கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 17,582 
 
 

‘‘இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு ஜெயிச்சிருதாங்க!’’

‘‘முடியாது, முடியாது! தேர்தல்ல யாவது, நா நிக்கிறதாவது… அந்தப் பேச்சே வேணாம்!’’

‘தயவுசெஞ்சு அப்படிச் சொல்லப் படாது’ என்று எம்புட்டோ மன்னா டிப் பார்த்தார்கள். ‘சாவக் காணேன்‘ என்று பலமாகத் தலையைக் குலுக்கி விட்டார் நல்லான். ஊர்க்காரர்கள் கவலைப்பட்டார்கள்.

‘‘நல்லானைத் தேர்தல்ல நிக்க வைக்க நானாச்சி’’ என்று முன் வந்தார் மன்னபுலி.

‘‘காலக் கொடுமை பெருச்சாளி காவடி எடுத்து ஆடுனதாம்! பஞ்சா யத்து போர்டு தலைவருக்கு ஒங்க புள்ளிக்காரன் நிக்காம் போலிருக்கெ?’’ என்றபடி நல்லான் வீட்டுக்குள் நுழைந்தார்.

‘‘நின்னுட்டுப் போறாம்; நமக் கென்ன?’’

‘‘நமக்கென்னவா; என்ன முதலாளி இப்படிச் சொல்லுதியெ! ஊரு நண்ட ழிஞ்ச காடா ஆகிப் போயிரும்! ஆனா, நீங்க நிக்கப் போறதாத்தாம் ஊர் பூராவும் பேசிக்கிடுதாங்க’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அவரு நின்னா டிப் பாஸிட்டு கூடக் கிடைக்காதுன்னு சொல்லிக்கிட்டு அலையுதாம் ஒங்க புள்ளிக்காரன்!

அந்த ஆளின் பெயரைச் சொல்லக் கூடப் பிடிக்காத அளவுக்கு வெறுப்பு இருந்ததால், ‘புள்ளிக்காரன்’!

‘‘அவன் இன்னொண்ணும் சொல் லிட்டலையுதாம்! ‘நல்லான் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா, எம் ஒரு பக் கத்து மீசைய எடுத்துருதேம்’னு சவால் விட்டிருக்காம்!’’

நல்லான் முகத்தில் யோசனை படிய ஆரம்பித்தது.

‘இப்படியாப்பட்டவங்களுக்கு நாம தனீயா புத்தி புகட்ட முடியாது; ஊரைச் சேத்துக்கிடணும்; சமயம் இதுதாம்’ என்று தோன்றிவிட்டது அவருக்கு.

‘‘சரீப்பா; நா நிக்கெம்’’ என்று உறுதிபடச் சொன்னார் நல்லான்!

– 24th ஜனவரி 2007

 

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *