காயலாங்கடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 99 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

பழையபேப்பர்லாம் இங்க வாங்கமாட்டாங்க தம்பி.. தெருத்தெருவாக குப்பை அள்ளும் ஒருவர் கூறினார் அந்த சிறுவனிடம். அவர் வண்டியில் பிரித்து வைத்திருந்த சில பிளாஸ்டிக் பொருட்கள் கடைக்கு இடம் மாற இவர் கையில் காந்தி பொருந்திய நோட்டு. 

ஏம்ப்பா இன்னிக்கு சன்டே.. அரைநாள் தான். உங்க கூட்டாளிகளை சீக்கிரம் அனுப்பு.. அப்பறம் உங்க கடைய மூடிடுவாங்க சீக்கிரமா இப்பெல்லாம் என்றார் கடைக்காரர் குப்பை வண்டிக்காரனிடம்.

களாம்பாக்கத்தில் இருக்கும் இந்த காயலாங்கடையின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அப்பகுதியில் தெருத் தெருவாக குப்பை அள்ளும் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் தான்.

ஒருநாள்…

அது களாம்பாக்கம் காவல் நிலையம்.. காயலாங்கடை உரிமையாளர் பீர் முகம்மது வெளியில் பென்ச்சில் அமர்ந்திருக்கும் வேளையில்  இன்ஸ்பெக்டர் அறையில் இருந்து வெளியில் வந்த இருவர்.. சார் உங்கள கூப்பிடறாரு இன்ஸ்பெக்டர் என்று கூறிவிட்டு சென்றனர். கடைகாரர் இடைமறித்து அவர்களிடம் கேட்டார். இன்ஸ்பெக்டர் எப்படி தங்கமானவரா என்று கேட்க.. 

அத ஏன் கேட்கரீங்க, எல்லாம் தலைகீழா மாறி இருக்கு.. எப்போ நம்மள எல்லாம் உட்கார வெச்சி பேசி இருக்காங்க. பொறுமையா கேட்கிறாரு. கான்ஸ்டபிள் தண்ணி கொண்டுவந்து தறாரு. இதோ பாருங்க C.S.R. காப்பி.. கையோட தந்துட்டாங்க. திரும்பி வரவேண்டாம்னு சொல்லி ஒரு டோல்ஃபிரீ நம்பர் தந்திருக்காங்க. அங்க கால்பண்ணி நம்ம CSR நம்பர தந்தா போதும்.  நம்ம கம்ப்ளைன்ட் எந்த ஸ்டேஜ்னு சொல்லி எப்போ முடியம்ங்கிற வரைக்கும் சொல்லிடுவாங்களாம். ஆச்சிரயமா இருக்கு இல்ல. காவல்துறை உங்கள் நண்பன்னு பேருக்கு சொல்றாங்களோன்னு தானே நெனச்சிட்டிருந்தோம் இவ்வளோ  நாளா.. அது இப்போ உண்மைதான். போங்க போங்க உங்களுக்கும் நல்லதே நடக்கும்.

பீர் முகமதுவா.. வாங்க உக்காருங்க. என்ன ப்ராப்ளம் என்றார் இன்ஸ்பெக்டர். 

சார்.. வந்து.. வந்து.. 

பயப்படாம சொல்லுங்க பாய்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் டேபிளில் இரண்டு பொருட்களை எடுத்து வைத்தார் பீர் முகமது. பிறகு பாய் நடந்ததை கூற ரைட்டரை அழைத்து கம்ளைன்ட் எழுதி கையொப்பம் பெற்ற பின் CSR வழங்கினார். 

அதுசரி.. அந்த பையனுக்கு காசு அனுப்பின Gpay நம்பர குடுங்க என்று கேட்க.. 

கன்ட்ரோல் ரூமுக்கு அந்த நம்பரை அனுப்பி அந்த மொபைல் நம்பர் யாருக்கு தரப்பட்டிருக்கிறது என்ற விலாசத்தை வாங்கினார். வந்தவங்கள அடையாளம் காட்ரிங்களா. தெரியுமா ஆளு. ஞாபகம் இருக்கா எனக்கேட்க, தெரியும் என்றார் பீர். 

பைக்கை அந்த இடத்திற்கு சற்று முன்பாகவே நிறுத்திய பின்பு..  இன்ஸ்பெக்டர் பீர் காதுகளில் ஏதோ சொல்ல அவர் ஓக்கே என்று தம்ஸ்சப் காண்பித்துவிட்டு இவர்மட்டும் அந்த தெருவில் இறங்கி நடந்தார். 

என்ன பாய்.. இவ்வளோ தூரம். இங்க தான் வீடா.. என்று கேட்டனர் இரு வாலிபர்கள்.. இல்லேப்பா..நீங்க குடுத்த சரக்குக்கு நல்ல டிமான்ட்.. அதே மாதிரி நிறைய கிடைக்குமா. நல்ல ரேட் தரேன். இந்தா அட்வான்ஸ் பிடி ₹500 என்று திணிக்க.. 

டேய் மச்சான்.. தோ பாற்ரா பாய் அட்வான்லாம் குடுக்கிறாரு. கவலப்படாத பாய் எங்க டீம்ல இதேமாதிரி பொருள் தற்ரவங்க எல்லாருக்கும் உன் நம்பர குடுத்திடறேன். Gpay நம்பர்ல இருக்க போன் நம்பர் உன்னோடது தானே. 

ஆம்.என்றார் பாய்.. அடுத்த சில நாட்களில் இன்னும் பல நபர்கள் அதே போன்ற பொருளை தந்துவிட்டு பணத்தை Gpayயில் பெற்றனர் பீர் முகமதுவிடம் இருந்து.

என்ன நடந்திருக்கும் நண்பர்களே. யூகியுங்கள். கரெக்ட். போலீஸ் ஜீப்  எல்லாரையும் ரவுன்டப் செய்தது. இதேபோன்ற சமூகவிரோத செயலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அது சரி.. அது என்ன பொருள்? காயலாங்கடை நடத்தும் பீர் முகமதுக்கு என்ன சமூக அக்கறை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா.. 

இப்போதெல்லாம் அடிக்கடி வீடுகளில் ஏற்படும் மின்வெட்டு. எவ்வளவு குழந்தைகள், முதியோர்களுக்கு சொல்லொணாத் துயரம் இதனால். பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே தெரியும் அக்கஷ்டம். 

இது எதனால்? 

சில சமூக விரோதிகள் மின் வாரியத்தின் DB BOXஇல் இருக்கும் பியூஸ் கேரியர்களை அதிலிருக்கும் காப்பர் கம்பிகளுக்காக திருடி விற்கிறார்கள் தங்களது போதையை தீர்த்துக்கொள்வதற்காக. ஆம் இது நடக்கிறது என்பதை மறுபதற்கில்லை.  

பீர் முகமதுவும் பாதிக்கப் பட்டவர்தானே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *