உஷாதீபன்

 

உஷாதீபன் தன் குறிப்பு

இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி
தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர்
பிறந்த தேதி: 10.12.1951
கல்வித் தகுதி: பி.யு.சி.
பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு
பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு.

புனை பெயருக்கான காரணம்

திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் ‘தீபன்’ என்ற புனை பெயர் உகந்ததானது. பின்னாளில் மனையாளின் பெயரோடு சேர்ந்து ‘உஷாதீபன்’ ஆனது.

எழுத்து அனுபவம் மற்றும் பெற்ற பரிசுகள்

1981-ல் எழுத ஆரம்பித்து படிப்படியாக விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது.

இதுவரை வெளிவந்த தொகுதிகள்

1) உள்ளே வெளியே : சிறுகதைத் தொகுதி மீனாட்சி புத்தக நிலையம் மதுரை-625 001.

2) பார்வைகள் : -ஷை- ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17.

3) நேசம் : -ஷை- -ஷை- 4) வாழ்க்கை ஒரு ஜீவநதி : -ஷை- என்.சி.பி.எச். நிறுவனம், அம்பத்தூர், சென்னை-98.

5) நினைவுத் தடங்கள் : -ஷை- -ஷை-

6) புயலுக்குப் பின்னே அமைதி : குறுநாவல் வானதி பதிப்பகம், செ- . – 2 –

7) சில நெருடல்கள் : சிறுகதைத் தொகுதி நிவேதிதா பதிப்பகம், சென்னை-83. 8) மழைக்கால மேகங்கள் : குறுநாவல் -ஷை-

9) தனித்திருப்பவனின் அறை : சிறுகதைத் -ஷை- தொகுதி

10) வெள்ளை நிறத்தொரு ப+னை : -ஷை- ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-17.

11) திரைவிலகல் : சிறுகதைத் தொகுதி, வெளியீடு: பா. உதயக் கண்ணன்,பெரம்ப+ர், சென்னை11.

சென்னை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு ப+னை சிறுகதை பரிசு பெற்றது. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள் ஆகும்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்ப+ர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் ‘வாழ்க்கை ஒரு ஜீவநதி சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. வாழ்க்கை ஒரு ஜீவநதி சிறுகதைத் தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் ஆ.Phடை.இ P.ர்ன.இ ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

முழு முகவரி:

உஷாதீபன்,
8-10-6 ‘ஸ்ருதி” இல்லம், சிந்து நதித் தெரு,
மகாத்மாகாந்தி நகர், ரிசர்வ் லைன் அஞ்சல், மதுரை-625 014.
செல்: 94426 84188
ushaadeepan@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *