கதை சொல்கிறேன்





ரஷ்ய நாவல் ஒன்று
“சிகப்பு காதல்” என்ற ரஷ்ய நாவல் ஒன்றை படித்தேன். எழுதியவர் “அலெக்சாண்டிரா கொலோண்டை” அதனை தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தவர் சொ.பிரபாகரன்.
ஆசிரியர் குறிப்பு : 1878ல் ஜெனரலுக்கு மகளாக பிறந்தார். 1893-96 காலகட்டங்களில் மார்க்சியம் பிரபலமடை ஆரம்பித்தது. அதற்கு “பிளெக்னேவ்”பிரபலமாய் இருந்தார்.அந்த காலகட்ட்த்தில் லெனின் இலக்கிய உலகம் மிகவும் புகழ் பெற்று இருந்தார்..

அலெக்சாண்டிரா சோவியத் யூனியன் உருவாவதற்கு ஒரு காரணியாகவும் இருந்திருக்கிறார். 1921 காலகட்டங்களில் பெண்களுக்கு விழிப்புனர்ச்சியும், ஆண்களுக்கு நிகரான ஊதியத்தையும் போராடி பெற்று தந்தார். சோவியத் யூனியனில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அப்பொழுது தனியாக பெண் அமைச்சராக பொறுப்பு ஏற்றவர் இவர் என்ற பெருமையும் உண்டு. அதன் பின் பல்வேறு காலகட்டங்களில் நார்வே போன்ற நாடுகளில் தூதுவராக இருந்தார்
இலக்கிய உலகில் இவரது பாணி என்பது சோவியத் வள்ர்ச்சி, பொருளாதாரம், சமூகம் இவைகளை பற்றி இல்லாமல் பெண்கள், அவர்கள் பற்றிய விழிப்புனர்வு, அவர்களின் போராட்டம் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியிருந்தார். இந்த “சிகப்பு காதல்”என்னும் நாவல் சமீபத்தில் படித்தேன். அதை பற்றிய கதை சுருக்கம் தந்துள்ளேன், சுலபமாக புரியும் வண்ணம் தமிழ் பெயர் மற்றும் நம் கலாச்சாரங்களாக கொடுத்துள்ளேன். எழுத்தாளர் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டவன், கதையின் கருத்தையும், அதன் ந்டையையும் ஞாபகத்தில் வைத்து எழுதியுள்ளேன். இந்த நாவலை ஏற்கனவே படித்தவர்கள் என்னை மன்னித்து, ரஷ்ய இலக்கிய உலகிற்கு பாவம் செய்தவனாக நினைக்காமல் இந்த கதை சுருக்கத்தை படித்து விடுங்கள்.
கதை சுருக்கம் : (இந்த கதை நடந்த கால கட்டம் 1920-30 என்று ஞாபகத்தில் வைத்து கதையை வாசியுங்கள்)
சென்னை செல்லும் இரயிலில் இரண்டாம் வகுப்பில் உட்கார்ந்திருந்த லட்சுமிக்கு கண்கள் எரிந்தன. நீண்ட தூர பிரயாணமாக இருக்கிறது, சலித்துக் கொண்டாலும், மனதுக்குள் மாதவனை நினைக்கும்பொழுது அவனின் திறமையும் பொறுமையும் யாருக்கும் வராது. பெருமையுடன் நினைத்துக்கொண்டாள்.
ஆயிற்று இன்னும் ஐந்து மணி நேரம்தான் மாலை நாலு மணிக்கு போய் இறங்கி விட்லாம், மாதவனை பார்த்து விடலாம். அவன் எழுதியிருந்த காகிதத்தை ஒரு முறை படிக்க வேண்டும் போல் இருந்தது, கைப்பையின் ஓரத்தில் மடித்து வைத்திருந்ததை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
“என் பிரியமான தோழியும், மனைவியுமான லட்சுமி உன்னை எப்பொழுது காண்பேன் என்று எதிர்பார்த்து இருக்கிறேன். என்னதான் நீ நமது இயக்கத்தில ஈடுபட்டு பெண்கள் விழிப்புணர்வு சார்பாக அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலும், உன் கணவனாகிய என்னையும் கொஞ்சம் நினைத்துப்பார். நமக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன். மூன்று மாதம் ஒன்றாய் இருந்திருப்போமா? அவ்வளவுதான், அதற்குள் நாம் சார்ந்திருந்த இயக்கம் நம்மை பிரித்து நீ ஒரு பிரிவுக்கும், என்னை ஒரு பிரிவுக்கும் அனுப்பி வைத்து விட்ட்து. இங்கு உன்னுடைய சேவைகளை பற்றித்தான் பிரபலமாய் இருக்கிறது, இங்குள்ள அனைவருக்கும் உன் பெருமை பற்றி தெரிகிறது. என்னை பற்றி உனக்கும் ஒரு சில தகவல்கள் வரலாம், தய்வு செய்து அதை நம்பாதே ! நான் நமது இயக்கத்தால் நடைபெறும் ஒரு தொழிற்சாலையின் தலைவன் என்ற முறையில் தொழிலாளர்களிடம் கடுமையாக ந்டந்து கொண்டிருக்கலாம், அந்த பொறாமை காரணமாக என்னை பற்றி இங்குள்ளவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்வார்கள். நான் இப்பொழுது உன்னை வேண்டுவது என்னவென்றால் தய்வு செய்து உன் கணவனான என்னை காண வா. உனது பொறுப்புக்கள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வா.
கடித்ததை படித்தவள் ஏன் மாதவனை பற்றி இயக்கத்தில் உள்ளவர்களே குறை கூறுகிறார்கள். அதனால் அவன் மனம் நொந்து என்னை அழைத்துள்ளான். இதை நினைக்கும்போது அவளுக்கு தன்னையும் மீறி பெருமை வந்து மனதில் நின்றது. உண்மைதான் அவனை விட எனக்கு எது பெரிது.
தான் வசித்து வந்த அறையை தோழி ஸ்மிதாவுக்கு அளித்தாள். அதுவரை கண்டிப்பான, அதே நேரத்தில் அவர்களுக்காக போராடும் ஒரு பெண்ணாய் இருந்து, கவனித்து கொண்டிருந்த ஏழை குடும்பங்களை விட்டு தான் தன் கணவ்னிடம் செல்லப்போவதாக அறிவித்தாள். செய்தி கேள்விப்பட்டதும், அங்குள்ள எல்லா குடும்பங்களிலிருந்தும் ஆண் பெண் குழந்தைகளுடன் வந்து கண்ணீர் விட்டனர். நீ போய் விட்டால் எங்களை யார் காப்பாற்றுவது? இந்த குடிகார கணவன் நீ இருக்கும் பயத்தில் என்னை ஒழுங்காக நட்த்தியவன் அடுத்து என்ன செய்வானோ ? இப்படி சொல்லி ஒரு சில பெண்களும், ஐயோ நீ எங்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுத்து எங்களை போல அயிரக்கணக்கான பெண்களை வேலைக்கு சேர்த்து விட்டாய், ஆணுக்கு இணையாக ஊதியத்தை இயக்கத்துடன் போராடி பெற்றுக்கொடுத்தாய், இப்பொழுது திடீரென்று போகிறேன் என்கிறாயே?
அவர்களிடம் சிரித்து கவலைப்படாதீர்கள், என்னை விட ஒரு நல்ல பெண்ணை இயக்கம் சீக்கிரம் அனுப்பி வைக்கும்.
மாலை ஐந்து மணியாகிவிட்டது, இரயில் நிலையத்தை அடைய, இறங்கியவள் மாதவனை காணாமல் ஏமாற்றமானாள். ஆனால் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் இவள் வருகைக்காக காத்திருந்தது மனதுக்கு மெல்லிய மகிழ்ச்சியை கொடுத்தது. அவர்கள் அவளுக்கு முகமன் கூறி அவளுடன் ரிக்க்ஷாவில் எறி கணவன் இருக்குமிடத்துக்கு சென்றனர.
