காதல்
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 12,538
ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள்.
இங்க மட்டும் என்னா வாழுதாம், அதேதான் நீ என்னிக்கு வாழ்க்கைல வந்தியோ, அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்.
பி.பி எகிற குதித்தான் கணேசன்.
கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க, டிப்ன சாப்பிட்டுட்டு போங்க.
நீயாச்சு உன் டிபனுமாச்சு
விருட்டென வெளியேறினான்.
ஒங்களுக்கு அவ்வளுவன்னா, எனக்கு மட்டும்…மானம், ரோஷம் இருக்காதா ?
சடாரென்று கிளம்பிபோய் காருக்குள் ஏறினாள் மாலா.
சூட்டிங் ஸ்பாட்டில்…
“டார்லிங், உங்களைப் பார்த்தபிறகுதான், என் வாழ்க்கையே பிரகாசமாச்சு, இப்படியே என்னைக்கும் இருந்துடக்கூடாதா? – இது உறிரோயின்
“அன்பே, என்னோட பாதி நீதான், உன்னைக் காதலிக்க ஆரம்பித்த நாள்தான் பொன்னான நாள்” இது உறிரோவின் டையலாக்.
கட்…கட்…
வெல்டன் ஓரே ஷாட்டில் டேக்” டைரக்டர் கைக்குலுக்கி வழியனுப்பினார்.
உறிரோ கணேசனும், உறிரோயின் மாலாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டு தத்தம் கார்களில் பயணித்து வீட்டுக்கு போனார்கள்.
அந்த வீடு “காலையில் சண்டை போட்ட அதே வீடுதான்”
– 8-2-16