பூ.சுப்ரமணியன்

 

எழுத்தாளரின் சுய குறிப்பு

பெயர்: பூ. சுப்ரமணியன்
வட்டாட்சியர் (பணிநிறைவு)
வயது: 67
பெற்றோர்: தெய்வத்திரு பூவலிங்கம் பார்வதியம்மாள்
சொந்த ஊர்: கீழராஜகுலராமன்
இராஜபாளையம் அருகில்.
வெம்பக்கோட்டை வட்டம்
விருதுநகர் மாவட்டம்
வசிப்பிடம்: பிளாட் எண் 69, பிளாக் எண்- 1
முகவரி: எஸ்-2, ஆஞ்சநேயர் நகர், கலைவாணர் தெரு, ஜல்லடியான்பேட்டை, பள்ளிக்கரணை (அஞ்சல்),சென்னை 600 100
கைபேசி : 9894043308
மின்னஞ்சல்: psubramanian.family@gmail.com

பொது:psmpaspt5

எனது மானசீக குரு எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி ஆவார். அவர் எழுதிய பொன்விலங்கு என்ற நாவலைப் படித்தபோதுதான், எனக்கு சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகளை படைக்க வேண்டும், ஒரு எழுத்தாளராக வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. எனது சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகள் பாக்யா, கல்கி, தினமணி கதிர், வானமே எல்லை, ராணி, பேசும் புதியசக்தி, கதைசொல்லி, வார முரசு, தினத்திந்தி-குடும்பமலர், ஏழைதாசன், குருகுலத் தென்றல், தினமலர்-வாரமலர் ,பொம்மி போன்ற இதழ்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் சிறுகதைகள்.காம், எழுத்து.காம், தமிழ் வலைத்தளம், தமிழ் பிரதிலிபி, பனிபூக்கள், குவிகம் போன்ற வலைதளங்களில் எனது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் என்ற புனைபெயரிலும் எனது படைப்புகள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. “வித்தியா மீண்டும் வேலைக்குப் போகிறாள்” என்ற எனது சிறுகதை தொகுப்பு நூல் மணிமேகலை பிரசுரம் மூலம் 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் பல்கலை கழகத்தில் சிறந்த நூல் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *