ஒரு வைரப்பெட்டி திருடு போகிறது!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 5,989
போகாமலிருந்திருக்கலாம்..விதி..?! அந்த என்.வி கடைக்குப் போனது!. அங்கே சிக்கன் ஆர்டர் பண்ணாமலிருந்திருக்கலாம். ஆசை?! போன்லெஸ் சொல்லியிருந்திருக்ககலாம். சொல்லாததுதான்.!!
அந்த டென்டிஸ்ட் டாக்டர். சுந்தர ராஜன் அவருக்குன்னு பிரத்யோகமாக முத்துமுத்தாக அழகிலும், வைரம் போன்ற உறுதியிலும் மிக்க டென்சர் செட்டை(பல் செட்டை) அவருக்காகச் செய்து கொடுத்தார். கொடுக்காமல் இருந்திருக்கலாம்!.
முறுக்குக் கூட கடிக்கலாம்னு சொன்ன சீன டாக்டரை நம்பி என்வி ஆர்டர் பண்ணி சாப்பிட கடக்குன்னு ஒரு சப்தம் காதைப் பிளந்தது. ஏரோப்பிளேன் ஏறினால் விர்ர்னு நகர்கையில் ஒரு சப்தம் காதை அடைக்குமே?! அதுமாதிரி!! அடைக்க, உடைந்தது சிக்கன் எலும்பல்ல.. பிரத்யோகமாய்ச் செய்த டென்ச்சர் செட் ! மாற்றணும்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டுத வந்தவர் வீட்டில் பீரோவைத் திறந்து தேடினார்.
சமீபத்தில் வாங்கிய டைமண்ட் வளையல் வைக்கும் நகைப்பெட்டிக்குள் ஒரு பிரத்யோக பிளாஸ்டிக் குப்பிக்குள் டென்சர்(பல்செட்டை) கழற்றி தண்ணீர் ஊற்றி நாளை டாக்டரிடம் போகும் வரை பாதுகாப்பாக இருந்தால்தான் மாற்ற முடியும்.! அதுவரை இதில் பாதுகாப்பாக வைக்கலாம்னு வைத்து இறுக மூடி போட்டு குலுக்கிப் பார்த்தார். அழகாய் லொட லொடத்தது நகைபோல் சப்தமிட்டது!… உடைந்த டென்ச்சர் செட்!.
அன்றுஅவர் வயோதிக்கத்தில் மறந்து சரியாய் பூட்ட மறந்த பீரோவை இரவு வந்த திருடன் திறக்க அது கைக்கு எளிதில் சிக்கியது அவனும் அதை எடுத்துக் குலுக்க, அதே.. லொட லொடா சப்தம் ! வடிவம் பார்க்கியயில் வருடிப் பார்க்கையில் பூக்களை மிஞ்சிய மென்மை தென்பட நகைஎன்று எண்ணி லபக்கிப் போனான்.
காலை எழுந்த கனகாம்பரம் காணாமற்போன டென்ச்சருக்காக கவலைப்பட, பகலில் திருடன் ‘அடச் சீ! இதையா திருடி வந்தோ?’மென வருந்தி வீச… ‘நல்ல அட்டைப் பெட்டி போய்விட்டதே!’ என வீட்டுப் பெண்கள் விசனப்பட…
அந்த டென்ச்சர் டைமண்டு…. பலரை மண்டாக்கிய மகிழ்ச்சியில் சிரித்தது பொய்யாய்.. உடைந்து போன டென்ச்சர் பல்செட் உதவியோடு!