உண்டி கொடுத்தோர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2025
பார்வையிட்டோர்: 59 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யார்? மகுதூம் மியானா, அஸ்ஸலாமு அலைக்கும். ஏ. இவ்வளவு தூரம்?” என்று வரவேற்றவாறு வந்திருந்த அ நண்பர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். நல்ல வேளை அவ போர்க் கோலம் பூண்டிருக்கவில்லை. 

உலகத்தில் நிலவும் கொடுமைகள், நடக்கும் ஒழுங்கீனங்கள் இழைக்கப்படும் அநீதிகள் அனைத்துக்கும் எதிர்க் குரல் கொடுத்து போர் முஸ்தீபு செய்பவர் என் நண்பர்: யார் எந்த அபிப்பிர யம் தெரிவித்தாலும் அதைப் பரிசீலனை செய்யாது ஏற்று கொள்ள மாட்டார். அந்நேரத்தில் அபிப்பிராயம் சொல்பவரி அந்தஸ்தைப் பற்றி அக்கரைப்பட மாட்டார். ஆற்றொழு கோடு நீந்திச் செல்வது தான் காரியம் சாதிப்பதற்கு வழி என் நம்பிச் செயலாற்றும் பெரும்பான்மை மக்களிடையே, எப்பொழு தும் எதிர்நீச்சல் போட்டே பழக்கப்பட்டவர். ‘‘போர் சேவல் ” என்று அவருக்கு நண்பர்கள் சூட்டிய பட்டம் பொருத் முடையது தான் ! 

ஆனால் அன்று அவர் முகத்தில் போராட்டத்தின் அறிகுறியே தென்படவில்லை: 

”பாய்! உங்களுக்கு முன்ஷி முத்துசுந்தரத்தைத் தெ யுமா ?” என்று கேட்டார்; 

“முன்ஷி முத்துசுந்தரமா ? கேள்விப்பட்ட பெயராக யிரு கிறதே ? அரசியலில் அவர் பெயர்……!” 

“வஸ் தஃபிருல்லாஹ் ! அவர் அரசியலுக்கு முழுக்குப் போட டுக் கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டதே! ‘அரசியல் ஓ அங்காடி; அங்கே விற்பவர்கள் எத்தர்கள்; வாங்குபவர்கள் குருடர்கள்’ என்பது அவருடைய பொன்மொழியாயிற்றே!” என்று சொல்லிச் சிரித்தார் மகுதூம் மியான். 

“இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அவருடைய பூர்வா சிரமம் அரசியல் தான். பிறகு ஏதோ அதிருப்தி கொண்டு அரசிய லில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் !’” என்று குறிப்பிட்டு அவர் 1942ம் ஆண்டில் சிறைக்குச் சென்றிருந்ததையும் நினைவு படுத்தினேன். 

“அவரே தான் ! கூட்டுறவு இயக்கத்தில் காந்தீயப் பொருளாதாரம்” என்னும் பொருள் பற்றி ஆராய்ச்சி நடத் திக் கொண்டிருக்கிறேன். முன்ஷி முத்து சுந்தரம் காந்தீயப் பொரு ளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எனவே அவரைச் சந்தித்து இது பற்றி உரையாடிவிட்டு வரலாம் எனக் கிளம்பி னேன். நீங்களும் வருகிறீர்களா?” என அழைத்தார். 

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சீர்படுவது தான் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு முதற்படியாக அமையும் என்னும் கருத்தில் கவனம் செலுத்தி வந்த நான் நண்பரின் அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவரோடு புறப்பட்டேன். 


“அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் : ஒரு நொடியில் வந்து விடுவார், என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்ற அவரு டைய பையன் முன் அறையில் எங்களை உட்கார வைத்தான். 

விசாலமான அந்த அறையை நோட்டமிட்டேன். ஓர் எழுத்து மேஜை, நான்கைந்து நாற்காலிகள், தவிர தட்டு முட்டுச் சாமான்களேயில்லாமல் வெறிச்சென்று இருந்தது அந்த அறை: “உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்” என்பதை “உண்பது நானாழி, உடுப்பது ஒரே முழம்” என்று மாற்றிக் கொழுத்த உடலும், குறைந்த உடையும் கொண்ட சினிமா நட்சத்திரங்களின் படங்கள், வலுவிலே புன்முறுவலை வரவழைத் துக் கொண்டு ‘போஸ்’ கொடுத்து நிற்கும் அரசியல் தலைவர் களின் சித்திரங்கள்; பாமர ரசனைக்காக, சமயத் துறையைப் பொழுதுபோக்குக் களங்களாக்கும் மதத்தலைவர்களின் ஓவியங்கள் ஆகியஎவையுமே அறைச் சுவர்களை அணி செய்யவில்லை: மாறாக பொன்மொழிகள், கருத்துரைகள் தாங்கிய பல பலகைகள் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்தன. 

“உலகத்தின் வயதோடு ஒப்பிடும் போது, நம் ஆயுள் ஒரு கணம் ; அதைப் பேச்சிலே வீணாக்குவதா ?” என்று அரசியல் வாதிகளை அதிர்ச்சியடையச் செய்யும் பொன்மொழி நீண்ட பலகையொன்றில் பொறிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஒன்று தவிர மற்றப் பலகைகள் எல்லாம் பசிப் பிணி யின் கொடுமையையும் அதைப் போக்குவதின் புண்ணியத்தையும் விளக்குவனவாக இருந்தன. 

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம், ” என்று பாரதி ஒரு சுவரில் பறை சாற்றிக் கொண்டிருந்தார்; 

“அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான்பொருள் வைப்புழி ” 

என்று வள்ளுவர் ஒரு சுவரில் முழங்கிக் கொண்டிருந்தார். 

முத்துசுந்தரம் உட்காரும் நாற்காலிக்கு மேலே “ஏழைக்கு ரொட்டியின் உருவிலே தான் கடவுள் காட்சியளிக்கிறார், என்னும் காந்திஜீயின் பொன்மொழி கதர்த் துணியில் எழுதப் பட்டு சட்டம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது; 

அந்த அறையின் தோற்றத்தையும், அதில் காணப்பட்ட பொன்மொழிகளையும் கண்ட நண்பர் மகுதூம் மியானுக்குத் தாம் இங்கு வருவதில் எடுத்துக்கொண்ட சிரமத்துக்குப் பயன் கிடைக்கும் என்ற உள்ளநிறைவும், உறுதியும் ஏற்பட்டு இருக்க வேண்டும். 

“பாய்! எந்தப் பொன்மொழியை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் ” என்று காரிய சாதனையின் மகிழ்ச்சி, குரலில் தொனிக்கக் கேட்டார். 

“அதாவது, காந்திஜீ…….” என்று நான் என் பதிலை முடிக்கும் முன்னர், “காந்திஜீக்கு என்ன?” என்று கேட்டுக்கொண்டே முன்ஷி முத்துசுந்தரம் உள்ளே நுழைந்தார்.

தலை தும்பைப் பூவைப் போல் நரைத்து, முகத்தில் சுருக்கங் கள் விழுந்து, முதுமை உடல் முழுதும் தன் கோலங்களை இழைத் திருந்த போதிலும், அவருடைய பார்வையில் ஓர் ஒளி, குரலில் ஒரு காம்பீர்யம், நடையில் ஒரு தெம்பு இருக்கத்தான் செய்தது. 

“காந்திஜீயின் பொன்மொழியைப் பார்த்ததும் எனக்கு அருமையான வரலாற்று நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது. பசிப் பிணியில் இத்துணை அக்கரை செலுத்தும் தாங்கள் அதைக் கேட்க ஆசைப்படுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன்,” என என் பாயிரத்தைத் துவங்கினேன். 

நண்பர் மகுதூம் மியான் சிரித்துவிட்டார். 

”பாய்! கதை சொல்வதற்கு உங்களுக்கு ஏதாவது வந்து நினைவூட்ட வேண்டுமா என்ன ? நீங்கள் தான் ஸெல்ப்-ஸ்டார்டர் [Self-starter] ஆயிற்றே! ஹூம் சொல்லுங்கள்” என்று கூறிக்கொண்டே “உலகத்தின் வயதோடு ஒப்பிடும் போது, நம் ஆயுள் ஒரு கணம்………” என்னும் பொன் மொழியை அர்த்த புஷ்டியோடு பார்த்தார். 

அந்தப் பக்கமே கவனிக்காதவன் போல் நான் கதையைத் துவங்கினேன். 

ஹஜ்ஜீக் காலம். இறைவனின் வணக்கத்துக்காகப் பூவுலகில் முதன் முதலில் நிர்மாணிக்கப்பட்ட கஃபத்துல்லாஹ் என்னும் புனிதப் பள்ளி வாயிலைச் சுற்றி மனித வெள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது. புனித மிக்க இப்பயணத்துக்கென உலகின் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வந்திருந்த யாத்ரிகர்கள் உருகிப் பாயும்உள்ளமும், பெருகிப் பாயும் கண்களும் கொண்டவர்களாக மெய்மறந்து இருந்தனர். 

இஸ்லாமிய சமயக் கட்டளைகளில் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய இதய உணர்வு ஒவ்வோர் உள்ளத்திலும் மலர்ந்திருந்தது. “லப்பைக்க அல்லாஹும்ம, லப்பைக்க அல்லாஹும்ம!” என்று அந்த ஹாஜிகள் முழக்கிய முழக்கம் மக்காவின் பெருவெளிகளில் காற்றோடு கலந்து, ஆத்மீக மணம் பரப்பிக் கொண்டிருந்தது. 

ஹஜ்ஜின் பாக்கியத்தைத் தனக்குத் தந்த தலைவனின் பேரருளை நினைத்துக் கொண்டே வெண்மணலில் அமர்ந்திருந்தார் கள் துன்னூன் மிஸ்ரீ என்ற இறைநேசச் செல்வர். 

“பல்லாயிரக் கணக்கான மக்கள் எத்தனையோ இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று, இந்தப் புனித யாத்திரையின் நிமித்தம் இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய ஹஜ்ஜையுமா மாற்றுக் குறையாததாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். பல்லாயிரத்தில் ஒன்று அப்படி பாக்கியம் பெற்றிருக்கும்,” என்று அத்தூயவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அசாதாரண மான ஓர் ஒலி அவர்கள் செவிப்பறையைத் தட்டிற்று. 

“துன்னூன்! இந்தத் தடவை ஒருவருடைய ஹஜ்ஜை மாற்றுக் குறையாததாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்”, என்று தெளிவாகக் கேட்டது. 

“யா அல்லாஹ்! அந்தப் புண்ணியவான் யார்! நான் இப்பொழுதே அவரை சந்திக்க வேண்டும்” என்று தங்கள் விருப்பத்தை வெளியிட்டார்கள் மிஸ்ரீ . 

“அம் மனிதர் பெயர் அஹ்மது அஷ்காக். திமஷ்கு (டமாஸ்கஸ்) நகரைச் சேர்ந்தவர். ஆனால் அவர் மக்காவுக்கே வரவில்லை!” 

இத்துடன் இறை அறிவிப்பு நின்று விட்டது. 

“மக்காவுக்கு ஹஜ்ஜுக்கென்று வராத ஒரு மனிதரை ஹஜ்ஜு செய்ததாகக் கருதி அதன் பூரண பயனையும் கொடுத்து, அவரை மேம்படுத்தியிருக்கன், இறைவன்! இது என்ன விந்தை! அச் சீமான் கோடீஸ்வரராகயிருந்து, ஹஜ்ஜுக்குப் போகும் மக்களுக்கெல்லாம் வாரி வழங்கியிருப்பார். எப்படியும் திமஷ்கு சென்று அவரைக் கண்டு வர வேண்டும்” என்று எண்ணியவாறே பிரயாணத்தைத் துவங்கினார்கள் துன்னூன் மிஸ்ரீ. 

செல்வம் கொழித்த திமஷ்கு நகரில் செல்வர்கள் வாழும் வீதிகளில் நடையாக நடந்தார்கள் மிஸ்ரீ. ஆனால் அந்தத் தெருக்கள் எவற்றிலும் அஹ்மது அஷ்காக் என்ற பெயருடையவர் கிடைக்கவேயில்லை. கடைசியாக ஒரு மனிதர், ‘சகோதரரே! இங்கு அஹ்மது அஷ்காக் என்று எந்தச் சீமானும் இல்லை. ஆனால் நகரின் கோடியிலே செருப்புத் தைக்கும் ஒரு மனிதர் அந்தப் பெயரோடு இருக்கிறார். விசாரித்துப் பாருங்கள்’, என்று யோசனை சொன்னார். 

செருப்புத் தைக்கும் அஷ்காக்கைக் கண்டதும் ‘இறைவனின் பாராட்டுதலைப் பெற்றவர் இந்த மனிதராகத் தான் இருக்க வேண்டும்,’ என்ற உள்ளுணர்வு துன்னூன் மிஸ்ரீயவர்களுக்கு ஏற்பட்டது. 

தாங்கள் கேட்டவற்றையெல்லாம் அஷ்காக்கிடம் கூறிய துன்னூன் மிஸ்ரீ “தாங்கள் ஹஜ்ஜுக்குப் போவதற்காவது நாடியதுண்டா?” எனக் கேட்டார்கள் 


“பாவா! அதை ஏன் கேட்கிறீர்கள்; அது ஒரு நீண்ட கதை. பல ஆண்டுகளாக எனக்கு ஹஜ்ஜு செய்ய வேண்டுமென்ற ஆசை; பொருள் வசதியில்லாது ஒவ்வோர் ஆண்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்: இந்த ஆண்டு எப்படியும் ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் என்று முந்நூறு திர்ஹம் வரை சேர்த்து விட்டேன். பணம் கையில் சேர்ந்ததும் ஹஜ்ஜை நிறை வேற்றி விட்டதாகவே என் உள்ளத்தில் ஒரு பெருமிதம் தோன்றி விட்டது: 

ஆனால் நம் திட்டப்படி என்ன நடக்கிறது, பாவா ! ஒரு நாள் பொழுது சாயும் வேளை என் ஒரே மகன் ஏழு வயது நிரம்பப் பெறாத பச்சிளம் பாலகன்- விக்கி விக்கி அழுது கொண்டே வந்தான். அவன் தாயும், நானும் பதறிப் போய் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, என்ன, என்ன?” என்று விசாரித்தோம். 

அடுத்த வீட்டுக்காரர் தன்னை அடித்து விட்டதாகக் கூறி ‘கோ’ வென்று அழுதான். 

எனக்குக் கோபம் பீறிட்டு வந்தது. அந்த அடுத்த வீட்டுக் காரன் அப்பொழுது என் முன்னே நின்றிருந்தால் அவனை என்ன செய்திருப்பேனோ என்று இப்பொழுது நினைத்தாலும் என் மெய் நடுங்குகிறது. 

‘விரு விரு’ என்று அவன் வீட்டுக்கு ஓடினேன். அப்பொழுது தான் அவன் சாப்பிட்டு விட்டுக் கையைத் துடைத்துக் கொணடிருந்தான். 

“பச்சைக் குழந்தையை இப்படி அடித்திருக்கிறாயே, உனக்கு மனித இதயம் இருக்கிறதா?” என்று கத்தினேன். 

அந்த மனிதன் அமைதியாகப் பேச ஆரம்பித்தான் ; “சகோதரரே! நான் சொல்லப் போவதைச் சற்றுப் பொறுமை யுடன் கேட்டுத் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள் “, என்றான். 

களங்கமில்லாத அவன் பார்வையும், கலக்கமில்லாத அவன் பேச்சும் என்னை நிலை குலையச் செய்து விட்டன. 

“ஹூம்! சொல்லும்,” என்று அதட்டினேன். 

“சோதரா! நானும். என் மனைவியும், என் குழந்தைகளும் மூன்று நாளாகப் பட்டினி. பசி தணிக்க, வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு, வல்லவனை நினைந்துருகிய வள்ளல் நபி பெரு மானாரை நினைந்து, நான் எப்படியோ பசியின் கொடுமையைத் தாங்கிக் கொண்டேன். என் மனைவியும், தான் கண்ணீர்விட்டால், எங்கே நான் வேதனை பொறுக்காது துடி, துடிப்பேனோ என்று தன் துயரை அடக்கிக் கொண்டாள். கிபடி 

ஆனால் பசியினால் கேவிக் கேவி அழுது – பிறகு அழவும் திராணியற்றுச் சுருண்டு படுத்திருக்கும் என் செல்வங்களைக் காண எங்களால் முடியலில்லை. 

இரண்டு நாட்களாக நானும் வேலைக்கு அலைந்து பார்த் தேன். ஒரு மூட்டையைக் கூட யாரும் என்னைத் தூக்கச் சொல்லவில்லை. 

இன்று ஏதேனும் உண்பதற்குக் கொண்டு வராமல் வீடு திரும்புவதில்லை என்ற உறுதியோடு காலையில் வெளிக் கிளம்பினேன். பழைய கதை தான். அரை திர்ஹம் கூடக் கிடைக்க வில்லை. 

உச்சிப் பொழுது திரும்பும் வேளையில் நகரின் வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன். என் மக்களையும், மனைவியையும் எப்படிப் போய்ப் பார்ப்பேன் என்று நான் வேதனைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த பொழுது செத்த ஆடு ஒன்று என் கண்ணுக்குத் தென்பட்டது. அதே நேரத்தில், செத்த பிராணி யைத் தின்னக் கூடாது என்ற கட்டளையும் நினைவுக்கு வந்தது. 

ஆனால் அன்று என் குழந்தைகள் ஏதேனும் சாப்பிடா விட்டால், அவை துடி, துடித்து மடிந்து விடும் என்பது எனக்கு-நன்றாகத் தெரியும். எனவே மூன்று உயிர்கள் போ வதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பது தான் பெரிய பாவம் எனக் கருதி, அந்த ஆட்டை எடுத்துக் கொண்டு வந்து, கறி சமைத்து, உண்டோம். அந்த நேரத்தில் தான் உங்கள் செல்வத் திருமகன் என் வீட்டுக்குள் வந்து தனக்கும் அந்தக் கறி வேண்டும் என்று அடம் பிடித்தான். 

நான் தான் ஒரு பாவத்தைச் செய்து விட்டேன்; எவ்வளவோ ஆசாரசீலராக இருக்கும் உங்கள் வீட்டுக் குழந்தை யும் அந்தப் பாவத்தைச் செய்வதற்கு நான் உடந்தையாக யிருப்பேனா? அந்தப் பையனிடம் எவ்வளவோ எடுத்துச் சொன் னேன். அவன் முரண்டு மிடித்து, சத்தம் போட்டுக் கொண்டி ருந்தான்; மூன்று நாள் பட்டினியின் பலஹீனம், சட்டென்று கோபம் வந்து விட்டது. ஓர் அடி அடித்து விட்டேன். என்னை மன்னியுங்கள், என்று கண் கலங்கி நின்றார் அம்மனிதர். 

அவருடைய மூன்று குழந்தைகள் பசியினால் துடி, துடித்து உயிர் விடயிருந்த சோகத்தைக் கேட்டதுமே, என் நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது. வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். 

“ஆயிஷா, ஆயிஷா!” என்று என் மனைவியை இறைந்து கூப்பிட்டேன். 

பதறிக் கொண்டே ஓடி வந்தாள் என் மனைவி: 

“ஆயிஷா! நபிகள் பெருமானார் என்ன சொன்னார்கள்,’ அண்டை வீட்டான் பசித்திருக்கத் தான் மட்டும், வயிறு நிரம்ப உண்பவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்!’ என்று தங்கள் திருவாயால் சொல்லியிருக்கிறார்கள். 

“அண்டை வீட்டிக்காரனும், அவன் செல்வங்களும் பசியால் துடி துடித்துக் கொண்டிருக்க, நாம் வயிறு புடைக்க உண்டு விட்டுப் பணமும் சேர்த்து வைக்கிறோம். இது அநீதி ஆயிஷா? பெரும் அநீதி! கொண்டு வா அந்தப் பணத்தை! அது என் சோதரனுக்கு உரியது,” என்று கத்தினேன். 

முந்நூறு திர்ஹமும் அந்தச் சோதரனின் கைக்குச் சென்றது. 

 “இது தான் நான் ஹஜ்ஜுக்குப் போக விருந்த கதை,” என்று கூறி முடித்தார் அஹ்மது அஷ்காக். 

“ஸுப்ஹானல்லாஹ்! ஆண்டவன் மனிதனின் தூய எண்ணத்துக்கும் பரிசு தருகிறான்!” என்று வியந்து நின்றார்கள் துன்னூன் மிஸ்ரீ. 


“ஆஹா! பசியின் கொடுமையையும், அதைப் போக்க உதவுவதினால் உண்டாகும் புண்ணியத்தையும் அருமையாக விளக்குகிறதே உங்கள் கதை!” என்று ரசித்தார் முத்துசுந்தரம். 

”பாய்! நேர்த்தியான கதை தான். ஆனால் நாம் வந்த காரியம்…” என்று தம் குறிக்கோளை நினைவு படுத்தினார் நண்பர் மகுதூம் மியான். 

“அதற்கு முன்னுரை தான் இது. முன்ஷியவர்கள் இப் பொழுது நான் விட்ட இடத்திலிருந்து துவங்குவார்கள்” என்று கூறி வைத்தேன். 

“நீங்கள் கூறியது தான் என் பொருளாதாரத்துக்கு முன் னுரையும், இறுதியுரையுமாகும். ஒவ்வொரு மனிதனும் தன் அண்டை வீட்டுக்காரனின் நலத்தில் அக்கரை செலுத்த ஆரம்பித்தால், பசியேது ? பிணியேது…” என்று தம் கதையைத் துவங்கினார் முத்துசுந்தரம். 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *