காய்ந்த மரம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 7,789
வயதான கிழவன் ஒருவர் இந்த கல்லூரிக்கு வருகை தந்தார். அந்த கல்லூரி வாயில் இருந்த பாதுகாவலர் அவரை வெளியே துரத்தினார். அந்த வாயில் வழியாகச் சென்ற முதல்வர் அவரைக் கண்டுக்கொள்ளாமல், காரில் கதவை மூடிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு தொடர்ந்து பணிபுரிந்து கொண்டு இருந்தப் பேச்சியம்மாள் வந்து பாதுகாவலரைத் தடுத்தார்.
அவள் அப்போது கூறுகிறாள்.
“இந்த முதியவர் இங்கு, இந்த கல்லூரி தொடங்கும் முன் இருந்த முதல்வர். இந்த கல்லூரி உருவாக இவர் தான் காரணமாக இருந்தவர். ஆசிரியராக இருந்து பின் இதே கல்லூரிக்கு முதல்வர் ஆனவர். என்று அவள் கூறியதும் பாதுகாவலன் வியப்பில் ஆழ்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பிறகு அவரை உள்ளே விட்டார்.
பேச்சியம்மாள், “ஐயா நீங்கள் நலமாக இருக்கிறார்களா? இப்போது எங்கு இருக்கீங்க? என்று பேச்சியம்மாள் வினாவினாள்.
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கம்மா?, நீ இன்னும் இங்கு தா வேலப் பாக்கீரியா? நா இந்த வழியா வந்த, அப்படியே நான் வாழ்ந்த கல்லூரி எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலம்மன்னு வந்தேன். என்று அந்த பெரியவர் கூறினார்.
(இப்படியே அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டு செல்லும் போது அங்கு அவர் கண்ட காட்சிகள் முதியவரை வியப்பில் ஆழ்த்தியது.)
கல்லூரி புதிய கட்டிடங்களாக இருந்தன. விளையாட்டு அரங்கம் புதிதாக மாறி இருந்தது. தனித் தனி விளையாட்டு மைதானங்கள் இருந்தது. கணிப்பொறி அறைகள் நவீனமாக இருந்தது. மாணவர்கள் அனைவரும் புதிதாக இருந்தனர். ஆசிரியர்களும் மாறி விட்டனர். ஒவ்வொரு துறைக்கும் தனித் தனி அறைகள் ஆங்காங்கே இருந்தன.
இதை ஒவ்வொன்றாகப் பார்த்து வியந்தபடியே வந்து கொண்டு இருந்தார் முதியவர்.
“அனைத்தும் மாறி விட்டது, பேச்சியம்மா “மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்று கூறிகிறார் அந்த முதியவர்.
அங்கு அந்த கல்லூரியில் பழைய, இடிந்த கட்டிட வகுப்பிற்க்குள் சென்றார் அந்த முதியவர். அங்கிருந்த கரும்பலகையில், ஆஅ என்றும், தமிழ் இலக்கியம் என்று பாதி அழிந்து, தெரிந்தும் தெரியாமலும் இருந்தது. அதை பார்த்து அவர் கண்களில் கண்ணீர் சிறிது வர, அவர் கையெழுத்து இன்னும் அழியாமல் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தார். அதைப் பார்த்ததும் அவர் பழைய நினைவில் மூழ்கினார்.
மாணவர்கள் தீயச் செயலைத் திருத்துவதும், வகுப்பில் சிரிப்பு சத்தமும், கலகலப்பான பாடமும், ஆண், பெண் ஒற்றுமையாகவும், சாதி, மத,இன வேறுபாடின்றி சக மாணவர்கள் ஒற்றுமையும், மாலை வகுப்புகள் சிறப்பாகவும், சிறந்த அறங்களும், விளையாட்டுகளும் இருந்த கல்லூரி இப்போது நவீன உலகிற்கு ஏற்றவாறு மாறி இருந்தது. அதை எண்ணிப்பார்த்தார்.
விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வருகையில் ஓரத்தில் காய்ந்த மரம் இருந்தது. அதில் பழம் பழுத்து அழுகி கீழே விழுந்து இருந்ததையும் பார்த்தார்.
அங்கே சென்று அந்த மரத்தைப் பார்த்து சுற்றி வந்து கிழே அமர்ந்தார்.
அது அவரும் அவர்கள் மாணவர்களும் வைத்து வளர்த்த மரம். அதில் இருந்த கிறுக்கலைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.
பேச்சியம்மாள், “ஐயா இது காய்ந்த மரம் நிழல் இல்லை” என்றாள்.
முதியவரும், “நானும் காய்ந்த மரம் தான்” இருந்தும் பயன் இல்லை. என்றார்.
கரு: ஒவ்வொவரு ஆசிரியரும், மாணவரும் தான் படித்த கல்லூரிக்கோ அல்லது பள்ளிக்கோ சென்று இருந்தால்,இம்மாதிரியான நினைவுகள் இருப்பதைப் வெளிப்படுத்துவது தான் இந்த காய்ந்த மரம்.