என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..?





வந்த மெயிலைப் பார்த்ததும் வஸந்த் தனக்கு வஸந்த காலம் வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தான். ‘எல்லாக் கடனும் தீரும்!’. எதிர்காலம் பட்டுக் கம்பளம் விரிக்கும் நினைக்கும்போதே நெஞ்சு டால் ஏரியாய்ச் சில்லிட்டது!.

அடுத்தநாள்…
அழைக்கப் பட்ட அறைக்குள் போனான்.
‘உட்காருங்க!’ இருந்த மூன்று பேரில் ஒருவர் சொல்ல அமர்ந்தான்.
‘உங்க கதையைத் தேர்வு செய்திருக்கிறோம். போட்டிக்கு வந்த கதைகளில் பாருங்க, உங்க கதைதான் சூப்பர்!’ இது இன்னொருவர்.
‘நன்றி’ என்றான் நளினமாக.
மூன்றாமவர் சொன்னார்… ‘ ஆனால், போட்டிக்கான விதி முறைகளை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கிறது உங்கள் கதை!.’
அவன் அவரை ஆச்சரியமாகப் பார்க்க, அவர் தொடர்ந்தார்.
கொஞ்சம் வார்த்தைகள் அதிகம்!. குறைக்கணும்…! ஒரு நூறு வார்த்தைகள் குறைத்தால்தான் போட்டிக்கான விதிக்குள் அடங்கும்’ என்றார் தன் பங்குக்கு மூன்றாமவர்.
‘சாரி!’.. அது முடியாது! என்றான் வஸந்த்.
‘இது நல்ல வாய்ப்பு வஸந்த்! இழந்தா மீண்டும் வராது! அதிகமான வார்த்தைகளை நீங்க, நீங்களே வெட்டி வீச வேண்டியதுதானே?
‘முடியாது!’ என்றான் தீர்மாணமாக.
நீங்க… இன்னும் பக்குவப்படலைனு தோணுது!
‘நீங்க என்ன நெனைச்சு என்னை அழைச்சீங்க?! என்றான் கோபமாய்.
அவர்கள் ஆச்சரியமாய் அவனைப் பார்க்க…!
‘நான் சிறுத்தொண்டரல்ல… ‘தாய் பிடிக்க தந்தை அரிந்து கரி சமைத்துக் கொடுக்க..!’
என் படைப்பும் எனக்குச் சீராளன் மாதிரிதான். அதற்குத் தாயும் தந்தையுமானவன்நான்..!ஆனால்,நான் சிறுத் தொண்டனல்ல..! சிறுகதை ஆசிரியன்.
‘வெட்டுங்க எஜமான்னா வெட்டவோ…குத்துங்க எஜமான்னா குத்தாவோ இது சினிமா வல்ல..!
சிறுகதைப் படைப்பு!. அது, சினிமாவல்ல சிம்ம சொப்பனம்!
வெளியேறினான்…!!!ஸ்ஸ்
கதை மிகவும் அருமையாக இருந்தது ஒரு சிறுகதை ஆசிரியருக்கு வரும் விமர்சன வெளிப்பாடு என்பது என் எண்ணம். நன்றி,,,,,,,,,,,,………………………………..