ஒரு விடிவெள்ளி உதயமாகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 313
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த வீட்டின் முன் மண்டபம் பளீரென்று சுத்த மாய்க் காட்சி தந்தது. அங்கே, கிழக்குத் திசையை நோக்கியவாறு போடப்பட்டிருந்த ஒரு, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் சுலைமாலெவ்வை. முன்புறமாய் அவரின் மூத்த மகள் சபீனா, ஒரு, கைக் கதிரையில் அமர்ந் திருந்தாள். இருவரின் வதனங்களிலும் ஆர்வமும், உவகையும் அலைமோதின.
சுலைமாலெவ்வையின் உடல் சற்றுத்தளர்ந்து காணப் பட்டபோதிலும் அவரின் இதழ்கள், உருட்டி விட்டுக்கொண் டிருந்த வார்த்தைகளில், தளர்ச்சியைச் சற்றுமே காண முடியவில்லை. ஒரு முக்கியமான விடயத்தை தன் மகளிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“மகள், கலியாணரோட்டில் பெரிய சில்லறைக் கடை வச்சிருக்கிற அலியார்ர மகனத் தெரியுமா உங்களுக்கு?”
“அவர் ஓரளவு தான், எனக்குத் தெரியும் வாப்பா.”
”அவர் நல்ல வசதிக்கார ஒரு புள்ள. கெதியிலது நல்லா முன்னேறிட்டார். கிட்டத்தில அவர் தனது பாவிப்புக்காக, விலை கூடிய ஒரு புதிய மொடல் காரும் எடுத்திருக்கார். நேரத்தோட அவர்ர பேரில ஒரு லொறியும் ஓடுது. இப்ப இருபது இருபத்தைந்து நாளைக்கு முதலில் சாளம் பைக்க, பதினைந்தேக்கர் காணியும் வாங்கி வச்சிருக்கார். நல்ல வடிவான ஒரு புள்ளயுந்தான். அவருக்கும் நம்மிட ஹிதாயாவக் கலியாணம் முடிக்கிறத்துக்கு நல்ல விருப்பம் போலவும் தெரியிது. நான் இன்டைக்குக் காலயில அந்தக் கடைப்பக்கமாப் போனாப் போல அவர்ர வாப்பா, என்னக் கடைக்குள்ள கூட்டி வச்சி, ‘உங்கட மகளுக்கும், மருமக னுக்கும் நீங்க சீதன ஆதனமா எழுதிக் கொடுத்த-இப்ப அவக இருக்கிற அந்த வீடு வளவ மாத்திரம் தந்தாப் போதும்; வேற சீதன் ஆதனம் எதுவுமே வேணா. உங்கட மருமகனுக்கிட்டயும், மகளுக்கிட்டயும் கேட்டு விருப்ப மிண்டாச் சொல்லுங்க இன்னா பொறக்கிறமாதமே கலியா ணத்தையும் வச்சிக்கலாம்.’ அப்படிண்டு சொன்னாரு.
மகள், நீங்க இப்ப நாலு பொம்பிளப் பிள்ளைகளை யும் வச்சிக்கிருக்கீங்க. ஒண்ட விட ஒண்டு நான் முந்தி நீ முந்தி எண்டு வளந்துக்கிட்டிருக்கு. இதற்கிடையில் உங்களுக்கிட்ட நல்ல வசதியுமில்லாமலிருக்கு. வகளக் கரையேத்திறண்டா, இன்னும் எவ்வளவோ ஒழுங்கு களைச் செய்ய வேண்டியிருக்கு. மருமகன்ட யாபாரம் அண்டண்டைய வாழ்க்கைய நடத்தத்தான் காணும். இதையெல்லாம் யோசிச்சுக்கங்க வலியவருகிது சீதேவி. தட்டிவிட்டிராதிங்க.”
“ஹா… நல்ல ஒரு மாப்பிள்ளதான். லேசா வருகிது. அவர, மகள் ஹிதாயாவுக்குக் கலியாணம் முடிக்கிறத்துக்கு எனக்கும் நல்ல விருப்பமாத்தானிருக்கு. எதுக்கும், அவட வாப்பாக்கிட்டயும் கேட்டுச் சொல்றன்.”
அதே தினம். வீட்டின் அதே மண்டபத்தில் மதிய உணவை அருந்திவிட்டு, சாய்வு நாற்காலியில் சாவகாச மாய்ப் படுத்திருந்தார் இஸ்மாயில். அப்போது அங்கு வந்த சபீனா, தன் கணவனான இஸ்மாயிலின் பக்கமாக பட்டிருந்த ஒரு கதிரையிலே அமர்ந்து கொள்கிறாள்.
இரண்டு மூன்று நிமிடங்கள், மெளனமாகவே விடை பெற்றன. சாய்வு நாற்காலியில் படுத்திருந்த இஸ்மாயில் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறார்.
ஏதோ, கதைக்க வேண்டுமென்பதற்காக,
”புள்ள, ஊர்ப் புதினங்கள் ஏதும்…” என்கிறார். தழ்களில் புன்னகையொன்று நெளிந்து மறைகிறது.
காரணத்தோடு வந்திருந்த சபீனா, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முனைந்தாள்.
“இண்டைக்கு அப்படி ஒண்டுமில்ல. ஆனா. நம்மிட குடும்ப விஷயம் ஒண்டுதான் கதைக்க இருக்கு…” தனது முதுகை கதிரையிலே இணைத்துக் கொண்டு உஷா ரானாள்.
“ஆ…அப்படியா. அது முக்கியமே. சரி, அதைச் சொல் லுங்க.” இஸ்மாயிலின் புருவங்கள் சற்று மேலே உயர்ந்து பழைய நிலைக்கு மீள்கின்றன.
இப்போது சபீனா, தனது தந்தையான சுலைமா லெவ்வை சொன்ன திருமண விடயத்தையும், தமது நிலை யையும் தன் கணவனிடம் முழுமையாக எடுத்து இயம்பி னாள். அதனை நன்கு கிரகித்துக் கொண்ட இஸ்மாயிலின் வதனம் சற்றுச் சிவந்து போனது.
“புள்ள சபீனா, நம்மிட மகள் ஹிதாயா,ஜீ.சீ.ஈ. ஓயெல்ல ஏழு டியும், ஒரு சீயும் எடுத்து நல்ல கெட்டித் தனமாப் பாஸ் பண்ணியிருக்கு. இப்ப ஏயெல்லயும் நல்ல ஆர்வத்தோட படிச்சிக்கிட்டிருக்கு. இந்த நிலையில புள்ள யத்திடீரெண்டு நிப்பாட்றதா? என்ன மடத்தனம். அவவும் படிச்சு கொஞ்சமாவது ஒரு நல்ல நிலைக்கு வந்திரட்டுமே. இத அவ கேள்விப்பட்டா எவ்வளவு வேதனைப்படுவா. இப்ப என்ன அவவுக்கு வயதா போச்சி… கலியாணத்த முடிச்சிக்கேலாதா, பெரிதாக வருகிறது என்கிறத்துக்கா கவும் நாம மயங்கிப் போகப்படா, நடக்கிறது எப்பயும் நடந்தே தீரும். நிதானமாக நடந்து கொண்டு வருவம். எதற்கும், இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்களன் ” என்றார்.
அதனைக் கேட்ட சபீனாவின் வதனம், ஓங்கி அறைந் துவிட்டது போல சிவந்துபோனது. கண்களும் கலங்கிக் கொண்டன.
“நீங்க அவ்வளவு பொறுப்புணர்ச்சியோட இருக்கி றதாகவும் தெரியல்ல. உங்களப் பாக்கிறவௌ எனக்கும் பெரிய யோசனையாயிருக்கு. நாமெல்லாம் இந்த உலகத்தில நீட்டுக்கு இருக்க வந்தவங்க என்பதுபோல உங்கட எண்ணமிருக்கு. உங்கள நம்பினா இந்த நாலு பொம்பிளப் பிள்ளைகளையும் சும்மா அப்படியேதான் வச்சிக்கிருக் கணும் போலவும் தெரியிது.” பட பட வென்று பொரிந்து தள்ளினாள் சபீனா.
“நம்மிட புள்ளைகள சும்மா வச்சிக்கிருக்க வேண்டு மென்று எனக்கு மட்டும் என்ன? ஒரு சமூகத் ஆசையா தினுடைய முன்னேற்றம் பிரதானமாக, பெண்களின் கல்வி யிலேதான் தங்கியிருக்கிறது என்று பலரும் கருதுகின் றார்கள். அதனால், நம்மிட பிள்ளைகளும், கொஞ்சம் நல்லாப் படிச்சிரட்டுமே என்றுதான் நானும் நினைச்சன். ஆனா… உங்களப்பாத்தா என்னிலதான் முழுக்க முழுக்கப் பழியப் போர்ராப் போலவும் தெரியிது. இந்தக் காரியத்த புள்ளையும் விரும்பிட்டிண்டா, எனக்கொண்டுமில்ல.”
“என்ட புள்ள என்ட சொல்லக் கேட்காம விடமாட்டா.”
“அப்படிண்டா நாம என்னத்துக்கு அத நமக்குள்ள வச்சிக்கிட்டு யோசிச்சு யோசிச்சு இருப்பான். அவவயும் இப்பவே இஞ்ச கூப்பிட்டு விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டுவமே.” இது இஸ்மாயில்.
”ஓம்…ஓம்…அப்படியே செய்வம்” என்றாள் சபீனா.
அதன் பின்னர், சில நிமிடங்களிலேயே ஹிதாயா அங்கே வரவழைக்கப்பட்டாள்.
வந்தவள், தமது பெற்றோரின் பணிப்பின் பேரில், அவர்களின் எதிரே ஒரு கதிரையில் உட்கார்ந்து கொள் கிறாள். மறுகணமே, அவளிடம் சபீனா, தான் வேண்டிக் கொள்ளவிருந்த விடயத்தின் முன்னுரையாக, தனது தந்தை கொண்டுவந்த திருமண விடயத்தைப்பற்றியும், தமது நிலைமையை இட்டும் எடுத்துக் கூறினாள்.
அதனைச் செவிமடுத்த ஹிதாயா, முதலிலே, அங்கே வீற்றிருந்த தனது தந்தையை நோக்கியே பார்வையை வீசினாள். சோகம் அவள் முகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
“வாப்பா, நீங்களுமா இதற்குச் சம்மதிச்சிங்க” என்றாள்.
“சேச்சே… இது எனக்குச் சம்மதமில்ல. படிப்ப இடையில நித்தாட்டிப்போட்டு அதச் செய்யிறத் துக்கு எனக்கு விருப்பமில்ல. நீங்க நல்லாப்படிச்சு, நல்ல ஒரு நிலைக்கு வரணும். அதுக்குப்பிறகுதான் கலியாணம் எண்டு ஒண்டச் செய்யணும். அதுதான் என்ட விருப்பம். உங்கட மூத்தப்பாதான் இந்தக் கலியாணத்தக் கொண்டு வந்த. உங்கட உம்மாவும் அத நல்லா விரும்புறா. நீங்களும் அத விரும்பினா எனக்கொண்டுமில்ல.”
இந்தச் சந்தர்ப்பத்தில், சபீனாவும் வாய் திறந்தாள்.
“மகள், உங்கட வாப்பா நீட்டுக்கு இப்படித்தான் கதைத்துக்கொண்டிருப்பார். அத விட்டிட்டு என்ட சொல்லக் கேளுங்க. மாப்பிள்ள நல்ல ஒரு பிள்ள. நல்ல வசதியோட இருக்கார். நாம், கஷ்டமான நிலையில் இருக்கம். இது நல்லதொரு சந்தர்ப்பம். தட்டி விட்டிராதீங்க.”
“உம்மா,நாம கஷ்டமான நிலையில் இருக்கிறம் என்பதும், அந்த நிலையிலும் ஒரு நல்ல மாப்பிள்ளை லேசாய் வருகிறார் என்பதும் உண்மைதான். என்டாலும், அதற்காக என்ட படிப்பை இடை நடுவில் விட்டுவிட நான் ஆயத்தமில்ல. நல்ல ஒரு கலியாணமெண்டு செய்து வைத்த சில கலியாணங்கள், சில நாட்களிலேயே வெடித்துச் சிதறிப் போனதை நாம் அறியக்கூடியதாகவிருக்கிறது. ஆகை யினால், நாம மிகவும் நிதானமாகலிருந்து செயற்பட்டுக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் அல்லாஹ் வழி வகுத்துத்தருவான்.
நாம விஷயங்கள குறுகிய வட்டத்துக்குள்ள இருந்து பார்க்காம உலகத்த சற்று விரிவாகவும் நோக்க வேண்டும்.
ஒரு மனிதன்ட வாழ்க்கையில் திருமணம் முக்கிய மானதுதான். அதுக்காக, கல்வியை அப்படியே உதாசீனம் செய்துவிடுவது மடத்தனம். நல்ல கல்வியைத் தேடிக் கொள்வதற்காக திருமணத்தைக் கொஞ்சம் பின்தள்ளி வைத்துவிடுவது கூட பிழையில்ல.
நம்மிட சமூகத்தில, பெண்களைப் பொறுத்தவரை யில, இன்னும் நாம பின்தங்கிய நிலையிலேயே இருக்கம். பெண்கள் நல்ல கல்வி அறிவுடையவர்களாக இருந்தால் தான், நமது பிற்சந்ததியினரும் சிறப்பாக விளங்குவார்கள். அதற்காக நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம், கொஞ்ச மாவது தியாகங்களையும் செய்யத்தான் வேண்டியிருக்கு.
என்னடா, நம்மிட புள்ள நம்மிட சால்லக் கேட்காம எதை எதையோ கதைத்துக்கொண்டு போகுது என்டு நீங்க என்ன வித்தியாசமா நினைக்க வேண்டாம். உங்களையும் வாப்பாவையும் என்ட உயிரிலும் மேலான வர்களாகவும், மிகவும் உயர்ந்தவர்களாகவும் மதிக்கன். நான் படிப்பில நல்ல ஒரு நிலைய அடைந்தத்துக்குப்பிறகு நீங்க ஆரச் சொன்னாலும் அவர நான் திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாக இருக்கன். இப்ப நான் தொடர்ந்து கல்வி கற்க வழி விடுங்க.” ஹிதாயா, தாயிடம், விடயங் களை விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்து இயம்பினாள்.
அதனைச் செவியுற்ற சபீனா, அதிர்ந்து போனாள்; எதுவுமே பேசமுடியாது சிலைபோல் அமர்ந்திருந்தாள்.
இவ் வேளையிலே இஸ்மாயில், தன் மனைவியை கனிவாக நோக்கி, ‘புள்ள சபீனா, இப்பவாவது உங்களுக்கு விஷயங்கள் விளங்கியிருக்கு மெண்டு நினைக்கன். நாம இப்படியான ஒரு பிள்ளயப் பெற்றதுக்காகப் பெருமைப் படணும். இன்னும் பிடிவாதமா நிற்காம, பிள்ள படிக் கட்டும். வழிய விடுங்க” என்றார்.
அப்போது அங்கு வந்த ஹிதாயாவின் மூன்று தங்கை மாரும், தமது ‘ராத்தா’ வின் முடிவைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்ததோடு தமது பாராட்டையும் அவருக்குத் தெரி வித்துக் கொண்டனர். மறுகணம் அவர்கள், தமது தாயின் பக்கமாகத் திரும்பி, ஒருமித்த குரலிலே,
”உம்மா,ராத்தா எடுத்த முடிவு சரியானதுதான். அவவ நாங்க ராத்தாவாகப் பெற்றதையிட்டு பெருமைப் பாரம். அவ தொடர்ந்து படிக்கட்டும். தடுக்காதீங்க” என்றனர்.
இப்போது சபீனாவின் முகத்தில் அப்பிக்கிடந்த கடுமை மெல்ல மெல்லக் கரைகிறது.
– 1992 ஜூன் 16