கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 1,018 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மக்கள் இவ்வுலகில் நல்லுணவு, நல் உடை, நல் லிருக்கை முதலியவைகள் பெற்று இன்ப வாழ்க்கை செய்ய வேண்டுமானால், அவர்கள் உடலால் உழைத்துப் பாடுபட வேண்டும். தமது உடல் இன்பநலத்தோடிருக்க விரும்பு வோர் அளவாக உணவும் நீரும் கொள்ளவேண்டும். மக்கள் தம்மை நல்லவர்களென்று எண்ண விரும்புவோர் மரியாதையும், அடக்கமும், அன்பும் உள்ளோராகவும் பிறர்க்கு ஒரு தீங்கும் செய்யா தவராகவும் இருக்க வேண்டும்; ஆகவே, இக் குணங்களெல்லாம் மக்களுக்கு இன்றியமையா தன ஆகும். 

மனிதன் இவ்வுலகிற் காண்பன நுகர்வன தவிர, பதாம் வேறொன்றிலும் தொடர்புடையவனா யிருக்கின்றோம் என்பதை அறிந்திருக்கின்றான். அவன் தானும், இவ்வுல கும், ஏனைய உலகங்களும் எப்படி உண்டாயிருக்கின்றன என்று உள்ளுக்குள்ளே கேட்டுக்கொள்கின்றான். நினைவும் உணர்ச்சியுங் கொண்டிருக்கின்ற தன் மனம் தனது நிலை யற்ற உடலைப்போன்று அழிந்துபோகக்கூடிய ஒரு பொருளா, இல்லையா? என்பதை ஆராய்ச்சி செய்கின்றான். இதற்கு விடை பேரறிஞர்களாகிய ஆன்றோர்கள் அருளி யிருக்கின்றார்கள். அஃதாவது: 

உலகங்களும் அதனில் உள்ளவைகளும் எல்லாம் வல்ல ஒரு பரம்பொருளால் படைக்கப்பட்டிருக்கின் றன; ஆன்மாவோ உடலழிந்தபின் வேறொருநிலையிற் பொருந்தி யிருக்கும். இவ்வாறு மனிதன் வேறொரு புத்தொளியில் இருப்பதாகத் தன்னைக் காண்பான்; மனிதன் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்க நாடுவதுமல்லாமல், இதனை விட ஒரு சிறந்த மேன்மையான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின் றான். அதனில் அவனுடைய இன்பமோ துன்பமோ தற் கால நிலையைவிட அளவுபடாததாக இருக்கும். 

பேரறிவாளாரான ஆன்றோர் வாக்குகளை ஓர்ந்தறித லும், அவைகளுக்குத் தக்கபடி நின்று நடக்கைக்குக் கொண்டு வருதலும், அவ்வாறு பிறரை நடத்திவைத்தலும் சிறந்த அன்புள்ள கடமையாகும். இவ்வருள் வாக்குக்களைப் பற்றி மக்கள் பல்வேறு வகைப்பட்ட கொள்கைகளைக் கொண்டு சண்டையிட்டுச் சச்சரவுபடுகின்றார்கள். இவ் வேறுபாடுகளினின்றும் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளல் வேண்டும். என்றும் தம் கொள்கைகளைப் போன்று பிறர் கொள்கை இல்லையென்று அவர்கள்மேற் சீற்றங்கொள்ளல் முதலியன கூடாதென்றும் ஆணையிட்டிருக்கின்றனர். 

இவையேயன்றி மக்கள் மேலும், கீழும், நாலா பக்கங் களிலுமுள்ள பொருள்களைப் பற்றிச் சிந்தித்தறிய வேண் டும். இவ்வுலகைப் போன்று பல்வேறு உயிர்களையுடைய எண்ணிக்கைக்குட்படாத உலகங்களை அடக்கிக்கொண்டி ருக்கின்ற வானவெளிப்பரப்பைப் படைத்தது எது! இவ்வுலகங்களை யெல்லாம் தத்தம் இடத்தில் நிலைக்கவைத் துக் காத்துவருவது எது? இவ்வுயிர்களுக்கென்று வானில் ஞாயிற்றையும் திங்களையும் ஒளிரச்செய்து, அவைகட்கு. வேண்டிய உணவுப்பொருள்களை யெல்லாம் ஆக்கிவைப் பது எது? இவ்வுயிர்கள் திட்டப்படுத்திய வழிகளில் இருந்து வாழச்செய்வது எது ? இவைகளையெல்லாஞ் சிந் திக்கச் சிந்திக்க உலகங்களையெல்லாம் படைத்துக்காத்து அழிக்கும் தகைமையுள்ள எல்லாம்வல்ல ஒரு முழுமுதற் பொருள் உண்டென்று மக்களாகிய நாம் உணர்கின்றோ மல்லவா ? 

எல்லா முதன்மையும் கொண்ட இச்சிறந்த நிலைக்கு நன்னெறிச் சட்ட திட்டங்களை அவ்வான்றோர் அமைத்துக் காட்டியிருக்கின்றனர். அவையாவன: 

க. எல்லாம் வல்ல முதலும் முடிவுமில்லாத முழு முதற் பொருள் ஒன்றே. 

உ. தந்தை தாய்ப் பேண். 

௩. பிறன் இல் புகாதே. 

ச. கள்ளத்தை உள்ளத்திற் கொள்ளாதே. 

ரு. பொய்ச்சான்று கூறாதே. 

சு. இலமென்று வெஃகுதல் செய்யாதே.

எ. உன்னைப்போலவே பிறரிடமும் நட்புக்கொள்.

அ. எளிய மனத்தர் ஒளி உலகு அடைவர்.

கூ. அழுதாற் பெறுவர் ஆண்டவன் அருள்.

க0. அமைதியாளர் உலகம் ஆள்வர். 

கக. நன்னெறிப் பசிதாக முடையவர்கள் பசியாறு வார்கள். 

கஉ. தயை காட்டுபவர்கள் தயை பெறுவார்கள்.

கங. மனத்தூய்மை யுடையவர்கள் பரம்பொருளைக் காண்பார்கள். 

கச. நன்னெறியின் பொருட்டு உயிர் விடுபவர்களுடை யதே ஒளி உலகம். 

கரு. பிறர் மெய்ச்சப் பிச்சை வழங்காதே. 

கசு. நெறித் தவற்றை மனத்தின்கண் நினைத்தலே அதனைச் செய்த குற்றமாகும். 

கஎ. ஒருவன் குற்றமேயுடையவனாகவும் குணமேயுடை யவனாகவும் இருத்தல் ஒவ்வாத தொன்று.

கஅ. உடன் பிறந்தாரிடம் ஒற்றுமை கொள்; பகைவரிடமும் அன்பு கொண்டிரு. 

கக. கரவுக் குணத்தை அறவே ஒழி.

உO. தன்னெஞ் சறிவது பொய்யற்க. 

உக. வாய்ச்சொல்லா லன்றிச் செய்கையினாலேயே ஒருவன் குணத்தை யறி. 

உஉ. உடன் மக்கள் குற்றங்களை ஒன்றிரண்டு தடவை யன்று, என்றும் மன்னிப்பாயாக. 

உ௩. நன்றி யறிவுள்ளவனாக இரு; நம்பிக்கையைக் கைவிடாதே. 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *