ஏலியன் சுற்றுலா வாசிகள்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 4,480
அவர்களின் ஐடி மற்றும் டிக்கெட்டுகளை நான் சரி பார்த்தேன். அவர்கள் மூவரும் APX1255 கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள். தாராளமாக செலவழித்து பூமியை சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுலா வாசிகள்.
சுற்றுலா வழிகாட்டியான நான் அவர்களை பெங்களூரில் உள்ள ஒண்டர்லா கேளிக்கை பார்க்குக்கு அழைத்துச் சென்றேன். பார்க்கில் உள்ள மற்ற இடங்களில் சில மணி நேரம் செலவழித்த பிறகு, Sky Wheel என்று அழைக்கப்படும் மாபெரும் பெர்ரிஸ் சக்கரம் இருக்கும் இடத்தை அடைந்தோம். 13 மாடிகள் கொண்ட உயரமான கோபுரத்தின் உச்சியில் அந்த ராட்சத சக்கரம் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. சக்கரத்தின் புற எல்லையில் சின்னஞ்சிறு பெட்டிகள். அதில் அமர்ந்திருந்த பெரியவர்களும் குழந்தைகளும் வெளியே பரந்து விரிந்திருந்த பெங்களூர் மாநகரை உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் Sky Wheel பற்றிய எனது அறிமுகத்தைக் கொடுத்து விட்டு, அதை அவர்கள் முயற்சி செய்ய விரும்புகிறார்களா என்று கேட்டேன்.
அவர்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே, “தேவையில்லை. நாங்கள் வசிப்பதே ஒரு Sky Wheelல் தான்.” என்றார்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று புரியாமல் கேட்டேன்.
“நாங்கள் வசிக்கும் APX1255 கிரகம் அதன் சூரிய நட்சத்திரத்தைச் சுற்றி வர வெறும் பத்து நிமிடங்களே பிடிக்கும்.”