காற்றில் கரைந்தாயே என் தேவதையே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 208 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

பகுதி – 2 | பகுதி – 3

மணிபார்த்தான்.நேரம் பத்து ஐந்து.

மணி பத்தாயிட்டா?ப்ச்..என்றான்.

ஏங்க? என்னாச்சி?

ஒன்னுமில்ல நிலாப் பெண்ணே..வண்டீல ஏறுங்க என்றான் சிரித்தபடி.

அட.. என்னது?.. நிலாப் பெண்ணேவா? வண்டீல ஏறுங்கவா? படம்பாத்த பாதிப்போ ஐயாக்கு. கேலிசெய்தாள் நிலா.

வண்டி நகர்ந்தது.மீண்டும் தூறல் போட்டது.நின்று போனது.இடி இடித்தது.

என்னங்க இது தூறல் போட்டுப்போட்டு நிக்கிது?

இடிக்கிது..இடின்னாலே எனக்கு பயம்ங்க..

என்ன பயம்?நாந்தா இருக்கேன்ல..பயமாருந்தா..

அவன் மேற்கொண்டு என்ன சொன்னானோ.. இடிசப்தத்தில் அவளுக்குக் காதில் விழுந்ததோ இல்லையோ..

ஏனோ..கடவுளே.. என்றாள் சிணுங்கலாய்.

சிரித்தான் தினேஷ்.. சிரித்தாள் நிலா.

அடிச்சி மழபேஞ்சுச்சுனா..நம்ம ஊருக்குப் போற ரோடு கொதகொதன்னு ஆகிடும். டயரே வழுக்கும் என்றான்.

இருபது நிமிட வண்டி ஓடலுக்குப் பிறகு பரபரப்பான அந்த முக்கியமான சாலையில் வாகனப்போக்குவரத்தும்.. ஜனங்களின் நடமாட்டமும் குறைய ஆரம்பித்தது. 

ஒன்றிரெண்டு வாகனங்களே போய் வந்து கொண்டிருந்தன.

முக்கியமான அந்த சாலையில்கூட.. ஆங்காங்கே சாலை விளக்குகள் ஒளிர்ந்தனவே தவிற எல்லா விளக்குகளும் எரிய வில்லை.

சட்சட்டென இருட்டான பகுதிகளும்..மீண்டும் வெளிச்சமான பகுதிகளும் மாறிமாறி வந்தன.

அந்த நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடம் வந்ததும் சாலையிலிருந்து பிரியும் பாதைக்குள் நுழைய வேண்டும் தினேஷின் வீடிருக்கும் ஊருக்கு. 

தினமும்.. அந்த பிரியும் சாலையில்தான் வீட்டிலிருந்து வண்டியில்.. தன் ஒர்க் ஷாப்பிருக்கும் நெடுஞ்சாலைக்கு வருவான்.

இரவு என்னேரமானாலும் அவ்வழியேதான் திரும்ப ஊருக்குள் செல்வான்.

பெரும்பாலும் இரவு பத்துமணிக்குமேல் அந்த பிரியும் சாலைக்குள் மக்கள்  நுழைந்து ஊருக்குள் செல்வதோ..ஊரிலிருந்து நெடுஞ் சாலைக்கு வருவதோ குறைவுதான். நடமாட்டம் முற்றிலும் குறைந்துவிடும்.

அப்படியே வந்தாலும் போனாலும் மூன்று நான்கு பேராய்ச்சேர்ந்துதான் போவது வருவது வழக்கம்.

ஆனால் பெரும்பாலும் தினேஷ் அதிகம் பயப்படுவது இல்லை. ஷாப்பிலிருந்து இரவு திரும்பும்போது வண்டியை வேகமாக ஓட்டிச் சென்று விடுவான். 

ஆனால் இன்று ஏனோ சின்னதாய் பயம் எட்டிப் பார்த்தது அடிமனதில்.

ஃபர்ஸ்ட் ஷோ பாக்க வந்திருக்க வேண்டாமோ?மேட்னிஷோ பாத்திருக்க லாமோ?நாம மட்டும்னா பரவால்ல..நிலாவையும்னா கூட்டிட்டு வந்ருக்கோம்.

தப்பு பண்ணிட்டமோ?

வண்டி தயக்கத்தோடு அந்த பிரியும் சாலைக்குள் நுழைந்தது.

அவ்வளவாய் அகலமில்லாத கரடுமுரடான மண்சாலை.

தெருவிளக்குகள் அங் கொன்றும் இங்கொன்று மாய் மங்கல் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.

போதுமான வெளிச்சம் இல்லாமல் ஆரவாரமின்றிக் கிடந்தது அந்த சாலை.

ஏனோ அடிமனதில் உண்டான லேசானபயம் இப்போது கொஞ்சம் கூடுதலாயிற்று.

விர்விர்ரென வீசும் காற்றின் சப்தத்தோடு..இப்போது தினேஷின் வண்டிச்சத்தம் சேர்ந்து கொண்டது.

சாலையின் இருபுறத்தில் ஒருபுறத்தில் சவுக்குத் தோப்பு..மறுபுறத்தில் தென்னந்தோப்பு.உயர உயரமான மரங்களின் உச்சி அந்த  மங்கலான தெரு விளக்கின் வெளிச்சத்தில் காற்றிலாடி பேய்கள் தலை முடிவிரித்து ஆடுவது போல் பயமுறுத்தின.

திடீரென நிலாவுக்குள்ளும் பயம் வந்தது.

என்னங்க..என்றாள் நிலா.

குரலில் பயம் தெரிந்தது.

தன்மனதின் பயத்தை வெளிக்காட்டாமல் வெகுசாதாரணமாகக் கேட்பதுபோல்..என்ன நிலாப்பெண்ணே? மேட்டுலயும் பள்ளத்துலயும் வண்டி ஏறி எறங்குறதால முதுக வலிக்குதா?வேடிக்கையாய்க் கேட்பதுபோல் கேட்டான்.

இல்லீங்க..என்னங்க ரோடு இப்பிடி இருக்கு..ஈ காக்காவக் கூடக்காணும்? மயான அமைதியா இருக்கு? பயமால்ல?

அட என்ன பயம் நிலா? நா நெதமு ராத்திரி பத்து மணிக்குமேல ஒர்க் ஷாப்ப மூடிட்டு இப்பிடீதானே போவே..பயமொன்னுமில்ல..என்றான்.பயத்தை மறைத்தான்.

அந்தசாலையின் கால் பகுதியைக் கடந்தாயிற்று.

திடீரென மின்னல் மின்னியது.. தொடர்ந்து படார்..தடார் என சப்தத்தோடு இடி இடித்தது.

ஐயோ என்றபடி அவனின் இடுப்பைக்கட்டிக்கொண்டாள் நிலா.பயத்தில் தேகம் நடுங்கியது.

படார்.. பெரும் சப்தத்தோடு வண்டியின் பின்புற டயர் பஞ்ச்சரானது.

வண்டிதாறுமாறாய் சாலையில் ஓடி சாலையோரத்திலிருந்த பூவரசுமரத்தில் முட்டி நின்றது.

பகீரென்றது தினேஷின் அடிவயிறு.

வண்டியிலிருந்து தொப்பெனக்குதித்தாள் நிலா.

பயம் தினேஷின்  முழு மனதையும் ஆக்ரமித்தது.

அய்யோ..வண்டி பங்ச்சரா யிட்டே..

வண்டீல போனாலே எப்பிடீடா வீட்டுக்குப் போய்ச் சேருவம்னு திகிலாருக்கும்..

இதுல வண்டியும் பங்க்சரானா?

இன்னும் வீடுபோய்ச்சேர எம்மாந்தூரமிருக்கு. அவ்வளவு தூரம் நிலாவ இந்த இருட்டுல..இந்த ரோட்டுல..நடத்தி எப்பிடி அழச்சுட்டுப் போவேன்?

பயம் நெஞ்சை அடைத்தது.

வியர்த்துப்போனான் தினேஷ்.

என்னங்க..வண்டி..

உஷ்..சத்தம்போடாத நிலா..

வா ஓட்டமு நடையுமா ஓடுவோம்.வண்டி இங்கியே கெடக்கட்டும்.காலேல வண்டி இங்கயே கெடந்தா எடடுத்துப்போம்..இல்லாட்டி போட்டம்.வா..

நிலாவின் கைபிடித்து இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு ஓடாத குறையாக ஓடினான்.

எங்கோ நாய்கள் கூட்டமாய்ச்சேர்ந்து குரைக்கும் சப்தம் பயத்தையும் பீதியையும் கூடுதலாக்கியது.

முடியலிங்க..மூச்சுத்திண றியது நிலாவுக்கு.

அதோபாரு நிலா.. அங்க ஒரு ஸ்ட்ரீட் லைட் எரியுதில்ல.. அங்கபோய் ரெண்டுநிமிஷம் நிப்போம். நிலாவைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நடக்கமுடியாமல் நடந்தாள் நிலா.

மங்கலாய் வெளிச்சத்தை உமிழ்ந்தபடியிருந்த அந்தப்பகுதியை தினேஷும் நிலாவும் அடைந்தபோது..

சுருட்டு பீடி சிகரெட் எதன் நாற்றம் என்பதை பிரித்தறிய முடியாத மட்டமான நாற்றப் புகை நடுவே ஆளுக்கொரு சாராய பாட்டில் கையிலிருக்க.. ஐந்துபேர் அடங்கிய காட்டான்கள் குழுவொன்று வெளிச்சத்திற்கு சற்றுதள்ளி அமர்ந்திருந்தது.

தினேஷும் நிலாவும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க. வெளிச்சம் விழும் அவ்விடம் வந்து நின்றார்கள்.

புகைக்கு நடுவே அமர்ந்திருந்த அவர்களைப்பார்த்து அதிர்ந்து போனார்கள் இருவரும்.

சாராய போதையிலிருந்த காட்டான்களின் மொத்தப் பார்வையும் நிலாவின் மீது படிந்தது.

மாமிசத்தைப்பார்த்த வேட்டை நாய்களின் பார்வை.

உய்..கூட்டத்திலிருந்த ஒருவன் விசிலடித்தான் இரையைக்கண்ட சந்தோஷத்தில்.

கொத்தாக ஐந்துபேரும் எழுந்தார்கள்.

இவர்களை நோக்கி நடந்து வந்தார்கள்.

அனைவரின் நடையிலும் போதை தெரிந்தது.

ஐவரில் ஒருவன்மட்டும் சற்றே நின்று யாருடனோ ஃபோனில் பேசினான். பேசிவிட்டு மற்றவர்களோடு வந்து கலந்து கொண்டான்.

குட்டி ஷோக்கா இருக்குடா..

ஒருவன் சொல்ல.. ஆமாண்டா என்றார்கள் மற்றவர்கள் கோரஸாக….

நிறைய சினிமா நடிகைகளின் பேரைச் சொன்னார்கள். 

போடா அவுளுங்க மேக்கப்புல அளகா தெரியு றாங்கடா..இது ஒரிசனுலு.. அக்குமார்க்கு என்றான் ஒருவன்..

அருவருப்பாய் கீழ்த்தரமாய்  வர்ணனை  செய்தார்கள்.

பயத்தில் தினேஷின் பின்னால் ஒளிந்து கொண்டாள் நிலா.

பயத்தில் உறைந்து போனான் தினேஷ்..

ஏ..பொண்ணு என்னா.. இவம்பின்னாடி போய் பல்லிமாதிரி ஒட்டி ஒளிஞ்சிக்குற? வெளியவா.. நாங்கள்ளா ஒன்னய நல்லா பாக்க வேண்டா..வா வெளியே..

கத்தினான் ஒருத்தன்.

வே..வே..வேண்டா..கெஞ்சினாள் நிலா.

நீயா வர்ரியா? நா வந்து ஒன்ன வெளிய இழுக்கவா..என்றான் இன்னொருத்தன்.

அண்ணே..வேண்டாண்ணே.. விட்டுடுங்கண்ணே..தினேஷின் பின்னிருந்தபடி கெஞ்சினாள் நிலா.

என்னடா..அண்ணே அண்ணேங்கிது..ஒன்னோடபொறந்திச்சா?

என்னோட பொறக்குலப்பா..எ ஆயி அப்பனுக்கு நா ஒத்த புள்ளதா..

என்னோடையும் பொறக்குல..எ அப்பளோட சின்ன வீட்டுக்கும் ரெண்டும் ஆம்புளபுள்ளதா..

அப்ப நம்ம அஞ்சுபேரோட யும் இது பொறக்குல.. அதுனால நாம யாரும் இதுக்கு அண்ணனில்ல..

ஏ குட்டி..நாங்க யாரும் ஒனக்கு அண்ணனில்லனு தெரிஞ்சிபோச்சி..அப்ப வெளியவா..இனிமே.. என்று சொல்லி மட்டமாக ஜோக்கடித்தான்.

நிலா.. வா ஓடுவோம். நிலாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்தவழியே திரும்ப ஓடினான் தினேஷ்.

வேட்டைநாய்கள்போல் குடிகாரர்கள்  விரட்டிக் கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள்.

கொடிய மிருகம் இரையைத்தப்பவிடாது துரத்துவதுபோல் துரத்தினார்கள்.

ஏற்கனவே களைத்து  சளைத்துப் போயிருந்த தாலும் பயத்தாலும் நிலா  வேகமாய் ஓடமுடியாமல் தடுமாறினாள். 

கிட்டத்தட்ட தினேஷும் அப்படித்தானிருந்தான்.

இருந்தாலும் உடலின் சக்தியையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஓடினார்கள்.

மண்சாலை..கல்லும் மண்ணும் விரவிக்கிடக்கு சாலை.

கண்மண் தெரியாத ஓட்டதில்  நிலத்திவ் வெளியே நீட்டிக் கொண்டி ருந்த கல்லொன்று காலைத்தடுக்க நிலத்தில் விழுந்தாள் நிலா.

சுற்றிவளைத்தது போதைக் கூட்டம்.

அவர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள் நிலா.

கையெடுத்துக்கும்பிட்டு நிலாவை விட்டுவிடும் படி கெஞ்சினான் தினேஷ்.

அப்பிடி என்னா அவசரம் பொஞ்சாதிய இழுத்துக்கிட்டு ஓடுர?..

ஏய் அவ கைல மஞ்சக் கயிறுடா..புதுமாப்ள போலருக்குடா..அதா அவசரமா ஓடுறாரு..

ஹோஹோஹோ..இளித்தார்கள் ஐவரும்.

குனிந்து ஒருத்தன் நிலத்தில் கிடந்த நிலாவின் கை பிடித்தான்.வா பொண்ணு இனிமேலுக்கு இவ வேண்டா..நா பாத்துக்குறே செல்லம் ஒன்னைய.. விகாரமாய் இளித்தான்.

ஐந்துபேரும் அச்சில் ஏற்றமுடியாத மட்டமான வார்த்தைகளைப்பேசினார் கள்.

இனிமேலும் சும்மா இருக்கமுடியாது எனத் தீர்மானித்தவனாய்..அவர்களோடு போராட ஆரம்பித் தான் தினேஷ்.

டேய் அந்தப்பொண்ணு காலுங்களையும் கைங்களையும் துண்டால கட்டுங்கடா.. சந்தடி சாக்குல ஓடிடப்போவுது.

அண்ண இப்ப வந்துடு வாரு..அவரு சொல்லுறதுதா தீர்ப்பு..

கெக்கெக்கெக்..கேவலமாய்ச் சிரித்தான் ஒருத்தன்.

கட்டப்பட்டாள் நிலா.

என்னங்க.. காப்பாத்துங்க காப்பாத்துங்க..கத்தினாள்.

நிலா..கண்ணம்மா..கத்தினான் தினேஷ்.

ஆக்ரோஷமாய் சண்டையிட் டான் ஐவருடனும்.

அவெனென்ன சினிமா ஹீரோவா..பத்துபேரென்றாலும் அடித்துத் துவைக்க..

சளைத்து பலமிழந்து போனான்.

கத்திக்கொண்டே இருந்தாள் நிலா.

நிலா..கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடினான் தினேஷ்.

ஐவரும் சேர்ந்து அவனை அடித்தார்கள்.ஒருவன் தினேஷின் கால்களையும்..இன்னொருவன் தலையையும் பிடித்து இப்படியும் அப்படியும் ஊஞ்சல் போல் ஆட்டி தூக்கி எறிந்தார்கள் சாலையோர மண்திட்டில் போய் விழுந்தான் தினேஷ்.தலை கருங்கல்லில் மோதி ரத்தம் பிரவாகம் எடுத்தது.

என்னங்க..என்னங்க..காப்பாத்துங்க.. கத்தினாள் நிலா..

நிலா..கண்ணம்மா..தீனமாய்க்கத்தினான் தினேஷ்.

சற்றுதூரத்தில் ஏதோ வாகனம் வருவதுபோல் வெளிச்சம் தெரிந்தது.

மெல்ல எழுந்தான் தினேஷ்.

யாரோ லாரியோ காரோ எதுலயோ வராங்க..ஒதவி கேக்கணும்.எ நிலாவ காப்பாத்தணும்.

ரோட்டின் நடுவே ரத்தம் வழிய வந்துநின்று கையாட்டினான்.

மினிலாரி நின்றது.டிரைவர் இருக்கையிலிருந்து கதவைத் திறந்து கொண்டு தொப்பெனக் குதித்தான் நடுத்தர வயதுடைய ஒருவன்.

அந்த ஐந்துபேரும் மினிலாரி நிற்குமிடம் வந்தார்கள்.

என்ன இங்க நடக்குது? இவுரு தலலேந்து ரத்தம் வடியுது?..

யாரு இவர அடிச்சீங்க? கேட்டான்.

அண்ணே..குமாரண்ணே..போதுண்ணே..பஞ்சாயத்து பண்ணது..பொண்ணு லட்டுமாரி.. எம்மா நேரம் காத்திருக்குறது? வாங்கண்ணே சீக்கிரம்.

நா போனு பண்ணினதுமே கெளம்பிட்டீங்களாண்ணே? டாண்ணு வந்துட்டீங்க..

பின்ன பந்திக்கு முந்திக்க வேணா? குரூரமாய்ச் சிரித்தான். பொண்ணு எங்கடா..கேட்டான்.

இவனும் பொறுக்கிக் கூட்டத்தைச்சேர்ந்தவனெனப் புரிந்து போயிற்று தினேஷ்க்கு.

காப்பாத்துங்க காப்பாத்துங்க கத்திக் கொண்டே இருந்தாள் நிலா.

ஏய்.. குட்டிவாய்ல லாரிய க்ளீன்பண்ணுற துணிய வெச்சு அடடா..கத்திக்கிட்டே கெடக்கு..

தூக்கி லாரிலபோடு..

வேண்டா வேண்டா.. எம்மனைவிய விட்டுடுங்க.. விட்டுடுங்க..கெஞ்சி  ஒவ்வொருவரின் காலிலும் விழுந்தான் தினேஷ்.

மரத்தடில ஒழுங்கா போய் ஒக்காரு..உயிரோட ஒம் பொஞ்சாதிய கொண்டு ஒங்கிட்ட விட்டுடுறோம். பொறுமையா குந்தியிரு..

இல்லாட்டி பொணந்தாவரும்.

நிலா லாரியில் ஏற்றப் பட்டாள்.

மயங்கியிருப்பாளோ..சத்தம் அடங்கிப்போயிருந்தது.

கதறினான் தினேஷ்..நிலா..

கண்ணம்மா..நிலா.. கதறல் நாலாபக்கமும் பரவி எதிரொலித்தது.

ஏறுங்கடா வண்டீல.. டிரைவர் குமார் சொல்ல அனைவரும் ஏறினார்கள்.

அண்ணே வண்டிய எடுங்கண்ணே..நேரமாவு தில்ல..அவசரப்பட்டார்கள்.

தோ..வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றான் டிரைவர்.

நிலா.. நிலா.. கண்ணம்மா.. அடிவயிற்றிலிருந்து கிளம்பி வெளியே வந்தது கதறல்.

கதறினான் தினேஷ்.

டுர்.. டுர்..டிக் டிக் டிக் டிக்.. 

வண்டி கிளம்பாமல் சண்டித்தனம் செய்தது.

திரும்பவும் ஸ்டார்ட்செய்ய மீண்டும் டுர்..டுர் கிர்க்..கிர்க்..

கிளம்ப மறுத்தது.

என்னாச்சுண்ணே..பின்னாலிருந்து கத்தினார்கள் போதை ஆசாமிகள்.

தினேஷ்க்குப் புரிந்து போயிற்று வண்டி இப்போதைக்குக் கிளம்பா தென்று.

உடலின் சக்தியைத்திரட்டி லாரி அருகே வந்து டீசல் டேங்க் அருகே வந்தான்.

சத்தமின்றி டேங்க்கின் முடியைக்கழற்றினான்..

பேன்ட் பாக்கெட்டிலிருந்து கோவிலில் விளக்கேற்ற வீட்டிலிருந்து எடுத்துவந்த ஹோம்லைட் தீப்பெட்டியை எடுத்தான்.

தளும்பத்தளும்ப டேங்க்கில் டீசல் இருந்தது.

தீப்பெட்டியைத்திறந்து ஒருகுச்சியை உரசி பற்றவைத்தான்.

அந்த எரியும் குச்சியிலேயே மேலும் நான்கு குச்சிகளைப் பற்ற வைத்து டீசல் டேங்க்குகக்குள் போட்டான்.

கண்ணம்மா..நிலாகண்ணூ..கத்தினான்.

அடுத்த நொடி டமார் எனும் பெரும் சப்தத்துடன் லாரி பத்தடி உயரத்துக்கு மேலே எழும்பி கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.

தினேஷ் தூக்கி எறியப் பட்டான்.

காலை.அல்லோலகல் லோலப்பட்டது அந்த அரசு மருத்துவமனை.

டிவியைத்திறந்தாலே ஃப்ளாஷ் நியூஸ்..முக்கிய செய்தி..ப்ரேக்கிங் நியூஸ் என்று விதவிதமான பெயரில் இந்த செய்தி சொல்லப்பட்டது..காட்டப் பட்டது.

குத்துயிரும் குலையுயிரு மாய் மருத்துவமனையில் கிடந்தான் தினேஷ்.

அவனின் கடைசி மரண வாக்குமூலத்திற்காக..அவன் கட்டிலருகே நாற்காலியில் காத்துக்கிடந்தார் காவல்துறை அதிகாரி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு லேசாய் அப்போதுதான் அசைவு தெரிந்தது தினேஷின் உடலில்.

பரபரப்பானார் போலீஸ் அதிகாரி.

கண்களைத்திறந்தான் தினேஷ்.அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரியும் என்பதுபோல தெளிவாய் இருந்தான்.

காவல்துறை அதிகாரி கடமையைச்செய்ய முனைந்தார்.

அவர்கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொன்னான்.

மிஸ்டர் தினேஷ்..அந்த லாரியில ஒங்க மனைவி இருக்காங்கன்னு தெரிஞ்சும் ஏ லாரிக்குத் தீ வெச்சீங்க? மனைவியும் இறந்துடுவாங்கனு தோணல?..

தோணிச்சு..ஆனா வேற வழி தெரியல..அந்த பொறுக் கிங்க ஆறுபேரு இருந்தாங்க.. அவங்களோட சண்டை யெல்லாம் போட்டு எ நிலாவ காப்பாத்த முடியாதுன்னு தெரிஞ்சி போச்சு.

பயந்து பின்வாங்கினேன்னா..எ நிலாவ..எ கண்ணம்மாவ..ரோஜாப்புமாரியான அவங்கள திச்சயமா அந்தப்பாவிங்க கசக்கிப் போட்ருவாங்க..

எ நிலா எங்கைமட்டும் பட்ட ரோஜாவா இருக்கணும்.. வேறு எவனோட கையும் எ கண்ணம்மாவ தொடக் கூடாது.

அப்பிடிமட்டும் நடந்துட்டா..

ஒன்னு எ நிலா மனநோயாளியா ஆகிடுவா..

இல்லாட்டி தற்கொல பண்ணிப்பா.

அவ உயிரோடு இருந்தா இந்தப்பாழும் ஒலகம் அவள அனுதாபத்தோட பாக்கும்..

இல்லாட்டி அவதூறு பேசும்..

அபாண்டம் சொல்லும்..

எ நிலாவ யாரும் அனுதாபத்தோடயும் பாக்க வேண்டா..அபாண்டமும் பேச வேண்டா..

சிலகேடுகெட்ட ஆம்புளைங்க ஒன்ன ஆறுபேரு தொடலியா ஏழாவதா நானிருக்கக் கூடாதானு கேப்பா..

போலீஸும் கோர்ட்டும் அவங்கள கூப்ட்டுகூப்டு அலக்கழிக்கும்..விதவிதமா..அசிங்க அசிங்கமா கேள்விகேக்கும்.

இதையெல்லாம் எ அன்பு நிலா தாங்கமாட்டாங்க..

அதா அவங்கள..அவங்கள.. சாகடிச்சிட்டேன்.அவங்க செத்துப்போவாங்கன்னு தெரிஞ்சே லாரிக்கு நெருப்பு வெச்சேன்..

எ நிலா..எ மனைவி..எ தேவத காத்துல கரஞ்சிட்டாங்க..

ஆனா எந்தேவத எனக்காகக் காத்தா.. காத்துல காத்திருப்பாங்க..

தோ..தோ..நாம்போறே..காத்துல கரஞ்ச எ தேவதயப் பாக்க..சொல்லி முடித்த தினேஷின் கண்கள் நிரந்தர மாய் மூடிக்கொண்டன.

(முடிந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *