
கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் சிங்கையில் மலையாளத்தில் முழு நீள ஆய்வு நாடகம் எழுதிய, இயக்கிய, முதல் பெண் எழுத்தாளர். மலையாள நாடகத்துறையில் விருதுகளையும் சவால் கிண்ணங்களையும் இவர் பெற்றிருக்கிறார். தமிழ்னேசன் நடத்திய சிறுகதைப்போட்டியில் 3 முறை முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் 7 முறை இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதையாக வெளிவந்துள்ளது. மலேசிய வானொலி நடத்திய நாடகப்போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார்.தமிழ் நாடு, கேரளப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார்.தமிழ், மலையாளம், என இரண்டு மொழிகளிலும் நல்ல இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார் . விறு விறுப்பான எழுத்து நடையால் வாசகர்களை கவரும் எழுத்தாளர்.சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கிய உலகில் பெயர் பதித்துள்ள முக்கியமான எழுத்தாளர்.
கமலகானம்
(http://kamalagaanam.blogspot.com)
saahithyam@yahoo.com.sg
gokulam1950@yahoo.com