்ளாட்டுக்கு’ வந்த அடுத்த நாளில் இருந்து கமலா தன் கணவன் மாமியார் மாமனார் மூன்று பேருக்கும் சுவையான சமையல் செய்து போட்டாள்.கமலா இவ்வளவு சுவையாக சமைப்பதை மூவரும் மிகவும் பாராட்டினார்கள். தன்னை இவ்வளவு புகழ்ந்து பாராட்டினது கமலாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
கமலா லீவு முடிந்து அன்று தன் வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.மாமனார் மாமியார் இருவா¢டமும் சொல்லிக் கொண்டு அவள் ஆஸ்பீஸ் கிளம்பினாள்.நடராஜனோடு அவன் அம்மாவும் அப்பாவும் தனியே இருந்தனர்.அன்று ‘நைட் டியூட்டி’க்கு அவன் போகணும்.அவன் லீவும் அன்றோடு முடிந்து விட்டது.
நடராஜன் கமலாவோடு கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டு இருந்தான்.கல்யாண அமர்க்களம், உறவினர்கள் கூட்டம் ,சத்தம் எல்லாம் ஓய்ந்து அவன் கமலாவிடம் தனியாய் இருந்தான்.”கமலா நாம் ரெண்டு பேரும் நிறைய விஷயங்கள் மனம் விட்டுப் பேச வேணும். இப்போ எனக்கு நேரம் இல்லை.நான் இப்போ தூங்கப் போகணும். ராத்திரி பூரா செம வேலை.ஒரு நிமிஷம் கூட ‘ரெஸ்ட்’ இல்லே கமலா.இந்த ‘சண்டே’நாம எல்லாத்தையும் விவரமா பேசலாம் கமலா” என்றான் நடராஜன்.“சரிங்க நாம் வர ‘சண்டே’ பேசலாம்.இங்கே இனிமே நீங்களும் நானும் தானேங்க இங்கே எனக்கு உங்க கிட்டே நிறைய பேச இருக்குங்க.நாம் நிதானமாகப் பேசலாம். அதுள்ளாற நான் வீட்டை எல்லாம் ‘செட்’ பண்ணி நாம சமைச்சு சாப்பிடற வழியைப் பாக்கலாம்ங்க” என்றாள் கமலா.
”அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கு ‘ஆப் டே’ அன்னைக்கு.கமலாவுக்கும் லீவு. இருவரும் பத்து மணி வரை நன்றாக தூங்கினார்கள்.இருவரும் பல் துலக்கி விட்டு ஓய்வாக வாங்கி வந்து புது சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு சாவகாசமாக காப்பி குடித்தார்கள்.“நாம நிதானமா நம்ம மனசிலே இருக்கறதை எல்லாம் மனம் விட்டு பேசலாம்ங்க. முதல்லே நீங்க சொல்லுங்க.அப்புறமா நான் சொல்றேனுங்க” என்றாள் கமலா.நடராஜன் தான் முதலில் பேச ஆரம்பித்தான்.“கமலா இனி நாம் இருவரும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயமும் பேசலாம். நம் கல்யாணத்துக்கு முன்பு என் ‘சேவிங்க்ஸ் ஆக்கவுண்ட்லே’ நான் ஒரு ரெண்டு லக்ஷம் ஆயிரம் ரூபாய்க்கு மேலே வச்சு இருந்தேன்.கல்யாணம் ஆன பிறகு உன்னோடு நான் ஜாலியாக ஊட்டி, கோடைக்கானல்,கோவளம் பீச்சு, முன்னார், டார்ஜிலிங்க் இந்த ஐந்து இடங்களை சுத்திப் பார்த்து விட்டு வரணும்ன்னு மிகவும் ஆசையாக இருந்தேன் கமலா.ஆனா இப்போ அது செய்ய முடியாத நிலைக்கு நான் வந்து விட்டேன் கமலா” என்று சொல்லி சற்று நேரம் மௌனமாய் இருந்தான் நடராஜன். “ஏங்க இப்ப என்ன ஆச்சுங்க “என்று மிகவும் கவலையோடு கேட்டாள் கமலா.
“என் தங்கையின் குழந்தை ‘தொட்டில் போடும் விழாவுக்கு’ என் அம்மா,அப்பா ,என் தங்கை,அவ புருஷன்,எங்க மாமா, மாமி,எல்லாருக்கும் நான் ஜவுளி எடுத்து விழாவை நடத்த வேண்டிய நிர்பந்தம் வந்திச்சு .இதற்கு முப்பதாயிரம் ரூபாய் செலவு ஆச்சு கமலா.அப்புறம் என் அப்பா, அம்மா,மாமா,மாமி, இவங்களை ‘இன்னோவா’ வில் சென்னைக்கு அழைச்சு வந்து, ஹோட்டலில் மூனு நாள் தங்க வச்சு சென்னையை சுத்தி காட்டி ஊரில் கொண்டு போய் விட ஒரு முப்பதாயிரம் ரூபாய் ¦ச்லவுஆயிடுச்சி.அப்புறம் நான் இந்த வீட்டிற்கு அறுபதாயிரம் ரூபாயை நான் பத்து மாச ‘அட்வான்ஸ்’ன்னு கொடுக்க வேண்டியதாச்சு. நம்ம கல்யாணத்துக்கு என் குடும்பத்தார் எல்லோரு க்கும் நான் தான் கல்யாண ஜவுளி எல்லாம் எடுக்க வேண்டி வந்தது.கணக்கு பாரேன். உனக்கும் சேத்து ஆறு பட்டு புடவை,பட்டு வேஷ்டி,எனக்கு புது டிரஸ்,அப்படி இப்படின்னு ஒரு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மேல் ஓடிப் போச்சு.என் உறவுக்காரர்கள் எல்லோரும் அரியலூரில் இருந்து சென்னை வந்து திரும்பி அரியலூர் போக மூனு நாள் பஸ் வாடகை. தவிர அவர்கள் ஹோட்டலில் தங்கி,காப்பி, டிபன்,சாப்பாடு, செலவு எல்லாம் ஒரு முப்பதாயிரம் ரூபாய் ஆடிசுச்சி.இப்போ என் அப்பா அம்மாவை ஊரில் கொண்டு போய் விட கார் செலவு ஒரு பத்தாயிரம் ரூபாய் ஆச்சு.இப்போ என் அக்கவுண்ட்டில் ஆறு நூறு ரூபாய் தான் பாக்கி இருக்கு கமலா.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று சொல்லி நிறுத்தினான்.அவன் எண் ஜான் உடம்பு ஓரு ஜானாக குருகி இருந்தது.தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தான் நடராஜன்.“கவலையை விடுங்க.நாம் இருவரும் இப்போ நல்லா சம்பாதிக்கி றோமுங்க.கூடிய சீக்க்கீரம் எல்லாம் சரியாயிடுங்க” என்று சொல்லி சற்று நேரம் கழித்து “நான் என் கதையை சொல்கிறேன்,கொஞ்சம் கேளுங்க” என்று சொல்ல ஆரம்பித்தாள் கமலா.
“என் கல்யாணம் நிச்சியமானவுடனே என் அக்கா மாமியார் என் அக்காவிடம்’ நீ போய் உன் அப்பாவிடம் உன் குழந்தைக்கு மூனு சவரன்லே ஒரு செயின் வாங்கிப் போடச் சொல்லுன்னு சொல்லி அனுப்பினாங்க.அதுக்கு நான் பணம் குடுத்து உதவினேங்க.சமையல் காரருக்கு துண்டு விழுந்த முப்பதாயிரம் ரூபா குடுத்து உத்வினேங்க. இப்ப என் பாங்க் ‘பாலன்ஸ்’ ‘நில்’லுங்க” என்று கமலா சொல்லும் போது அவள் அழுதே விட்டாள்.நடராஜன் உடனே “அழதே கமலா,நான் உன்னிடம் இருந்து பணம் ஏதும் எதிர் பார்க்கவே இல்லை கமலா.நீயே எனக்கு கிடைச்சதை நான் ஒரு பெரிய பொக்கிஷமா கருதுறேன்.நான் சம்பாதிச்சு நிலைமையை சரி செஞ்சு விடறேன்.நீ நிம்மதியா இருந்து வா கமலா.இனி நம்ப குடும்ப ‘ஸ்பைனாஸ்க்கு’ நான் பொறுப்பு கமலா” என்று சொல்லி அழும் கமலாவை தேற்றினான் நடராஜன். “சரி கமலா.மணி ஒன்னு ஆவப் போவது.கிளம்பு நாம ஹோட்ட லுக்குப் போய் சாப்பிட்டு வரலாம்.நீ இனிமே எழுந்து சமைக்க எல்லாம் வேண்டாம்.இப்போ நாம போற ஹோட்டல் செலவு தான் கடைசி.இன்னும் கொஞ்சம் ஹோட்டலுக்குப் போய் வரலாம் இன்னைக்கு நைட்டில் இருந்தே நாம வீட்டில் சாப்பாடு சமைச்சு சாப்பிடணும்.’நோ ஹோட்டல்’ இனிமே.இனிமே நாம ரெண்டு பேரும் சிக்கனமா இருந்து முதலில் பணம் சேர்த்து நான் சொன்ன இடங்களுக்கு எல்லாம் ஜாலியாக ‘காதல் கிளிகள்’ போல் போய் சிறகடிச்சுப் பறக்கணும்.அப்புறமா நாம பணம் சேக்கணும்.கையில் கொஞ்சம் பணம் சேந்த பிறவு தான் குழந்தை பெத்துக் கொள்வதைப் பத்தி நாம யோசிக்கணும். நீ என்ன சொல்றே” கமலா என்று ஆவலோடு கேட்டான் நடராஜன்.உடனே கமலா “ சரிங்க, உங்க இஷடம் போலவே செயய்லாங்க” என்று பதில் சொன்னாள்.
சிவலிங்கம் “ சரோஜா,உமா இந்த மாசம் பணத்துக்கா வந்து கேட்டாள்ன்னா நாம அவளுக்கு இந்த மாசம் கொடுத்துட்டு அடுத்த மாசத்திலிருந்து ‘பணம் கொடுப்பது கஷ்டமா இருக்கும்.என்னை இனிமே பணத்திற்க்காக எதிர் பார்க்காதே என்று உண்மையை சொல்லி விடலாம் என்று இருக்கேன் நீ என்ன நினைக்கறே” என்று கேட்டார் சிவராமன்.”ஆமாங்க.நாம இனிமே எதையும் மறைக்காம ஒளிக்காம பேசி விடறது தான் நமக்கு நல்லதுங்க” என்று கணவன் சொன்னதை ஆமோதித்தாள் கமலா. அடுத்த மாசமே உமா சிவலிங்கத்தின் விட்டுக்கு வந்தாள்.சிவலிங்கம் இந்த மாச பணத்தைக் கொடுத்து விட்டு “இதோ பாரும்மா.கமலா கல்யாணத்தில் எனக்கு செலவு நான் எதிர்பார்த்த ¨தை விட மிக அதிகமா ஆயிடுச்சி.அடுத்த மாசத்திலே இருந்து நான் உனக்கு பணம் தர முடியாதும் மா.என் குடும்பம் செலவுக்கே என்னிடம் பணம் இருக்கது போல இருக்கு” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார் சிவராமன். “எனக்கு புரிதுங்க உங்க கஷடம்.நான் வேறே ஏதாச்சும் வழி பாத்துக்க றே§ங்க. இது வரை நீங்க பணம் குடுத்து எனக்கு உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க “ என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டுப் போனாள் உமா.
கமலா கல்யாணம் பண்ணிப் போன பிறகு தங்களுக்கும் இவ்வளவு பெரிய வீடு வேண்டாம் என்று சிவலிங்கமும் சரோஜாவும் இதை விட சின்னதாகவும் வாடகை குறைவாய் இருக்கும் ஒரு வீட்டுக்கு குடி போனார்கள். சிவலிங்கமும் சரோஜாவும் சிக்கனமாக வாழ்ந்து வந்தார்கள்.கையில் இருந்த பணம் எல்லாம் செலவு ஆகி விட்டதால் இனி மாச செலவுக்கே கஷ்டமாய் இருக்கும் போல் இருந்தது சிவலிங்கத்திற்கு.
சற்று நேரம் கழித்து “ சரோஜா நான் மறுபடியும் ஏதாவது ஒரு வேலைக்கு முயற்சி பண்ணிச் வேலைக்கு சேசரலாம்ன்னு இருக்கேன்.அப்படி சேர்ந்து வேலைக்குப் போனா நம்ம வீட்டு செலவுக்கு தள்ளிக் கொண்டு போகுமே,இல்லையா சொல்லு” என்று சொல்லி நிறுத்தினார் சிவலிங்கம்.“ஏங்க உங்களுக்கு இவ்வளவு வயசு ஆயிடுச்சி.நீங்க மறுபடியும் வேலைக்குப் போகப் போறேன்ன்னு சொல்றீங்களே.உங்களால் முடியுமாங்க.யோஜனைப் பண்ணுங்க” என்று கவலையோடு கேட்டாள் சரோஜா.
கடை ஓனரைப் பார்த்த சிவலிங்கம் தன் கஷ்டத்தை சொல்லி கேட்டவுடன் அவர் ஒரு நாப்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்து சரோஜா கையில் தான் கொண்டு வந்த நாப்பாதாயிரம் ரூபாயைக் குடுத்தார்.சரோஜாக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.கொஞ்ச நேரம் அவர் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு அந்த நாப்பதா யிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சரோஜா வையும் அழைத்துக் கொண்டு அந்த அந்த சேட் கடைக்கு போய் அவர் கடனை அடைத்தார் சிவலிங்கம்.
அன்று காலை சிவலங்கம் வழக்கம் போல் எழுந்து காப்பி குடித்து விட்டு பார்க்குக்கு வாக்கிங்க் கிளம்பினார். பார்க்கில் சிவலிங்கம் நடந்துக் கொண்டு இருந்தார். வாக்கிங்க் பண்ணிக் கொண்டு இருந்த அவரை, அவருடன் வேலை செய்து வந்த பழைய மானேஜர் ராஜகோபால் அவர் பின்னால் வந்து அவரை முதுகில் லேசாகத் தட்டி ”ஹலோ சிவா எப்படி இருக்கீங்க” என்று கேட்டபோது சிவலிங்கம் தலையை நிமிந்துப் பார்த்தர். அசந்துப் போய் விட்டார் சிவலிங்கம்.“சார் நீங்களா, சௌக்கியமா சார்.உங்களே பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு சார்.உங்களே இப்போ நான் பாத்தது என் மனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் சிவலிங்கம். “நான் சௌக்கியம் தான் சிவா. நீங்க எப்படி இருக்கீங்க.ரொம்ப மெலிஞ்சு இருக்கீ ங்களே. உடம்பு சரி யில்லாம இருக்கீங்க ளா.நீங்க ‘வாக்கிங்க்’ முடிச்சுட்டீங்களா.இன்னும் பாக்கி இருக்கா.நான் முடிச்சி ட்டேன்.கொஞ்ச நேரம் உக்காந்துட்டு அப்புறமா வீட்டுக்குக் கிளம்புவேன்” என்று சொல்லி அந்த பார்க்கில் இருந்த சோ¢ல் உட்காரப் போனார் ராஜகோபால். சிவலிங்கமும் அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார்.”நானும் ரிடையர் ஆகி விட்டேன் சிவா.என் பையன் ஒரு பெரிய ‘இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்’ கம்பனி நடத்தறான்.நான் வீட்டில் சும்மா இருந்து நேரத்தை இந்த டீ.வீ.பாத்து வீணாக்கிச் வந்துக் கிட்டு இருந்தேன்.அவன் இங்கே கே.கே. நகர்லே ஒரு பெரிய பங்களா வாங்கி இருக்கான்.அவன் ‘வைஸ்ப்ஸ்பும்’ இந்த கம்பனியில் ஒரு டைரக்டராக வேலை பார்த்து வறா.நானும் என் மணைவியும் மயிலாப்பூரில் தனியா இருந்து வந்தோம்.போன மாசம் தான் என் பையனும் மருமகளும் மயிலாப்பூர் வந்து ‘அப்பா என் மாமனாரும் மாமியாரும் போன வாரம் தான் அமொ¢க்கா கிளம்பிப் போனாங்க.அங்கே அவர்களுடய பையன் கிட்டே அவங்க நிரந்தரமாக தங்க முடிவு பண்ணிட்டாங்க.நீங்க ரெண்டு பேரும் இங்கே தனியா ஏன் இருந்து வா£ங்க .எங்களோடு கே.கே. நகர் பங்களாவுக்கு வந்து தங்குங்கப்பா.நீங்க ஒரு ‘டைரக்டராக’ என் கம்பனியில் இருந்து வாங்க என்று சொன்னான்.அதனால் நான் அவன் கமபனியிலே ஒரு டைரக்ட்ரா வேலை செஞ்சுட்டு வறேன்”என்று சொன்னார்.சிவலிங்கம் தன் கதை முழுவதையும் சொன்னார்.சற்று நேரம் கழித்து “சிவா உங்களுக்கு ஆ§க்ஷபம் இல்லேன்னா சொல்லுங்க.நான் என் பையனை ‘கன்சல்ட்’ பண்ணி உங்களுக்கு எங்க கம்பனியில் ஒரு ‘க்ளார்க்’ வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.உங்க கஷ்டத்துக்கு இந்த வேலையில் இருந்து வரும் சம்பளம் உபயோகமா இருக்குமே” என்றார் ராஜகோபால்.உடனே “சார்,இந்த உதவயை மட்டும் நீங்க எனக்குப் பண்ணீங்கனா எனக்கு ரொம்ப நல்லா இருக்கும்..என்றார் சிவலிங்கம் கண்ணில் கண்ணீர் மல்க.“கவலைப் படாதீங்க சிவா.எல்லாம் நல்லபடி முடியும்.நீங்க நிம்மதியா இருங்க.உங்க செல் நம்பரைக் குடுங்க.உங்களுக்கு போன் பண்ண வசதியா இருக்கும்.நான் வரட்டுமா. எனக்கு ஆஸ்பீஸ்க்கு ‘லேட்’ ஆவுது” என்று சொல்லி சிவலிங்கம் கொடுத்த செல் நம்பரை தன் செல்லில் போட்டுக் கொண்டு எழுந்தார் ராஜகோபால்.“போய் வாங்க சார்”என்று சொல்லி சிவலிங்க மும் எழுந்து அவரை வழி அனுப்பினார். பிறகு கொஞ்ச நேரம் நடந்து விட்டு,இந்த நல்ல ‘ந்யூஸை’ தன் மனைவி சரோஜாவிடம் சொல்ல எண்ணி தன் வீட்டை நோக்கி நடந்தார் சிவலிங்கம்.
மூன்று மாதம் ஆகியது. உடல் நிலை சரி இல்லாததால் இரண்டு நாளாய் சிவலிங்கம் வாக்கிங்க் போகவில்லை. அவர் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.அவர் செல் போன் அடித்தது.அதை ஆன் பண்ணி சிவலிங்கம் “சிவலிங்கம் பேசறேன் ….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ”என்ன சிவா,இன்னைக்கு வாக்கிங்க வரலையா.நான் தான் ராஜகோபால் பேசறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “சாரி சார், என் மனைவி க்கு கொஞ்சம் முடியலே,அதானால் தான் வாக்கிங்க வரலே” என்றார் பவ்யமாக.“சிவா என் பையன் ‘சரி’ன்னு சொல்லி ட்டான்.நீங்க வர ஒண்ணாம் தேதியில் இருந்து வேலைக்கு வாங்க.நான் உங்களே நேரே பாக்கும் போது என் கம்பனி ‘அட்ரஸ்’ தரேன்” என்று சொல்லி பையன் கம்பனி அட்ரஸ்ஸைக் கொடுத்தார் ராஜகோபால்.” ரொம்ப ‘தாங்ஸ்’ சார் உங்களுக்கு.நீ பண்ன இந்த உதவையை நான் என் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டேன் சார்.நான் வர ஓன்னாம் தேதியில் இருந்து வேலைக்கு வறேன் சார்” என்று சொல்லி போனை கட் பண்ணினார் சிவலிங்கம்.ஓண்ணாம் தேதியில் இருந்து சிவலிங்கம் ராஜகோபால் கொடுத்த அடரஸ்ஸ¤க்குப் போய் வேலையில் சேர்ந்தார்.
தீபாவளி வந்தது.சிவலிங்கம் மகளையும் மருமகனையும் தலை தீபாவளிக்கு அழைத்தார்கள். சம்மந்தி, பெண்,மருமகன் எல்லோருக்கும் அவர்கள் ஜவுளி எடுத்து இருந்தார்கள்.நடராஜன் ஒரு காரை ஏற்பாடு அவன் அப்பா அம்மா இருவரையும் தலை தீபாவளிக்கு வரச் சொல்லி இருந்தான். பரமசிவமும் பார்வதியும் காரில் சென்னை வந்து தங்கள் பையனின் தலை தீபாவளியில் கலந்துக் கொண்டார்கள்.எல்லோருக்கும் தீபாவளியை சந்தோஷமாக கொண் டாடினார்கள்.இரண்டு நாள் பையன் மருமகளுடன் சென்னையில் இருந்து விட்டு பரமசிவமும் பார்வதியும் அரியலூர் வந்து சேர்ந்தார்கள்.
இதற்கிடையில் திடீரென்று ‘அஸோக் லேலண்ட்’ ஸ்பாக்டரியில் தொழிலாளர்களுக்கும் ‘மாணேஜ்மெண்ட்’ க்கும் இடையே ‘போனஸ்’ பேச்சு வார்த்தையில் தகராறு வந்தது. ’மாணேஜ் மெண்ட் இந்த வருஷம் ‘சேல்ஸ்’ மிகவும் மந்தமாய் இருக்கிறது, தவிர ’ப்ரொடக்ஷன்’ பண்ண வண்டிகள் மார்கெட்டில் விற்பனை ஆகவில்லை, அதனால் போனஸ் அதிகம் கொடுக்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டது.ஆனால் யூனியன் ‘விலை வாசி எல்லாம் ஏறி விட்டது.அதனால் போன வருஷம் கொடுத்த போனஸ் மாதிரி இந்த வருஷமும் ‘போனஸ்’ தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தது.பல தடவைகள் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த சுமுகமான முடிவுக்கும் இரு பக்கமும் வரவில்லை.‘மாணேஜ்மெணட்’ கவலையே படவில்லை.யூனியன் வேறு வழி இல்லாமல் ‘ஸ்ட்ரைக்’ பண்ணுவது என்று முடிவு எடுத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தம் பண்ண சொல்லியது.எல்லா தொழிலாளர் களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.வேறு வழி இல்லாமல் ‘அசோக் லேலண்ட் மேணேஜ்மெண்ட்’ ‘ஸ்பாக்டரியை’ ‘லாக் அவுட்’ செய்து விட்டது.நடராஜன் வேலைக்குப் போகமல் வீட்டிலேயே இருந்து வந்தாள்.விஷயம் கேள்விபட்டு சிவலிங்கமும் சரோஜாவும் கமலாவையும் மாப்பிள்ளையையும் பார்க்க வந்து,நடராஜனை விசாரித்தார் கள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு தங்கள் வருத்தத்தை தொ¢வித்து விட்டு அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள் சிவலிங்கமும் சரோஜவும்.
ஊரில் இருந்து அவர் அப்பா,மாமாக்கள்,மாமிகள், மச்சான் ராஜு, பவானி எல்லோரும் போனில் “நாங்கள் பேப்பா¢ல் படிச்சோம்.அது உண்மையா நடராஜா,இது ஏன் நடந்தது, இந்த ‘லாக் அவுட்’ எத்தனை நாளுக்கு இருக்கும்,இப்போ உனக்கு வேலை இல்லையா”என்றெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.நடராஜன் அவர்களுக்கு எல்லாம் நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொல்லி புரிய வைத்தான்.தொழிலாளர் மந்திரி ‘அசோக் லேலண்ட் மாணேஜ்மெண்ட்டை’ப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தும் ஒரு சுமுகமான முடிவுக்கும் இரு பக்கமும் வரவில்லை.
‘லாக் அவுட்’ ஆகி ஆறு மாதம் ஆகி விட்டது.ஊரில் இருந்து அவர் அப்பா,மாமாக்கள்,மாமிகள், மச்சான் ராஜு, பவானி எல்லோரும் போனில் “நாங்கள் பேப்பா¢ல் படிச்சோம். அது உண்மையா நடராஜா,இது ஏன் நடந்தது, இந்த ‘லாக் அவுட்’ எத்தனை நாளுக்கு இருக்கும்,இப்போ உனக்கு வேலை இல்லையா”என்றெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.நடராஜன் அவர்களுக்கு எல்லாம் நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொல்லி புரிய வைத்தான். தொழிலாளர் மந்திரி ‘அசோக் லேலண்ட் மாணேஜ்மெண்ட்டை’ப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தும் ஒரு சுமுகமான முடிவுக்கும் இரு பக்கமும் வரவில்லை.
‘லாக் அவுட்’ ஆகி ஆறு மாதம் ஆகி விட்டது.இதற்கிடையில் மாநில தேர்தல் நெருங்கிக் கொண்டு இருந்தது.இத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு இருப்பதால், அவர்கள் ‘வோட்டை’ நாம் இழந்து விடக் கூடாது என்று எண்ணி முதல் மந்திரியே ‘அசோக் லேலண்ட் ‘மானேஜ்மெண்ட்டை’ பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசினார்.இரண்டு தரப்புகளையும் சற்று விட்டு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஒரு வழியாக ஒரு சுமுகமான உடன்பாட்டை உண்டு பண்ணி, ‘பாக்டரியை’ மறுபடியும் திறக்க வைத்தார் முதன் மந்திரி.மீண்டும் எல்லா தொழிலளர்களும் வேலைக்கு சேர்ந்தார்கள். நடராஜனும் வேலைக்குப் போக ஆரம்பித்தான்.
– தொடரும்