ஷாராஜ்

ஷாராஜ்
 

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அச்சில் வெளியான நூல்கள்:

  • வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004).
  • வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது – சிறுகதைகள் (2016).
  • கௌதம புத்தன் கசாப்புக் கடை – கவிதைகள் (2017).
  • அக்னி மற்றும் பிற கதைகள் – மலையாளப் பெண்ணிய எழுத்தாளர் ஸிதாரா.எஸ் அவர்களின் ‘அக்னியும் கதகளும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு (2006).
  • பெருந்தொற்று – நாவல் (2021)
  • காலனியின் நான்காவது வீதி – சிறுகதைகள் (2021)
  • வெயில் மெல்லத் தாழும் – சிறுகதைகள் (2021)
  • பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால் – சிறுகதைகள் (2022)
  • வானவில் நிலையம் – நாவல் (2022)
  • வள்ளிநாயகம் காம்பௌண்ட் – நாவல் (2022)
  • நீர்க்கொல்லி – நாவல் (2023)
  • ஓர் அங்குலச் சிறுவன் – சிறுவர் கதைத் தொகுப்பு (2024)

இணையத்தில் வெளியான நூல்கள்:

  • வானவில் நிலையம் – நாவல் (2021) – பிஞ்ச் செயலி.
  • கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுத் தொகுப்புகள் என பல மின்னூல்கள் அமேஸான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய பரிசுகள் மற்றும் விருதுகள்:

  • சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகள் மற்றும் இலக்கியச் சிந்தனை (இரு முறை), தாஸ்னா, ஜோதி விநாயகம் நினைவு விருது ஆகியவை.
  • 2017-ல் நுண்கலை ஓவியத்துக்காக கே.எம். கோபால் நினைவு விருது.
  • கவிதைத் தொகுப்புக்காக நெருஞ்சி இலக்கிய விருது.
  • தக்கலை இலக்கிய வட்டம் விருது.
  • சிறுகதைத் தொகுப்புக்காக சௌமா இலக்கிய விருது.
  • 2023-ல் நாவலுக்காக எழுத்து அமைப்பின் திருமதி சௌந்தரா கைலாசம் நினைவு விருது.

அம்மணமலையில் கல்லெறி சாமியார் என்னும் எனது சிறுகதை, கேரளா, கோழிக்கோடு பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. GENERAL FOUNDATION COURSES IN TAMIL-ல் இக் கதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

UNIVERSITY OF CALICUT, B.A. Tamil Language & Literature, Honours – ல், கேரளத் தமிழிலக்கியம் என்னும் தாளில், மலையாளக் கரையோரம், வாஸ்துக் காய்ச்சல் என்னும் தலைப்புகளிலான எனது இரு சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.