
இரா.சந்தோஷ் குமார் எனும் நான் திருப்பூரில் வசிக்கிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன்.
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி சார்ந்த பணிக்காக சொந்த அலுவகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன்.
கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். இணையத்தளங்களை தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது படைப்புகள் பிரசுரமானது இல்லை.
இதுவரை எந்த நூல்களும் வெளியிட்டது இல்லை. தற்போது ஒரு நாவல் எழுதி இருக்கிறேன். அதனை விரைவில் வெளியிடவும் பதிப்பகங்களை நாடி வருகிறேன்.
காட்சி ஊடகங்களில் கால் பதிக்கவும் அதிக ஆர்வம். குறும்படங்களுக்கு நான் கதை திரைக்கதை எழுதி இயக்கியும் வருகிறேன். குறும்படங்கள் தயாரிப்பு பணியில் இருக்கிறது. நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது.
மொத்தத்தில் நானொரு அறிமுகமாக துடிக்கும் படைப்பாளி.
இலக்கியம் என்பது சாமானிய மக்களின் பிரச்சினைகளை பேசவும்.. அவர்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கவும் வேண்டுமென்பதே என் விருப்பம். அந்த வகையில் சமூகப் பிரச்சினை சார்ந்த அதிக அளவு படைப்புகளில் நான் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.
நான் வியந்து ரசித்த பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள் அணிவகுக்கும் சிறுகதைகள். காம் எனும் இணையதளமாக இலக்கிய உலகில் அறிமுகமாகிறேன் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது .
மனமார்ந்த நன்றியுடன்
இரா.சந்தோஷ் குமார்.
அலைப்பேசி எண் : +91 99418 49394