பொன் குலேந்திரன் – Pon Kulendran – 12-June-2016
யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்” தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
கனடா பிரஜையான பொன் குலேந்திரன் சிற வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவர். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவர். கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தவர்
ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதக் கூடியவர்.
ஆங்கிலத்தில்:
- Short Stories Short Stories from Sri Lanka,
- Sufferings of Innocent Souls (HR Violations in Sri Lanka
- Strange Relationship (21 short stories)
- A Bouquet of 15 Short Stories (eBook)
Novel
- The Dawn (Novel), Printed book and Ebook
- Generations – eBook
Articles
- Hinduism a Scientific Religion, Printed Copy and Ebook
தமிழில்:
சிறுகதைத் தொகுப்புகள்
- விசித்திர உறவு, (21 சிறு கதைகள் )
- அழகு (12 சிறு கதைகள்) – ரொரன்றோ எழுத்தாளர் சங்கத்தின் பரிசு பெற்றது
- முகங்கள் ( 21 சிறு கதைகள்- சென்னை வெண்மணி அறக்கட்டளை வெண்மணி இலக்கிய விருது பெற்றது.
- பார்வை ( 21 சிறு கதைகள் ) – மின்நூல்
கவிதைகள்
- அருவி ( 30 கவிதைகள்),
கட்டுரைகள்
- வளரும் வணிகம் ,
- அறிவுக்கோர் ஆவணம்,
- கோபுர தரிசனம், கோடி புண்ணியம்
ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் வாழும் இவரோடு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் – Kulendiren2509@gmail.com Tel: 289 652 01854
இயற்பெயர் : பொன்னம்பலம் குலேந்திரன்
இடம் : மிசிசாகா, ஒண்டாரியோ, கனடா
பிறந்த தேதி : 25-Sep-1939
பொன் குலேந்திரன் ஆகிய நான், இலங்கையில் உள்ள யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College Jaffna )கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) லை தொடர்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி.ஓய்வு பெற்றவன.
பத்து வயது முதற்கொண்டே எனக்கு எழுத்தில் ஆர்வம் இருந்தது. கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்.
ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளேன். பல இணையத்தளங்களுக்கும் எழுதி வருகிறேன்.
என் வெப் பக்கம்: Pon-Kulendiren.com.
Generations – தலைமுறைகள் – இலங்கை தெயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் கதையை ஆங்கிலத்தில் Generations என்ற பெயரில் நாவலாக வெளியிட்டுள்ளேன். Notion Press.com சென்னையில் அல்லது Amazon.in யில் வாங்கலாம்.
பிரிட்டிஷ் அட்சி காலத்தில், கூலிகளாக இலங்கைக்கு கங்காணிகள் மூலம் வேலைக்கு அமர்த்தபட்டவர்கள். 1963 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் ஆயிரக்கணக்கில்; இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு இத்தொழிலாளிகள். விரைவில் தமிழில் “தலைமுறைகள்” என்ற தலைப்பில் இந்நாவல் வெளிவரும்.
காலம் (அறிவியல் சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் பேனாவில் இருந்து…
அன்பின் வாசகர்களே,
நான் எதையும்; புதுமையாக எழுத விரும்புபவன். ஏற்கனவே விசித்திர உறவு> அழகு முகங்கள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், “விடிவு இல்லம்”; என்ற நாவலையும் வெளியிட்டுள்ளேன். நான் ஒரு பௌதிகவியல் ;பட்டதாரியும்> தொலை தொடர்பு பொறியியலாளரும். இந்த “காலம்” (Time) என்ற சிறுகதைத் தொகுப்பு 16 அறிவியல் கதைகளை உள்ளடக்கியது. அறிவியல் கதைகளைப் புனைவதுக்கு ஆழமான கற்பனைதேவை. அறிவியலில் ஈடுபாடு இருக்கவேண்டும்.