இதுவா தன் கணவன் வசிக்கும் வீடு ஆச்சர்யப்பட்டாள், ஒரு சேவை இயக்கத்தை சேர்ந்த கணவன், இயக்கத்தால் நட்த்தப்பட்ட தொழிற்சாலையின் தலைவர் என்றாலும் இவ்வளவு வசதியான வீட்டில் இருந்தால் கண்டிப்பாய் தவறாகத்தான் பேசுவார்கள். மனதுக்குள் நினைத்துக்கொண்டவள் கதவை தட்டினாள். அதற்குள் அவள் பார்வை ஏதேச்சையாக ஜன்னல் பக்கம் நோக்க ஒரு பெண் உருவம் சட்டென அங்கிருந்து நகர்ந்து செல்வது தெரிந்தது. மனம் ஒரு நிமிடம் நின்று பின் நகர்ந்தது. பத்து நிமிட்ங்கள் கழித்தே கதவு திறக்கப்பட்ட்து. கணவன் இவளை கண்டவுடன் லட்சுமி வா, வா என்று அவளது தோளை பற்றி அழைத்து சென்றான்.
உள்ளே நர்ஸ் உடையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். இவள் கேள்விக்குறியுடன் கணவனை பார்க்க, என் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நண்பன் கேட்காமல் இவளை அனுப்பி பார்க்க சொல்லி உள்ளான். இயல்பாய் சொன்னாலும் லட்சுமியின் மனதுக்குள் சின்ன உறுத்தல். அதற்குள் ஒரு வயதான மாது உள்ளே வர இவன் “இவங்கதான் என் மனைவி” இந்த வீட்டுக்கு எஜமானி, அறிமுகப்படுத்தினான். இவளுக்கு கூச்சமாக இருந்தது. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, அந்த மாதுவுக்கு வணக்கம் சொன்னாள். இவன் காதருகில் வந்து வேலைக்காரர்களிடம் அப்படி நடந்து கொள்ளாதே, அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது இது என்ன பழக்கம், நம் இயக்கத்தில் முதலாளி, தொழிலாளி என்றெல்லாம் பாகு பாடு பார்ப்பதில்லையே ? ஆனால் அவனிடம் எதுவும் சொல்லவில்லை.
இரவு உணவு கொஞ்சமாய் எடுத்துக்கொண்டவள், தூக்கம் வருகிறது என்றாள். இவன் படுக்கை அறையை காண்பித்து நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்திருப்பாய், போய் தூங்கு, உள்ளே வந்தவள் படுக்கையில் படுக்க போகுமுன் படுக்கையில் மல்லிகை பூவும், ஒரு சில இரத்த துளிகளுடன் கசங்கிய போர்வையுமாய் இருந்ததை பார்த்தவளுக்கு மனம் அப்ப்டியே துவண்டு விட்ட்து. மாதவனை கூப்பிட்டு ஏதோ கேட்க நினைத்தவ்ள் பெருமூச்சுடன் அப்படியே கீழேயே படுத்து விட்டாள். கண்களில் கண்ணீர்
அவளுக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இயக்கத்தில் ஒன்றாய் பணி புரிந்து கொண்டிருந்த மாதவன் அவளை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தான். அதுவரை திருமணம் பற்றி நினைக்காமல் பொது சேவை, இயக்கம் என்று உழன்று கொண்டிருந்த லட்சுமி இவனை மென்மையாக பார்த்து நாம் திருமண்ம் செய்து கொள்வது நமது சேவைக்கு இடைஞ்சலாகாதா? இல்லை, நான் உன்னுடைய பொது சேவையில் தலையிட மாட்டேன், இருந்தாலும் உன்னை
திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும், வெட்கத்துடன் தலை குனிந்தான்.
லட்சுமி நானும் ஒன்றை சொல்லிவிடுகிறேன், எனக்கு சிறு வய்திலேயே திருமணம் ஆகி விட்டது, ஓரிரு வருடங்கள் அவருடன் வாழ்ந்தும் இருக்கிறேன். நிமோனியா காய்ச்சல் வந்து ஒரு வாரத்தில் அவரை இழந்து நிர்க்கதியாகி அதன் பின் இந்த இயக்கத்தில் இணைந்து பொது சேவையை செய்து கொண்டிருக்கிறேன்.
புரிகிறது, அது நடந்து முடிந்த கதை, இப்பொழுது எனக்கு தேவை உன்னுடைய் சம்மதம் மட்டும்தான்…அதற்கு பின் இயக்கம் சார்பாக அவர்களுக்கு திருமணம் செய்விக்கப்பட்டு, இருவரும் மூன்று மாதங்களாக மகிழ்ச்சியை அனுபவித்தனர். அதன் பின் லட்சுமிக்கு கோயமுத்தூருக்கு பெண்கள் மட்டுமே பணி புரியும் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் வசிக்க நிலம் வாங்கி அங்கு அவர்களுக்கு வசிப்பிட்த்தை உருவாக்கி, ஒழுங்கு முறை படுத்தும் நிர்வாகத்துக்கு இவளை தலைமை பதவிக்கு இயக்கம் நியமித்தது. மாதவனை இயக்கத்தின் சார்பாக சென்னையில் நட்த்திக் கொண்டிருந்த தொழிற்சாலைக்கு மேலாளராக நியமித்தது
அதன் பின் இருவருக்கும் இடைப்பட்ட காலம் இத்தனை மாதங்கள் ஓடியிருக்கும்போது அவனிடம் இதை பற்றி என்ன பேசுவது? கண்ணில் நீர் வர அப்படியே உறங்கி விட்டாள்.
காலை அவளை எழுப்பிய மாதவன் லட்சுமி எதற்காக கீழே படுத்துறங்கினாய்? உடம்பு என்னத்துக்காகும்? பரிவுடன் கேட்டவனுக்கு ப்தில் சொல்லாமல் புன்னகை மட்டுமே அவளால் பூக்க முடிந்தது
காலை பத்து மணி இருக்கும் முன்னறையில் சத்தம் கேட்டு அங்கு வந்தவள் இயக்கத்தின் அதிகாரிகள் இவனிடம் ஏதோ சத்தமிட்டு பேசிக்கொண்டிருக்க இவனும் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்தான். சட்டென உள் நுழைந்த லட்சுமி “தோழரே” அவர்களுக்கு லட்சுமியை நன்கு அடையாளம் தெரிந்திருந்தது, இவளை கண்டவுடன் குரலை தாழ்த்திக்கொண்டனர். லட்சுமி நான் விசாரித்து தலைமையிடமும் உங்களிடமும் பேசுகிறேன், பணிவுடன் சொன்னாள். அவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நாங்கள் வருகிறோம், சொல்லிவிட்டு சென்றனர்.
மாதவன் இன்னும் கோபம் குறையாமல் இருந்தான், இவர்களுக்கு என் மேல் பொறாமை, நான் சிறப்பாக லாப நோக்கத்தில் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை, அதனால் என்னை பற்றி தாறுமாறாக புகார் சொல்லி இப்படி வந்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவனை சாந்தப்படுத்த, மெல்ல தோளை அணைத்தாள். அவன் சாந்தமாகி அவள் கைகளில் முகத்தை புதைத்தவன்.பார் இவர்கள் செய்வதை, இவர்களிடம் இருந்து காப்பாற்று, அவள் சரி என்று தலையசைத்தாள்.
இயக்க அலுவல்கத்துக்குள் சென்றவள் அங்கு இவளுடன் முன்னர் பணிபுரிந்த ஒரு சிலர் இருந்தனர். இவளிடம் அன்பாய் பேசினர். அவர்களின் தலைவராய் இருந்தவர் வா லட்சுமி” அவளை அழைத்து சென்று அங்குள்ள தோழர்களுக்கு
அறிமுகப்படுத்தி பேசினார். எல்லா அறிமுகங்களும் முடிந்த பின்னால் தன் கணவன் மேல் விழுந்த குற்றச்சாட்டைப்பற்றி அவள் கேட்டாள். அவர் முகம் சற்று இருளடைந்து, அவனை பொறுத்தவரை திற்மையானவன், புத்திசாலி இதனை இயக்கம் மறுக்கவில்லை, ஆனால் அவனால் இயக்கம் தரும் வருமானத்தில் இரு குடும்பத்தை எப்படி நட்த்த முடிகிறது? இவ்வளவு பெரிய வீட்டிற்கு வாடகை, வேலையாட்கள் சம்பளம், இவைகள்தான் அவர்களுக்குள் எழும் கேள்வி. அவளால் “இரு குடும்பம்” என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை சட்டென்று உணரமுடியவில்லை
மாலை அவள் வீடு திரும்பும்பொழுது மாதவன் காத்திருந்தான். என்ன சொன்னார்கள் என்னை பற்றி , நீதான் என்னை காப்பாற்ற வேண்டும், நான் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன், அணைத்துக்கொண்டு உள்ளே சென்றான். இரு குடும்பம் என்பதை பற்றி இவள் சொன்னபோது “அவர்களுக்கு பொறாமை” வேண்டுமானால் அவர்கள் எனது கணக்கு வழக்குகளை சரி பார்க்கட்டும், ஏதேனும் தவறு இருந்தால் நான் குற்றம் செய்தவன் என்று ஒத்துக்கொள்கிறேன்.
ஒரு வாரம் ஓடியிருந்தது. லட்சுமி எங்கும் செல்லவில்லை, மாதவன் பணிக்கு செல்வான், இரவு அவளுடன் தங்கி உறவாடி, காலையில் எழுந்து கிலம்பி விடுவான். லட்சுமிக்கு முன்னர் இங்கு வருமுன் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. இது என்ன வாழ்க்கை, அதுவும் தன்னைப்போல் இயக்கம் சார்பாய் ஓடிக்கொண்டிருந்தவள் இப்படி..நினைத்தவளுக்கு ஆயாசமாய் இருந்தது. அதுவும் மாலை மாதவன் வந்தவுடன் இயக்கம் சம்பந்தமில்லாதவர்கள் வீட்டுக்கு வந்து அவர்களுடன் “பார்ட்டி” வைத்து கொண்டாடிக்கொண்டிருந்தான். இதற்கு எப்படி பணம் வருகிறது? இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மனம் மட்டும் அவளது பழைய வாழ்க்கையை நினைத்து ஏங்கினாலும், மாதவன் மேல் கொண்ட காதலால், அவனையே கட்டுண்டு கிடக்கவும் விரும்பினாள். அவளுக்கும் புரிந்தது, இது நம்மை அடிமைப்படுத்தி விடும் என்று, ஆனால் அவளால் அவளால் இதிலிருந்து வெளிவரமுடியுமா என்பது சந்தேகமாக இருந்த்து.
இடைப்பட்ட நாட்களில் மாதவன் வீட்டுக்கு வருவதையும் குறைத்துக்கொண்டான் திடீரென்று ஒரு நாள் உள்ளே வந்தவன் லட்சுமி இந்தா என்று ஒரு தங்க செயின் ஒன்றை அளித்தான். திடுக்கிட்டு போனாள், “தங்க செயின்” வாங்க உங்களுக்கு வசதி வந்த்து எப்படி? அவளின் கேள்விக்கு சுள்ளென்று கோபத்தில் எரிந்து விழுந்தான், இங்க பார் இந்த இயக்கத்தை கட்டிகிட்டு அழறதை நிறுத்து. அவளிடம் சொல்லிவிட்டு விர்ரென்று கிளம்பி விட்டான். மறு நாள் அவள் ஏதேச்சையாய் முன்னறையின் வைத்திருந்த அலமாரியை திறக்க முயல அதில் ஒரு பொட்டலம் மடித்து வைக்கப்பட்டிருந்த்து, திறந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். இவளுக்கு அவன் கொடுத்த தங்க செயின் போலவே அச்சு அசலாய். இவளுக்கு “இரண்டு குடும்பம்” என்பது சட்டென்று ஞாபக்ம் வர அதிச்சியாய் அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று உட்கார்ந்தாள்.
