ஓர் உண்மை கதை

வணக்கம் தங்கள் தளத்திற்கு மீண்டும் ஒரு கதை அனுப்பியிருக்கிறேன், இது எனது மகளின் நடந்து முடிந்து போன ஒரு சோக வரலாறு, மிகவும் மனவாருத்தம் தருகிற, ஓர் உண்மைக் கதை, பூரண அன்பும் அறிவும் இல்லாமல், போனால் என்ன நடக்கு மென்பதற்கு இதுவே சாட்சியாகிறது, இதை ஒரு வேதமாக எடுத்துச் சொல்ல வேண்டிய எனக்கு இயல்பான தார்மீக சத்திய இருப்பின் காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. மேலும் இவளது போட்டோவும் அனுப்பியிருக்கிறேன். தாங்கள் விருபினால் இப் படத்தையும் போட்டு என் கதையைப் பிரசுரிக்கலாம் – ஆனந்தி.
உடல் அழகு மாயையில் சிக்கி உழலும் மனம் விட உயிருமானது உள்ளொளி அழகு ஒன்றே.
அழகு மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலைந்து உயிரை விட்ட, என் மகள் பற்றிய இந்த சோக வரலாற்றை, எல்லோரும் அறியும் ஒரு வேதமாக உயிர்ப் பிரகடனம் செய்து இங்கு வடிக்கிறேன். பொழுது போக்காக படிப்பதற்கென்றே வரும் வெறும் கதையல்ல இது. கற்பனை ஊற்று பெருகிட இதை நான் இதை எழுதவில்லை. ஒரு மானஸீக தேவதையாக, என்றும் என் மனதில் வாழப்போகும் என் மகளின் பாத கமலங்களுக்கே இது சமர்ப்பணம். ஒரு சாந்தி வேள்வியாக இதைத் தொடங்குகிறேன்.
எங்கே இருக்கிறாள் என் மகள்? விதியின் சாபத்தினுள் சிக்கினாளா? உடல் வெந்து, நொந்து நூலாகி மடிந்தே போனாளா? இந்த மடிதலு,ம் மறைந்து போதலும் எதனால் வந்தது? ஏன் நீ இப்படியானாய்? என்ன நடந்தது உனக்கு? சொல் மகளே1 எரிந்து சாம்பலாகிப் போவதற்கு முன்பே, நீ பேசாமடந்தை தான் நீ! உன் பேச்சும் மூச்சும் எதனால் போனது?
எங்கே இருக்கிறாள் என் மகள்? விதியின் எங்கே சாபத்தினுள் சிக்கினாளா? உடல் வெந்து, நொந்து நூலாகி மடிந்தே போனாளா? இந்த மடிதலும் மறைந்து போதலும் எதனால் வந்தது? ஏன் நீ இப்படியானாய்? என்ன நடந்தது உனக்கு? சொல் மகளே! எரிந்து சாம்பலாகிப் போவதற்கு முன்பே, நீ பேசா மடந்தை தான் நீ! உன் பேச்சும் மூச்சும் எதனால் போனது?
ஓ! நீ வாய் திறந்து, இதை ஒருகானல், கதையாக இரத்தக் கறை படிந்த காயங்களோடு இப்பவும் கூட சொல்லத் தொடங்கினால், எனக்கு வயிறு பற்றி எரியும். பகை வரும் பண்பிழக்கும் இந்தக் கொடிய விதியும் கொடும் கூற்று வினையும் உனக்கோ எனக்கோ வரப் போவதில்லை. ஏனென்றால், நீ இப்போது வெறும் சடம் சாட்சி புருஷனையே காணாமல், நீ போனது தான் எனக்கு பேரிழப்பு. அது என்னவகையான பேரிழப்பு என்பதை, நேரில் கண்டு அனுபவித்து தேறிய அனுபவச் சாக்கடைக்குள் நான் விழவில்லை மாறாக என்ன நடந்தது.
அதையும் சொல்லி விடுகிறேன். இது எத்தனையாவது, தீக்குளிப்பு எழுச்சி புடம் கொண்டுஎழுதல்,என்பதையெல்லாம் சொல்லி வேலையில்லை. ஏனென்றால் பிறர் உணர்வுகளையே மதித்து வாழத் தெரியாத மூடர் உலகிலே நான் வேதம் சொல்லிப் பலனில்லை வேதம் என்பது கடவுள் வகுத்த நீதி தர்ம சாஸ்திரம் தூய அன்பை பேணுவதற்கும் அறிவு சார்ந்த தெய்வீக வாழ்க்கையில் நிலை பெறுவதற்கும் அதுவே, துணையாகிறது . துரும்பு மனிதர் விடயத்தில் இதெல்லாம் எடுபடாது தர்மத்தையே களங்கப் படுத்தி, காட்சி உலகில், கண்கெட்டு அலைந்தால், கடைசியில் முடிவு கடவுளல்ல காடு வெறித்த வாழ்க்கை தான். காடு ஒன்று இங்கே பற்றி எரிகிறது. காடல்ல கண்ணியமான ஒரு பெண். என் மகள் அதுவும் போய் எஞ்சியிருப்பது துஞ்சி வீழும் என் மனமும் அவள் சாம்பலாகிப் போன கதையும் தான்.
அதோ! அவள் எரிந்து சாம்பலாகிப் போனாளே. அந்த இடம் அது மட்டுமல்ல அவள் வாழ்ந்து களிக்காமல், போன இந்த வீடும் கூடத் தான் காட்சி உலகில் கருகி ஒழிந்து போன வெறும் நிழலாய் ……..இந் நிழலின் மேல் நிலை குத்தி நர்த்தனமிடும் வரட்டு ஜென்மங்கள் வாழ்க்கை புதிர்கள் அனைத்தையும் மேவிக் கொண்டு, நிர்ச்சாந்தியாக என் இருப்பு கனவிலே வாழ்ந்த என் மகளை நிஜத்திலும் காண்கிறேன் இது நிஜமல்ல என்று மனமே ஓலமிடுகிடுகிறது விட்டிருந்தாலல்ல மனிதர் வழி, விட்டிருதால், கை குலுக்கி அவளை வரவேற்று இருந்தால், இன்று அவள் வானத்தில் மட்டுமல்ல ஒரு வாழ்க்கை நாயகியாகவும் ஆகியிருப்பாள் ஆனால் என்ன நடந்ததென்று விரிவாகச் சொல்லப் போனால், கல்லெறிகளே விழும் காட்சி உலகமே கண்களில் இல்லாமல், கறை வந்து அப்பிக் கொள்ளும். இந்தக் கறை துடைத்து எறியவே, இப்போது கங்கை இருப்பாக மட்டுமல்ல கடவுளாகவும் தான் எனது இந்த புது அவதாரம் .
நான் கடவுளாக இன்னும் ஏன் இருக்கிறேன்? நடந்து முடிந்த கொடுமைக்கு பேராவேசம் கொண்டு நான் கல்லெறியத் தொடங்கினால், எனக்கு இந்த இரு கைகள் மட்டுமல்ல நான் காளியாகி ஆவேசம் கொள்ள நூறு கைகள் வந்தாலும் பத்தாது. அப்படி நிர்மூலமாகிப் போனாள் அவள்
எழும்பு மகளே என்ன நடந்தது என்று சொல், இதோ! என் இருப்பு முன் சூனியம் வெறித்த, அவள் முகம் பறி போன கைகள் இடறி வீழ்த்தும் நிலை குலைந்த, கால் சரிவுமாய் கை பிடித்து எழும்ப சைகை காட்டிஅழைக்கும் அவள் குரல் உள் எழும்பாமல், உயிர் ஓலமாய்க் கேட்கவே விழுந்தடித்துக் கொண்டு நான் போக முற்படுகையில் , வலது கால் ஊன்ற முடியாமல்,எனது திணறல் என் வயசுக்கு இது சகஜம் ஆனால் என் மகளுக்குநேர்ந்ததோ பெரும் கொடுமை அவள் சிறகுகளையே முறித்து எறிந்த கொடுமைக்கு அவளே சாட்சி
ஆம் அவள் தேவதையாய் இருக்க வேண்டியவள் தெய்வமாய் வாழ்ந்தவள் அவள் நாமம் சொன்னாலே பிரவண மந்திரம் தான் மூச்சாக வரும் ஆம், அவள் ஓங்காரணி. என் அன் அன்புச் செல்வம் நான் பொத்தி வளர்த்த தாய் அவள் எனினும் அவள் சிறகுகள் முறிந்து மடிந்து சாக உண்மையில் யார் காரணம்? அதை அவள் வாயாலேயே கேட்க நேர்ந்த, துரதிஷ்டம் என்னுடையது
ஒரு பக்கம் அன்பு மறந்து போன கணவனின் கொடுமை இடையில் என் குழந்தைகள் நான் இவள் எத்தனையோ படிப்புக் கனவுகளுடன். வாழ்ந்தவள் போர் மேகம் சூழ்ந்து வருத்திர போதிலும் இவற்றையெல்லாம் புறம், தள்ளி விட்டு, மெலிந்த, ஒல்லியான தேகத்துடன் முதுகிலே புத்தகப் பை சுமந்து, படிப்பைக் கனவை நிறைவேற்ற, என் கிளி உண்மையில், பட்டுச் சிறகுகல் எரிந்து கருகி வீழ்ந்த கொடுமையை சொல்லப் போனால், ஒரு யுகமே முடிந்து போகும் . ஆனால் சொல்லி தெளிய வைக்க வேண்டிய, கதைதான் நாவிலே தீ வளர்த்து இப்படிக் கொன்று போடும் மனிதர்க்கு வேதமா நான் சொல்ல முடியும் வேட்டையாடி உயிர் முடிக்காமல் , போனாலும் இன்று கையறுந்த நிலையில் என் ஒரேயொரு கடமை தர்மம் எடுத்துரைக்க வேண்டியது
எது தர்மம் ?எது சாத்வீக சனாதன உயிர்க் கோட்பாடு?கனவிலே தான் , இது நிகழும் நடக்கிற, கொடுமையெல்லாம், வெறும் நிழற் பொம்மைகளாய்., காட்சி உலகில் நடமாடும் மனிதர்கள் குறித்தே. என் மகளின் வீழ்ச்சி இழப்புகளெல்லாம், இதன் பொருட்டு நிகழ்ந்த, துன்பியல் நாடகமே.
நான் கேட்டேன் அவள் தலையை, உச்சி அப்போது மோந்து தடவியபடியே
ஏம்மா அழுகிறாய்?
நான் இனி படிக்க போக மாட்டேன் 1 தொடர்ந்து பெரும் சத்தத்துடன் அவள் நிலத்தில் விழும் போது எனக்குள் பூகம்பமே வெடித்தது.
நானும் அழுதபடியே கேட்டேன்.
நீபடிச்சு வந்தால், எங்கடை இருண்ட, யுகமே போய் நீ விடும் என்றல்லவா கனவு கண்டேன் எல்லாம் போச்சுது.
அவள் சொன்னாள்.
என்ரை போஸ்டல் ஐடன்டி காட் அதாவது அடையாள அட்டையைப் பார்த்து சுபோஜினி சொன்னவள் நல்ல வடியாருக்கு பிரேன் போட்டு ஷோகேஸ் மீது வை என்று.
என்ரை போஸ்டல் ஐடன்டி காட் அதாவது அடையாள அதற்கு அட்டையைப் பார்த்து சுபோஜினி சொன்னவள் நல்ல வடிவாயிருக்கு பிரேம் போட்டு ஷோகேஸ் மீது வை என்று அதைக்கேட்டு எல்லோரும் கை கொட்டி பெரிசாய் விழுந்து விழுந்து சிரிச்சவை நான் அப்பவே செத்துப் போனன், என்றாளே பார்க்கலாம் . இதற்கு மேல் இவள் உருப்பட உண்மையில் நிலைக்க நான் வேதமாக என்ன சொன்னாலும் இவள் கேட்கிற நிலையில் இல்லை இது பாவிகள் விதைத்த விஷ விதை அன்பு மறந்து போய் அழிவை நிலை நாட்டிய மிகப் பெரிய சோக வரலாறு. இதன் பிறகு ஒற்றை புள்ளியில் நிலைத்த இவளின் இருண்ட யுகம் நெடுங்காலமாக சிறை வாழ்க்கைதான் இவளுக்கு படிப்பு இல்லை பட்டம் பதவி எதுவுமேயின்றி, மனநலம் தேறி இவள் மீண்டு வருவதற்காக நவீன ஆங்கில மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்து மாத்திரைகள் எடுத்தே, பக்க விளைவுகள் ஏற்பட்டு வாயில் வானீர் வடிந்து கையும் கெட்டு காலும் கெட்டு பேச்சிழந்த வெறும் நிழற் பொம்மை போல ஆகி விட்ட கொடுமையை அடி வயிறு பற்றி யெரியஎன்னவென்று விபரிப்பேன்.
இதோ இருட்டில் வெறித்த அவள் முகம் பட்டப் பகலில் சூனியம் வெறித்த பார்வையுடன் சைகை காட்டி என்னை அழைக்கிறாள்.
அவள் காட்டிய திசையை பார்க்கிறேன் அடுத்த அறையில் அவள் சாப்பிட முடியாமல் போன உணவு வகைகள் என்னைப் பார்த்து கைகொட்டி, சிரிப்பதாக ஒரு பிரமை . ஆம் காசில்லாமல் என் கணவர் இவளின் யூலை சண்டை நிமித்தம் உயிருக்குப் பயந்து வேலைக்குப் போகாமல், வீடே அழுது வடிந்தது வாழ்க்கை தெருவுக்கு வந்தது அந்த நிலையிலும் தெரு சுற்றி அலைந்து பிள்ளைகளைக் காப்பாற்ற, தீக்குளித்து மீண்டு வந்தவள் நான் திரும்ப என் கணவர்க்கு வேலை கிடைத்த போதிலும் போகாத நாட்களுக்கு அரசிலிருந்து கிடைத்த பணம் கூட எங்களுக்கு வந்து சேரவில்லை எப்பவும் எனகளுக்கு பட்டினி சாவு தான் பசி உலகம் தான் அதுவும் நின்று போய், அப்பாவின் பொறுப்பின்மையால், படிப்பைக் குழப்பி விட்டு வெளிநாடு போன சமயம், தான் இது நிகழ்ந்தது.
என் மகளின் நிலை குலைவு கொடூரம் வெறித்த நிழல் வாழ்க்கை. பட்டுப் போன மரமாய் இப்போது என் முன் அவள்.
சாப்பாட்டு மேசை மீது அவள் சதா குடித்தே பசி தீர்த்துக் கொண்டிருக்கும் எவர்சில்வர் தண்ணீர் குவளையை நோக்கியே, அவளின் கண் ஜாடை கை அசைவு கனத்த நாட்கள் வந்தால் அடியோடு எல்லாம் ஸ்தம்பிதம் தான் சரிவு தான் நிலை குலைவு தான் நான் தண்ணீர்க் குவளையைக் கொண்டு, இவளிடம் போகிறேன் கை வாங்கிப் பருகாமல், அதுவும் ஸ்தம்பிதம் நான் பருக்கி விட மடமடவென்று குடிக்கிறாள் சுமார் இரு மாதங்களூக்கு மேலாக எதுவும் சாப்பிட முடியாமல், முழுபட்டினி கிடந்த என் தேவதை.
நேற்று நடந்த கொடூரம் பகல் முழுதும் இவள் தூங்கி விழிக்கும் போது தேகம் நெருப்பாய் சுட்டது பனடோலும் கைவசமில்லை நாளை காலை வேலைக்காரி வரும் போது கொடுக்கலாமென்றிருந்து விட்டேன் . அன்று இரவே கட்டிலில் தூங்குவது போல் இவள் கதை முடிந்து விட்டது நீண்டகாலமாயல்ல இருள் கனத்த ஒரு யுகத்தில் இப்படிஅவள் சடம் மரத்து செத்து மறைந்த கதை ஒரு வழக்காய் எடுபடாமல், போன மனவருத்தம் மட்டுமே எனக்குள் மிஞ்சி அலைகழிக்கிறது இந்த சோக நிகழ்வுக்கு கர்மாவே காரணமென்று,பலர் கூறினாலும் என் மனம் இதை ஒரு வேதமாக ஏற்க மறுக்கிறது . அன்பு நதி வற்றிப் போய் , மனம் போன போக்கில் பேசினால், என்ன நடக்கும் நன்றாகப் படித்து ஒரு கணித மேதையாகவே உச்சத்தில் சென்று பிரகாசித்து ஒளிர வேண்டிய என் மகன் இன்று என் மகள் விதியின், கை பொம்மையாகி பஸ்மமாகவே எரிந்து சாம்பலாகிப் போனாள் இப்போது நான் தனியாக இந்த சாம்பல் மேட்டில் ஏறி நின்று, கண்ணீர் மழை குளித்தவாறே, அழைக்கிறேன் அன்பு செய்ய வாருங்கள் நீங்கள் வாய் திறந்தால், வேதம் தான் வரவேண்டும். வேகம் வந்து வந்து வீண் வார்த்தை பேசினால், வீழ்ச்சி மட்டுமல்ல சாவும் வந்து தழுவிக் கொள்ளும் அதுவும் தென்றலாகவல்ல, தீயாகவேவந்துசுடும் இப்படி பெருந் நீயாய் எரிகிற நெருப்புக்கு நான் வெறும் சாட்சி புருஷன் மட்டுமே இந்த நிலயில் தான் நான் சொல்கிற வேதமெல்லாம் மறவாதீர்கள். அன்பு செய்யுங்கள்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 5,551

காற்றில் கலந்து விட்ட உங்கள் அன்புத்தேவதையைப் பற்றி நீங்கள் எழுதியதைக் கண்ணுற்று மனம் வெதும்பிப் போனேன்.உங்கள் தேவதையைப் பற்றி இங்கே பகிர்வதற்கு முன் உங்களைப் பற்றி சொல்ல வேணடும் போல தோன்றுகின்றது. ஒரு பெண்ணை “பூமாதேவி போல… ” இருக்க வேண்டுமென்று சொல்வார்களே… அந்த பூமாதேவி எப்படி இருப்பார்? உங்களைப் போன்று தான் மாதினியக்கா.ஆமாம்! என் சிறு வயதிலிருந்து உங்களை எனக்குத் தெரியும்.மிக மிகப் பொறுமையான,அமைதியான, அதிர்ந்து பேசாத சாந்தமான உங்கள் குணத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவேன்.35 வருஷத்துக்கு மேலாக உங்களுக்கு அவர் கொடுக்கின்ற உள,உடல் இம்சைகளைத் தாங்கிக் கொண்டு மனம்சலிக்காது, ஒரு தங்கப்பேளையைத் தாங்குவது மாதிரி இறுதிவரைஅன்பாக தாங்கி நின்றீர்களே ! சிரம்தாழ்த்தி உங்களை வணங்குகின்றேன்!
ஓம்காரணி மிக புத்திசாலிப் பெண். 9ம் வகுப்பு படித்துக்கொண்டு எந்த ஒரு ரியூசனுக்கும் செல்லாது தானே படித்து 10ம் வகுப்புஇறுதிப் பரீட்சையில் 7 பாடங்களிலும் அதி திறமைச் சித்தியடைத்தவர்.மிகவும் அழகான நல்லபிள்ளை.வகுப்பில் ஒருமாணவி சொன்னது அதைக் கேட்டுமற்றவர்கள் சிரித்தது அவரைப் பாதித்திருக்கிறதெனறால்… அவர் மனம் மிக மிக மென்மையானது. அதனால்தான் அப்படிநினைத்திருக்கின்றார்.அந்த பிள்ளைகள் வேடிக்காகத்தான் சொல்லி சிரித்திருக்கிறார்கள்.ஏனென்றால் -இவர் நிறமான அழகான பெண்.இவரின் மென்மையான,பலவீனமான மனம் இவரை வேறு கண்ணோட்டத்தில் சிந்திக்க வைத்து மனப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.யாரும் யாருடைய மனதை பாதிக்கும் விதமாகவோ கதைக்கவோ,உருவக்கேலி செய்யவோ கூடாது.நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை உருவக்கேலி செய்வதை பல நேரடி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.அது தவறு. மென்மையான, பலவீனமான,தாழ்வுமனப் பான்மையுள்ளவர்களால் இப்படியான கேலிகளை அவர்களால் தாங்கமுடியாது.அது அவர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இருக்கும் வரை நல்லதைச் செய்வோம்.நல்லபடி நடப்போம்.