வாண்வெளியில் தினமும் இடம்பெறும் சம்பவங்கள் வியப்புக்குறியது. புதுப் புது கண்டுபிடிப்புகள்.’பிரபஞ்சம் தோன்றியது 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹொகின்ஸ் (Prof Stephen Hawkins). பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் பெரும் வெடிப்பினால் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது என்பது விஞ்ஞானிகள் கணிப்பு. நேரம் பிரபஞ்சத்தின் தோற்தின் போது ஆரம்பித்தது. நேரம் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் முடிவடையும் என்கிறார்கள் பௌதிக விஞ்ஞானிகள். இதெல்லாம் ஒரு கணிப்பே. எப்போது என்பது நிட்சயமாக சொல்லமுடியாது. பெரும் வெடிப்பினால் சூரிய குடும்பம் தொன்றியது என்பது ஆராச்சியாளர்கள் கருத்து. அந்த குடும்பத்தில் பூமி ஒரு அங்கம். அது எவ்வளவுக்கு உண்மை என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. ஆனால் பல கிரகங்களையும் மில்கிவே (Milky Way) எனப்படும் பால் வழியையும் காலப்போக்கில் கண்டுவருகிறார்கள். பெரும் வெடிப்பின் போதும் வால்நடசத்திரத்தில் இருந்தும் தோன்றியவை தான் விண்கற்கள் என்ற இத்தொகுதியின் இரண்டாவது ;கதை. முதலாவது கதையான காலதத்தின தலைப்பை இச்சிறுகதை தொகுப்புக்கு வைத்துளளேன். உங்களுக்கு காலம் கிடைத்தால் வாசியுஙகள் சிநதியுங்கள். முடிநதால் கருத்து தெரிவியுங்கள். வாண்வெளியில் சூரிய சந்திர கிரகணங்கள் > வால்நட்சத்திரங்கள், கரும் துளை, எரி கல் மழை> இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடக்கிறது. எங்கள் பூமியும் இச் சம்பவங்களின் பாதிப்புக்கு உற்பட்டது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என கற்பனை செய்து எழுதப்பட்டவை. காலம் சென்ற ஆர்தர் சி கிளார்க் பிரபல அறிவியல் கதைகள் பல எழுதியவர். செய்மதி வானில் மிதக்க முன்பே 1945 ஆம் ஆண்டில் தன் விஞ்ஞான நாவலொன்றில் அதைபற்றி எழுதியிருந்தார். ஒருவேலை விஸ்வாமித்திர மகாரிஷி உருவாக்கிய திரிசங்குவின் சொர்க்கம் என்ற கதையை அவர் வாசித்திருப்பாரோ என்னவோ.
அயின்ஸ்டைனின் சார்புக்கு கொள்கைகளை (Theory of Relativity) மையமாக வைத்து> காலம் சக்தி மாற்றம் என்ற கதைகள் எழுதப்பட்டது. வெளிக்கிரகங்களோடு தொடர்பை வைத்து விநோதன் என்ற கதை உருவாகிற்று. மலடி விந்து மாற்றத்தைக் கருவாகக் கொண்டது ரெசனன்ஸ் (Resonance) எனப்படும் ஒத்த அதிர்வை மூலமாக வைத்து எழுதப்பட்ட கதை பரமரகசியம். தீரக்க முடியாத வியாதி அல்செய்மார். இது பெரும்பாலும் முதியோர பாதிக்கிறது. இதுவே அல்செய்மார் ஆராச்சி என்ற கதையின் கரு. டீஎன்ஏ (DNA) எனப்படும்; மரபணு பரிசோதனை, குற்றவியலில் முக்கிய இடம் வகிக்கிறது. தீர்க்க முடியாத பல நோய்கள் மரபணுவோடு தொடர்பு உள்ளவை. இதுவே நுண்ணறிவு என்ற கதையின் கரு. மனிதர்களைப்போல் ஏன் பொம்மைகளும்> மிருகங்களும்> பறவைகளும் உறவாட முடியாது? இதை கருவாகக் கொண்ட கதைகள் தான் மெனன்குவின்னும்> அறிவின் ஆராய்ச்சியும். நீங்கள் ஒரு பசுமை விரும்பியா? விவசாயியா? அவசியம் விளைச்சல் என்ற கதையை வாசிக்க வேண்டும்.
மனஇறுக்க வியாதி (Autism) இப்போது சிறுவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பத்து வயது மகனுக்கு இந்நோய் இருப்பதாக கேள்வி இதை வைத்து ஒரு கதை இக் கதைக் கொத்துக்குள் அடங்கும். தோட்டா என்ற கதை அரசின் தரப்படுத்தல் என்ற கல்வி சட்டத்தால் பாதிக்கப்பட்ட இரு புத்திசாலி மாணவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய கதை தோட்டா. கிரகவாசி வருகை என்ற கதை சிகரத்தை யாரும் தொடாத கைலாயமலையை கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. கடைசிக் கதையான அமர்த்துவம் ஆயள் நீடிப்பைக் கருவாகக் கொண்டு, வித்தியாசமான சிந்தனையோடு எழுதப்பட்டது.
நான் கதைகளின் கருக்களைச் சொல்லி விட்டேன். கதைகளை வாசியுங்கள்>இரசியுங்கள். சிந்தியுங்கள்> விமர்சியுங்கள்.
பொன் குலேந்திரன்-
மிசிசாகா, ஒன்றாரியோ.
– காலம் (அறிவியல் சிறுகதைத் தொகுப்பு).