கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,126 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம் 10 | அத்தியாயம்-11 |

சிறிது நேரம் போனதும் “நம்ம பெண் அந்த அம்மாகிட்டே அந்த வீட்டிலே அவ காலம் இருக்கும் வரைக்கும் குடித்தனம் பண்ண வேணாவா..நாம இப்போ கஷ்டத்துடன் கஷ்டமா இந்த செயினையும் நாம் செஞ்சு போடறது தான் விவேகம் சரோஜா.நீ யோஜனைப் பண்ணிப் பார்..உனக்கே நல்லா புரியும்” என்றார் சிவலிங்கம் அமைதியாக.“நீங்க சொல்றது ரொம்ப சரிங்க நாம செயினை செஞ்சு போட்டு விடலாங்க” என்று சொன்னாள் சரோஜா.சிவலிங்கம் லதாவுக்கு செயின் பண்ணிப் போட பணம் தான் போட்ட பட்ஜெட்டில் உதைத்தது.அவர் கமலாவைத் தனியா அழைத்து “ஏம்மா கமலா, நான் கல்யாணத்துக்கு என்று சரியா பட்ஜெட் போட்டு பணத்தை ஒதுக்கி வச்சு இருக்கேன். லதா கேக்கற இந்த மூனு பவுன் செயினுக்கு பணம் உதைக்குதேம்மா.உன்னால் ஏதாவது பணம் குடுக்க முடியுமா” என்று கேட்டார்.“அக்கா கேட்ட மூனு பவுன் செயினுக்கு நான் பணம் தரேன்ப்பா” என்று சொல்லி கமலா ஒரு முப்பதாயிரம் ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுத்தாள் கமலா.லதா மாமியார் கேட்ட மூன்று பவுன் செயினை வாங்கி லதாவுக்குக் கொடுத்து லதாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சிவலிங்கம்.

மெல்ல மெல்ல மாபிள்ளை வீட்டில் கேட்ட சீர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வந்தார் சிவலிங்கம்.சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார் சிவலிங்கம். சரோஜாவின் குரலைக் கேட்டு தன் கண்களை திறந்துக் கொண்டார் சிவலிங்கம்.தன் தொண்டையை கனைத்துக் கொண்டார். “ஒன்னும் இல்லே சரோஜா.இந்த நாள் வரைக்கும் குமார் நம்மை விட்டு ஓடிப் போனதை எண்ணி நான் வருத்தப் பட்டேனே ஒழிய மனக் கஷ்டமோ பணக் கஷ்டமோ நாம் படவில்லை.நமக்கு நிஜமான பணக் கஷ்டம் வரும் போது தான் ‘அந்த பையன் நம்மோடு இருந்தா நாம் அவனை ‘குமார் கமலா கல்யாணத்துக்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. நீ கொஞ்சம் பணம் எனக்குக் குடு’ன்னு நான் சுவாதீனமா கேக்க முடியும்.அவனே நமக்கு இல்லேன்னு ஆயிட்டப்போ நாம் என்ன பண்றது சொல்லு.என் ஒன்னு விட்ட தம்பி மகேஸ்வரன் ஒருத்தன் தான் இருக்கான். அவனும் சாதாரண பள்ளிக் கூட வாத்தியாரா இருந்து வரான்.பொ¢ய சம்பாத்தியம் ஒன்னும் இல்லை அவனுக்கு.கடிதப் போக்கு வரத்தும் வச்சுண்டதும் இல்லே.அவன் கிட்டே என் தூரத்து ஊறவு தானே என்று சும்மா இருந்து விட்டேன். அவன் கிட்டே அவன் அப்பா வச்சு விட்டுப் போன நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருக்குன்னு எனக்கு நல்லாத தொ¢யும் இந்த சமத்திலே அவனை நான் பாத்து ‘என் கடைசிப் பொண்னு கமலா கல்யாணம் நிச்சிய மாய் இருக்குப்பா.நீ எனக்கு ஒரு நாப்பதாயிரம் ரூபாய் கொஞ்சம் கடனா தர முடியுமா ன்னு கேக்கலாமான்னு யோசிச்சுக் கிட்டு இருந்தேன் கமலா” என்று நிதானமாக சொன்னார் சிவலிங்கம்.சரோஜா ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.அவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.சற்று நேரம் கழித்து “அங்கேயும் நமக்கு பணம் கிடைக்காட்டா நான் இந்த தெருக் கோடியில் இருக்கும் சேட்டிடம் தான் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேணும்.பிறகு அந்த ஓனர் நமக்கு பணத்தைத் திருப்பிக் குடுத்தார்ன்னா நாம் வட்டியும் அசலும் சேர்த்து அந்த சேட்டிடம் தரணும்.என்ன சொல்றே சரோஜா’ என்று கேட்டார் சிவலிங்கம்.உடனே “அந்த சேட்டிடம் நீங்க கடன் எல்லாம் வாங்கதீங்க.அவா¢டம் வட்டி ரொம்ப அதிகங்க. நாம திருப்பிக் குடுக்கும் போது அசலை விட வட்டி அதிகமா இருக்குங்க.வேணாங்க.நீங்க போய் உங்க ஒன்னு விட்டத் உங்க தம்பி கிட்டேயே கேட்டுப் பாருங்க.அது தாங்க சரின்னு எனக்குப் படுதுங்க” என்றாள் வருத்ததுடன். “ஆமாம் சரோஜா,சேட்டிடம் எப்போதும் வட்டி அதிகம் தான்.வேறு வழி இல்லேன்னா அதை தான் நாம் செஞ்சு ஆகணும் சரோஜா.சரி நான் நாளைக்கு திருச்சி போய் என் தம்பியைக் கேட்டுப் பாக்கறேன் சரோஜா’ என்றார் அவர்.

அடுத்த நாள் சிவலிங்கம் திருச்சி கிளம்பிப் போனார்.திருச்சி வந்து சேர்ந்த்தும், தன் ஒன்னு விட்ட தம்பி வீட்டுக்கு வந்தார் சிவலிங்கம்.அண்ணனைப் பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது மகேஸ்வரனுக்கு.“வாங்க அண்ணே, வாங்க” என்று சொல்லி அவரை ஹாலில் உட்காரச் சொல்லி“ “அண்ணி சௌக்கியமா, கமலா சௌக்கியமா” என்று விசாரித்தான் மகேஸ்வரன்.“எல்லோரும் நல்ல சௌக்கியம்ப்பா.நீங்க எல்லாம் சௌக்கியமா” என்று கேட்டார் சிவலிங்கம் ”நாங்க எல்லோரும் சௌக்கியம் அண்ணா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது லக்ஷ்மி கொண்டு வந்து குடுத்த தண்ணிரை வாங்கிக் குடித்தார் சிவலிங்கம்.

லக்ஷ்மி சமையல் தயாராய் இருக்குதுன்னு சொல்லவே அண்ணா தம்பி இருவரும் சாப்பீடார்கள். சாப்பிட்டு விட்டு சிவலிங்கமும் மகேஸ்வரணும் வந்து ஹாலில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.சிவலிங்கம் தன் தம்பியைப் பார்த்து “ மகேஷ்,நான் என் கடைசி பொண்ணு கமலா கல்யாணம் நிச்சியம் பண்ணி இருக்கேன்.வர மாசம் முப்பதாம் தேதி கல்யாணம் வச்சு இருக்கேன். நான் ஒரு ‘புரோவிஷன்’ கடையைப் போடலாம்ன்னு நினைச்சு ஒரு கடைக்கு ஒரு லக்ஷ ரூபாய் ‘அடவான்ஸ்’ குடுத்தேன் தம்பி.நடுவிலே எனக்கு கால் முறிவு ஏற்பட்டதாலே நான் உடனே கடையை தொறக்க முடியலே.அதுகுள்ளே அந்த ஓனர் அந்த கடையை வேறு ஒரு பார்ட்டிக்கு கொடுத்திட்டான்.நான் வேணாங்கலே.இப்போ போய் என் ‘அடவான்ஸ்’ பணத்தை திருப்பி தர மாட்டேன் என்கிறான் அந்த ஓனர்” என்று வருத்தது டன் சொன்னார் சிவலிங்கம்.கொஞ்ச நேரம் போனதும் ”தம்பி, எனக்கு கமலா கல்யாண செலவுக்கு அவசரமா ஒரு நாப்பதாயிரம் ரூபாய் தேவைப் படுது.உன்னால் கொஞ்சம் தர முடியுமா” என்று தன் உடம்பை குறுக்கிக் கொண்டு கேட்டார் சிவலிங்கம்.உடனே “அதுக்கென்ன அண்ணே, நான் தரேன்.கொஞ்ச இரு” என்று சொல்லி விட்டு உள்ளே போனான் மகேஸ்வரன்.சிவலிங்கதிற்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.உள்ளே போன தம்பி வருவதற்கு நேரம் பிடித்தது.ரூம் உள்ளே அவன் தம்பியும், அவன் மணைவியும் ஏதோ வாக்கு வாதம் பண்ணுவது சிவலிங்கம் காதில் விழுந்ததது.

ஓரு அரை மணி நேரம் கழித்து தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான் மகேஸ்வரன். அவன் வந்து மெல்ல தன் அண்ணா பக்கத்தில் உட்கார்ந்தான்.கொஞ்ச நேரம் அவன் பேசவில்லை.பிறகு நிதானமாக “அண்ணா பணம் பாங்கிலே இருக்குதுன்னு தான் நான் நினைச்சுக் கிட்டு இருந்தேன்.இப்போ தான் லக்ஷ்மி சொன்னப்ப்போ எனக்கே ஞாபகம் வருது. அவங்க அப்பா ஆபரேஷனுக்கு நான் போன வாரம் முப்பதாயிரம் குடுத்ததே எனக்கு மறந்திடுச்சி.அண்ணே. நான் இப்போ உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் தரேன்.எனக்கு பணம் கிடைச்சதும் நான் உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி மீதி முப்பதாயிரம் ரூபாய் தரேன் அண்ணே”என்று சொல்லி பத்தாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி தன் அண்ணனிடம் கொடுத்தான் மகேஸ்வரன்.“சரிடா இப்ப இந்த பத்தாயிர த்தைக் குடு. உனக்கு பணம் கிடைச்சதும் எனக்கு மீதி பணத்தைக் குடு.நான் உனக்கு எனக்கு பணம் கிடைச்சவுடன் திருப்பித் தந்து விடுகிறேன்”என்று சொல்லி அந்த பத்தாயிரம் ரூபாய் செக்கை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்தார் சிவலிங்கம்.

வீட்டுக்கு வந்ததும் வராததும் சிவலிங்கம்” சரோஜா, நாப்பதாயிரம் ரூபாய் தரேன்னு உள்ளே போனவன் அவன் மணைவியுடன் ஒரு அரை மணி நேரம் பேசின பிறகு ஏதோ ஒரு கதையுடன் வெளியே வந்து இந்த பத்தாயிரம் ரூபாய் செக்கை தான் எனக்கு எழுதிக் குடுத்து இருக்கான்” என்று சொல்லி வருத்தப் பட்டார் சிவலிங்கம்.”எனக்கு தொ¢யுங்க, உங்க தம்பி ஆசைப் பட்டா கூட அந்த பொம்பளை தர விட மாட்டாங்க” என்று கோவத்துடன் சொன்னாள் சரோஜா .“நீங்க ஏங்க இந்த பத்தாயிரம் செக்கை வாங்கிக் கிட்டு வந்தீங்க.எனக்கு வேண்டாம் தம்பின்னு அவன் முகத்திலேயே வீசி எறிந்து விட்டு வந்து இருக்கக் கூடாதுங்க நீங்க ஏன் வாங்கி வந்தீங்க இந்த செக்கை.நீங்க இவ்வளவு பொ¢யவங்க அவங்க வீட்டுக்குப் போய் இருக்கீங்க.கமலா கல்யாணம் ன்னு சொல்லி இருக்கீங்க.உங்க கஷ்டத்தையும் சொல்லி இருக்கீங்க.வயசிலே உங்க தம்பி செஞ்சது சரியே இல்லீங்க” என்று கத்தினாள் சரோஜா.

கமலா ஆ·பீஸ் கிளம்பிப் போனதும் நான் கமலா கல்யாணத்துக்கு துண்டு விழும் பணத்தை நான் தெருக் கோடியில் இருக்கும் சேட்டிடம் கடன் வாங்கலாம்ன்னு தீர்மானிச்சு இருக்கேன் சரோஜா.இந்த விஷயம் நம்ம கமலாவுக்கு தொ¢ய வேணாமேன்னு தான் நான் அவ ஆ·பீஸ் போனது உன் கிட்டே சொல்றேன்.என்றார் விரக்தி தோய்ந்த குரலில்.“ரொம்ப நல்லதுங்க.நீங்க அப்படியே செய்யுங்க” என்றாள் சரோஜா.

சிவலிங்கம் சாயங்காலம் காப்பி குடித்து விட்டு “சரோஜா நீயும் என்னுடன் வா.நாம் அந்த சேட்டிடம் போய் நாம பணம் கேட்டு வாங்கி வரலாம்.கொஞ்சம் சீக்கிரமா வா.நாம கமலா ஆ·பீஸில் இருந்து திரும்பி வரதுக்குள்ளாற வந்து விடணும்” என்றார் சிவலிங்கம். சரோஜா ரெடி ஆனவுடன் அவளை கொண்டு தெருக்கோடியில் இருக்கும் சேட் கடைக்குப் போனார் சிவலிங்கம்.“வாங்க வாங்க”என்று அழைத்தார் கல்லாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த சேட். சிவலிங்கம் “சேட் நான் என் பெண்ணுக்கு கல்யாணம் நிச்சியமாய் இருக்கேன். எனக்கு ஒரு நாப்பதாயிரம் ரூபாய் கடனாக வேணும்” என்று கூறினார்.உடனெ அந்த சேட் “நான் உங்களை ரொம்ப வருஷமா பாத்து வரேன்.நீங்க இந்த வழியாகத் தான் போவீங்க வருவீங்க.ஆனா இது வரை நம்ம கடைக்கு நீங்க வந்தது இல்லே. உங்க கதையை கேட்க எனக்கு கஷ்டமா இருக்கு.ஏங்க நீங்க அந்த கட்சிக் கா¡ரங்க கிட்டே போய் மாட்டிக் கிட்டேங்களே.அந்த பாவிங்க உங்க பணத்தை லேசில் திருப்பித் தர மாட்டாங்களேங்க. போவட்டும் விடுங்க.உங்க¨ளையும் அம்மாவையும் பாத்தா ரொம்ப நல்லவங்களாகத் தொ¢யுது. கல்யாணத்துக்குன்னு வேறே பனம் கேக்கறீங்க.நான் மத்தவங்களுக்கு குடுப்பதை விட ஒரு ‘பர்சென்ட்’ கம்மி வட்டிக்கு உங்களுக்கு பணம் தரேனுங்க.நீங்க பணத்தை வாங்கிப் போய் கல்யாணத் தை நல்ல விதமா முடியுங்க” என்று சொன்னார் அந்த சேட்.”ரொம்ப நன்றி சேட். நான் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரமா உங்க பணத்தைத் திருப்பி தந்து விடுகிறேன்” என்றார் சிவலிங்கம் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு. சரோஜாவும் தன் கைகளைக் கூப்பி நன்றி சொன்னாள்.பிறகு ஒரு ‘ஸ்டாம்ப் பேப்பரில்’ அவர் கொடுத்த பணம், வட்டி விகிதம், சிவலிங்கம் பேர் ‘அட்ரஸ்’, போன் நம்பர், போன்ற எல்லா விவரமும் எழுதி சிவலிங்கத்திடம் கை எழுத்து வாங்கிக் கொண்டார் சேட்.பிறகு தன் கஜானாவைத் திறந்து நாப்பதாயிரம் ரூபாயை சிவலிங்கத்திடம் கொடுத்தார் அந்த சேட்.வீட்டுக்கு வந்த சரோஜா பணத்தை பீரோவில் வைத்தாள். இதற்கிடையில் நடராஜன் கல்யாணம் ஆன பிறகு தான் கமலாவோடு குடித்தனம் பண்ண ‘ஒரு பெட் ரூம் ’’·ப்ளாட்டை’ வாடகைக்கு தேடினான்.அவன் எவ்வளவு முயற்சி பண்ணியும் அவனுக்கு தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டாக’ கிடைக்க வில்லை.எல்லாம் ரெண்டாம் மாடி, மூனாம் மாடி, என்று தான் காலியாகக் கிடைத்தது.தவிர டவுனில் வாடகையும் அதிகமாக இருந்தது. டவுனுக்குத் தள்ளி வெளியே பார்க்கலாம் என்றால் கமலா ஆ·பீஸ்க்கும், தன் பாக்டா¢க்கும் ரொம்ப தூரமாய் இருக்கும்.கமலா ஆ·பீஸ் போய் வருவதும் தான் ‘·பாக்டா¢க்கு’ போய் வருவதும் ரொம்ப கஷ்டமாய் இருக்கும் என்று எண்ணி டவுனிலேயே ஒரு வீடு பார்க்க எண்ணினான்.’கல்யாணத்திற்கு அப்புறம் கொஞ்ச மாசமாவது தன் அப்பா அம்மாவை தன் கூட வைத்துக் கொள்ளலாம் என்று ஆசை பட்டான் நடராஜன்.அதற்கு தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டா’ இருந்தால் தானே தன் அப்பவு க்கு சௌகரியமா இருக்கும் என்று நினைத்தான் .அவனுக்கு ‘தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டாக’ கிடைக்கவே இல்லை.கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் பாக்கி இருந்தது. வேறு வழி இல்லாமல் அவனுக்கு ரெண்டாம் மாடி ‘·ப்ளாட்டு’ ஒன்று தான் கிடைத்தது.” மாச வாடகை ஆறு ஆயிரம் ரூபாய்.பத்து மாச’அட்வான்ஸ்’ அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டும்”என்று சொன்னார் வீட்டு ஓனர்.”சரி” என்று ஒத்துக் கொண்டு பத்து மாச ‘அட்வான்ஸ்’ அறுபதாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு ‘அக்ரிமெ ண்ட்டில்’ தன் கை எழுத்தைப் போட்டான் நடராஜன்.அந்த வீட்டில் ‘லி·ப்ட்’ கூடஇல்லை.ஒரு ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்கு ‘இட சுத்தியும்’ ஒரு கணபதி பூஜையும் செய்து முடித்து அதில் தன் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து அவன் வந்து குடி புகுந்தான்

நடராஜன் தன் வேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு அரியலூருக்குப் போனான்.ஒரு பொ¢ய பஸ் ஒன்றை ஏற்பாடு பண்ணி அவன் உறவுக்காரர்களை மூனு நாளைக்கு முன்னாலே அரியலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தான் நடராஜன்.வந்த உறவினர்களை அந்த வீட்டில் தங்க வைத்தான்.தன் அப்பா அம்மா மற்றும் சில வயாதனவர்களை பக்கத்தில் ஒரு ஹோட்ட்லில் தங்க வைத்தான் நடராஜன்.அவர்களுக்கும் சாப்பாடு டிபன் எல்லாம் ரூமில் வரும் படி ஏற்பாடு பண்ணினான்.

முஹ¥ர்த்த நாளன்று முன் தினமே எல்லோரும் கல்யாண மண்டபத்துக்கு வந்து விட்டார்கள். அடுத்த நாள் ஐயர் முன்னிலையிலும் மற்ற பொ¢யவங்க முன்னிலையிலும் கமலா நடராஜன் கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.எல்லோரையும் போட்டோ, விடியோ, எல்லாம் எடுத்து முடித்தார்கள்.சிவலிங்கமும் சரோஜாவும் கல்யாணம் முடிந்ததும் நடராஜன் பெற்றோர்களிடம் தங்கள் சந்தோஷத்தை சொல்லி அவர்கள் செய்த சீர் களையும் கொடுத்தார்கள்.கல்யாணம் முடிந்து நடராஜன் உறவினர்கள் எல்லாம் வந்த ‘பஸ்ஸிலேயே’ திரும்பி அரியலூர் போய் சேந்து விட்டார்கள். அவன் அப்பாவும் அம்மா மட்டும் நடராஜனோடும் கமலாவோடும் ‘·ப்ளாட்டில்’ தங்க முடிவு பண்ணினர்கள்.

முதல் மூனு நாளைக்கு எல்லோருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு டிபன் எல்லாம் ஏற்பாடு பண்ணினான் நடராஜன்.இதற்கிடையில் ‘காஸ் கனெக்ஷன்’,சிலெண்டர்,மளிகை சாமான்கள் இவை எல்லாம் வாங்கி வந்து கமலாவுக்கு எல்லா சௌகரியமும் பண்ணி முடித்தான் நடராஜன்.

“”நீங்க சொன்னதற்கு மேலே ஜனங்க வந்து சாப்பிட்டதை நீங்க கவனிக்கலயா.கல்யாணம் நடந்த அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அன்னைக்கு காலையில் வந்த அத்தனைப் பேரும் மதியம் சாப்பிட்டு விட்டு,சாயங்காலம் டிபனும் சாப்பிட்டு விட்டு,இரவு ‘டின்னரும்’ சாப்பிட்டு விட்டுப் போனாங்க சார்.மளிகை சாமான்கள் போதாமல் நான் மூனு தடவை ஆளை அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கி வந்து சமைக்க வேண்டியதாய் ஆச்சுங்க.அப்பவே உங்க கிட்டு வந்து சொல்லலாம் ன்னு தான் நான் ரெண்டு தடவை உங்களைப் பார்க்க வந்தேங்க.ஆனா ஒரு தடவை நீங்க உங்க சம்மந்தி கூடப் பேசிக் கிட்டு இருந்தீங்க.அடுத்த தடவை வந்த போது நீங்க போட்டோ, விடியோ எடுக்கறதிலே பிஸியா இருந்தூங்க.எனக்கும் சமையல் கட்டில் வேலை அதிகமா இருந்திச்சு.அதனால் மறுபடியும் வந்து உங்க கிட்டே சொல்ல முடிய லே சார்.அப்புறமா சொல்லிக் கொள்ளலாம்ன்னு தான்னு நான் இருந்து விட்டேன்” என்று சொல்லி விட்டு,காலை டிபனுக்கு வந்த எண்ணிக்கை, மதியம் சாப்பிட்டவங்க எண்ணிக்கை,சாயங்காலம் டிபன் சாப்பிட்ட வங்க எண்ணிக்கை,இரவு ‘டின்னர்’ சாப்பி ட்டவங்க எண்ணிக்கையை எல்லாம் எடுத்து காட்டினார் சமையல்காரர். சிவலிங்கம் பதில் ஒன்னும் சொல்ல முடியவில்லை ‘இந்த சமையல் காரருக்கு நாம் எப்படி முப்பதாயிரம் ரூபாய் தரப் போகிறேன் நம்மிடம் பணமே இல்லையே’ என்று கவலை வந்து விட்டது சிவலிங்கதிற்கு. யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் அவர்.சற்று நேரம் கழித்து “எனக்கு கொஞ்சம் டயம் குடுங்க.நான் பணத்திற்கு ஏற்பாடு பண்ணி உங்களுக்குத் தரேன்.இப்ப உடனே தர என்னிடம் பணம் இல்லை,நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்க” என்று சொல்லி ஒரு வழியாக சமையல் காரரை அனுப்பி வைத்தார் சிவலிங்கம்.

சரோஜாவையும் கூட வைத்துக் கொண்டு சிவலிங்கம் அவர் கமலாவை தனியாக அழைத்து சமையல் காரர் சொன்னதை எல்லாம் விவரமாகச் சொல்லி “அம்மா கமலா நான் எதிர் பார்த்ததற்கு மேலே செலவு ஓடி போச்சு.உன் கிட்டே இருக்கிற பணத்தில் எனக்கு கடனாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கொஞ்சம் குடும்மா. நான் இன்னும் ரெண்டு நாள்ள அந்த சமையல்காரருக்கு முப்பதாயிரம் ரூபாய் தரனும்மா.எனக்கு பணம் வந்ததும் நான் உனக்கு திருப்பித் தந்து விடறேன்” என்று சொல்லும் போதே அவர் கண்களில் நீர் முட்டியது.கமலா மிகவும் வருத்தப் பட்டாள். ”உங்களுக்கு இல்லாதா பணமா அப்பா.இதோ நான் தருகிறேன்” என்று சொல்லி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தாள் கமலா.பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவலிங்கம் சமையல்காரரை வரச் சொல்லி அவர் கணக்கை செட்டில் பண்ணினார் சிவலிங்கம்.

முதல் மூனு நாளைக்கு எல்லோருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு டிபன் எல்லாம் ஏற்பாடு பண்ணினான் நடராஜன்.இதற்கிடையில் ‘காஸ் கனெக்ஷன்’,சிலெண்டர்,மளிகை சாமான்கள் இவை எல்லாம் வாங்கி வந்து கமலாவுக்கு எல்லா சௌகரியமும் பண்ணி முடித்தான் நடராஜன்.‘ப்ளாட்டுக்கு’ வந்த அடுத்த நாளில் இருந்து கமலா தன் கணவன் மாமியார் மாமனார் மூன்று பேருக்கும் சுவையான சமையல் செய்து போட்டாள்.கமலா இவ்வளவு சுவையாக சமைப்பதை மூவரும் மிகவும் பாராட்டினார்கள். தன்னை இவ்வளவு புகழ்ந்து பாராட்டினது கமலாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

கமலா லீவு முடிந்து அன்று தன் வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.மாமனார் மாமியார் இருவா¢டமும் சொல்லிக் கொண்டு அவள் ஆ·பீஸ் கிளம்பினாள்.நடராஜனோடு அவன் அம்மாவும் அப்பாவும் தனியே இருந்தனர்.அன்று ‘நைட் டியூட்டி’க்கு அவன் போகணும்.அவன் லீவும் அன்றோடு முடிந்து விட்டது.

இதற்கிடையில் நடராஜன் கல்யாணம் ஆன பிறகு தான் கமலாவோடு குடித்தனம் பண்ண ‘ஒரு பெட் ரூம் ’’·ப்ளாட்டை’ வாடகைக்கு தேடினான்.அவன் எவ்வளவு முயற்சி பண்ணியும் அவனுக்கு தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டாக’ கிடைக்கவில்லை.எல்லாம் ரெண்டாம் மாடி, மூனாம் மாடி, என்று தான் காலியாகக் கிடைத்தது.தவிர டவுனில் வாடகையும் அதிகமாக இருந்தது. டவுனுக்குத் தள்ளி வெளியே பார்க்கலாம் என்றால் கமலா ஆ·பீஸ்க்கும், தன் பாக்டா¢க்கும் ரொம்ப தூரமாய் இருக்கும்.கமலா ஆ·பீஸ் போய் வருவதும் தான் ‘·பாக்டா¢க்கு’ போய் வருவதும் ரொம்ப கஷ்டமாய் இருக்கும் என்று எண்ணி டவுனிலேயே ஒரு வீடு பார்க்க எண்ணினான்.’கல்யாணத்திற்கு அப்புறம் கொஞ்ச மாசமாவது தன் அப்பா அம்மாவை தன் கூட வைத்துக் கொள்ளலாம் என்று ஆசை பட்டான் நடராஜன்.அதற்கு தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டா’ இருந்தால் தானே தன் அப்பவு க்கு சௌகரியமா இருக்கும் என்று நினைத்தான்.அவனுக்கு ‘தரை மட்டத்தில் இருக்கும் ‘·ப்ளாட்டாக’ கிடைக்கவே இல்லை.கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் பாக்கி இருந்தது. வேறு வழி இல்லாமல் அவனுக்கு ரெண்டாம் மாடி ‘·ப்ளாட்டு’ ஒன்று தான் கிடைத்தது.” மாச வாடகை ஆறு ஆயிரம் ரூபாய்.பத்து மாச’அட்வான்ஸ்’ அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டும்”என்று சொன்னார் வீட்டு ஓனர்.”சரி” என்று ஒத்துக் கொண்டு பத்து மாச ‘அட்வான்ஸ்’ அறுபதாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு ‘அக்ரிமெ ண்ட்டில்’ தன் கை எழுத்தைப் போட்டான் நடராஜன்.அந்த வீட்டில் ‘லி·ப்ட்’ கூடஇல்லை.ஒரு ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்கு ‘இட சுத்தியும்’ ஒரு கணபதி பூஜையும் செய்து முடித்து அதில் தன் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து அவன் வந்து குடி புகுந்தான்

நடராஜன் தன் வேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு அரியலூருக்குப் போனான்.ஒரு பொ¢ய பஸ் ஒன்றை ஏற்பாடு பண்ணி அவன் உறவுக்காரர்களை மூனு நாளைக்கு முன்னாலே அரியலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தான் நடராஜன்.வந்த உறவினர்களை அந்த வீட்டில் தங்க வைத்தான்.தன் அப்பா அம்மா மற்றும் சில வயாதனவர்களை பக்கத்தில் ஒரு ஹோட்ட்லில் தங்க வைத்தான் நடராஜன்.அவர்களுக்கும் சாப்பாடு டிபன் எல்லாம் ரூமில் வரும் படி ஏற்பாடு பண்ணினான்.

முஹூர்த்த நாளன்று முன் தினமே எல்லோரும் கல்யாண மண்டபத்துக்கு வந்து விட்டார்கள். அடுத்த நாள் ஐயர் முன்னிலையிலும் மற்ற பெரியவங்க முன்னிலையிலும் கமலா நடராஜன் கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.எல்லோரையும் போட்டோ, விடியோ, எல்லாம் எடுத்து முடித்தார்கள்.சிவலிங்கமும் சரோஜாவும் கல்யாணம் முடிந்ததும் நடராஜன் பெற்றோர்களிடம் தங்கள் சந்தோஷத்தை சொல்லி அவர்கள் செய்த சீர் களையும் கொடுத்தார்கள்.கல்யாணம் முடிந்து நடராஜன் உறவினர்கள் எல்லாம் வந்த ‘பஸ்ஸிலேயே’ திரும்பி அரியலூர் போய் சேந்து விட்டார்கள். அவன் அப்பாவும் அம்மா மட்டும் நடராஜனோடும் கமலாவோடும் ‘·ப்ளாட்டில்’ தங்க முடிவு பண்ணினர்கள்.

முதல் மூனு நாளைக்கு எல்லோருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு டிபன் எல்லாம் ஏற்பாடு பண்ணினான் நடராஜன்.இதற்கிடையில் ‘காஸ் கனெக்ஷன்’,சிலெண்டர்,மளிகை சாமான்கள் இவை எல்லாம் வாங்கி வந்து கமலாவுக்கு எல்லா சௌகரியமும் பண்ணி முடித்தான் நடராஜன்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *