ஒரு பூங்கா ஓய்வெடுக்கிறது..!





அன்றைக்கு அவன் ஊரில் நடந்த மலர்க்கண்காட்சியைப் பார்க்க மனைவியோடு போயிருந்தான் பூபாலன். ஓய்வு நாளில் போனால் கூட்டமாயிருக்கும் வயதான காலத்தில் இடித்துக் கொள்ளாமல் பிடித்துக் கொள்ளாமல் நிம்மதியாகப் பூக்களை ரசித்துப் பூரிக்கத்தான் போனான்.

அன்றைக்குன்னு பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்களைக் கூட்டிவந்து மண்டியிருந்தது ஆசிரியர் கூட்டம்!! . சரி, ‘ஒரே வகுப்பறை பாட அலுப்பிலிருந்து’ ஒரு மாறுதலுக்காக மாணவர்கள் வந்திருக்கிறார்கள். பாடத்தை விட்டுப் பூங்காவில் இயற்கையை நேசிக்கப் படிக்கட்டும் என்று நினைத்தான்.
கண்காட்சி உள்ளே, ஒரு உள்ளரங்கம் அங்கே கல்லூரி மாணவர்கள் கூடி வந்திருக்கும் மாணவர்களுக்காக ‘கல்சுரல்’ நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். எல்லாரையும் ஸ்டெஜுக்கு அழைத்து பாட்டுக்கு ஆட்டம் போட வைத்தார்கள். குழந்தைகளும் குதியாட்டம் போட்டார்கள்!.
அது பூங்கா என்பதாலா… மலார்க்கண்காட்சி என்பதாலா தெரியவில்லை., எல்லாருமே.. ‘ மலயாள மலர்’ ஆடிய ஆட்டத்துக்கே ஆட்டம் போட வாட்டமாகிப் போனான் பூபாலன்.
அந்த அரங்கில் நிகழ்ச்சி ஏபாட்டாள மாணவர்கள் விவசாயக் கல்லூரியில் விவசாய குரூப்பில் இன்ன இன்ன பாடமிருக்கிறது இது படித்தால் இன்ன இன்ன வேலைக்குப் போலாம்னு சொல்லலாம்தானே?! என்று நினைத்தான்.
ஆனாலும், மனசு பதில் சொன்னது. அதான் பள்ளிக் கூடத்தில் ஆண்டு முழவதும் எந்த வேலைக்கு எப்படிப் போவது என்பது பற்றியே கற்றுக் கொடுக்கிறார்களே?!.. இன்று ஒருநாளாவது… மலர்காட்சியில் அழகுக்கு வைக்கப்பட்ட மலர்கள், , அவை அன்று வந்திருக்கிற மாணவ
மலர்களைப் பார்த்து ரசித்து ஓய்வெடுக்கட்டுமே?!’ என்று சொல்வது போலிருந்தது.
வாயை மூடிக்கொண்டு வீடு திரும்பினான் ஒரு பிளாஸ்டிக் பூவாய் பூபாலன்!