உருவெளி மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 1,186 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அய்யா!” 

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு இ நின்றிருந்தான். நன்றாக உற்றுப் பார்த்தால் இ என்றும் சொல்ல முடியாது. நடுத்தர மனிதன் சொல்ல முடியாது. காதோரம் வழிந்த செம் சிகை கழுத்துவரை பரவியிருந்தது. மீசையே முறை முகம். ஏனோ வரட்டுத்தனம் மிகையாகவி இவன் யார்? ஏன் என்னை அழைத்தான்? எங்கோ கண்டமாதிரி ஞாபகம். மீண்டும் நினைவுத் தேடல். 

“அய்யா!” 

“நன்றாக உற்றுப்பார்த்தேன். என்னுள் ஆவணங்கள் சிறைப்பட்டன. மூளை ஒரு ஆவ சடக்கென்று தூக்கிப் போட்டது. அவன்தான். தான். ஓ! எத்தனை வருடங்கள். இத்தனை வரு கழித்து இவனை சந்திப்போமென்று நினைத்தது அது சரி!’ இவனைப் பற்றி நினைத்தால்தானே சந் பற்றி நினைப்பது. அவன்தானா? ஒரு சம்சயம். 

அவனேதான் – அவன்தான் 

அன்றைய அவனுக்கும் இன்றைய இவனுக்கும் என்ன வித்தியாசம். அல்லது என்ன ஒற்றுமை? 


“செட் ரெடியா?” 

“ஆர்டிஸ்ட் ஓகே!’ 

”சேர்! எல்லாம் ரெடி, செட் வேர்க் முடியல்ல” 

”ஏன்?” 

ஆர்ட் டைரக்டர் அருகில் வந்தார். “எல்லாம் சரி அந்த சைட் சீன் பெயிண்டிங் மட்டும்தான்…” இழுத்தார் 

“ஏன்?” 

“நேத்து முழுக்க எனக்கு காய்ச்சல்” 

“சரி நீங்க இத சீக்கிரம் முடியுங்க. அடுத்த ஷாட் இந்தப் பக்கம் தான் 

“ஓகே சேர்! அத முடியுங்க! இது இப்ப முடியும். ஓகே!” 

“என்னப்பா! கெமரா? சரியா!” 

“ஓகே! லைட்ஸ் ஓன்!” 

“அங்க பைவ் கேவி” 

“இந்தாப்பா, அம்மாவுக்கு ஒரு பேபி கொடு!” கோடாவில் இருந்தவன் அம்மாவுக்கு பேபி லைட் கொடுக்க ஓடினான். 

“ஓய்! அவன் கல்யாணம் முடிச்சி மூணு வருஷம் பொண்சாதிக்கு ஓடு பேபி கொடுக்க முடியல்ல, இப்ப இஞ்ச ஓடனே ஒரு பேபியா? எல்லோரும் சிரித்தார்கள். எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் நான் சிரிக்கக் கூடாது நான் சிரித்தால் என் ஈகோ என்னாவது? 

“லைட்ஸ் ஆன்” 

”ஓய் அந்த டூ கேவிக்கி நெட்போடு!” 

“பைனல் ரிகர்ஷல் என்ட் டேக்’ பஸ்ஸர் ஒலித்தது. ஒரே நிசப்தம்.யாரும் மூச்சு விடக் கூடாது. 

“பேன் ஓப்!” சுழன்ற காற்றாடி நிறுத்தப்பட்டது. 

“ஸ்டார்ட் காமரா!” 

“ஆக்ஷன்” 

“ஏங்க! நீங்க இப்பிடி செய்யலாமா? நான் ஒங்களையே நெனச்சிகிட்டு உயிர் வாழறேன்” 

“கட்! கட்!!” 

“டேக் டூ” 

“கேமரா ஸ்டார்ட்” 

“ஆக்ஷன்!” 

“ஏங்க நீங்க இப்பிடி செய்யலாமா? நான் ஒங்களையே நெனச்சிகிட்டு உயிர் வாழறேன்” 

“கட்! ஷொட் ஓகே!” 

“லைட்ஸ் ஓப் பேன் ஓன்!” 

நான் வெளியே வந்தேன். மூணாவது புளோரின் சிறிய தகட்டுக் கதவு திறப்பட்டது. சில்லென்ற குளிர் காற்று முகத்தைத் தழுவி வியர்வையைத் துடைத்தது. முன்புறம் தியேட்டரில் சிகப்பு மின் விளக்கு பட்டென்று எரிந்தது. ரீ ரெக்கார்டிங் அல்லது டப்பிங் நடக்கின்றது போலும் .

“அய்யா! வந்து பாருங்க!” 

ஒரு இளைஞன் கையில் தூரிகையுடன், முத்தரும்பும் முகத்துடன் வந்து பக்கவாட்டில் பவ்வியமாக நின்றான். இவன் எதைப் பற்றி பேசுகிறான். நிஜத்திற்கு வர சில நிமிடங்கள் பிடித்தன. ஓ! இவன்தான் அந்த கடைசித் தூணில் சித்திரம் வரைந்து கொண்டிருந்த ஓவியன். அஸிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர் உள்ளே சென்றேன். 

செட் நன்றாக இருந்தது. கடைசி வேலை இவனின் வர்ணங்களினால் முழுமை பெற்றிருந்தது. 

“எங்க ஆர்ட் டைரக்டர்?” 

“போயிட்டாரு, அவருக்கு சொகமில்ல!”

“அப்ப இத யாரு செஞ்சது?” 

“நாந்தான்” மிகவும் சந்தோசத்துடன் ஒப்புக் கொண்டு. தான் ஒப்புக்கொண்டது தவறோ என்ற பாணியில் “அவர்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்” 

இது ஏன்? குரு விசுவாசமா? இருக்கும், இருக்கும் குரு. பிரம்மா… குரு விஷ்ணு. 

“தம்பி ஒன் பேரு?” அவன் தன் பெயரைச் சொன்னான். சொல்லும் போதே ஒரு பெண்ணைப் போல கூச்சத்துடன் அபிநயித்தான் ஹார்மோன் சரியாக சிந்திக்கவில்லை. அது அவன் குற்றமில்லை. “தம்பி அடுத்த படத்திற்கு நீதான் ஆர்ட் டைரக்டர்” அவன் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. நான் அவன் கண்களைப் பார்த்து வியந்தேன். ஓ! எப்படிப்பட்ட அழகிய விசாலமான நயனங்கள். சரி! இவன் மீனாக்ஷியின் அம்சமா? இல்லை காமாக்ஷியின் அம்சமா? அதை மறந்து விட்டேன். 

“ஸ்டார்ட் காமிரா!” 

“ஆக்ஷன்!’’ 

“கட்! கட்!!” 

“டேக் டூ” 

”டேக் த்ரீ!” 

”ஓகே!” 

“லைட்ஸ் ஓப்” 

“பெக் ஓப்!” 


”அய்யா! என்ன ஞாபகமிருக்கா?” 

”ஓ! நீ அந்த படத்துல அஸிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டரா இருந்தேல்ல! அது சரி அதுக்குப் பொறகு ஒன்ன காணல்லியே! எங்க போயிட்டே? 

“நான் பிரான்சுக்கு போனேன்” அவன் சற்று எதையோ எண்ணி மெய் மறந்தான். சில நேரம் பிரான்சுக்கு போயிருக்கக்கூடும். அவன் திரும்பி வரும் வரை காத்து நின்றேன். 

“இப்பவும் படம் செய்றீங்களா?”

“இல்ல சும்மாதான் இருக்கிறேன். எழுதுறேன்.நெறைய எழுதுறேன்” 

அவன் அர்த்தமில்லாமல் சிறிது நேரம் தன் ன் நகத்தை 

மாற்றி மாற்றி கடித்தபடி நின் றிரு வாயினுள் ஏதோ முனகிக் கொண்டான். ரைட்?” 

ஆர் 

அது சரி எனக்கு என்னவாயிற்று? இவன் ஏன் ஓல் ரைட் என்று கேள்வி கேட்கணும். திருப்பி ஏ கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் கொண்டேன். அமைதியாக பதில் கூறினேன். ஒல் ரைட்” 

“பிளீஸ் கம் வித் மீ!’ சொல்லியபடியே நின்றிருந்த பாதையின் பக்கத்தால் ஒரு குறுகலான நுழைந்தான். நடந்தான்.நான் வருகிறேனா இல் என்று திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவ்வளவு என்னில் நம்பிக்கை அல்லது அலட்சியம் நான் தொடர்ந்தேன். 

அந்தக் குறுகலான பாதை போய் ஒரு படிக் நின்று விட்டது. அண்ணாந்து பார்த்தேன். என் மரத்தினால், மரச்சட்டங்களினால் ஆன கட்டட படிக்கட்டுக்கள். 

மூத்திர நெடி நாசியை துளைத்தது. 

மரப்படிக்கட்டின் கீழ் ஆங்காங்கே அசிங்கங்கள் வாத்துகளின், புறாக்களின் சல்லாபங்கள் – சப்தங்கள். 

படிக்கட்டின் கீழ் பல பெட்டி வீடுகள், ஒரு பக்கத்தில் குழாய் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் பொதுக் கழிவறை, ஒரு நடுத்தர வயது கறுத்த பெண் யாரையோ மிக மோசமாக திட்டியபடி குளித்துக் கொண் டிருந்தாள். 

அவன் பலகைப்படிகளில் ஒரு நோயாளிபோல் ஏறினான். நான் பின் தொடர்ந்தேன். இப்போது திரும்பிப் பார்த்தான். சிரித்தான். அவனுடைய அழகிய முகம் மிகவும் வரண்டு கிடந்தது. முகம் முழுவதும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் வந்தும் வராமலும் இருந்தன. கொண்டான். அடிக்கடி வழியும் சிகையைக் கோதிக் கொண்டான். இரண்டாவது மாடி கைப்பிடி முழுவதும் கழுவிய துணி களை உலரவைத்திருந்தார்கள். ஏறும் படிக்கட்டு முழு வதும் ஈரப்பசை, மேலே பாத்ரூம் வாசலில் இருந்து அழுக்கு நீர் படிக்கட்டு வழியாக கீழே போய்க் கொண் டிருந்தது. மேல் மாடியின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு பிள்ளை அம்மணமாக பேப்பரை விரித்து மலஜலம் கழித்துக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு இளம் பெண் சட்டை ஊசியைக் சழற்றி பல்லைக் குத்திக்கொண் டிருந்தாள். மாடித்தளம் முழுவதும் ஈரமயம் மூத்திரமா? கழிவு நீரா? எது என்று பிரித்துணர முடியாத வகையில் எனினும் பொதுவாக ஒரு துர்நாற்றம், நான் எல்லோ ருக்கும் பொது என்ற பாவனையில் அங்கே வியாபித் திருந்தது. இரண்டாவது மாடியில் அந்தத்தில் அவன் சென்று, நின்று திரும்பி என்னைப் பார்த்தான். நானும் ஒரு மாதிரியாக அந்த அசிங்கங்களை மிதிக்காமல் வந்து சேர்ந்தேன். 

“திஸ் ஈஸ் மை ரூம்!” – அவன் ஏதோ தன் புதிய மாளிகையை காட்டுவதைப் போல் காட்டினான். 

மூலையில், ஒரு இருண்ட அறை நான் உள்ளே புகுந்தேன். அங்கே… ஒரு சாம்ராஜ்யமே நடந்து கொண்டிருந்தது. சிறிய அறை பலர் அமர்ந்திருந்தார்கள். பெரிய பிளேயரில் பீத்தோவனின் ஏழாவது ஸிம்பனி மிக அமைதியாக, ஒழுங்காக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த அறை இருளடித்துப் போயிருந்தது. எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு கூட அந்த அறைக்கு தன்னால் சேவை செய்ய முடியாது என்று அலறுவதைப் போல இருந்தது. 

ஒரு மூலையில் மூவர் இருந்து ஒருவரை ஒருவர் மிகவும் கரிசனையுடன் பார்த்துக்கொண்டு கண்களினால் சம்வாதமிட்டுக் கொண்டிருந்தனர். மௌனமே ஒரு பாஷையாக அங்கு உருவாகியிருந்தது. 

அவன் என்னை திரும்பிப் பார்த்தான். நான் ஏதும் புரியாமல் அவனைப் பார்த்தேன். அவன் சிரித்துக் கொண்டே ஒரு நாற்காலியை சுட்டிக் காட்ட நான் அதில் யந்திரம் போல் அமர்ந்தேன். 

அறை முழுவதும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு தொங்கவிடப்பட்டு இருந்தன. எல்லாவற்றையும் வரைந்தது இவனாகத் தானிருக்கக்கூடும், இருளில் எல்லாமே மங்கலாகத் தெரிந்தன.

அங்கு தொங்கிய காலண்டரில் இருந்த அந்தோணியார் படத்திற்கு யாரோ முறுக்கு மீசை வரைந்து தொப்பி ஒன்றும் வரைந்திருந்தார்கள். 

நான் ஏன் இங்கு வந்தேன் என்றாகிவிட்டது. வராமல் அப்படியே அவனை கண்டவுடனேயே “ஸீ யூ ஐ ஆம் கோயிங்” என்று போயிருக்கலாம். ஏன் வந்தேன்? மனதினுள் இலெசாக பய உணர்ச்சி எழுந்தது. அவன் சிரித்தான். அர்த்தமில்லாமல் சிரித்தான். அந்த சிரிப்பில் ஒரு பழைய நட்பின் நெருடல் இருந்தது. ஒரு வளர்ப்பு நாயின் கண்களில் இருந்து கனியும் உணர்ச்சி விசுவாசம் இருந்தது. 

இவன் கூப்பிடும்போது நினைத்தேன். ஏதாவது பாரில் போய் அரை பைன்ட் கல் சாராயம் குடிக்கத்தான் என்று, 

“டு யூ லைக் டு ஹேவ் சம் ஹொட் ட்ரிங்ஸ்?” இது அவன். 

”யெஸ்!” – இது நான், நான் வந்ததே அதை எதிர் பார்த்துத் தானே! 

அறையினுள் இருந்த மற்றுமோர் சிறிய அறைக்குள் நுழைந்து ஒரு கால் போத்தல் ட்ரை ஜின்னுடன் வந்தான். சுத்தமாக கழுவிய கிளாஸை கொண்டு வந்து வைத்தான். அவன் குடிக்கவில்லை. நான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். அவன் பழைய விசுவாசத்துடன் மிகவும் பணிவாக நடந்து கொண்டான். திரைப்படத்துறையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. நானும் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. மாறாக பிக்காஸோ பற்றியும் டார்வின்ஸ் பற்றியும் கண்களில் நீர் தழும்ப உருகினான், புலம்பினான். 

எனக்கு ஏதோ. பரிதாபமாக இருந்தது. இவர்கள் யார்? இது என்ன இடம். ஏன்? ஏன்? அவன் என்னை பரிதாபமாகப் பார்த்தான். 

பின், வெகுநேரம் தீவிரமாக யோசித்தான். பிறகு என்னை ஏதோ தீர்மானத்திற்கு வந்தவனைப் போல நோக்கி வந்து ஒரு சிகரெட்டை இரண்டு கைகளினாலும் ஏந்தி ஒரு கணம் கண்களை மூடி ஏதோ பிரார்த்தனை செய்பவன் போல பாவனை காட்டி நீட்டினான். நான் பாவனைகாட்டி சிரித்தபடியே அதைப் பெற்று பற்றவைத்து இரண்டு முறை புகையிழுத்தேன். கால் போத்தல் ஜின் என்னுள் இலேசான மயக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. நான் ஒவ்வொரு முறையும் சிகரெட் புகையை உள்ளுக்கு இழுக்கும் போதெல்லாம் அர்த்த புஷ்டியுடன் என்னைப் பார்த்து சிரித்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் கொடுத்த சிகரெட்டில் புதிய நெடி வீசுவதை உணர்ந்தேன். ஜின் குடித்த படியினாலேயா? தான் பிரான்சுக்கு போனதைப் பற்றி, அனுபவங்களைப் பற்றி கதைகதையாக கூறவாரம்பித்தான். சிலநேரம் அழுது கொண்டே கூறினான். எனக்கும் அழுகை வந்தது. “யாஸ்னாயா பால்யானா” கிராமத்தை நினைத்துக் கொண்டேன். அங்கே கூட்ஸ் வண்டியினுள் லியோ டால்ஸ்டாயின் உருவம் என்னைப் பார்த்து மகனே! என்று அழைப்பது போல் இருந்தது. இன்னும் நிறைய அழ வேண்டும் போலிருந்தது. இன்றோடு எல்லோருக்குமாகச் சேர்த்து ஒட்டு மொத்தமாக அழுது தீர்த்து விட வேண்டுமென்ற ஆதங்கம் மனதில் எழுந்தது. 

மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். நான் அமர்ந்திருந்த மேஜைக்கு அந்தப் பக்கம் ஒரு தட்டி மறைவில் நிழலில் சிருஷ்டித் தொழில் நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றம். பிரமையல்ல உண்மை தான். திரும்பிப் பார்த்தேன். யாரும் எதையும் கவனிக்க வில்லை கவனிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் அதைவிட முக்கியமான மௌன சம்வாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் நேத்திரங்களே உதடுகளாகவும் மௌனமே பாஷையாகவும் அங்கே ஒரு வேள்வியே நடந்து கொண்டிருந்தது. 

ஒருவன் வந்து அந்த தட்டி மறைப்புக்கு அப்பால் வரமுடியுமா என்றான். நான் முடியாதென்றேன் . இரண்டாவது சிகரெட்டைக் குடித்தவுடன் எனக்கு எல்லாருமே கனவுகளாகத் தொடங்கின. சாதாரணக் கனவுகள் அல்ல. வர்ண வர்ணக் கனவுகள். கனவுகளுக்குள் கனவுகள். 

அந்த அறையினுள் ஒருவருமே இல்லை. யாருமே இருக்கவில்லையோ என்று  தோன்றியது. என்னை அழைத்து வந்த ஓவியன் என் மனதின் உருவெளித் தோற்றமா? நேத்திர சம்வாதம் புரிந்தவர்கள் உருவெளி மனிதர்களா? 

கனவில் கனவு கண்டிருக்கின்றேன். கனவில் பயப் பட்டு கனவு கலைய மறுகணம் மறுகனவில் ஆறுதலடைந்து மகிழ்ந்து, பின் நிஜத்தில் விழித்து, கனவின் கனவையும் உணர்ந்து மகிழ்ந்திருக்கின்றேன். அல்லது துயரமடைந்திருக்கின்றேன். 

அப்படியாயின் இவைகள் கனவாக இருக்கட்டும். இன்னும் சிறிது நேரத்தில் விழித்துக் கொள்வேன். 

அப்போது இவைகள் கனவுகள் என்ற உண்மையில் மனந் தெளிவு பெறுவேன். இவர்கள் உருவெளி மனிதர்களாக இருக்கட்டும். இந்த ஓவியன் கனவு – படிக்கட்டுகள் கனவு- குளித்துக் கொண்டிருந்த பெண்கனவு – ஊசியினால் பல்லைக் குத்திக் கொண்டிருந்த இளம் பெண் கனவு – தட்டி மறைப்புக்கு அப்பால் நடந்த சிருஷ்டிக்கலை கனவு – எல்லாமே கனவாக இருக்கட்டும். 

இப்போதோ! அல்லது எப்போதோ கனவு கலைந்து விடும். சிலநேரங்களில் கனவு கலைவது ஒரு தாங்க முடியாத துயரம். சில நேரங்களில் கனவு கலைவது தாங்கமுடியாத ஒரு சந்தோஷம் எது எப்படி ஆயினும் இவைகள் கனவாக இருக்கட்டும். 

நான் எழுந்தேன். ஓவியன் என்னை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போல ஒரு தோற்றம். நான் போகிறேன் என்று அந்த உருவெளி மனிதனிடம் கூறினேன். அவனும் அப்படியே மௌனத்தால் பதில் அளித்தான். 

பலகைப் படிக்கட்டில் இறங்கும்போது கீழே தண்ணீர்க் குழாயடியில் யாரும் குளித்துக் கொண்டிருக்கவில்லை. பித்தளைக் குழாய் காய்ந்து போய் வெயிலில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. 

ஒழுங்கை வழியால் பாதைக்கு வந்தேன். எல்லாமே மறந்து விட்டது. இப்போது கனவு கலையவேண்டும். இவைகள் உருவெளித் தோற்றங்களா? அல்லது கனவுகளா? நான் விழித்து விட்டால் கனவு கலைந்துவிடும். ஆனால் நான் அன்று விழிக்கவில்லை. 

நான் விழித்த பின், பல நாட்கள் கழிந்த பின் பத்திரிகையில் ஓவிய நண்பனின் படத்துடன் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 

செய்தி இதுதான்: 

சிறந்த கலைஞனான அவன் போதைப் பொருள் பாவனையாலும் தன்னினச் சேர்க்கையின் விளைவாக ஏற்பட்ட நோயினாலும் விரக்தியுற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டானாம்.

– ஒரு ஜனனத்தின் அஸ்தமனம், முதற் பதிப்பு: மார்ச் 1994, தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *