எச்சிலை முன்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 153
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. உள்ளே இடமில்லை, ‘ஏய், உன்னைத் தேடினேன் என்ற என் நண்பன் சாம் என்னைக் கட்டிப்படித்து ஒரு உலுக்கு உலுக்கினான். ‘எனக்கும் போரடிச்சிப் போச்சிடா’, என்று கூறி அவனது பிடியில் மகிழ்ந்தேன்.
மணப்பெண் டாக்டர், மாப்பிள்ளை என்ஜினியர் பெரிய இடத்துக் கல்யாணம். மாபெரும் நகராட்சிக் கல்யாண மண்டபம். கூட்டம் நிரம்பி வழிந்தது.
என் நண்பன் எப்படியோ இரு நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டான். இருவரும் உட்கார்ந்தோம். ஒரே அரட்டை, வீணான விமர்சனங்கள். வேண்டாத உரையாடல்கள். என்ன செய்வது? மாட்டிக் கொண்டேன்.
பக்கத்திலிருந்த ஒருவரிடம், ‘மாப்பிள்ளை பையன் அரசாங்க என்ஜினியரா, அல்லது…’ ? என்று கேட்டான் சாம். கேள்வியை முடிக்குமுன் அவர் மாப்பிள்ளையை கண்டதார்? பெண்ணைக் கண்டதார்? கல்யாண கார்ட் வந்தது. நான் கவர் கொண்டு வந்தேன் சாப்பிட வேண்டியது. கவரை கொடுக்க வேண்டியது அவ்வளவுதான் என்றார் விரக்தியோடு.
வரவேற்பு நிகழ்ச்சிகளை இருவரும் இணைந்தே இரசிக்க ஆயத்தமானோம். அதற்குள் ஒரு கூட்டம் சாப்பாட்டு அறையை முற்றுகையிட்டது. வேறுவழியில்லாமல் சாப்பட்டுப் பந்தியும் ஆரம்பமானது.
மண மேடையில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் யாவும் சிதைந்து சிதறின, வாய் ருசிக்கு முன் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் வாய்பொத்தி நின்றன.
நண்பனின் அரிப்பினால் நாங்களும் ‘பந்திக்கு முந்தப் படை எடுத்தோம். முதற்பந்தி முடிந்ததும் முடியாததுமாயிருந்தது. கூட்டு குழம்புகளின் நறுமணம் மூக்கை நெருடியது.
கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் ஒன்றாகச் சாப்பாட்டு அறையினுள் நுழைந்து கொண்டிருந்தோம். திடீரென்று நண்பன் சாமைக் காணவில்லை. அங்கும் இங்குமாய்ப் பார்த்தேன். ஆள் அகப்படவில்லை.
ஜேக்கி என்று சத்தம் கேட்டுத் திரும்பினேன். சாம் தான் எனக்குத் ‘திக்’ என்றது ‘எனக்கொரு இடம் கிடைத்து விட்டது’ என்று கூறி இரு கைகளையும் ஆனந்தமாக ஆட்டினான். யாரோ சாப்பிட்டு எழும்பிய எச்சிலை முன் உட்கார்ந்திருந்தான்.
ஆத்தோடு போனாலும் சோத்துக்குள் இருக்கான் சொக்கப்பன் என்ற பழமொழி நினைவிற்கு வந்தது.
நண்பனை எடைபோடலானேன்.
என் முன்னால் ஓர் அம்மாவும், மகளும் நின்று கொண்டிருந்தனர். அந்தம்மா தன் மகளைள் பார்த்து, தாயும் பிள்ளையுமனாலும் வாயும் வயிறும் வேறே ‘உனக்கு ஓர் இடத்தை ஓடிப்பிடிச்சிக்கோ’ என்றாள்.
ஆளுக்கொரு பக்கம் பறந்து ஓடினார்கள்
மகளுக்கு ஒரு இடம் கிடைத்து விட்டது.
அதாவது அவள் ஓர் எச்சிலையின் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
பாயாசம், சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு நபரின் பின்னால் நின்று நாற்காலியைப் பலமாகப் பிடித்து கொண்டாள்.
‘நான் தயிர் சாதம் சாப்பிட வேண்டாமா? பன்றிக் கூட்டங்கள்’ என்று முணு முணுத்தார் பாயாச ஆசாமி.
நாற்காலி ஆடிய ஆட்டத்தில் அவர் அரைகுறையாக விழுங்கி அவசர அவசரமாக எழுந்தார். இலையில் நிறைய மிச்சங்கள் அளைந்து கிடந்தன. இன்னொரு பெண் அடுத்த பந்திக்காக எச்சிலை முன் தவம் இருந்தாள். அவளுக்கு ஓர் இடம் கிடைத்து விட்ட இனிப்பில் நாக்கில் நீர் சொட்டியது.
மெதுவாக நண்பனை ஏறிட்டுப் பார்த்தேன். இலையிலுள்ள ஒரு எலும்பை எடுத்துக் கடித்து மூளையை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் ஓர் உயர் அதிகாரி பரிதாபமாக இடம் பிடிக்க நின்று கொண்டிருந்தார். வீட்டில் சாப்பிட்டு சலித்துப் போன அநேகருக்குக் கல்யாண விருந்து ஒரு ‘சேஞ்ச்’ மாதிரி.
கல்யாண வீடுகளின் அன்பு, அன்னியோன்யம், பரிவு, பாசம் எல்லாம் காற்றோடு போய், கவர் கொடுப்பதும், வயிர் நிரம்புவதுமாக அன்னியோன்ய ஐக்கியம் அந்நியமாகப் போயிற்று.
மணமக்களின் பெற்றோர்களைப் பார்த்து பணக்கவர்களைத் திணித்தனர். ஆனால் அவர்களோ சாப்பாடு தட்டி விடுமோ என்ற அச்சத்தில் ஜுரம் தலைக்கேறி நின்றனர்.
தாம்பூலம், சந்தனம் போன்ற மங்கலப் பொருட்கள் ஏதும் அங்கில்லை மட்டன் மிச்சங்களும், எலும்புத் துண்டுகளுமாகச் சிதறிக் கிடந்தன.
‘ஜேக்கி தெக்கு முனையில் ஒரு இடம் இருக்கு, அங்கே ஓடு’ என்று சாம் கூச்சலிட்டான்.
‘நீ உணவுப் பிரியனாயிருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை’ என்ற திருமறைக் கூற்றை நன்கு ஜீரணித்தவனாய் வெளியே நடந்தேன்.
– மே 1994 நிருபம்.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
