காலப்பயண ஆர்வலர்களின் சந்திப்பு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 5,068 
 
 

என் நண்பன் ராம்ஜியை ஹேலோபோனில் அழைத்தேன். சில நொடிகளில் அவனது ஹேலோகிராம் உருவம் ஆவி போல் என் முன்பு தோன்றியது.

“என்ன விஷயம், எதுக்கு கூப்பிட்டே?” அவன் குரல் கிணத்துக்குள்ளிருந்து வருவது போல் கேட்டது.

“காலப்பயண ஆர்வலர்கள் கிளப்பின் உள்ளூர் பிரிவு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. கால இயந்திரங்களை இயக்குவது பற்றிய பல்வேறு நுணுக்கங்களை நாம் காலப்பயண நிபுணர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். வருகிறாயா?”

“கண்டிப்பாக. கூட்டம் எங்கே நடக்கப் போகிறது?”

“நாகேஸ்வர ராவ் பார்க்கில்.”

“என்றைக்கு?”

“ஜூன் 2, 1846, காலை 10 மணி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *