ஊர்ப் பற்று!





காலைச் சூரியன் ரொம்பப் பிரகாசமாக ஒளிர்ந்து சூட்டைப் பரப்பிக் கொண்டிருந்தது. காலை எட்டு மணிக்கும் மார்கழி மாதக் குளிர் தாங்காது உடம்புக்குக் கொஞ்சம் சூரியவொளியின் சூட்டைக் கேட்பது போலிருந்தது. சாமிவேல், தேவகியிருவருக்குமே வயதுப் போன நிலையில் தெம்பாயிருக்க மனதைரியமிருந்தாலுங் கூட இப்போதெல்லாம் அவ்வளவு சுறு சுறுப்பாக எழுந்து நடமாடிட முடியாமையினால் சுமதி தயாரித்துக் கொடுத்த டீயைக் குடித்து விட்டு உணவு தயார் செய்யும் வரை சிறிது நேரம் வெயில் காய்ந்திட எண்ணி வாசலில் போய் இரண்டுப் பேரும் கதிரைகளில் அமர்ந்துக் கொண்டார்கள். வெயில் பட்டு உடம்புக் குளிரடங்கிட கொஞ்சம் சுகமாகத் தானிருந்தது.
காலை எழுந்தால் இப்படித்தான் பொதுவாகயிருவருக்கும் பொழுதுக் கழியும். சுமதியும் பலவருடக் காலமாக அவர்களிருவருக்கும் எந்த வகையிலும் குறையில்லாமல் எல்லா சந்தர்ப்பத்திலும் அக்கறையோடு நடந்துக் கொள்வாள். இருவருக்கும் ஏற்றாற் போல் வயதுக்குகந்த ஜீரணிக்கக் கூடிய உணவுகளையேத் தயார்செய்து நேரத்துக்கு நேரம் சுடச் சுட சாப்பிடக் கொடுத்திடுவாள். குறையிருந்தாலும் நிறையிருந்தாலும் நிறையை மட்டுமேக் கண்டுக் கொள்ளும் வகையில் இரசித்து ருசித்து உண்பார்கள். சுமதியும் இவர்களுக்கு நன்றாகப் பழக்கப் பட்டவலென்பதால் இவர்களைப் பற்றி சுமதிக்கும், சுமதியைப் பற்றி இவர்களுக்கும் நல்லதொரு புரிந்துணர்வும் நம்பிக்கையும் அந்த வீட்டிற்குள் புகுந்து நன்மைச் செய்துக் கொண்டிருந்தன. சாமிவேலுவுக்கும் தேவகிக்கும் முதுமையைப் போக்கிட குறையின்றித் தனிமையின்றி சந்தோசமாய்க் காலம் கழித்திட பெரியதொரு கொடுப்பனையாய் அமைந்து விட்டது.
சாமிவேலுவும் தேவகியும் இந்த ஊர் மண்ணிலேயேப் பிறந்து வளர்ந்துக் கல்விக் கற்றவர்கள். தேவகி மேல் சாமிவேலுவுக்கு பாடசாலைக் காலத்திலிருந்தே ஒரு ஆசையிருந்தது. கட்டினாளிவளைக் கல்யாணம் கட்ட வேண்டும். வெளியிலெங்கும் பெண்ணைத் தேடியழைந்து செய்யக் கூடாதென்று. அதேப் போன்று சாமிவேலுவும் படித்துப் படித்த பாடசாலைக்கே ஆசிரியராய்ப் பொறுப்பேற்று வந்த போது பெரியப் பெருமையாயிருந்தது. அவரது குறிக்கோலுமதுவாகத் தானிருந்தது. சாமிவேல் போன்ற நல்ல மனிதருக்கு பெண் தேடியலைந்து பார்க்க வேண்டிய கட்டாயமிருக்கவில்லை. எத்தனையோப் பேர் பெண் கொடுக்க முன்வந்த நிலையில் அவர் விருப்பப்படி தேவகியின் தந்தையிடம் தேவகியைப் பெண் கேட்டப்போது உடனே சரியெனக் கூறிட இரு வீட்டாரின் விருப்பத்துடனும் சந்தோசத்துடனும் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் செய்ய தீர்மாணித்து செய்து முடித்திட வாழ்க்கையை எதிர்ப்பார்ப்புகளுடனும் சந்தோசத்துடனும் இனிமையாய் ஆரம்பித்தார்கள்.
தேவகியும் பெயருக்கேற்றாற் போல் அழகு அமைதி அடக்கமென ஒரு நல்லக் குடும்பத்துக்கு மருமகளாயிருக்கக் கூடிய தகுதியோடு சிறப்பாய் சாமிவேலுவின் மனசுக்கும் செய்கைகளுக்கும் ஒத்துப் போகுமளவற்கு அமைந்து விட்டாள். இருவரின் இனிமையான இல்லற வாழ்க்கைக்கு ஆதாரமாய் ஐந்து பிள்ளைகளின் பெற்றோருக்கானத் தகுதியைப் பெற்றார்கள். சாமிவேல் ஆசிரியர் என்பதாலேயோ என்னவோத் தெரியவில்லை. பிள்ளைகளும் ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டுப் படித்து வைத்தியர் ஆசிரியர் நீதிபதியென ஒவ்வொருவரும் நிலையான நல்லத் தொழில்களில் பெரிய வருமானம் பெறும் வாய்ப்புகளுடனேயே வாழ்க்கைகளை ஆரம்பித்தார்கள்.
சாமி;வேலுவுக்கும் தேவகிக்கும் இனியில்லையென்ற சந்தோசம். பிள்ளைகளின் சிறந்த வளர்ச்சியின் வெளிப்பாடு பெற்றோர் வளர்ப்பின் பெருமதித் தானே!. அந்த வகையில் பிள்ளைகளைப் பெற்று நன்றாக வளர்த்துப் படிக்க வைத்து தொழில் வாய்ப்புகள் பெறப்பட்டு வாழ்க்கைகளை ஆரம்பித்துள்ள பிள்ளைகளின் பெருமையையும் மரியாதையையும் சேர்த்தது பெற்றோருக்கு.
இரண்டுப் பிள்ளைகள் காதல் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாடு நோக்கிப் பறந்தார்கள். மற்றைய மூவரும் கிராமத்தில் தொழில் செய்துக் கொண்டு வாழ்வது கொஞ்சம் சிரமமாயுள்ளதென்றுக் கூறி திருமணம் முடித்து நகரம் நோக்கிப் போய்விட்டார்கள் . கிராமத்தில் வாழக்கூடிய சாத்தியங்கள் பலயிருந்தும் பெற்றோர் எத்தனையோக் கூறியும், நாம் கற்றக் கல்விக்கும் எமது தொழிலுக்கும் வளர்ச்சியற்றயிந்தக் கிராமத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்திருந்து காலம் தள்ள முடியாதென்றுக் கூறிவிட்டு ஊரை விட்டுச் சென்றார்கள்.
இதைக் கேட்க சாமிவேலுவுக்கும் தேவகிக்கும் மிகுந்தக் கவலையாகத் தானிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் பிள்ளைகளைக் கட்டாயப் படுத்த மனசுயிடம் கொடுக்கவில்லை. எம்மால் பிள்ளைகள் சந்தோசமாய் வாழ்ந்தார்கள் என்றிருக்க ணே;டுமேத் தவிர, தோற்றுப் போனார்கள், கஷ்டப் பட்டார்கள் எனயிருக்கக் கூடாதென்று நினைத்து மெனமானார்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலமைகளும் நமக்கு ஒத்துழைக்காதப் போது ஓரளவு நாமும் புரிந்துணர்வோடு எமது உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஓரங் கட்டி ஒதுக்கி விட்டு சில விடயங்களைக் கண்டுக் கொள்ளாதிருப்பது மட்டுமே சரியாகுமென நினைத்தார்கள்.
சாமிவேலுவுக்கும் அந்தக் காலத்திலிருந்தே மனதிலொரு ஆசையிருந்தது. எம் வீட்டுப் பிள்ளைகள் படித்து நல்ல நல்லத் தொழில்களுடன் இந்தக் கிராமத்திலேயே கணவன் மனைவிப் பிள்ளைகளென்று ஊர்ப் பாடசாலையில் கற்றுத் தேர்ந்ததன் பலனாய் ஊருக்கு சேவை செய்துக் கொண்டு மகிழ்ச்சியாய் கௌரவமாய் வாழ வேண்டுமென்று. ஆனால் அந்த விருப்பங்களை எந்தப் பிள்ளையிடமும் திணிக்க முடியவில்லை. இவரின் விருப்பங்களை எந்தப் பிள்ளையும் ஏற்றுக் கொள்ளும் மனதோடிருக்கவுமில்லை.
சாமிவேல் கூறுவதில் சில ஞாயங்களிருந்தாலும், பிள்ளைகள் கூறுவதில் பல ஞாயங்களிருந்தன. ~~அப்பா நீங்கள் எங்களை வளர்த்ததுப் போல் எங்களால் எங்கள்ப் பிள்ளைகளை வளர்க்க முடியாது. நாங்களும் கொஞ்சம் வசதியானயிடங்களில் வீடு, தொழில், கார் என காலத்துக்கு ஏற்றாற் போல் நாகரீகமாய் வாழ வேண்டும் தானே!. கிணற்றில் தண்ணீர் இழுக்கவும், ஒருமைல் தூரம் நடந்துப் போய் பொருட்கள் வாங்கி வந்து குறுக்குப் பாதையிலிருந்தே வீட்டுக்கு கால்மைல் ஏற்றமேறி சறுக்கு மண்ணில் ஏறிட முடியாமல் ஏறி ஒருப் பயணம் போவதென்றாலும் வாடகைக் காராயிருந்தாலுங் கூட வீட்டு வாசலுக்கு வர முடியாமலிருக்கும் நிலையில் இன்னுமின்னும் நாகரீகமில்லாத அந்தக் கால வாழ்க்கையை வாழ எங்களுக்கொன்றும் தலையெழுத்தில்லையே!. எங்களுக்கென்று இறைவன் கொடுத்துள்ள சுகமான அதிஷ்டங்களை நாமும் விருப்பத்தோடு விரும்பியவாறு அனுபவிக்க வேண்டாமா? நீங்களும் எங்களுடன் வாருங்கள். நாம் உங்களிருவரையும் எந்தக் குறையுமில்லாது கவணித்துக் கொள்கிறோம். என்று வாதாடினார்கள்.
சாமிவேலுவுக்கு இந்த ஊரை விட்டுப் போக மனசு வரவில்லை. அவரின் வருமானத்துக்கு ஏற்றாற் போல் ஓரளவு வசதியான வீடாக மூன்று நான்கு அறைகள் வைத்து அந்தக் கிராமத்தில் ஓரளவுப் பெரிய வீடாகக் கட்டி வாழ்ந்து அந்த வீட்டில் ஐந்துப் பிள்ளைகளின் நல்ல மங்களகரமான தேவைகளைச் செய்து பேரப் பிள்ளைகள் கண்டு மகிழ்ந்த வீட்டை அத்தனைச் சீக்கிரம் பிள்ளைகள் கூறுகின்றார்கள் என்பதற்காக வேண்டாமென்று உதறித் தள்ளி விட்டுப் போக முடியவில்லை. அவருமோர் முன்னைய ஆசிரியர் தானே!. இந்த வயதுக்கு இதுப் போல் எத்தனையோப் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கண்டிருப்பார் தானே!. அதிலுள்ள வெற்றித் தோல்விகள் அவருக்கும் புரியாமலாயிருந்திருக்கும். அந்த அடிப்படையில் பிள்ளைகள் வளர்ந்தால் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்பது அவர்அறிந்த உண்மைத்தான். அதற்காக தன் பிள்ளைகளிப்படிச் செய்து விட்டார்களே! அவர்கள் சுகமாய் வாழ்வதற்காக எம்மைத் தனிமைப் படுத்தி விட்டார்களே! என்றெல்லாம் புலம்பிடுமளவிற்கு யாரும் பெரிதாய்க் குறையாக வைராக்கியமாய், அல்லது விரக்தியாய் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை வெறுப்புடன் கடத்திட நினைக்கக் கூடாதென தன் மனைவியிடம் அடிக்கடிக் கூறுவார். உண்மையும் அதுதான். எம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிள்ளைகளிடம் விருப்பங்களை கையேந்தி கெஞ்சி நின்று சிரமப் படுத்தக் கூடாது. நாமும் வயதுப் போனக் காலத்தில் அடுத்தவருக்கு சுமையில்லாமல் கௌரவமாய் வாழ்ந்து முடித்திட சிலத் தகுதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பிள்ளையும் வசதியாய் வாழ்கிறார்கள் என்பதற்காக நாமும் போய் தஞ்சம் புகுந்துக் கொண்டு அவர்களையும் சிரமப் படுத்தி நாமும் மனக் கஷ்டத்திற்கு ஆளாகிட நினைக்கக் கூடாது.
யாருடைய பொறுப்பிலேனும் ஒருவரின் தலைமைத் துவத்தின் கீழ் காலம் கழித்திடும் வகையில் அமைந்து விட்டால், அவர்கள் எம்மை அடிமைப் படுத்தினார்களோ இல்லையோ! எமக்கு அப்படியொரு நினைப்பு வந்து விடும். எமக்கு அவர்கள் எல்லாத் தேவைகளையும் செய்தாலுங் கூட சிறிய சிறிய அவர்களையறியாமலேயே நடக்கும் குறைப்பாடுகளையும் நாமேப் பெரியப் பிரச்சினைகளாக எடுத்துக் கொண்டு மனதால் வருந்துவோம்.
எனவே எமக்குப் பழக்கப் பட்ட வாழ்க்கையைத்தான் தொடர வேண்டும். நகரத்தில் எச்சில் துப்பக்கூட இடமில்லாமல், வீட்டு அங்கத்தவர்களின் முகத்தைக் கூட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமேயாயினும் பார்த்துப் பேசிடக் கூட முடியாத. அக்கம் பக்கத்தில் யாரிருக்கின்றார்களென்றுத் தெரிந்திடாமல், சுற்றி மதில் கட்டி, மூடிய கேட்டிற்குள், மூடியக் கதவுக்குள் வாழும் வாழ்க்கை தமக்கு ஒத்து வராதுயெனத் தெரிந்துக் கொண்டவர், அவர்களுக்கு ஏற்றவாறும், பிள்ளைகளுக்கு ஏற்றவாறும் வாழ்ந்தால் சரியென முடிவு செய்தார். அதன் படியந்த ஊரில் அவர் குடும்பத்திற்கிருந்த மரியாதை இன்னமும் துளி;யும் குறையாதவாறு தனக்கும் மனைவிக்கும் வயதுப் போனக் காலத்தில் திடமான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளவும், அன்றாட வீட்டு வேளைகளைச் சரி வரச் செய்துக் கொள்ளவும் துணைக்கு சுமதியென்ற ஊர்ப் பெண்ணையும் வெளி வேலைகளைச் செய்துக் கொள்ள அந்தப் பெண்ணின் கணவரையும் வைத்துக் கொண்டு, தேவைக்கு மட்டும் பிள்ளைகள் வீட்டுக்குப் போய் வருவதாகவும் முடிவுப் பண்ணியவர், அதன் படி வாழ்ந்திட்டாலுங் கூட மனசுக்குள் சிறிய வருத்தமொன்று இருக்கத்தான் செய்தது. தனது ஒரு பிள்ளைக் கூட வளர்ந்தப,; படித்த, தொழில் தந்த ஊருக்கோ கிராமத்துக்கோ உதவ முன் வரவில்லையேயென்று.
இந்த விடயத்தை மனைவயிடம் மாத்திரமே அடிக்கடிக் கூறுவார். மனைவியும் இவரது மனமும் வலிக்காதவாறு, பெற்றச் செல்லப் பிள்ளைகளையும் தவறாகக் காட்டிக் கொள்ளாது சமாளித்து பதில் கூறித் தேற்றுவாள். இப்படியேக் காலங்கள் கழிந்திட இப்போதெல்லாம் சாமிவேலுவுக்கும் உடம்பாலும் மனதாலும் தெம்புக் குறைந்து விட்டது. நடைத் தளர்வும் வந்து,கண்ப் பார்வையும் குண்றித் தொந்தரவு செய்திட அவரையறியாமலேயேக் கடவுளை அடிக்கடி வேண்டிக் கொள்வார். வீடு போ போயென்றிட காடு வா வா என்றழைக்குமிந்தக் காலத்தில் தானும் சிரமபப் படாமல் மற்றவர்களையும் சிரமப் படுத்தாமல் ஜீவண் பிரிந்திட வேண்டுமென்று .
பொதுவாக எல்லோரும் விரும்புவது அப்படித்தான். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இறைவன் பாவப் புண்ணியக் கணக்கொண்றை எழுதி வைத்திருப்பாரல்லவா அதன் படித் தானே ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறுவதும், நிரைவேறாமல் போவதும்.
சாமிவேலுவும் தேவகியும் உள் விறாந்தையிலமர்ந்து ஏதோக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியில் சப்பாத்துச் சத்தம் காதுகளை முட்டிட தேவகி யெழுந்துப் பார்க்க முற்பட்டாள். அதற்குள் டொக் டொக்கென கதவைத் தட்டிட நிமிர்ந்த தேவகி உயர்ந்தத் தோற்றத்தில் கோர்ட்டும் சூட்டுமணிந்தவாறு சப்பாத்துச் சோடி மினுமினுக்க ஓர் உருவம் சேர் எப்படியிருக்குறீங்க என்ற வாறே உள்ளே வந்தது. சாமிவேலுவுக்கு அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை.யாரிது எனக்கு அடையாளம் தெரியவில்லையே! என்றார். அதற்கிடையில் சாமிவேல் தேவகியிருவரையும் ஒரேயிடத்தில் நிற்கச் சொல்லி கால்களில் விழுந்துத் தொட்டு வணங்கியது.
நான் தான் உங்கள் உயிர் நண்பன் கந்தனின் கடைசி மகன் சிவா. நான் ஊர்ப் பாடசாலையில் கற்றதோடு உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுவிட்டேன். அங்கேயும் கல்வியை முடித்துக் கொண்டு அங்கேயே சில வருடக் காலம் தொழில் செய்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு வெளியூர் வாழ்க்கைப் போதுமென நினைத்தேன். என் மனைவி குழந்தைகளுடனும் இதுப் பற்றிப் பேசினேன். அவர்களும் என் விருப்பப்படி செய்யுங்களெனக் கூறி விட்டார்கள்.
அதற்குப் பின் என் தந்தையிடமும் பேசினேன். அவர் மிகவும் வேதனையோடுக் கூறினார். பிறந்து வளர்ந்து பெரியாளாகின்ற வரைக்கும் தான் ஊரும் ஊர் வாசிகளும் நல்லமென்று வாய் வலிக்க வலிக்கப் பேசுவீர்கள். வளர்ந்து காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப பெரியவர்களாகியதும் படிப்புத் தொழில் வாழ்க்கையென தேசம் விட்டு தேசம் சென்று தேசங்களுக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளுடன் வாழப் பழகியதும் பிறந்து வளர்ந்த ஊர்ப் பற்றி;யெல்லாம் நினைக்க மறந்து விடுகின்றீர்கள்.
பெற்றோறென்ற ரீதியில் பிள்ளைகள் எங்குசரி கஷ்டப் படாமல் நிம்மதியாக வாழ்கிறார்கள் எனும் போது எமக்கும் சந்தோசம் தான். அதேவேளை மனசாட்சியென்றொன்று இருந்தால் பற்றாக்குறையான ஊருக்கும் என்ன சரி உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து திருப்திக் கண்டுக் கொள்ளுங்களென்று கூறியதும் எனக்குமேதோக் கொஞ்சம் மன உறுத்தலாகவேயிருந்தது. இந்த விடயத்தில் மனைவிப் பிள்ளைகளைக் கட்டாயப் படுத்தி சிரமப் படுத்திடக் கூடாதேயென்று சிந்தித்த வேளையில் அவர்களுமெனக்கு ஒத்துழைப்பதாகக் கூறி விட்டாரகள். பிறகு எனக்கென்ன கவலை! நானேயொரு முடிவுக்கு வந்தேன்.
இந்த ஊர் மக்களுக்காக எனது வைத்தியச் சேவையை ஆரம்பிக்கலாமென்று. இலவசமாக என்னால் எதையும் செய்திட முடியாது. சிகிச்சைகளுக்கு ஏற்ப சிறியத் தொகையொன்றைப் பெற்றுக் கொண்டு மக்களுக்குத் திருப்தியான சேவையைக் கொடுக்க வேண்டுமென எண்ணினேன். அதன்படி நானும் பிறந்து வளர்ந்தக் கல்வி கற்ற ஊருக்கே வந்து விட்டேன். வந்ததிலிருந்து , தொழிலை ஆரம்பிக்க முன் எனது உறவுகளையும், ஆசிரிய ஆசிரியர்களையும் ,நட்புகளையும் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் மகிழ்ச்சியோடுப் போய் நலம் விசாரித்து விட்டு வந்தால் நல்லாயிருக்குமென நினைத்தேன். அதுதான் உங்களையும் பார்த்துப் பேசி விட்டுப் போகலாமென நினைத்தேன்||என்று வைத்தியர் சிவாக் கூறியதும் சாமிவேலுவுக்கும் தேவகிக்கும் இனியில்லையென்ற சந்தோசம். எம்மால் எம் பிள்ளைகளால் முடியாததை ஊர்ப் பற்றுக் கொண்ட யாராவது ஒருவரால் நாம் எதிர்ப் பார்த்த நல்ல விடயமொன்று நடக்கிறதேயென நினைக்கும் போது மனசுக் குளிர்ந்தது போன்ற சந்தோசம். சிவாவை ஆசிர் வதித்துக் கட்டித் தழுவினார்கள். சிவாவுக்கும் அப்படியொரு ஆசிர்வாதமும் தழுவலும் தேவைப் பட்டதுப் போலிருந்தது. ரொம்ப மகிழ்ச்சியுடன் வைத்தியர் சிவாவும் அவர்களிடமிருந்து சந்தோசமாய் தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்ற முனைப்போடு விடைப் பெற்றார்.
![]() |
பெயர்:திருமதி பவானி சச்சிதானந்தன்கொழும்பு, இலங்கைEmail: Satchubawani1@gmail.comதொழில்:தையற்கலை நிபுணர், BS CREATIONS Director கலை:எழுத்தாளர் கவிஞர்,கருத்தாளர்,நூல் ஆய்வாளர், கனடா தமிழாழி தொலைக்காட்சி "கவிக்களம்" நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவேன். நான், கணவர் மகன் மகளுடன் சுய தொழிலுடன் இல்லத்தரசியாக வத்தளையில் வசிக்கின்றேன் . இல 65 போலகல வீதி ,வெரல்லகம ,கண்டி என்ற முகவரியில் திரு திருமதி துரைசாமி ராமாயி தம்பதியினருக்கு அன்பு மகளாய் பிறந்து உடன் பிறந்த ஆறு சகோதர சகோதர…மேலும் படிக்க... |