எட்டுப்படி சுண்டைக்காய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 2,225 
 
 

தன் தோட்டத்தில் விளைந்த சுண்டைக்காய்களை பறித்து ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு அதை விற்பதற்காக அலமேலு சந்தைக்குப் போனாள். சந்தை திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது. சுண்டைக்காய் கடையை விரிப்பதற்கு இடம் பிடிப்பதற்குள் அலுமேலு வெகுபாடுப்பட்டு போனாள். ஒரு வழியாக தேங்காய் கடைக்காரனின் கடைக்கு பக்கத்தில் அலமேலுக்கு இடம் கிடைத்;தது. கடையை விரித்து அலமேலு உட்கார்ந்ததுமே நான் நீயென்று போட்டிப் போட்டுக் கொண்டு சுண்டைக்காய் வாங்குவதற்காக எல்லோரும் அவள் கடைக்கு முன் குவிந்தனர். ஒரு கூடை நியை இருந்த சுண்டைக்காய் முக்காலவாசி விற்று தீர்ந்துப் போனது.

தேங்காய் கடைக்காரனுக்கு அலுமேலு மீது கோபம் உண்டானது. நாம காலையில இருந்து உட்கார்ந்து இருக்கிறோம், நமக்கு ஒரு தேங்காய் கூட விற்கலியே. ஆனால் இந்த சுண்டைக்காய கூடைக்காரி வந்து உட்கார்ந்த உடனயே அவள் கடை முன்னாடி இப்படி கூட்டம் கூடுதே என்று தேங்காய்க் கடைக்காரன் மனசுக்குள் பொறுமினான். மீதமிருந்த சுண்டைக்காய்களை உலக்கு கொண்டு அளந்துப் பார்த்ததில் எட்டுப்படி சுண்டைக்காய் மீதமிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்ந்திருந்தாள்.

இந்த எட்டுபடி சுண்டைக்காயும் விற்றுத் தீர்ந்துவிடும் என அவள் நினைத்தாள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அலமேலுவுக்கு தாகம் தொண்டையை அடைத்தது. சந்தையின் வாசலில் ஒரு குளிப்பானக்கடை இருந்தது அவளுக்கு நியாபகம் வந்தது. ஆனால் சுண்டைக்காய் கூடையை அப்படியே விட்டுட்டுப் போக அலமேலுவுக்கு மனசு வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தப் போது அவள் கண்களில் தேங்காய்க்கடைக்காரன் தென்பட்டான்.

அவனிடம் சுண்டைக்காய் கூடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அவள் கடைக்குப் போனாள். அலமேலு திரும்பி வந்துப் பார்த்தப் போது அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் சுண்டைக்காய் கூடை இல்லை. அவள் தேங்காய்க் கடைக்காரனிடம் விபரம் கேட்டாள். “என்னது சுண்டைக்காய் கூடையா! என்னம்மா ஏதேதோ கதை சொல்லி நாடகமாடி என்கிட்டயிருந்து பணம் பறிக்க பாக்குறியா?” என்று அலமேலு மீது அவன் பழி சுமத்தினான். தேங்காய்கடைக்காரனின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் அவளுக்கு புரிந்தது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து அலமேலுப் போய்விட்டாள்.

மறு நாள் தேங்காய் கடைக்காரன் மதிய சாப்பாட்டிற்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தப் போது அவனுடைய தேங்காய் கடையில் அலமேலு உட்கார்ந்திருந்தாள். “ஏய் நீ எதுக்கு என்னோட கடையில உட்கார்ந்து இருக்க?”

“என்னது உன்னோட கடையா! இது என்னோட கடை. பொம்பளையை ஏமாத்தப் பார்கிறியா?” இரண்டு பேரும் மாறி மாறி கடையை சொந்தம் கொண்டாடினர். அவர்களின் வாக்குவாதம் முற்றியதில் சந்தைக்கு வந்திருந்த ஜனங்கள் எல்லோரும் தேங்காய் கடையின் முன் குவிந்தனர். கூட்டம் கூடியதும் அலமேலு நீலக்கண்ணீர் வடித்து கடையை சொந்தம் கொண்டாடி வாதாடினாள். கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் தேங்காய் கடைக்காரனை கேள்வியால் துளைத்து எடுத்தனர்.

ஒருவழியாக தேங்காய் கடைக்காரக்கரன் உண்மையை ஒத்துக்கொண்டான். ‘ஏய்யா நீயும் ஒரு வியாபாரியா இருந்துக்கிட்டு இன்னொரு வியாபாரியோட வயித்துல அடிக்கிறியே! இது உனக்கே அநியாயம்மா தெரியல? என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டக தேங்காய் கடைக்காரன் பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்த்து நின்றான்.

பிறகு எட்டுப்படி சுண்டைக்காய்க்கு உண்டான பணத்தை எடுத்து தேங்காய் கடைக்காரன் அலமேலுவுக்கு கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்டவள் சந்தோஷமாக தன் வீடு நோக்கிச் சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *