ஏகலைவன்





வீட்டுல மாடில ஒரு ரூம் கட்டலாம்னு முடிவு பண்ணி காண்டிராக்டரிடம் பேசி கட்டடம் கட்ட விட்டார் கண்ணபிரான். அவரிடம் ஒப்புக் கொண்டபடி வேலைக்கு ஆட்களைக் கூட்டி வரத் தொடங்கினார் மேஸ்திரி. பத்துபேர் தமிழ்நாட்டுக் காரர்களாக இருந்தால், அதில் ஒரு நாலுபேர் நார்த் இண்டியன்சாக இருந்தார்கள். ‘இதிலென்ன தப்பு என்கிறீர்களா? தப்பில்லைதான். ஆனால், காண்டிராக்டரின் வேலை வாங்கும் திறனை உற்றுக் கவனித்தபோதுதான் ஒன்று புரிந்தது. அவருக்குள் ஒரு ‘துரோணாச்சாரியரின் குரு குணம்’ குடியிருந்தது.

நார்த் இண்டியாக்காரர்களை வெறும் மெட்டீரியல் சுமக்க மட்டும் வைத்துக் கொண்டார். கட்டடம் கட்டுவது, பூச்சுவேலை ஆகியவற்றிற்கு அவர்களைப் பயன்படுத்தவே இல்லை. அவரிடமே கேட்டுடலாம்னு முடிவுபண்ணி கேட்டே விட்டான். “ஏன் வடக்கத்தியர்களை வயசில் சின்னவங்களாயிருந்தும் பூச்சு வேலைக்கெல்லாம் பயன்படுத்துவதில்லை?!’ கேட்டார் கண்ணபிரான். அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொன்னார்.
‘சார், அவனுகளைவிட்டா கூலியும் ஜாஸ்தியாக் கொடுக்கணும்!. அதுமட்டுமல்ல, ‘மேஷன்’ தொழிலைக் கத்துடுவானுக…! மெட்டீரியல் சுமக்க மட்டும் வைத்துக் கொண்டால், வேலையும் நடக்கும்., கூலியும் அதிகமாகாது!’ என்றார் அவர். ஆனால், அந்த வடக்கத்தியர்கள் வேலைக்கு நடுவே நின்று மேஷன் ஆட்களை வேலை நுணுக்கத்தைக் கவனிக்காமலில்லை. ஏகலியவர்களாய் எல்லாம் நடந்தது.
கரெக்ட்டா காங்கிரீட் போடற அன்னைக்கு ‘மேஸ்திரி, காங்கரீட் வேலைக்கு இந்த கூலி பத்தாது. அன்றைய நாளில் வெறும் டீக்கு பதில் முட்டை பஜ்ஜியும் டீயும் வேணும்!! இல்லைனா வேற ஆள் பாத்துக்குங்க!’ என்றார்கள் துணிவாக தெரிந்த தமிழில். காங்கரீட் வேலை நடக்கணுமே கவலைப்பட்டார் மேஸ்திரி.
கூலி கூடுதலாய்க் கொடுக்க வேண்டாம்னது சரிதான் ஆனால் ஏகலைவர்களாய் என்றைக்குக் கூலியை ஏத்தி கேட்கணும்கற ஏகலைவ நுட்பத்தைக் கற்றுக் கொண்டுவிட்டார்க்ளே அவர்கள்.
கலை மறைப்பதற்கு உகந்ததல்ல…!! கற்றுக் கொடுக்க வளர்வது என்பதை மேஸ்திரியோடு கண்ணபிரானும் கற்றுக் கொண்டார்.