என் பெயர்: மீ.மணிகண்டன்
புனைப்பெயர்: மணிமீ
தந்தை பெயர் ந.மீனாட்சி சுந்தரம்
தாயார்: மீ.பானுமதி
சொந்தவூர்: கல்லல், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
வசிப்பிடங்கள்: கல்லூரிக்காலம் வரை தமிழகத்திலிருந்த நான் பின்னர் தொழில் நிமித்தமாகப் பல நாடுகளில் வசித்து வருகிறேன்.
1996 – 2000 சவுதி அரேபியா
2001 – 2014 குவைத்
2015 முதல் அமெரிக்கா
அடர்த்தியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரம் தாங்கும் சில இரவு வானம்போலப் பள்ளி நாள்களில் கவிதை எழுதத்துவங்கி பின்னர் கல்லூரி நாட்களில் சிறுகதை எழுதிப் பார்த்தேன். 1994ம் ஆண்டில் ஒருநாள் நானெழுதி அனுப்பிய அட்டைப்படக் கமெண்டை ‘பாக்யா’ வார இதழ் அங்கீகரித்து வெளியிட்டிருந்தது. அந்த ‘பாக்யா’ வார இதழ் எனது எழுத்தார்வத்தின் ஆரம்பம். பின்னர் பொருளாதாரத் தேடலின் புயல்காற்றில் அலைக்கழிந்து கவிதை கதைகளை முழுவதுமாக மறந்துவிடாமல் நட்சத்திர அடர்த்தியற்ற இரவு வானமாகவே கிட்டத்தட்ட 2014ம் ஆண்டுவரை கடந்துசெல்ல, 2015 முதல் அமெரிக்கா எனக்கு படிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரம் வழங்கத் துவங்கியிருக்கிறது. அனுபவங்களும் அங்கீகாரங்களும் எனது இரவு வானத்தில் நட்சத்திரங்களின் அடர்த்தியை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நானெழுதிய படைப்புகளுக்கு அங்கீகாரங்கள்:
1994 … ‘பாக்யா’ வார இதழ் அட்டைப்படக் கமெண்ட்.
2015 … ‘மகாகவி ஈரோடு தமிழன்பன்’ விருது.
2016 … California Tamil Academy யின் தமிழ்ப்பள்ளிப் பணிப் பாராட்டுச் சான்றிதழ்.
2017 … மலேசிய தமிழ்மணி மன்றமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் ‘புத்தகம் மூடிய மயிலிறகு’ சிறுகதைக்குப் பரிசு.
2017 … ஆனந்த விகடன், சொல்வனம் பகுதியில், ‘குரங்கு உண்டியல்’ கவிதை.
2018 முதல் 2019 வரை, ஆனந்தசந்திரிகை, Dallas, TX மின்னிதழில் சிறுவர்கள் பகுதியில் ‘மழலை மழைத்துளிகள்’ கவிதைகள்.
2018 முதல் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் புதல்வர்) அவர்களின் இசையில் தொடர்ந்து வெளியாகும் பாடல்கள், வெண்பாக்கள்.
2019 … ‘பப்பு வீட்டில் ஹெட்மாஸ்டர்’ குறும்படம்.
2022 … ‘குடைக்குள் கங்கா’ சிறுகதைகள் தொகுப்பு.
இன்னும் தொடரும்…