கள்ளப் புருசன்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு வெவசாயி இருந்தர். அந்த ஊர்ல பெரும் பஞ்சம் வந்திருச்சு: தோட்டந் தொற வெல்லாம் தண்ணியில்லாம சும்மா கெடக்குது: ஒருநா தேவையில, அந்த ஊர்ல நல்ல மழ பெய்யவும், சும்மா தருசா கெடக்குற நெலத்ல, ஏதாவது வெதைக்கலாண்ட்டு; அப்பக் கம்புதான் அதிகமா வெதப்பாங்க. கம்பு வாங்கப் போறர்: அப்ப-.
பக்கத்து ஊர்ல, ஒரு கோனாரு இருந்தாரு. அவருக்கு நெறயா ஆடு மாடுங்க. அந்தக் கோனாரு வீட்லதான் கம்பு இருக்குது. அங்க போயி, கம்பு கேட்டாரு. அப்ப, அவரு சொன்னாரு, இப்ப நான் கெடைக்குப் (கிடை) போறேன். வீட்ல, எம் பொண்டாட்டி இருக்கா. அவகிட்டப் போயி, கேளு, போடுவா. வாங்கிட்டுப் போயி, காலா காலத்ல வெதப்பா-ண்டு சொல்லிட்டு கோனாரு கெடைக்குப் போயிட்டாரு.
அப்ப, வீட்டுக்குப் போறா. போயி, ஐயா, கம்பு போடச் சொன்னாருண்டு சொல்றா. அவளும் கம்பு எடுத்துப் போட்டா. வாங்கி வெளியேறவும், நல்ல மழ புடுச்சுக்கிருச்சு. பொழுதும் வி ழுந்திருச்சு. அப்ப, இவனால வீட்டுக்குப் போக முடியல. அப்ப, இண்ணைக்கிப் படுத்துக் கெடந்துட்டு, விடியவும் போண்டு சொன்னா. சரித்தாண்ட்டு, திண்ணயில படுத்துக்கிட்டா.
அந்தக் கோனாரு பொண்டாட்டி, ஒரு கள்ளப் புருசன வச்சிருந்திருக்கா. புருச் கெடைக்குப் போகவும், அவ் வந்து, இவளோட படுத்துகிறது. அண்ணக்கிண்டு, அந்தச் சமயத்ல வீட்டுக்குள்ள வந்திட்டா, வரவும், எங்க? நாங் கேட்ட வெள்ளிக் கொலுசுண்டு கேக்குறா, இந்தா பாருண்டு, கொலுசக் குடுத்தா. அவ, அதக் கையில வாங்காம, அந்த மேச்சட்டிக்குக் கீச்சட்டில் வச்சிருங்கண்டு சொல்றா. அவ, அப்டிச் சொல்லவும், வச்சிட்டுப்போயி படுத்துக்கிட்டா.
அந்நேரத்ல ஒரு கோழியப் புடுச்சு அடிச்சு, கள்ளப் புருசனுக்குப் கொழம்பு காச்சுறா. கொழம்புக்கு வேண்டிய மஞ்ச ச மொளகா எல்லாத்தையும் சேத்து அரைக்க மாட்டாம, ஓரல்ல போட்டு இடிக்கிறா. இவ, செய்யுற எல்லாத்தயும் படுத்துக்கிட்டே பாத்துக்கிட்டிருக்கா, யாரு? இந்தக் கம்பு வாங்க வந்தவ். கம்பங் கஞ்சி குடிச்சதுனால, நல்லா வகுறு பொறுமி, வகுத்தால் போறதுக்கு ரெடியா இருக்கு இவனுக்கு. பேலுறதுக்கு வேற எடங் கெடைக்கல. அந்தச் சமயத்ல மறந்த பொருள எடுத்திட்டு வர, வீட்டுக்குள்ள போயிட்டா. போகவும், பையா எந்திருச்சு வந்து, ஒரல்ல ஒக்காந்து, தடதடண்டு கழிஞ்சா. ஓரலு நெறஞ்சு போச்சு. எந்திருச்சு வந்து, படுத்த எடத்ல படுத்துக்கிட்டர் வீட்டுக்குள்ள இருந்து, இவ வந்தா. எல்லாத்தையும் சேத்து நல்லா சத்சத்திண்டு இடுச்சுப் போட்டு, கொழம்ப எரக்கிட்டா. எரக்கி, கள்ளப் புருசன ஒக்கார வச்சுப் போட்டா. போடவும், சாப்பிட்டுப் பாத்தா. பாத்திட்டு, என்னா ஒரு வடியா மணக்குதுண்டு சொல்றா. மணக்கும் மணக்கும் தங்கம் ஏ….ண்டா, நா கெழவி யாகிப் போனேல்ல, அதுனால வடியா மணக்குதோண்டு மோடி (ஊடல்) பண்ணுறா, அவனும், விக்கந்தொக்கமா பூராத்தையும் சாப்பிட்டுட்டா.
