ஈகை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,069
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
ஏழைகளுக்கு இல்லை என்னாமல் கொடுத்தல்
குமணனைக் காட்டிற்குத் துரத்திவிட்டு இவன் தம்பி அமணன் நாட்டை ஆண்டுவந்தான். காட்டில் வறுமையோடு வாழும் குமணனிடம் பெருஞ்சித்திர னார் சென்று தம் வறுமையைச் சொல்லிப் பொருள் யாசித்தார். “யாசித்த புலவருக்கு அவர் விரும்பிய பொருளைக் கொடுக்காமல் உயிர்வாழ்தலைக் காட்டி லும் இறத்தல் நல்லது” என்று தம் கையில் இருந்த வாளைப் புலவரிடம் கொடுத்து “என் தலையை வெட் டிக்கொண்டுபோய்த் தம்பியிடம் கொடுத்து நீர் விரும்பிய பொருளைப் பெற்றுச் செல்லும்” என்றார். இதைக்கேட்ட புலவர், அண்ணன் தலைபோல் ஒரு உருவம் செய்து அவ்வுருவத்தை அமணனிடம் காட்ட, அவன் மனம் இளகி என் தமையனை அழைத்து வருவீரானால் மிக்க பொருள் தருவேன்”, என்றுசொல்லப் புலவர் போய் காட்டிலுள்ள வள் ளலை அழைத்துவந்து காட்டி மிகுதியான பொருளைப் பரிசாகப் பெற்றுச் சென்றார். இதனால் “யாசிப்பவர் விரும்பிய பொருளைக் கொடுக்க முடியாமல் வாழ்வதைவிட இறத்தலே நல்லது” என்று பின் வரும் குறளும் இக்கருத்தை வற்புறுத்தி அறிவிக்கிறது.
சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை.
சாதலின் = ஒருவனுக்கு இறத்தல் போல
இன்னாதது = துன்பம் தருவது
இல்லை = ஒன்றும் கிடையாது.
அதூஉம் = அப்படிப்பட்ட இறத்தலும்
ஈதல் = ஏழைகட்குக் கொடுத்தல்
இயையாக்கடை = முடியாத இடத்து
இனிது = நல்லது ஆகும்.
கருத்து: ஏழை, விரும்பியதைக் கொடுக்காமல் வாழ் வதைவிட இறத்தல் நல்லது.
கேள்வி: ஈதல் இயையாக்கடை எது நல்லது ஆகும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.