உரை வகுத்த நக்கீரர்




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மதுரையில் திடீரென்று பஞ்சம் வந்துவிட்டது. மழை பல காலமாகப் பெய்யவில்லை. பாண்டிய அரசன் பஞ்ச காலத்தில் உணவுப் பொருளைப் பகிர்ந்து கொடுக்க ஏற்பாடு செய்தான். அக்காலத்தில் அவன் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்தான். அதில் புலவர்கள் இருந்து தழிழாராய்ச்சி செய்து வந்தார்கள். அந்தப் புலவர்களுக்குப் பஞ்ச காலத்தில் வழக்கம் போல வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியாதோ என்று அவன் வருந்தினான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘புலவர்கள் எங்கே போனலும் சிறப்புப் பெறுவார்கள். இந்தக் கஷ்ட காலத்தில் நாமும் நம்முடைய குடி மக்களும் வசதிகளைக் குறைத்துக்கொண்டு வாழத்தான் வேண்டும். இவர்கள் வளமுள்ள நாட்டில் போய் வாழலாமே! பிறகு காடு, மீட்டும் வளம் பெறும்போது நாம் அழைத்து வரலாம்’ என்று எண்ணித் தன் கருத்தைப் புலவர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அப்படியே வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சம் நீங்கியது. உடனே, பாண்டியன் அங்கங்கே உள்ள புலவர்களுக்கு ஆள் விட்டு, அழைத்து வரச் செய்தான். மீட்டும் சங்கத்தை நடத்தி, வந்தான். புலவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்களாக இருந்தனர். தமிழ் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவற்றில் பொருள் இலக்கணத்தில் அகப்பொருள் என்றும் புறப் பொருள் என்றும் இரண்டு பிரிவுகள். அகப்பொருள் இலக்கணத்தை நன்றாக ஆராய்ச்சி செய்து, புலவர் ஒருவரைக் கொண்டு, புது முறையில் ஓர் அகப்பொருள் இலக்கணத்தை இயற்றச் செய்ய வேண்டுமென்று பாண்டியன் எண்ணியிருந்தான். ஆனால் அவ்விலக்கணத்தில் ஆழ்ந்த பயிற்சி உடையவராக ஒரு புலவரும் வரவில்லை; அதனால் அரசனுக்கு ஏமாற்றம் உண்டாயிற்று. நம்முடைய விருப்பம் நிறைவேறாமற் போய்விடுமோ!’ என்று எண்ணி ஏங்கினான். தன் குலதெய்வமாகிய சொக்கநாதரிடம் தன் குறையை முறையிட்டுக்கொண்டான்.
ஒரு நாள் கோயிலில் இறைவன் எழுந்தருளியிருக்கும் பீடத்துக்கு அருகில், சில செப்பேடுகள் இருந்ததைக் குருக்கள் கண்டார்.
திடீரென்று அவை அங்கே எப்படி வந்தன என்று அவருக்குத் தெரியவில்லை. அவற்றை எடுத்து வைத்து, அரசனிடம் தெரிவித்தார். பாண்டியன், ‘இது ஏதோ இறைவன் இருவருளால் கேர்ந்த அற்புதம்’ என்று எண்ணி. அவற்றை வாங்கிப் படித்துப் பார்த்தான். பார்த்தபோது அவனுடைய வியப்பு ஆயிரம் மடங்காயிற்று. அந்தச் செப்பேடுகளில் ஓர் இலக்கண நூலைக் கண்டான். சரியாக அறுபது சூத்திரங்கள் அடங்கிய நூல்: அகப்பொருளின் இலக்கணத்தைச் சொல்வது.
பாண்டியன் ஆனந்தக் கூத்தாடினான். தன் விருப்பம் நிறை வேறியதை எண்ணி இன்புற்றான். உடனே அந்தத் தாமிரத் தகடுகளைக் கொண்டுவந்து, தமிழ்ச் சங்கப் புலவர்களிடம் காட்டி, “இது இறைவன் திருவருளால் கிடைத்தது. பாருங்கள். இந்த நூலுக்கு உரை எழுதுங்கள்” என்று சொன்னன். அவர்களும் அதைப் படித்துப் பார்த்து, அது புது முறையான அகப்பொருள் இலக்கணமாக இருப்பதைக் கண்டு, அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்தார்கள். பாண்டியன் விருப்பப்படியே உரை எழுதத் தொடங்கினார்கள்.
அக்காலத்தில் தமிழ்ச் சங்க்த்தில் 49 புலவர்கள் இருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து உரையை எழுதவில்லே. ஆளுக்கு ஒர் உரையை எழுதினர்கள். எல்லோரும் உரைகளை எழுதிய பிறகு, பாண்டியனுக்குத் தெரிவித்தார்கள்.
அரசனுக்கு இப்போது ஒரு புதிய சங்கடம் உண்டாகி விட்டது. நாற்பத்தொன்பது உரைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஏதாவது ஒன்று இருந்தால் போதுமே நாற்பத்தொன்பதும் பெரும் புலவர்கள் எழுதிய உரைகள். அவற்றில் எதைப் பொறுக்கி எடுப்பது? எப்படித் தேர்ந்தெடுப்பது? அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுதான். “சுவாமி, அகப்பொருள் இல்லை என்று கவலைப்பட்டேன். நீயே ஒரு நூலே அருள் செய்தாய். இப்போது அந்த நூலுக்கு நாற்பத்தொன்பது உரைகள் வந்திருக்கின்றன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புலவர்களுக்கு மன வேறுபாடு இல்லாமல் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஒரு வழியும் தெரியவில்லே. மூல நூலே அருளிய நீயே இதற்கும் ஒரு வழியை அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
அவன் அன்பையும் குறையையும் உணர்ந்த இறைவன், அசரீரி யாக, “இவ்வூர் வணிகர் தெருவில் உப்பூரி குடிகிழார் என்று ஒருவர் இருக்கிருர். அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறான். அவனுக்கு ருத்திரசன்மன் என்று பெயர். அவன் முருகனுடைய அம்சமுடையவன். ஊமை, அவனே அழைத்து வந்து, உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து வழிபடு. பிறகு புலவர்களைத் தாம் எழுதிய உரைகளைப் படிக்கும்படி சொல். யாருடைய உரையைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்து அவன் மெய்ம்மயிர் சிலிர்க்கிறானோ, அந்த உரையே சிறந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்று அருளினான். பாண்டியன் மகிழ்ந்து, இறைவனை வணங்கி, விடை பெற்றுச் சென்றான்.
புலவர்களிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். வணிகர் தெருவில் விசாரித்து, ருத்திரசன்மன் என்ற பையன் இருப்பதைத் தெரிந்துகொண்டான். ஒரு நல்ல நாளில் அவனை உப்சாரத்துடன் அழைத்து வரச் செய்தான். புதிய ஆடையை அணிவித்து, வெண்மலர் மாலை புனைந்து, உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினான். புலவர்கள் தம் உரைகளோடு அங்கே வந்து அமர்ந்துகொண்டார்கள்.
உரையின் அரங்கேற்றம் தொடங்கியது. ஒவ்வொரு புலவரும் தம் தம் உரையைப் படிக்கலாயினர். யாவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ருத்திரசன்மன் ஆடாமல் அசையாமல் உட்கார்க்திருந்தான். பாண்டியனுக்குக் கவலை உண்டாகிவிட்டது.
அசரீரி வாக்கை நம்பி, “இந்த ஊமைப் பிள்ளையைக் கொண்டு வந்து, இங்கே அமர்த்தியிருக்கிறோம்! இவன் கற்சிலைபோல் அல்லவா இருக்கிறான்! என்ன ஆகுமோ, தெரியவில்லையே” என்ற எண்ணங்தான் அந்தக் கவலைக்குக் காரணம்.
இன்னும் சிலர் தம் உரைகளைப் படித்தனர். பிறகு மருதன் இளநாகனர் என்னும் புலவர் படித்தார். அப்போதுதான் அந்த ஊமைப் பிள்ளை சிறிது உடம்பை அசைத்தான். முறுவல் பூத்தான். அதைப் பார்த்துப் பாண்டியனுக்கு நம்பிக்கை உதயமாயிற்று. மறுபடியும் அந்தப் பிள்ளை சும்மா இருந்தான்.
அப்பால் நக்கீரர் தம் உரையைப் படிக்கத் தொடங்கினார். அப்போது ருத்திரசன்மன் அடிக்கடி கண்ணிர் விட்டான். கையைத் தட்டினான், உடம்பெல்லாம் புல்லரித்தது. சில சமயங்களில் முறுவல் பூத்தான். மற்றப் புலவர்கள் படித்தபோது உண்டாகாத உணர்ச்சி, அப்போது அவனுக்கு உண்டாயிற்று. அதனால் நக்கீரர் உரையே எல்லா உரைகளிலும் சிறந்தது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டார்கள். உண்மையில் அது பல வகையிலும் சிறப்பாக இருந்தது. பாண்டியன் நக்கீரருக்குப் பரிசுகளை வழங்கினான்.
இறைவன் அருளால் அகப்பட்ட அந்த நூலுக்கு “இறையனார் அகப்பொருள்” என்ற பெயர் உண்டாயிற்று. அதைக் களவியல் என்றும் சொல்வதுண்டு. நக்கீரர் எழுதிய உரை, பின்பு எங்கும் வழங்கலாயிற்று. இன்றும் அந்த அகப்பொருள் இலக்கணமும் அதன் உரையும் இருக்கின்றன.
உரை எழுதிச் சிறப்புப் பெற்ற நக்கீரர் பெரிய புலவர். அவருடைய தகப்பனர் பள்ளிக்கூடத்து ஆசிரியர். ஆசிரியரைக் கணக்காயர் என்றும் அக்காலத்தில் சொல்வார்கள். அந்த ஆசிரியரிடம் எல்லோருக்கும் பெரிய மதிப்பு இருந்து வந்தது. அவர் பெயரைக்கூடச் சொல்லாமல், மதுரைக் கணக்காயனார் என்றே சொல்லி வந்தார்கள். அவர் பிள்ளையாகையால் நக்கிரரை, ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்றே வழங்கினர்கள்.
‘வில்லுக்குச் சேரன், சொல்லுக்குக் கீரன் என்றது நக்கீரரைத்தான். அவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். முருகக் கடவுளைப்பற்றித் திருமுருகாற்றுப் படை என்ற நீண்ட பாட்டை அவர் இயற்றியிருக்கிறார், அவர் பாடிய மற்றப் பாடல்களை அறிந்தவர்கள் குறைவாக இருந்தாலும், திருமுருகாற்றுப் படையைப் படித்தவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். அதை ஒவ்வொரு நாளும் பக்தியோடு பாராயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு