இவள் எங்கள் வாரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 1,191 
 
 

ஏப்ரல் மாத வெய்யில் சென்னையில் எப்பொழுதுமே அதிகம் தான் .கதிரவன் எழ ஆரம்பித்து, அரை மணி ஆகி இருந்தது. லதா, தன் குட்டி ஷைலஜா பக்கம் போய் “ஷில்லு, ஷில்லு அம்மாவோட செல்லகுட்டி, எழுந்திரு,” என்று உலுக்கி விட்டு, திரைகளை தள்ளி விட சன்னல் பக்கம் திரும்பினாள். ஷைலஜா லதாவின் பெண், எழுந்து கொண்டவள், கண்ணை திறந்து பார்த்து விட்டு, மறுபடியும் தன் பார்பி பொம்மையை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தாள். திரைகளை தள்ளிவிட்டு திரும்பியவள், அவளை கசக்கி அவள் கன்னத்தில் முத்தம் ட்டாள் .சிரித்துக்கொண்டே எழுந்தவள் “ஐ லவ் யூ அம்மா”, என்று சொல்லி முத்த மிட்டாள் “ஷில்லு, சீக்கிரம் ஸ்கூலுக்கு போகணும் கெட்அப்”, என்றாள்.

“நோ அம்மா, ஷில்லு இல்லை”, என்று அழ ஆரம்பித்தாள். “ஓ மை பிரின்சஸ் இனிமே ஷைலஜா அப்படியே கூப்பிடறேன்” என்று சொல்லி அவளை அள்ளி எடுத்து கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். குளித்து தயாராகி கொண்டு இருந்தாள் ஷைலஜா. “அம்மா, என் பர்த்டே, அப்பா வந்துடுவரா? என்பிரெண்ட்ஸ் எல்லாரும் வரணும்”.

“ஓ என்னோட பிரின்ஸ்ஸ் கண்டிப்பா அப்பா பாட்டி தாத்தா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க. என்ன கேக் வேணும் என் செல்லக் குட்டிக்கு?”லதா கேட்டாள்

“சாக்லேட், அதுல என்னோட பார்பி போட்டு இருக்கணும்” என்றாள்.

“கண்டிப்பா, இப்ப பாலும் பிரெட், அப்புறம் எல்லாம் “,அவளை கட்டி எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

அவள் குடித்துக் கொண்டே இருக்கும் போது, ஷூவை,போட்டு பையை கொண்டு டிரைவரிடம் கொடுத்து விட்டு, ஷைலஜா ஒடி வர அவளை, காரில் உட்கார வைத்து பை சொல்லி விட்டு வந்தாள்.

கார் கிளம்ப, ஹாஸ்பிடலுக்கு போன் செய்து இரண்டு நாள் தான் வர முடியாது என சொல்லி விட்டு, சமையல்கார அம்மாவிடம்,கொஞ்சம் சூட காஃபி தாங்க ,”என்று சொல்லி விட்டு சோஃபாவில் சாய்ந்தாள் லதா.

பகுதி -2

கண்களை மூடியபடி, இந்த வீட்டில், மூன்று வருடத்திற்கு முன் குழந்தையின் குரல் கேட்குமா என்று இருந்த நாள்கள் எத்தனை, எத்தனை?அவள் டாக்டராக இருந்தாலும், கடவுளின் செயலே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது எண்ணி பெரு முச்சு விட்டாள் லதா. குழந்தை பாக்யம் வேண்டி செல்லாத கோவில் இல்லை, செய்யாத பூஜை இல்லை .கணவன், பிரகஷிர்க்கும் இதில் எதிலும் நம்பிக்கையும், எதுவும் பிடிக்காமல் போயிற்று .பெரியவர்களின் தொந்தரவால் செய்யப்பட்ட எல்லாவற்றிக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.எத்தனையோ பேர் அவர்களுக்கு தத்து எடுத்துக் கொள்ள சொல்லியும் அவர்களுக்கு கொஞ்சமும் அதில் அவர்கள் மனம் செல்ல வில்லை.