தோழி லிசா வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த லட்சுமியிடம் “நாங்கள் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறோம், அவனுக்கு “இரு குடும்பம்” என்று, நீதான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய், இல்லை புரிந்தும் அவன் மேல் இருக்கும் காதலால் அதை கண்டு கொள்வதில்லை. என்னை பொறுத்தவரை
இவனை இயக்கத்தை விட்டு அனுப்பி விடுவது நல்லது. அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் அவள் லிசாவின் வீட்டிலேயே தங்குவதாக முடிவு செய்தாள். மறு நாள் அவளுக்கு ஒரு கடிதம் வந்தது, அன்பே ஏன் கோபித்து கொண்டு சென்று விட்டாய், நான் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன், வீட்டிற்கு வந்து விடு. கடிதத்தை படித்ததும் மீண்டும் அவள் மனதுக்குள் தன் கணவன் உயிரையே வைத்திருக்கிறான், நினைத்த அவள் மனது நிறைந்த சந்தோஷத்துடன் கடிதம் கொண்டு வந்த ஆளிடம் நான் இல்லாத அன்று இரவு அவர் எப்படி இருந்தார் என்று கேட்டாள். அதை ஏன் கேட்கிறீர்கள், யாருக்கோ போன் செய்தார், ஏன் இப்படி வதைக்கிறாய் என்று கத்திக்கொண்டிருந்தார், பிறகு இவளும் கோபித்துக்கொண்டு போய் விட்டாள்..புலம்பிக்கொண்டே இருந்தார்..
சுள்ளென்று கோபம் வந்த்து. அப்படியானால் தான் கோபித்து கொண்டு இங்கு வந்ததை அந்த பெண்ணிடம் பேசி இருக்கிறார், கோபம் தலை தூக்க வர முடியாது என்று சொல், அவனை அனுப்பி விட்டாள். மறு நாள் அதே ஆள் வேகமாக ஓடி வந்து அம்மா ஐயா மருந்து குடிச்சு வீட்டுல படுக்க வைச்சிருக்கறாங்க. இவளுக்கு திக்கென்றது, தன் பிரிவு தாங்காமல் மருந்தை குடித்து விட்டானா? வீட்டை நோக்கி ஓடினாள். .
வீட்டில் மருத்துவரும், நர்ஸும் இவளை விரோத்த்துடன் பார்க்க, இவள் அருகில் சென்று நின்றாள். நீங்கதான் இவர் “வொய்ப்பா” கவனிக்காம இப்படித்தான் விடறதா? சொல்லிக்கொண்டே இப்ப உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, இரண்டு மூணு நாள் பத்தியமா மருந்து கொடுங்க, சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.
கட்டிலின் அருகில் சென்று மாதவன், அவன் முடியை விரல்களால் அலைந்து, எனக்காக உயிரை விட கூட துணிஞ்சிட்டீங்களா? அப்படியே அவனை அணைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.
மூன்று நாட்கள் இவளது கவனிப்பு அவனை சீக்கிரமே எழுந்து உட்கார வைத்து விட்ட்து, வந்து விட்டாயா? ஏன் என்னை கொல்கிறாய், நான் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன், உருக்கமாய் சொன்னவன், சரி இனி மேல் உன்னிடம் மறைப்பதில் எந்த பிரயோசனமுமில்ல, நான் ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தேன், அவளுக்கு எல்லா உதவிகளும் செய்தேன், எங்கோ பார்த்து சொன்னவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஒரு நிமிடம் அதிர்ச்சியாய் இருந்தாலும் செய்த தவறுக்கு தன்னிடம் மன்னிப்பு கேட்கிறான் என்று நினைத்தாள் லட்சுமி !. ஆனால் அடுத்து அவன் சொன்ன வார்த்தை !..
அவள் பெயர் காஞ்சனா, மிக மிக நல்ல பெண், அவளுக்கு யாருமே இல்லை, என்னைவிட்டால் அவளுக்கு வேறு கதி இல்லை, அப்படிப்பட்ட அவள் சற்று குலுங்கியவன், ஒரு முறை உனக்காக “அபர்ர்ஷன்” கூட செய்து கொண்டாள். சட்டப்படி அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காததால் அவள் அந்த காரியத்தை செய்ய வேண்டியதாயிற்று. அது மட்டுமில்லை அவளுக்கு முதன் முதலில் கணவனாக அமைந்தவன் நான், ஆனால் சட்ட அங்கீகாரம் கிடைக்காததால் !…அழுதான்.
லட்சுமியின் உள்ளம் சுக்கு நூறாக போய்க்கொண்டிருந்தது, நான், நானாகவா இவனை திருமணம் செய்து கொள்ள சொன்னேன், எனக்கு முதலில் திருமணம் ஆகி இருந்தது இப்பொழுது என் குற்றம் என்கிறான். அப்படியே உட்கார்ந்தவள் சட்டென்று நான் வேண்டுமானால் போய் விடுகிறேன், அவளை இங்கு கூட்டி கொண்டு வந்து விடு, சொன்னவளை விழித்து பார்த்தவன் ஐயோ அப்படி நினைக்காதே, நான் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன், அந்த பெண் என்னை விட்டு விட்டு மூன்று நாட்களுக்கு முன்னால் மதுரை பக்கம் சென்று விட்டாள். இனி அவள் என்னை சந்திக்கவே போவதில்லையாம்.
அப்படியானால் !அப்படியானால்..! இவன் விஷம் குடித்த்து தனக்காக அல்லவா! அவளின் பிரிவு தாங்காமல் தான் விஷம் குடித்திருக்கிறான். நான் ஏன் இப்படி இவன் என் மீது அன்பு செலுத்துவான் என்று ஏமாந்து போகிறேன் ! அவளுடைய இதயம் ஓலமிட்ட்து, தோழி ‘லிசா’ சொன்னது ஞாபகம் வந்தது, நீ அவனையே சுற்றி வருகிறாய், அவன்தான் உலகம் என்று உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய், அவனின் பசப்பு வார்த்தைகளை நம்பி உன்னை நீ தாழ்த்திக்கொள்கிறாய்.
அவள் என்னை விட்டு போய்விட்டாள், இனி நான் உனக்குத்தான் சொந்தம், இனியாவது நாம் நமக்குள் சண்டையிடாமல் வாழ்ந்திருப்போம். அவன் சமாதானமாய் அவள் தோளை சுற்றி கை போட்டு பேசினான்.
மூன்று மாதங்கள் ஓடியிருந்த்து, இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும் அதில் அந்நியோன்யம் இருக்கவில்லை, அவனின் முகமும் சோபை இழந்து அடிக்கடி கோப்ப்பட்டான்.சீக்கிரமே பதவி உயர்வு கிடைத்து வேறோரிடம் செல்லப் போவதாக சொன்னான். தினமும் இரவு அவளுடன் தங்கினான்,
ஒரு நாள் லட்சுமி அவனை பார்ப்பதற்காக அவனது அலுவலகம் சென்றாள். அப்பொழுது அவனறையில் இல்லை, ஏதோ மீட்டிங்கில் இருப்பதாக சொன்னார்கள். அவன் நாற்காலிக்கு எதிரான நாற்காலியில் உட்கார்ந்திருந்தவள் அலுவலக உதவியாளர் அவனது தபால்களை கொண்டு வந்து டேபிளின் மேல் வைத்து விட்டு சென்றார்.
அவளுக்கும் ஏதாவது தபால் வந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த தபால்களை எடுத்து பார்க்க ஒரு கடிதம் வித்தியாசமாய் ! ஒரு கணம் மனம் கிடு கிடுவென நடுங்க அதை சட்டென்று தன் உள்ளாடைக்குள் மறைத்துக்கொண்டாள்.
வரும் வழியில் இருந்த ஒரு பூங்காவில் அந்த கடித்ததை கைகள் நடுங்க பிரித்து படித்தாள் “அன்புள்ளவருக்கு ! இந்த அபாக்கியவதி எழுதிக்கொள்வது. இப்பவும் தங்களை விட்டு விட்டு வந்து விட்ட காஞ்சனா எழுதுவது. இங்கு தெரிந்த உறவினர் வீட்டில் ஒரு வேலைக்காரியாய் இருந்து கொண்டிருக்கிறேன். இது வரை உங்களையே நம்பி வாழ்ந்து வந்திருந்த என்னை உங்கள் மனைவி என்றொருத்தி இருக்கிறாள் என்று மறைத்து என்னுடன் வாழ்ந்து உங்களது குழந்தையையும், வயிற்றில் சுமக்க விடாமல் ஆபரேஷன் செய்ய வைத்து இன்னும் என்ன கொடுமைகள் அனுபவிக்க போகிறேன் என்று தெரியவில்லை. எனக்கு பெற்றோர் கிடையாது, இங்கும் ஒரு அநாதையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன். என்னை வேலைக்காரியாய் வைத்திருக்கும் உறவுக்காரன் கூட என்னை எப்படியாவது மடக்கி விட துடித்துக்கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட அபாயகரமான சூழலுக்கு என்னை கொண்டு வந்து விட்ட்து நீங்கள் தானே ! உங்கள் மனைவியுடன் இந்த சமுதாயத்தில் வாழ என்னை பலிகடாவாக்கி விட்டீர்களே…கடிதம் நீண்டு கொண்டே போக.. படித்த லட்சுமியின் மனம்…சட்டென ஒரு முடிவு செய்து விட்டாள்.
துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த லட்சுமியை மாதவன் கேள்விக்குறியுடன் பார்க்க ! எனக்கு கோயமுத்தூருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இயக்கம் சம்பந்தமாக பெண்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய சொல்லி உள்ளார்கள்.இவன் அப்படியா, எனக்கு பதவி உயர்வு கொடுத்து மதுரை பக்கம் அனுப்ப உள்ளார்கள்.நீ உன் வேலைகள் முடித்து அங்கு வந்து சேர்ந்து விடு..சரி என்று தலை ஆட்டினாள்.
தட்..தட்..கதவை திறந்த ஸ்மிதா ஆச்சர்யத்துடன் லட்சுமியை கட்டிக்கொண்டாள்.ஆஹா எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா? அதற்குள் அவள் வந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு சுற்றுப்புறமிருந்த ஏழை குடும்பங்கள் அவளை வந்து சுற்றிக்கொண்டன்.
ஒரு வாரம் ஓடியிருந்தது, இப்பொழுதெல்லாம் இயக்கம் சம்பந்தபட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டாள் லட்சுமி. அடிக்கடி அலுவலகம் சென்று இந்த குடிசைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர சொல்லி பணிகள் செய்து கொண்டிருக்கிறாள். பணி முடிந்து வரும்பொழுது மயக்கமாய் வருவதை உணர்ந்தவள் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை பார்த்தாள். அவர் இந்த இயக்கத்துக்காக பணி செய்து கொண்டிருந்தவர், லட்சுமியை பார்த்ததும், உடனே வந்து பரிசோதித்தார்
உட்கார்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருந்த லட்சுமியிடம் ஸ்மிதா யாருக்கு எழுதிக்கொண்டிருக்கிறாய்? அந்த காஞ்சனாவுக்கு ! உனக்கு என்ன பைத்தியமா? உன்னிடமிருந்து உன் கணவனை தட்டி பறிக்க பார்த்தவள் அவளுக்கு கடிதம் எழுதுகிறாய்?
புன்னகையுடன் பதில் சொன்னாள். நான் பழைய லட்சுமி இல்லை, என்னிடம் இப்பொழுது “மாதவன் என் கணவன்” என்ற எண்னமெல்லாம் போய் விட்ட்து, அவர் ஒரு காலத்தில் என்னுடன் பணி புரிந்த தோழர் என்றே நினைத்துக்கொள்கிறேன். எனக்காவது இந்த இயக்கம், செயல்பாடுகள் என்றிருக்கிறது. பாவம் அவளுக்கு என்ன இருக்கிறது? இவரை நம்பியதை தவிர ! அது மட்டுமில்லை நான் கருவுற்றிருப்பதாக மருத்துவர் சொன்னதும் அந்த பெண் பாவம் நான் அங்கு மனைவி ஸ்தானத்தில் இருக்க தன்னுடைய கருவை அழிக்க வைத்தார்களே, அந்த பெண்ணை இனி மாதவனுடன் வாழ சொல்லி எழுதப் போகிறேன். இனி என் வாழ்க்கை இயக்கம், மக்கள், அடுத்து இந்த குழந்தை அவ்வளவுதான். மாதவனுக்கு இல்லற விடுதலை கொடுத்து அந்த பெண்ணுடன் வாழ வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டால் நான் சுதந்திர பறவை !
நான் “ஸ்மிதா” அவளை பார்த்து கேட்க நீ என்னுடனே கடைசி வரை இருக்கப்போகிற அன்புத்தோழி. ஸ்மிதா சந்தோசத்துடம் அவளை கட்டிக்கொண்டாள்.