சாப்ட்டுப் படுத்துக் கெடக்கையில, மழ பேஞ்சதுனால கெடைக்குக் காவலுக்குப் போன கோனாரு வர்றாரு. வந்து, கதவாலத் தட்டவும், கள்ளப் புருசனக் கொண்டு போயி, பரண்ல ஏத்தி ஒக்கார வச்சிட்டு வந்து, கதவால் தொறந்து விடுறா. அப்ப – கோனாரு, தோள்ல வச்சிருந்த தடியோட வீட்டுக்குள்ள வர்ராரு. தடி, வாசலத் தட்டிக்கிருச்சு. வீட்டுக்குள்ள வர முடியல. வர முடியுமா? முடியாது. முடியல! போயி -, ஆசாரியக் கூட்டிக்கிட்டு வந்தா. ஆசாரி, சுத்தியலோட வந்து பாத்தா. கோனாரு, வாசப்படில தடி தட்டி நிக்கிறாரு. மொளில ரெண்டு போடு சுத்தியலக் கொண்டு போட்டாரோ இல்லையோ! பொடனில வச்சிருந்த தடியக் கீழ விட்டுட்டாரு. தடி கீழ விழுகவும், கோனாரு, ஈசியா வீட்டுக்குள்ளார போயிட்டாரு.
கம்பு வாங்க ஒரு ஆளு வந்தாரே, அவருக்கு கம்பு போட்டியாண்டு கோனாரு பொண்டாட்டிகிட்டக் கேட்டாரு போட்டே. மழ வந்திருச்சு, திண்ணயில படுத்துக் கெடக்காருண்டு சொன்னா. அவர எழுப்பு, அவருக்கு இம்புட்டு சோத்த ஊத்து, சாப்பிட்டுட்டுப் போயி, காலாகாலத்ல வெதைக்கட்டும்ண்டு சொல்றாரு கோனாரு.
இவனும் எந்திருச்சுப் போனர். சோத்தச் சாப்பிட்டர். மேச்சட்டிக்குக் – கீச்சட்டியில கம்பு இருக்கு. நாங் கொண்ட்டு வந்ததெல்லாம் அதுல இருக்கு, அத எடுத்துக் குடுங்கய்யா, நா போறேண்டு, இவ் சொல்றா. கோனாரு எடுக்கப் போகயில, கம்பு, கொலுசு பணமெல்லாம் அதுல இருக்கு. இவளுக்குப் பேச முடியல. பேசாம நிக்கிறார்! ஏ(ன்) பேச முடியல? இதுகெல்லாம் கள்ளப் புருசங் குடுத்தது. அதுனால புருசங்கிட்டச் சொல்ல முடியல.
கம்பச் சாக்குல போட்டா. சாக்கக் கட்ட கயிறு கேட்டர். பரண்மேல நாறு இருக்கு, எடுத்துக் கட்டச் சொல்லிட்டு, கோனாரு வாயி கழுவப் போயிட்டாரு. அப்ப, பரண்மேல ஏறுறா. ஏண்டா? அவனயும் காட்டிக் குடுக்கணுமில்ல. இவ் பரண்ல, இவங் கையப் புடுச்சுக்கிட்டு என்னயக் காட்டிக் குடுத்துறாதேண்டு கெஞ்சுறா. கையப் புடிக்கவும், நாறு எடுக்க விடாமத் தடுப்பது போல, இவனுக்குத் தெரிஞ்சுச்சு. தெரியவும் நாற, ஏண்டா! எடுக்க விடமாட்டேங்குறண்டு சத்தம் போடுறர். அப்ப கோனாரு, மேல பாத்து, யாரு கூட அங்க பேசிக்கிட்டிருக்கே. மேல யாரு இருக்குறதுண்டு, மேல ஏறிப் பாத்தாரு. இவ (கள்ளப் புருசன்) ஒக்காந்நிதருக்கா. கீழ இழுத்துட்டு வந்து, அடி-அடிண்டு அடுச்சு, போடு போடுண்டு போட்டு, வெளிய வெரட்டி விட்டாங்களாம், அண்ணக்கிருந்து அவ், அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பாக்குறதில்லயாம். இந்தப் பொம்பளைங்கள நம்பக் கூடாது. முந்தானயில் கூடக் கள்ளப் புருசன வச்சிருப்பாளுங்க.
கோனாரு, அவள் ஒண்ணுஞ் செய்யல. எல்லாக்கயம் காட்டிக் குடுத்திட்டு, இவ், கம்ப வாங்கிக்கிட்டு, வெதக்கப் போயிட்டா. பெறகு, ஒழுங்கா கோனாருகிட்ட இருந்து பொளச்சாளாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.