சமையல்க்காரா அம்மா காபியும், பிஸ்கட்டும் கொண்டு வரவும், பிரகாஷின் போன் வரவும் சரியாக இருந்தது.”ஹலோ, லதா குட் மார்னிங், நம்ம இளவரசி, ஷைலஜா, ஸ்கூல் போயாச்சா, எப்படி இருக்கா?”

“ஹலோ, பிரகாஷ், ம்ம், அவள் கிளம்பி விட்டாள் .பர்த்டே மூட்ல இருக்கா, அத்தை,மாமா எல்லாம் வர்றாங்க, நீங்க என்னிக்கு வர்றீங்க “லதா கேட்டாள் .”ஓகே லதா நாளைக்கு வந்துடறேன், என்று சொல்லி போனை வைத்தான்.

எதற்கும் மனது ஓடாமல்,வேறு குழந்தையை தன்குழந்தையாய் ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லாமல் மிகவும் தவித்தாள் லதா. எல்லா சமயங்களிலும், கூட இருந்து அவளுக்கு கை கொடுத்துக் கொண்டு இருந்தான் பிரகாஷ். அன்று மிகவும் வாகன நெரிசல் இருந்ததால், டிரைவர் வேறு வழியாக வண்டியை எடுத்துக் கொண்டு போனான் .மூன்று வயது சிறுமி, குட்டி கடைப் பக்கம் நின்று கொண்டு எல்லோருக்கும்,கையை ஆட்டி,பை,பை சொல்லி கொண்டு இருந்தாள் .லதா,அவளை பார்த்தவள், மறுபடியும், திரும்பிப் பார்த்தாள். மற்ற வந்தநாள்களிலும் அந்த வழியாகவே ஹாஸ்டபிடலுக்கு போகும்படி சொன்னாள். அழகான கண்கள், கிழிந்து போன பாவாடை, பௌப் வைத்த சட்டை, தலை முடியை இங்கும் அங்குமாய், இழுத்துப் போடாமல் இருந்ததால், அவள் அழகை, குறைத்து காண்பித்தது. சாக்லேட் சாப்பிடாத பற்கள்,வரிசையாக சிரிக்கும் போது தெரிந்தது. காலில் மண் படிந்து, செருப்பில்லாமல் இருந்தது. இவள் மட்டும் ஒரு, டைரக்டர் கண்ணில் பட்டு இருந்தால்,ஒரு குட்டி ஶ்ரீதேவி,போல இருந்து இருப்பாள்.

லதாவுக்கு அவள் மேல் தனி அன்பு பிறந்தது .தினமும் ஹாஸ்பிடல் போகும் போது, பிஸ்கட், பழம் என கொடுப்பது அவள் பழக்கம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டு பற்களைக் காட்டி கை அசைப்பது அந்த பெண்ணின் வழக்கம். சில நாட்களில் அவளின் பெயர் ரோசா என்று தெரிய வந்தது.

தினமும், பிரகாஷிடம் அவளைப் பற்றி பேச ஆரம்பித்தாள். “ரொம்ப கியூடாக இருந்தா பிரகாஷ், எனக்கு என்னமோ, அவள் நமக்காகாத்

தான் பிறந்த மாதிரி இருக்கா”, என்று தினமும் சொல்வாள். எனக்கு யாரும் வேண்டாம்னு சொல்லிக் கொண்டு இருந்த நீயே, இப்ப அடிக்கடி அவளைப் பற்றி பேசறது,

