உறவினரிடம் அன்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 85
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உறவின் முறையாரிடமும் நாம் அன்பாய் நடந்து கொள்ளவேண்டும். முதன்மையாக நம் முடைய தாய் தந்தை, உடன்பிறந்தவர்கள் ஆகியோர்களிடம் தனி யன்பு கொண்டு நடக்கவேண்டும். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியாத நமது குழந்தைப்பருவத்தில் நம் தாய் தந்தையர் நமக்கு உணவூட்டி உடையுடுத்தி நம்மைக் கவலையுடன் வளர்தது வந்தார்கள். அவர்கள் நம்மை அன் போடும் கவலையோடும் பாதுகாத்திராவிட்டால், நாம் பற் பல குறைபாடுகளடைந்து உயிரிழந்து போயிருப்போம். ஆகையினாலே, நாம் அவர்களிடம் நன்றியறிவுள்ளவர்க ளாய் அன்பு காட்டியிருக்கவேண்டும். மேலும் நம்மால் ஆகும் வழிகளிலெல்லாம் அவர்களுக்கு வேண்டிய நலங் களைச் செய்ய நாம் உளங்கொண்டிருககவேண்டும். மேலும் அவர்களுடைய முறைமையான எல்லா வேண்டுகோளுக் கும் கட்டளை களுக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள மனங் கொண்டிருக்கவேண்டும்.
உடன் பிறந்த ஆண் பெண்பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து ஒரு வீட்டிலேயே வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் ஒன்று கூடிஉண்டவர்; ஒன்று சேர்ந்து விளையாடியவர்; ஒரு தாய் தகப்பன்மாரால் ஒருபடித்தாக அன்புகாட்டப் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவநதவர்கள்; இத்தகைய ரான இவர்கள் எப்போதும் ஒருவர்க்கொருவர், உண்மை நட்புக் காண்டு வாழ்நதிருக்கவேண்டுமென்று இந்நல்லுலகம் எதிர்பார்க்கும் அல்லவா? அவர்கள் அவ்வாறே செய்யின், அவர்கள் நல்லுணர்ச்சி கொண்டவர்கள் என்றும், பிறரால் அன்பு செய்யப்படுவதற்குத் தகுதிபெற்றவர் களெனறும, அவர்களே உலகத்துக்குத் தெரிவித்துக் கொள்வார்கள் அல்லவா? ஆனால், அவர்கள் ஒருவரோ டொருவர் மாறுபட்டு வாதாடிக்கொண்டிருப்பார்களா யின், அவர்கள் நடவடிக்கை இயற்கைக்கு மாறுபட்ட தென்றும, அவர்கள் கெடுமதி கொண்டவர்களென்றும் காணப்படுவார்களல்லவா? மேலும் நல்லோரெல்லாம் அவர்களைப் புறக்கணிப்பார்களே; ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு வாழும் ஆணும் பெண்ணுமாகிய ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், தாங்கள் பெரியவர்கள் ஆகுமபோது தங்கள் குடும்பாலத்தை வளரச்செய்பவர்களாவார்கள். ஆகையால், உடன்பிறந்தவர்கள் சிறுவயதிலேயே கூடு மான வழிகளிலெல்லாம் ஒருவருக்கொருவர் அன்புகாட்டி நடந்துகொள்வதில் கவலையுடன் பழகிவரவேண்டும்.
1. எலியும் அதன் சுமையும்
வீடுகளிலன்றிக் கப்பல்களிலுங்கூட எலிகள் கும்பல் கும்ப லாக வந்து சேர்ந்து மக்கட்குத் தொந்தரவு கொடுத்துப் பொருட் கேடுஞ் செய்துவிடுகின்றன அப்போது நாம் அவைகளைப் பொறி வைத்துப் பிடித்தோ, நஞ்சிட்டுக் கொன்றோ, அல்லது வேறு யாதொரு வழியினாலோ ஒழித்துவிடுவது வழக்கமாக இருக்கின்றது.
ஒரு காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலிஸ்பன் நகருக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு கப்பலில் எலிகள் நாளுக்குநாள் விரை வாகப் பல்கிப் பெருகி மிகத் தொந்தரவு விளைத்தன. அவைகள் பண்டங்களைத் தின்றுவிடுவதுமல்லாமல் நல்லநல்ல பொருள்க ளுக்கும் கேடு செய்துவிட்டன. அதன்மேல் கப்பற்காரர்கள் சின மூண்டு அவைகளை முதலில் அழித்துவிட்டே மறுவேலை பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். கப்பல் இலிஸ்பன் துறையை அடைந்தவுடன், கப்பலின் கீழ்த்தட்டில் கந்தகம்போட் ருக் கொளுத்திவிட வேண்டும் என்று மீகாமன் உத்திரவு செய்து விட்டான. எலிகள் கந்தகப்புகை நாற்றத்தைப் பொறுக்கமாட்டா மல் வளைகளினின்றும் வெளிப்பட்டு இங்குமங்கும் ஓடத்தலைப்பட்டன. அப்போது கப்பலாட்கள் அவைகளைக் கும்பல் கும்பலாக அடித்துக்கொன் று கொண்டு வ வந்தனர். கடைசியில் கப்பலின் மேல்தட்டில் ஓர் எலி மற்றொரு குருட்டுக் கிழ எலியைச் சுமந்து கொண்டு ஓடிவர அதனைச் சிலா வியப்புடன் கண்டனர். ஓகோ! ஒரு பிள்ளை எலி தன் கிழத் தந்தையாகிய ஒரு குருட்டு எலியைச் சுமந்துகொண்டு தப்பித்துக்கொண்டோடப் பார்க்கின்றது, பாருங்கள்!” என்றான் ஓர் ஆள். அக்காட்சி அவ்வாட்களின் மனத்தையெல்லாம் உருகச் செய்துவிட்டது. தன் பெற்றோரிடம் அன்புகொண்ட பிள்ளையாகிய அச்சிரறுயிரைக் கொன் றுபோட அவர்கள் மனந்துணியுமா? ‘இத்தந்தையும் பிள்ளையும் வேறோரிடம் சென் று பிழைத்துப்போகட்டும்,’ என்று சொல்லி அவற்றை உயிரோடுபோக விட்டுவிட்டார்கள்.
2. அனபாயனும் அம்பினாமனும்
சிசிலித் தீவிலுள்ள எதீனா என்னும் எரிமலை ஒரு காலத்தில் என்றும் இல்லாத முறையில் மிகக் கடுமைகொண்டு வெடித்து எரி யத்தொடங்கிற்று. அதில் உண்டான தீப்பொறிகளும் சிட்டங் ம் அம்மலையினால் நாலாபக்கங்களிலும் மிக்க தொலைவிற்கு வீசி எறியப்பட்டன. அக்கம் பக்கங்களில் குடியிருந்த மக்கள் தங்கள் கையிற் கிடைத்த விலையுயர்ந்த பொருள்களை மாத்திரம் உடன் எடுத்துக்கொண்டு அங்கங்கே சிதறியோடினர். இவ்வாறு ஓடினவர்களில் அனபாயன். அம்பினாமன் என்னும் இரண்டு மைக் தர்கள். தாம் எவ்விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுபோனார் கள்? அவர்கள் தங்கள் முதுகுகளின்மேல் வைத்துத் தூக்கிக் கொண்டுபோன அருமைப் பொருள்கள் அவர்களின் பெற்றோர் களே! இத்தகைய இடுக்கணில் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டும் என்னும் மனமுடைய மைந்தர்கள் அதனை வேறு எவ் வாறு செய்யமுடியும்?
இவ்விரு சிறுவர்களின் பொறுப்பேற்ற நன்னடக்கை ஆங்கி ருந்த மக்களால் மிகவும் மெச்சிக் கொண்டாடப்பட்டது. நல்ல வேளையாய் அவர்கள் சென்றவழி அம்மலையின் தீப்பொருள்கள் வந்தவிழாத இடமாக இருந்தது. அப்பக்கங்களில் அவ்வழி யொன்றே பிறகு பச்சைப்பசேலென்று காணப்பட்டது. மற்றவை வறண்டுபோய்ப் பாழடைந்தன அதைக்கண்ட மக்களெல்லோரும் அச்சிறுவர்களின் அன்புகொண்ட நன்னடக்கையினாலேயே அவ் வழி புதுமையாகக் காப்பாற்றப்பட்டது என்று நம்பிக்கைகொண் டனர். அதுமுதல் அந்நிலம் அறவோர்நிலம் எனப்பெயர்பெற்றது.
3. அலெக்ஸாண்டரும் அவன் தாயும்
பெற்றோர் முரடராயும் முறைகேடுடையவர்களாயு மிருந்த போதிலும், பிள்ளைகள் அவர்களிடம் பணிவுடையவர்களாய் விட் டுக்கொடுத்து நடந்துகொள்ளவேண்டும். அலெக்ஸாண்டரின் உண்மை வரலாற்றுச் செய்தியொன்று இங்கே எடுத்துக்காட்டாக அமையத்தக்கது. அதாவது. அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாள் என்பவர், அவன் வெற்றிகொண்டு ஆளும் நாடு களின் தலைமைத்தன்மை தமக்கே வேண்டுமென்னும் தன்மை யுடையவர். இதனால், அவர் தம் மைந்தனுக்கு அடிக்கடி தொந் தரவு கொடுத்துக்கொண்டு வருவார். அவன் ஆசியாவின்மீ படையெடுத்து நாடுநாடாகக் கைப்பற்றி வந்துகொண்டிருக்கும் போது, தன் தாயின்மேல் தனக்கிருக்கும் அன்புக்கு அடையாள மாக தான் அங்கங்கே பெற்ற வெற்றிப் பொருள்களிற் சிறந்த வற்றை அவருக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது தன் தாயாருக்கு எழுதுங் கடிதங்களில், “அம்மா, அரச காரியங்களில் நீர் தலையிட்டுக்கொள்ளாதீர், என்னுடைய ஆணையாளன் அந்திபாதன் நாடுகளை அமைதியோடு ஆள விட்டு விடுங்கள்: இதனை யான் தங்களிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்”, என்று அடியிற் சேர்த்து எழுதிவைப்பான். அதற்கு. அவர் தம் தனையனுக்குச் சினக்குறிப்புடன் எழுதியும் அனுப்புவார். அதனை அலெக்ஸாண்டர் பொறுத்துக்கொண்டு தனது மறுமொழிக்கடிதத்தில் இன்னும் பணிவு காட்டியே எழுதுவான் ஒரு பொழுது ஒலிம்பியார் அந்திபாதருக்குப் பொறுக்க முடியாத தொந்தரவு கொடுக்க, அவன் அச்செய்தியை அலெக்ஸாண்டருக்கு எழுதி முறையிட்டுக் கொண்டான். அதற்கு அலெக்ஸாண்டர் எனன மறுமொழி கொடுத்தானென்றால்: அந்திபாதரே, என் அன்னையின் ஒரே கண்ணீர்த்துளி உபமுடைய அறுநூறு கடிதங் களையும் அடியோடு அழித்துப்போட்டுவிடும் என்பதை நீர் அறியீர் போலும்!” என்பதாம்.
4. பிரடரீகனும் அவன் கையாளும்
பிரடரீகன் என்பவன் பிரஷியாவின் பேரரசனாக இருந்தான்; அவன் ஒருநாள் எச்சரிக்கை மணியொலி செய்தான். அதனைக் கேட்டு எந்தப் பணியாளும் அவன் முன் காணப்படவில்லை.. உடனே அவன் தன் கையாள் இருக்கும அறைக்குப் போய்க் கத வைத்திறந்து பார்க்க, அவன் தனது சார்நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தான். அரசன் அவனை எழுப்ப எண்ணியபோது அவன் தன் சட்டைப்பையில் ஒரு கடிதம் வெளிக்காட்டிக்கொண் டிருக்கக் கண்டான். அக் கடிதத்தின் செய்தியை அறிய ஆவ லுடையவனாய், அதனை மெல்லவெடுத்துப் படித்தான் அரசன் அதில், “பையா, நீ உன் சம்பளத்தினின்றும் எனது செலவுக் காக அனுப்பிய தொகைக்கு நான் உனக்கு வாழ்த்துக் கூறுகின்றேன; கடவுள் உனக்கு அருள் செய்வாராக” என்று கண்டிருந்தது. அரசன் உடனே தன் இருக்கை யறைக்குச் சென்று ஒரு பணச்சுருளையை எடுத்துக் கொண்டுவந்து கையாளின் சட்டைப் பையில் நழுவவிட்டுவிட்டுத் திரும்பிப்போய் உடனே எச்சரிக்கை மணியை உரக்க அடித்தான். மணியொலி கேட்டதும் கையாள் வாரிக்கட்டிக்கொண்டு ஓடிவந்து அரசன் முன்னே நடுநடுங்கி நின்றான். நீ நல்ல தூக்கம் தூங்கினாயோ!” என்றான் அரசன். கையாள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வணங்கினான். வணங்கி நிற்கும்போது கையாள் தன் சட்டைப்பையில் கைவைக்க, அதில் ஒரு பணச்சுருளையைக் கண்டு இன்னும் மனங் லங்கிப்போய்ப் பேச்சற்றுத் தடுமாறிப்போனான். “இஃது என்ன! உனக்கு என்ன நோய்?” என்றான் அரசன். ‘ஆ! ஆண்டவனே! எவ ன என்னைக் கெடுக்க உளங்கொண்டான்! இந்தப் பணம் என் சட்டைப்பையில் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில் லையே!” என்று வாய்குளறிச்சொல்லி அரசன் காலில் வீழ்ந்தான். அரசன் அவனைப்பார்தது, “நண்பனே! நம் தூக்கத்திலும் கடவுள் நமக்கு நற்பொருள் அனுப்புகின்றார்; இத்தொகையை உன் தாயா ருக்கு அனுப்பிவை; என் பேரினால் அவருக்கு வணக்கம் சொல்லு; அவரையும் உன்னையும் நான் பாதுகாப்பேன் என்று அவருக்கு நம்பிக்கை வரப்பண்ணு, என்று தேற்றரவு செய்தான்.
5. உடன்பிறந்தார் இருவர்
முந்நூறாண்டுகளுக்கு முன்பு, இலிஸ்பனிலிருந்து கோவா வுக்கு ஒரு கப்பல் புறப்பட்டு வந்தது. அதனில் இருநூறு மக்கள் புறப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் அப்பயணம் நலங்காட் டியே நடந்தது. அக்கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு வடகிழக்குமுகமாய் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக் கும்போது அஃது ஒரு பெரும் பாறைமேல் தாக்குண்டு உடைந்து போக, கடல்நீர் உட்செல்லத் தொடங்கிவிட்டது. கப்பல் முழுகிப் போகவேண்டியதுதான் என்னும் நிலைமை உறுதியாய்ஏற்பட்டுவிட் டது. கப்பலில் உள்ளோர்க்கெல்லாம் கலக்கமும் குழப்பமும் உண் டாகிவிட்டது. அப்பொழுது மீகாமன் உணவுப்பொருள் மூட்டை ஒன்றிரண்டைத் தூக்கி ஒரு காப்புப்படகில் போட்டுக்கொண்டு நல்வினையுள்ள நாலாறு மக்களுடன் நாவாய் விட்டகன்று கடல் மேல் வந்துவிட்டான். அக்கப்பல் உடனே முழுகியே போய்விட் டது. அப்படகுக்காரர் திசைகாட்டுங் கருவி இல்லாமலும் குடி தண்ணீர் இல்லாமலும் தெய்வமே துணையென்று நீர்மேற் போய் விட்டனர். அப்படகு இடுக்கண்பட்டுக் கொண்டே நாலு நாட்கள் பயணஞ் செய்துகொண்டு போகையில் மீகாமன் நோய்வாய்ப்பட் டிறந்தான். இஃது ‘எரியுங்கொள்ளியை ஏறத்தள்ளினாறபோ’லாயிற்று. படகில் இருந்தவர்களில் ஒவ்வொருவரும் தலைமை ஏற்க றாடினர். சடைசியாக அவர்களெல்லோரும் ஒருவழிப்பட்டுத் தங்களில் ஒருவனைத் தலைவனாக ஏற்படுத்திக்கொண்டனர். படகில் உணவுப்பொருள் குறைவாக இருப்பதைக்கண்டு அத்தலைவன், மக் கள் கூட்டத்தைக்குறைக்கவேண்டும்என்று தீர்மானித்துக்கொண் டான். அவன் சீட்டு எழுதிப்போட்டு அதில் நான்கு என்னும் எண் ணுள்ள ஒவ்வொருவனும் நீரில் தள்ளப்படவேண்டும் என்றான். அதற்கு எல்லோரும் ஒத்துக்கொண்டனர். ஆனாலும், அக்கூட்டத் ல் இருந்த ஒரு துறவியையும், ஒரு தச்சனையும் அவ்விதிக்கு விலக் காக்கினர். ஏனெனில் துறவி துன்பத்தில் தேற்றுபவன். தச்சன் படகைப்பழுதுபார்ப்பவன். இனனும் அவர்கள் தலைவனையும் விலக்க எண்ணினர் அதற்கு அவனும் அரைமனதாகஒத்துக்கொண்டான். வடகிலிருந்த இருபத்தொரு பேர்களில் நான்கென்னும் எண்ணும் குரியர் யாவரும் நீரில் வீழ்த்தப்படவேண்டும். அவர்களின் அக் கணக்குப்படி ஐந்துபேர்கள் ஆகின்றார்களல்லவா? அவர்களில் முதல் நால்வர் தாமாகவே நீரில் வீழ்ந்துவிட்டனர். ஐந்தாமவன் நீரில் விழ முயலும்போது படகில் இருந்த அவன் தம்பி ஓடி. வந்து அவனைக் கெட்டியாகத் தழுவிக் கட்டிக்கொண்டு ஏனை யோரைப் பார்த்துப் “பெரியீர்! என் அண்ணனாகிய இவர் குடும்பில் இவருக்கு மனைவி மக்களுண்டு: நானோ தனிப்பட்டவன், அவர்தம் அறத்தொழிலையான் செய்கின்றேன்; அவருக்காக யானே நீரில் மூழ்கிவிட மனங்கொண்டு துணந்திருக்கின்றேன். தயவுசெய்து அவரை உயிரோடிருக்கச் செய்யுங்கள், என்றான் மூத்தவனோ தம்பியின் பெருங்குணத்தைக் கண்டு வியந்து மனமுருகி மற்றவர் களைப்பார்த்து, ‘பெருமக்களே! என் முறைக்காகஇன் னாருவன் உயிர் விடுவது எப்படிப் பொருந்தும்; மேலும் இவன் என் முழு அன்புக்குரிய தம்பியாவான்; எனக்காக அவன் உயிர்விடுவது என் மனத்துக்கு ஒவ்வாத தொன்றாகும்,” என்றான். தம்பியோ அண்ணன் கால்களைக்கெட்டியாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவனை நகரவொட்டாமற் செய்துவிட்டான். ஏனையோர் அவனைப் பிடித்த பிடியைத் தளர்த்த எவ்வளவோ முயன்று பார்த்தும் அவர்களால் முடியவில்லை. பிறகு அண்ணன் அவனைப்பார்த்து,. “தம்பி! நீ உயிரோடிருந்து என் பெண்டுகளைக் காப்பாற்று. நீயே என் குடும்பத்துக்குத் தந்தைபோல் இரு; எனக்காக நீ உயிர்விட நான் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன்,’ ” என் று பலதடவை சொல்லிப் பார்த்தும் பயன்படவில்லை; தம்பி தன் பிடியை விட்டானில்லை. படகிலிருந்தோர் வேறுவழி காணாது அவன் மனப்போக்குக்கு இடங்கொடுத்து விட்டனர். அண்ணனுக்காகத் தம்பி நீரில் மூழ்கி உயிர்விட்டான்.
க. தந்தை தாய்ப்பேண். -ஆத்திசூடி..
உ. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். -கொன்றைவேந்தன்
ங. அன்னை தந்தையரை மேன்மைப்படுத்து; ஆண்டவன் நீண்ட ஆயுள் அளிப்பார். -மோசே கட்டளை..
ச. அன்பற்ற சோறு, துப்பற்றசோறு. – பழமொழி.
ரு. மாறுபட்ட அரசும் மாறுபட்ட அகமும், நீறு பட்டொழியும். -இயேசு
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.