எனக்கே ஆச்சிரியமா இருக்கு லதா, நீ வேணும்னா நாளைக்கு கூட்டிக் கொண்டு வாயேன், என்று சொன்னான் பிரகாஷ். இல்லை பிரகாஷ், மற்றவங்க எல்லோரும் இதுக்கு ஓத்துக்க வாங்களா தெரியலை, பொண்ணுங்கறது வேற, எனக்கு பயமா இருக்கு பிரகாஷ் என்று மார்பில் சாய்ந்தாள். எதற்கும் நீ பயப்படாதே இந்த காலத்தில் பொண்ணோ பையனோ எல்லாம் ஒன்று தான், பெண் என்றால் எல்லா விதமான உடைகளும் போடலாம். பெண்ணக்கு இருக்கும் அழகு, பொறுமை அதெல்லாம் பையன்களை விட ஒரு படி கூடுதலாக இருக்கும்.,எப்பவும் போல நான் உன் பக்கம் தான். கவலைப்படாதே, நீ எந்த முடிவு எடுத்தாலும், எனக்குச் சம்மதம் லதா, அன்புடன் அவளை அனைத்தான்.

வெளி நாடு சென்று வந்த லதாவுக்கு, ஹாஸ்பிடல், போகும் போது அங்கு ரோசா இல்லை எனத் தெரிய வந்தது.எங்காவது சென்று இருப்பாள் என விட்டு விட்டாள்.ஒரு வாரமும் காணாததால், டிரைவரிடம் விசாரித்து வரும் படி கூறினாள்.

அந்த பிள்ளையை, பக்கத்தில் இருக்கிற அனாதை இல்லத்தில் விட்டு இருக்காங்களாம்” டிரைவர் சொன்ன போது துடித்துப் போனாள் லதா,மறு நாள் காலை, அந்த பக்கத்தில் உள்ள அனாதை இல்லத்தை நோக்கிச் சென்றது அந்த பெரியகார்.மற்ற குழந்தைகளுக்கும், சாக்லேட், பிஸ்கட் என பெட்டிகளுடன், வக்கீல் மற்ற முக்கிய பத்தரங்களுடன் அந்த இல்லத்தின் பொறுப்பாபளரை பார்த்து, தான் வந்த காரியத்தை சொன்னாள்.

“எல்லாம் சரியாக இருக்கும்மா, நீங்க ரோசவை கூட்டிக் கிட்டுப் போலாம்” என சொல்ல, உள்ளே இருந்து வந்த ரோசா,ஓடி வந்து லதாவை கட்டிக் கொண்டாள். தன் வாரிசை தூக்கிக் கொண்டு கண்ணிற் மல்க காரை நோக்கிச் சென்றாள். ரோசா எதுவும் தெரியாமல், சிரிக்க,வீட்டிற்குள் வந்தவள் ஷைலஜா ஆனாள்.

எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தபோதிலும்,சிறிது நாட்கள் கழித்து, ஷைலஜா, எல்லாரையும் அவள் குறும்பால், அவள் மழலையால் கட்டி

இழுத்தாள். இதோ இந்த வீட்டில் அவள் வந்து கொண்டாடப் போகும் முதல் பிறந்த நாள் காலிங் பெல் சத்தம் கேட்டு திரும்பினாள்.

“அம்மா, பாப்பாவை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டேன் வேற எங்காவது போகனுங்களா?” டிரைவர் சந்தோஷ் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகணும்” என்றவள் பேப்பர் படிக்க ஆரம்பித்தாள்.

இன்னும் ரெண்டு நாள், அப்புறம்,அத்தை, மாமா எல்லாரும் வருவதற்கு முன்பே,கேக்ஆர்டர் செய்யவும்,மற்ற குட்டி வேலைகளை முடிக்க வேண்டும் என எண்ணினாள். தன் தோழி, நளினி தன் பெண்ணுக்கு போன முறை கேக் ஆர்டர் செய்து திருப்தியாக இல்லை என்று வேறு ஒரு கேக் செஃப் பற்றியும் அவர்களின் கை பேசி நம்பர் கொடுத்தது அவளுக்கு நினைவில் வர அவள் வாட்ஸ்அப்பில் தேட ஆரம்பித்தாள்.

இதோ, “பேக்ஸ்பியர் டேல்ஸ்” என்று போட்டு இருந்தது அதற்கு கீழே,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ல் அன்று வந்திருந்த செஃப் பற்றியும் அனுப்பி இருந்தாள். கீழே தரப்பட்டுள்ள எண்ணை எழுதிக் கொண்டு மொபைலில் அந்த எண்ணை தட்டினாள்.

எதிர் முனையில் இருந்து ஒரு பெண்ணின் குரல் ,”ஹலோ,குட் மார்னிங்”.

“நான் டாக்டர் லதா, அண்ணா நகர்லேந்து பேசறேன். என் பெண் ஷைலஜா பிறந்த நாள் அடுத்த வாரம் வருது, கேக் ஆர்டர் பண்ணனும்.”

“சரிங்க மேடம்,சொல்லுங்க”. “நீங்கள் யா ர் பேசறது? செஃப் ஆர்த்தி இல்லையா?”என்று கேட்டாள் லதா.

” செஃப் ஆர்த்தி பேசறேன் என்ன கேக்? சாக்லேட்? இல்லை ஸ்ட்ராபர்ரி?”

லதா சொல்ல ஆரம்பித்தாள்,”சாக்லெட் அவளுக்கு பார்பி போட்டு இருக்கணும்.”

மேலும் சொல்லப் வந்தவளை தடுத்து நிறுத்தி விட்டு சொன்னாள், மேடம், நீங்க வாட்ஸ்அப் பண்ணிடுங்க, எவ்வளவு வேணும் ,குகீஸ் கூட கிஃப்ட் பேக் பண்ணி நீங்க குடுக்கலாம்,கப் கேக் கூட இருக்கு. என் வெப்சைட்டில் எல்லாம் குடுத்திற்றுக்கேன், நீங்க பார்த்து விட்டு எனக்கு மெசேஜ் போட்டு விடுங்க.”. என்று கேட்டு விட்டு போனை வைத்தாள்.

எல்லாம் சரியாக அனுப்பி விட்டு,சில பலூன் கேண்டல் எல்லாம் வாங்கி கொண்டு வர குளித்து தயாராகி வந்தாள். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு ஷைலஜா ஸ்கூல் போயி அவளையும் கூட்டி வந்தாள்.

மறு நாளில் இருந்து அத்தை மாமா என்று எல்லோரும் வர ஆரம்பித்தனர். பிரகாஷிம் வந்து விட அன்று ஷைலஜாவின் பிறந்த நாளும் வர, வீடு முழுவதும் பலூன்கள் தொங்கவிடப் பட்டு,கலர் பல்புகள்,கலர் பேப்பர்கள் என அலங்கரிக்கப் பட்டு இருந்தன.

அறிமுகமான நிறைய பெற்றோர்கள்,குழந்தைகள்,உறவினர்கள், என்று வீடே நிறைந்து காணப்பட்டது.கேக் எல்லாம் ஆர்டர் செய்தது படி வந்து விட,ஷைலஜா டார்க் கிரீன் கலர் பிராக்கில் அழகாக இளவரசி போல் இருந்தாள்.அதே நிறம்,காலணி, தலையில் பாண்டும்,ஆட்டம் பாட்டு,என அமர்க்களம் அந்த வீதியே அதிரும் படி இருந்தது.

எல்லோரும் கைத் தட்ட பர்த்டே பாட்டு பாட கேக் வெட்டினாள் ஷைலஜா.எல்லோரின் பாராட்டும் சிரிப்பொலியும், புகைப் படங்கள் நிறைய எடுக்க,லதா ஷைலஜா பிரகாஷ் புகைப் படம் எடுக்க,”இவள் எங்கள் வாரிசு”எனச் சொல்லி முத்தமிட்டாள். லதாவின் குடும்பத்தினரின் வாழ்விலும் சரி, ஷைலஜா அவளுக்கும் அன்று மறக்க முடியாத நாளாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *